Friday, September 24, 2010

இறைவனுக்கு இணை வைத்தல்

2 கருத்துக்கள்
அஸ்ஸலாமு  அழைக்கும் !                  
நாம்  வாழும் உலகில் எல்லா படைப்புகளையும் வல்ல இறைவன் படைத்து ஒழுங்கு படுத்தி அவைகளை ஒரு வரையறைக்குள் வாழ வைத்து    கொண்டிருக்கிறான்.இதில் சிறந்த படைப்பு மனித இனம் மட்டுமே.             இந்த மனிதனை படைத்தது;அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும்,
ஆற்றல்களையும் வழங்கி சிறப்பித்திருக்கிறான்.

மனிதன் தன்னை மட்டுமே வணங்கி வர வேண்டும். 
தனக்கு நிகராக எந்த படைப்பையும் கொண்டு,
தனக்கு இணை கர்ப்பிக்கக்கூடாது 
என்பது தான் இறைவனின் கண்டிப்பான 
கட்டளை !                            
     
"திக்ர்" எனும் தியானம் 'துஆ' எனும் பிரார்த்தனை 'ஸஜ்தா' என்ற 
சிரம்பணிதல்,மற்றநேர்ச்சை, குர்பானி,வணக்க வழிபாடுகள் யாவும் எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே.
                                            
இந்த வணக்கத்தை இறைவனின் படைப்புகளுக்கு செலுத்தி 
கவுரவப்படுத்திடும் போது  இவைகளை எல்லாம் படைத்த இறைவன் மிகவும் ரோஷம் கொள்கிறான்.கோபப்படுகிறான்.தன்னை மனிதன் மதிப்பதில்லை.
தான் படைத்த படைப்புகளை தன்னைவிட மதித்து வழிபடுகிறானே என்று 
ஆக்ரோஷம் கொள்கிறான்.அகிலங்களின் புகழுக்கெல்லாம்  இறைவன் மட்டுமே சொந்தக்காரன்.அத்தகைய புகழை பிறருக்கு தாரை வார்த்து வருவதை கண்டிக்கிறான். அவர்களை தண்டிக்கிறான்.
                                                                                                              நிச்சயமாக இறைவன் தனக்குஇணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். மேலும் இது அல்லாததை {குற்றங்களை}த்தான், நாடியவர்களுக்கு  மன்னிப்பான்,மேலும் யார் இறைவனுக்கு இனைவைப்பாரோ,அவர் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டார் {அல்குர்ஆன 4:116}
                                                                                                               சமாதி {கப்ர்}வணக்க வழிபாட்டினை  ஆதரித்து அடக்கஸ்            தலங்களுக்கு{தர்காக்களுக்கு] சென்று  வழிபட்டு  வருபவர்களே!
கப்ர் எனும் சமாதிகளை வணங்க இஸ்லாம் தடுத்துள்ளேதே."உங்களின்  செருப்பு வார் அறுந்தாலும் இறைவனிடமே  கேளுங்கள்!"என்று இறைத்தூதர் 
முஹம்மத்{ஸல்}அவர்கள் கூறியிருக்க {கப்ர்]சமாதிகளில்  சென்று  மண்டியிட்டு  மன்றாடுவது எந்த வகையில் எந்த வகையில் நியாயம்?
                                                                                                     இனியேனும் இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் இப்பாவச் செயலை விட்டு தவிர்த்திடுவீர் !    
                                                                                                                          சமாதி[கப்ர்]களை தரிசனம்{ஜியாரத்} செய்பவர்கள் மீது இறைவனின் சாபம் இறங்குகிறது.இறைத்தூதர்{ஸல்}அவர்கள்கூறுகிறார்கள்.அடக்கஸ்தலங்களை வணக்கஸ்த்தளங்களாக ஆக்கி விடாதீர்கள்.
                                                                                                              இறைவா என் சமாதி{கப்ர்}யை வணங்கும் இடமாக ஆக்கி விடாதே என்று இறுதி இறைதூதர் இறைவனிடம் இறைஞ்சியதை  ஒரு வினாடி எண்ணிப்பார்க்க வேண்டாமா?
                                                                                                      இறைவனுக்கு இணைவைத்திடும் இக்கொடிய பாவத்தைவிட்டு 
விலகி;ஐந்து நேரம் தொழுகையை முறையாக கடைப்பிடித்து;
நம்மைப்படைத்த இறைவனிடமே கையேந்தி பிரார்த்திப்போமாக!!!
                                                                                                          இறைவன் கூறுகிறான் :நீங்கள் பிரார்த்திப்பீராக ! உன்னையே 
நாங்கள் வணங்குகிறோம் .இன்னும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.{அல்பாத்திஹா அத்தியாயம் 1-வசனம்:


 நாம்  அல்லாஹுவின்  மீது நப்பிக்கை கொண்டு, அவனுக்கு 
இணை வைக்காமல்  நடப்போமாக!            

2 கருத்துக்கள்:

  • January 16, 2014 at 10:05 PM

    பிறப்பை தேர்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை
    அப்படி இருக்க இறைவன் நம்மை படைத்த மார்க த்தை உதறிவிட்டு வேறு மார்கத்தை நம் இஷ்டத்ததிற்கு தேர்தெடுப்பது இறைவன் படைப்பை இழிவு படுத்துவதற்கு சமமாகாதா???
    சகோதரரே இஸ்லாத்தை பற்றிய சந்தேகம் கண்டிப்பா விமர்சனம் செய்யவில்லை

  • February 3, 2014 at 5:35 PM

    அன்பு சகோ,.

    நல்ல கேள்வி., நீங்களோ, நானோ விரும்பிய மதத்தில் பிறப்பதில்லை. சரிதான்., அதனால் தான் இஸ்லாம், பிறப்பின் அடிப்படையில் எவருக்கும் சொர்க்கம் / நரகத்தை தீர்மானிப்பதில்லை.

    அதாவது முஸ்லிமாக பிறந்தால் மட்டுமே ஒருவருக்கு சொர்க்கம் அளிக்கப்படும் என்ற எந்த உத்திரவாதமும் மார்க்கத்தில் இல்லை. மாறாக ஒருவரது வாழ்வு இறைவன் விதித்த கோட்பாட்டின் படி அமைந்தால் மட்டுமே அவருக்கு மறுமையில் பலன் கிடைக்கிறது.

    முஸ்லிமாக பிறந்தும் அவர் இறை விதிகளின் படி வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லையாயின் அவருக்கு மறுமையில் நஷ்டமே.,

    அதுப்போல ஒருவர் இஸ்லாம் அல்லாத பிற சமயத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும் அவர் எது உண்மையான வழி என்பதை உணர்ந்து, இறைவன் யார் என்பதை விளங்கி அவனது ஏவல்களையும், விலக்கல்களையும் தம் வாழ்வில் கடைபிடித்தால் இறைவன் நாடினால் அவருக்கு சொர்க்கம் உண்டு.

    ஏனெனில் தம் பிறப்பை தேர்ந்தெடுப்பது வேண்டுமானால் ஒருவரால் முடியாத காரியமாக இருக்கலாம். ஆனால் தன் அறிவுக்குட்பட்டு எது சரி எது தவறு என்ற நம் வாழ்க்கைக்கான வழியே தேர்ந்தெடுக்க முடியும்.

    அப்படி தெளிவாக பிரிந்தறிந்தும் நேரிய வழியே பின்பற்றாமல், தவறான கடவுட்கொள்கையும், வாழ்வியல் நடவடிக்கைகளையும் பின்பற்றும் போதே மறுமையில் தண்டனை கிடைக்கிறது.

    பிறப்பு குறித்து அழகிய நபிமொழி உண்டு.
    "பிறக்கும் குழந்தைகள் யாவும் பிறவி மார்க்கமாம் இஸ்லாத்திலே பிறக்கிறது. அவர்களது பெற்றோர்கள் வளர்ப்பிலே அது கிறித்துவராகவோ, யூதராகவோ, நெருப்பு வணங்கியாகவோ வளர்கிறது.

    மேற்கண்ட ஹதிஸை விளங்கினால் எல்லா பிறப்பும் இறைவனிடத்தில் ஒரே மதிப்பு வாய்ந்தவை என புரியும். நேர்வழி தெரிந்தபின்னும் மன இச்சைப்படி தம் வாழ்வை அமைப்பதே படைப்பின் நோக்கத்தை இழிவுப்படுத்துவது போலாகும்.

    இந்த பதிவு உங்கள் புரிதலுக்கு இன்னும் உதவும் என நினைக்கிறேன்.
    http://www.naanmuslim.com/2010/07/blog-post.html

    மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
    உங்கள் சகோதரன்
    குலாம்.

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!