Saturday, September 24, 2011

"துஆக்களின் தொகுப்பு முதல் பாகம்"

4 கருத்துக்கள்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்


நம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக!..............................


நம்மை படைத்து பாதுகாப்பவனாக இருக்கும்

இறைவனால் இறைக்கியருளப்பட்ட குர்ஆனிலிருந்து துஆக்களின் தொகுப்பு முதல் பாகம் இங்கே தரப்படுகின்றது. இந்த துஆவை நாம் அதிகம் ஓதுவதின் மூலம் இறைவனின் கருனையைப் பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

அல்ஹம்துலில்லாஹ்!...

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸுலுஹி ஸ்ய்யிதினா முஹம்மதின் வஆலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.


إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ


(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7


رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128



“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201


نَرَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِي


“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250


سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ


எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285


رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ


“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286


رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ


“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8


رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ


“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.


اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ


“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26


رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ


“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” 3:38


رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ


“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” 3:53


رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ


“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. 3:147


رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ


“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194


رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ


“எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!” 5:83


رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ


“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23


رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ


“எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”. 7:89


رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ


“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126


لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ


“எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:149


وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ


“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156


حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ


“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129


عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ


“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 10:85


وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ


“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” 10:86



'அல்லாஹ்வின் கயிறா'..? அதல்லாத 'ஒற்றுமை'யா..? எது வேண்டும்..?

19 கருத்துக்கள்
சென்ற வருடம் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வோர் வாரமும், இரண்டு நாள், இரவு அரை மணி நேரம் "ஒற்றுமை வேண்டி" ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒற்றுமைப்படுத்தி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான ஒரே ஒரு "முஸ்லிம் இயக்கமாக" உருவாக்கிவிடுவது என்ற ஒரு நல்ல நோக்கத்தில் அனைத்து இயக்கங்களையும் தனித்தனியாக அழைத்து "ஒன்று படுங்களேன்" என்று மிகுந்த பொருட்செலவில் ஒற்றுமைக்கான அறிவுரை கூறப்பட்டது. பலவாரங்கள் நான் அதை பார்த்து வந்தேன்.  இறுதியில் விளைவு பூஜ்யம்..! ஏன்..? எதனால்..? எப்படி இந்த ஒற்றுமை முயற்சி நம் இயக்கங்களிடையே பலனளிக்காமல் போனது..? என்ன தவறு நேர்ந்தது இதில்..? ஏனோ இதை யாருமே சிந்திக்கவில்லை..! 'எதனால் பிரிந்தனர்', 'அதற்கு என்ன காரணம்', 'அதனை இப்போது தீர்க்க வழியுண்டா'... என்றெல்லாம் விவாதிக்காமல், வெறுமனே "ஒன்று படுங்கள்"  "ஒன்று படுங்கள்" எனப்பட்டனர். அதனால், யாருமே ஒன்று படவில்லை. ஆனாலும், அதேபோன்ற "ஒற்றுமை வேண்டும்" என்ற கோஷம் மட்டும் இன்னும் தொடரத்தான் செய்கிறது.

சகோ..! நான் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்லன். அது ரொம்ப அவசியம் நமக்கு. ஆனால், அதை உண்டாக்க நாமாக நம் இஷ்டத்துக்கு ஏனோ தானோ என்று முயற்சி செய்யாமல்... இவ்விஷயத்தில் அல்லாஹ் சுபஹானஹுதஆலாவும் அவனின் திருத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியில் முயற்சிப்பதே நம்மிடையே ஒற்றுமை ஏற்பட முழுப்பலனளிக்கும் என்று மிக உறுதியாக தெரிவிக்கவே இந்த பதிவு..!

Thursday, September 22, 2011

இஸ்லாம் vs கம்யூனிஸம் - ஒரு பறவை பார்வை

8 கருத்துக்கள்




இஸ்லாம் மக்களுக்கு நல்லதையே செய்திட வேண்டும் என்று வாதாடுகின்றது. எல்லா காலங்களுக்கும், எல்லா சமுதாயங்களுக்கும் இஸ்லாம் ஒன்றேதான் வழிகட்ட வல்ல மார்க்கம். கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய பொருளாதாரம் செயலிழந்து ஒருவித மந்த நிலையில் இருந்து வருவதால் இஸ்லாத்தின் பொருளாதாரச் சட்டங்களும் செயலற்றவைகளாக இருந்து விட்டன. 

அப்படியானால் ஏன் நாம் நமது ஆன்மாவை தூய்மைப்படுத்திட இஸ்லாத்தையும், நமது பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிட கம்யூனிஸத்தையும் பின்பற்றக் கூடாது? 

அப்படி செய்வதனால் கம்யூனிஸம் நமது சமுதாய அமைப்பையோ அல்லது சமுதாய அமைப்பின் ஏதேனும் ஒரு பகுதியையோ பாதிக்காது. இதனால் நாம் நமது ஒழுக்கப்பண்புகள், நமது சமுதாய நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பாதுகாக்கின்றவர்களாகவும், அதே நேரத்தில் நமது பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மிகவும் நவீனமானதொரு கொள்கையும் கொண்டவர்களாக திகழலாம்.

இப்படி ஒரு கருத்தை எடுத்து வைத்து முஸ்லிம்களிடையே சபலத்தை ஏற்படுத்துவது கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால சூழ்ச்சியின் நவீன கண்டுபிடிப்பாகும்.

முதலில் அவர்கள் கீழை நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இஸ்லாத்தை எதிர்த்திட தலைப்பட்டனர். இதனால் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின்பால் இருந்த பிடிப்பு அதிகரித்திடவே செய்தது. இதைக் கண்ட கம்யூனிஸ்ட்கள் தங்களுடைய தாக்குதலை பசப்பு வார்த்தைகளால் திசை திருப்புகிறார்கள்.

“கம்யூனிஸம் என்பது சமுதாயத்தில் நீதியை நிலை நாட்டுதல் என்பதன் மற்றொரு பெயரேயாகும். அரசு தனது குடிமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திட கடமைப்பட்டுள்ளது என்பதை கம்யூனிஸம் வலியுறுத்துகின்றது, இஸ்லாம் இவற்றையே அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லுகின்றது. ஆகவே கம்யூனிஸம் இஸ்லாத்தின் எதிரியல்ல.

இஸ்லாம் கம்யூஸத்தின் எதிரி என்று சொன்னால், இஸ்லாம் சமுதாயத்தில் நீதியை நிலைநாட்டிட விரும்பவில்லை என்று பொருளாகிவிடும். இப்படி யாராவது சொல்வார்களா? நிச்சயமாக சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட எந்தக் கொள்கையையும் இஸ்லாம் எதிர்ப்பதில்லை.

இப்படி பசப்பு மொழி பேசி ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள் கம்யூனிஸ்ட்கள். இத்தகைய ‘சூழ்ச்சிவாதம்’ இதற்கு முன்னால் ஏகாதிபத்தியவாதிகளால் எடுத்து வைக்கப்பட்டதேயாகும். இந்த ஏகாதிபத்தியவாதிகளும், முதலில் இஸ்லாத்தின் மீது எதிர்ப்புக் கணைகளையே எடுத்து வீசினார். ஆனால் அவை முஸ்லிம்களை சலனப்படுத்தவில்லை.

மாறாக முஸ்லிம்கள் தங்களை இதுபோன்ற பிதற்றல் வாதங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். தங்களுடைய எதிர்ப்புவாதம் எடுபடாமல் போகவே அவர்கள் வேறு விதமாக சூழ்ச்சியைத் திருப்பினர். அப்போது அவர்கள் மேற்கொண்ட தந்திரவாதம் இதுதான்: “மேலை நாடுகள் கீழை நாடுகளில் சிறந்ததொரு கலாச்சாரத்தை பரப்பிடவே முனைகின்றன. இஸ்லாம் எவ்வாறு கலாச்சராத்தை – நல்ல பண்பாட்டை எதிர்க்கும்? அதுதான் பண்பாட்டின் பாசறையாயிற்றே” இதோடு அவர்கள் விடவில்லை.

“நீங்கள் இந்த மேலைநாட்டு நாகரிகத்தை கடைப்பிடியுங்கள். அதே நேரத்தில் நீங்கள் உங்கள் மதம் விரும்புவது போல் நோன்பிருங்கள், தொழுகையும் நிறைவேற்றுங்கள்” என்றும் சொன்னார்கள்.

ஒரு முறை இந்த முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தினுள் வந்துவிட்டார்களேயானால், அவர்கள் தங்களது மதத்தை மறக்க ஆரம்பித்துவிடுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கி இஸ்லாத்தை மறந்துவிடுவார்கள் என்பதே அவர்களின் திட்டம். இதையே அவர்கள் நிறுபித்துக் காட்டினர்.

இதன் விளைவாக காலப்போக்கில் இஸ்லாம் என்றால் என்ன எனபதையே தெரியாத ஒரு தலைமுறை தோன்றியது. இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அறியுமுன்னே, எந்தக் காரணமும் இல்லாமல் இஸ்லாத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.

ஏகாதிபத்தியவாதிகளின் இதே சூழ்ச்சி முறையைத்தான் கம்யூனிஸ்ட்கள் இன்று பின்பற்றிட முயற்சிக்கின்றனர். அவர்கள் சொல்லுகிறார்கள், முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருக்கட்டும்; தொழுகைகையை நிறைவேற்றட்டும்; நோன்பிருக்கட்டும்; இன்னும் இது போன்ற கடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும். கம்யூனிஸத்தை அவர்களின் பொருளாதாரக் கொள்கையாக மட்டும் ஏற்றுக் கொள்ளட்டும். ஏனெனில் கம்யூனிஸம் எந்த விதத்திலும் இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. அப்படி இருக்க முஸ்லிம்கள் கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

முஸ்லிம்கள் ஒரு முறை கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வார்களேயானால், காலப்போக்கில் அவர்கள் கம்யூனிஸத்தால் ஆட்கொள்ளப்பட்டு விடுவர். அதன் மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாம் இந்த உலகில் சாதிக்க விரும்பும் இலட்சியத்தையும் மூட்டை கட்டிவைத்துவிடுவார்கள். ஏனெனில் நாம் வாழும் உலகம் விரைவான மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. அதில் பெரிய மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. அதில் பெரிய மாற்றங்களைக் கூடச் செய்வதற்கு சிறிதளவு காலமே போதுமானது.

இதைத் தெரிந்திருந்தும், சில முஸ்லிம்கள் தங்களை கம்யூனிஸத்திற்கு அடிமைப்படுத்திக் கொண்டார்கள். ஏனெனில் கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை தவிர்த்துக் கொள்ளலாம். தாங்கள் சிந்தனையில் ஈடுபடதேவை இல்லை. சில இலட்சியங்களை நோக்கி நடப்பதில் ஏற்படும் கஷ்டங்களுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

இன்னும் இதுபோன்ற மனோ நிலையைக் கொண்ட முஸ்லிம்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கற்பனை உலகில் சஞ்சரிப்பதை நாடுகின்றனர். தாங்களே சிந்தித்து தங்களது வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக தங்களை அடுத்தவர்கள் வழி நடத்தட்டும் என்று வாளாக இருந்து விடுகின்றனர்.

இங்கே நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும். அதாவது, இஸ்லாம், தனது கொள்கைகளுக்கு எதிராக இல்லாத கொள்கைகளை எதிர்ப்பதில்லை. உண்மை என்னவெனில் கம்யூனிஸம் இஸ்லாத்தின் கொள்கையை ஒத்ததல்ல. ஓரிரு விஷயங்களில் அது இஸ்லாத்தைப் போன்று காட்சியளித்தாலும், உண்மையில் அது இஸ்லாத்தைப் போன்ற ஒன்றல்ல.

தங்களிடம் ஏற்கனவே வலுவானதொரு கொள்கையை கொண்டிருக்கும் முஸ்லிம்கள், கம்யூனிஸத்தையோ அல்லது முதலாளித்துவத்தையோ அல்லது சோஷயலிசத்தையோ ஏற்றுக்கொள்ள தேவை இல்லை. இவைகள் ஓரிரு விஷயங்களில் இஸ்லாத்தைப்போல் காட்சியளிப்பினும் சரியே!

இறைவன் திருமறையில் கூறுகின்றான்:
“அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்தான் பாவிகளாவார்கள் (அல்குர்ஆன் 5:47)

நாம் உண்மையிலேயே கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ளலாமா? அப்படி அதை ஏற்றுக்கொண்ட பின்னரும் முஸ்லிம்களாக வாழலாமா? வாழ முடியுமா?
                       

Tuesday, September 20, 2011

மரணம் - பொய்க்கும் நாத்திகம்

2 கருத்துக்கள்
                                              ஒரிறையின் நற்பெயரால்

  • நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு...இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு....
  • அட! காலையிலே தானே பாத்தேன்....அடடா...அதுகுள்ள என்னாச்சி அவருக்கு...
  • நைட் நல்லாதாங்க படுக்க போனாரு...காலையிலே பாத்தா... 

சராசரி மனிதர்கள் வாயில் அன்றாடம் வலம் வரும் வார்த்தைகள் தான் இவை. சாதாரணமாக தெரியும் இவ்வெளிய வார்த்தைகளுக்குள் நாத்திகம் பதில் தர மறக்கும்/மறுக்கும் அனேக உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கிறது... தட்டியெழுப்ப ட்ரை பண்ணுவோம்.

மரணம் -

நாம் விரும்பினாலும்-விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடைவது உறுதி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம், மனிதன் உட்பட எல்லா உயிர்க்கும் பொதுவாக நிகழ்ந்தாலும் அஃது ஒரே மாதிரி நிகழ்வதில்லை என்பது தான் இவ்வாக்கத்தின் மையக்கருத்து.

அதற்கு முன்பாக, மரணம் குறித்து விக்கிபீடியா என்ன விளக்கம் தருகின்றது என்பதை பார்த்துவிடுவோம்.

இறப்பு என்பது உயிரினங்களின் இயக்கங்களை  வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இந்நிகழ்வு அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும் - விக்கிப்பீடியா

உடலின் இயக்கத்திற்கு தேவையான உயிரியல் செயல்பாட்டுக்கூறுகள் முழுவதும் ஒரே நேரத்தில் செயலிழக்கும் போது இறப்பு ஏற்படுகிறது. அதாவது.,

தொடர்ந்து சுத்திகிட்டு இருக்கும் ஒரு காத்தாடி, பவர் போனா... அதன் சுழற்சியை கொஞ்ச கொஞ்சமா ஸ்டாப் பண்ணி அதன் கட்டுப்பாட்டை முழவதும் இழந்து வெறுமனே நிக்கும் பாத்திங்களா அதுப்போல.,

இவ்வாறு மரணம் குறித்து அறிவியல்ரீதியான விளக்கம் சொல்லப்பட்ட போதிலும் ஏற்படும் மரணத்திற்கு தான் காரணங்கள் கூறப்படுகிறதே தவிர மரணம் ஏன் ஏற்பட வேண்டும் என்பது குறித்து அறிவியலும் ஆழ்ந்த குழப்பத்தில் தான் இருக்கிறது

அதாவது, அறிவியல் வரையறை தரும் மரணத்தை நாத்திக சிந்தனை மேற்சொன்ன இலக்கணப்படி ஏற்றுக்கொண்டாலும், உலகில் ஏற்படும் அனைத்து மரணங்களுக்கும் ஒரே மாதிரி வரையறையை நாத்திகம் ஏற்படுத்தவில்லை - இது தான் நாத்திகம் சந்திக்கும் பிரச்சனை

எதையும் காரண காரியத்தோடு அலசி ஆராய்ந்து அறிவுக்கு பொருந்தமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக கூறும் நாத்திகம், மரணம் ஏற்படுவது குறித்தும், அஃது ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும் தெளிவான காரணிகளை வைத்திருக்க வேண்டும். 

முதலில், மரணங்கள் ஏற்படும் விதம் குறித்து காண்போம்.

எந்த ஒரு செயல் நடைபெறுவதற்கும் காரணங்கள் இருக்கவேண்டும் என்பதே நாத்திகர்களின் மையக்கருத்து,

அதனடிப்படையில் மரணம் என்பது உயிரியல் செயற்பாடுகளோடு தொடர்புடையதால் ஒரு மரணம் நிகழ அறிவியல் ரீதியான காரணம் வேண்டும். அதாவது ஒவ்வொருவரின் இறப்புக்கு பின்னரும் நமக்கு அறிவுக்கு பொருந்தக்கூடிய காரணம் இருக்க வேண்டும்.

அப்படியிருந்தால் மட்டுமே நாத்திகம் அச்செயல் உண்மையென நம்பும். அதனடிப்படையில் இன்று உலகில் பல்வேறு வகையில் உயிரிழப்புகள் நிகழ்கிறது.

  • மாரடைப்பு ஏற்பட்டு,
  • சீறுநிரகம் பழுதுப்பட்டு
  • வெள்ளம், தீ, கட்டிட இடிபாடுகள் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்குண்டு
  • வெடிகுண்டு தாக்குதலில்
  • விபத்துகளில்
  • தற்கொலை

இதைப்போன்ற கண்முன் காணும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு பிறகு ஒருவரின் உயிர் போவதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அதிக இரத்த அழுத்தம்,  இரத்த ஓட்டமின்மை, கழிவு நீர் அகற்றும் உறுப்புகள் செயலிழத்தல், மூச்சுவிட முடியா அளவிற்கு ஆக்ஸிஜன் இல்லாமை, நெருப்பின் அதிக உஷ்ணம் உறுப்புகளை கருக்குதல், நிமிட நேரத்தில் உறுப்புகள் ஒவ்வொன்றும் சிதறடிக்கப்படுதல்,  அதிகப்படியான இரத்த வெளியேற்றம், இதயத்திற்கும் சுவாசக்குழாய்க்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிப்பு - இப்படி ஒவ்வொரு மரணமும் நிகழ ஒவ்வொரு வகையான காரணங்கள்.

நன்று....இஃது ஏற்படும் மரணத்திற்கு உரித்தான காரணங்கள் நம் கண்முண்ணே விரிந்து கிடப்பதால் இத்தகைய மரண நிகழ்வுகளை அறிவுப்பூர்வமாக ஏற்று கொள்வதில் எந்த பிரச்சனையுமில்லை, இவ்வாறு நிகழும் மரணத்திற்கு நாத்திகம் மேலதிக விளக்கம் தர தேவையுமில்லை.  ஆனால் மரண வகைகள் மேற்கண்ட வழிகளில் மட்டுமே ஏற்படுவதாக இருந்தால் நாத்திகப்பார்வை சரியென கூறலாம்.

ஆனால்.,

இவ்வாக்கத்தின் முதல் மூன்று வரிகளை மீண்டும் படியுங்கள்., 

  • நேற்று வரை நலமுடன் இருந்தவர் எவ்வித காரணமுமின்றி இன்று இறக்கிறார்.
  • காலையில் சக மனிதர்களுடன் உரையாடி சென்றவர் இந்நேரத்தில் உயிரோடில்லை.
  • இரவு உறக்கத்தை இனிதே கழித்தவர் காலையாகியும் எழவே இல்லை.

இதுமட்டுமல்ல, இத்தகைய மரணங்கள் நிகழ அறிவியல்ரீதியான எந்த ஒரு அறிகுறியும் இல்லையென்பதோடு, நிகழ்ந்த மரணத்திற்கு அறிவுப்பூர்வமான பதிலும் இல்லை.

அதுப்போலவே, உயரமான இடத்திலிருந்து அல்லது கட்டிடத்திலிருந்து வேண்டுமென்றே கீழே குதித்தவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிக்கிறார். சாதாரணமாக நடக்கும் போது கால் தவறி தரையில் விழும் மனிதர் மரணிக்கிறார்.

இதுவும் நாம் அன்றாட செய்தித்தாள்களில் படிப்பதுண்டு

ஆக மேற்சொன்னவைகளை தற்செயல் (எதெச்சையான செயல்) என்றோ திடீரென்று ஏற்படும் சம்பவமாகவோ ஏனைய மதரீதியான உலகம் பார்க்கிறது..
  
ஆனால் நிகழ்வுகளுக்கான சரியான காரணத்தை அறிவியல்ரீதியாக முன்னிருத்தினால் மட்டுமே ஏற்கும் நாத்திக அகராதியில் தற்செயல் என்பதோ அல்லது திடீரென்று நடைபெறும் சம்பவங்களோ இருக்க முடியாது.

மேற்சொன்ன வகையில் மரணிப்பதற்கும், உயிர் பிழைப்பதற்கும் அறிவியல்ரீதியான காரணத்தை வேண்டினால் நாத்திகம் அதன் வரையறைக்கே முரண்பட்டு பொருளற்ற பொருளைத்தான் தரும்.

மேலும் தர்க்கரீதியாகவும் இச்சம்பங்களை நாத்திகத்தால் வரையறை செய்ய முடியாது. ஏனெனில் மேற்கண்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்வதில்லை மாறாக.,

உலகில் நிகழும் மரணங்களில் அறிவியல்ரீதியில் காரணம் என்னவென்ற விளங்க /விளக்க முடியா நிலையில் மேற்சொன்ன அடிப்படையிலேயே அனேக மரணங்கள் நிகழத்தான் செய்கின்றன.

ஆக தற்செயல்/திடீர் என ஏற்படுவதாக சொல்லும் பேச்சுக்கே நாத்திகத்தில் இடமில்லை.

இல்லை...இல்லை...மேற்கண்ட இயல்பு நிலைக்கு மாற்றமான ஏற்படும் மரணங்களுக்கும் மறைமுக அறிவியல் காரணங்கள் உண்டு என சொன்னாலும் நோ ப்ராப்ளம். இப்போது நாத்திகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முன்பைவிட அதிகம். இச்செய்கை உண்மையென்று நாத்திகம் வாதித்தால் உலகில் ஏற்படும் அனைத்துவிதமான மரணங்களுக்கும் அறிவியல்ரீதியான காரணங்கள் கிடைத்துவிடும். கிடைக்கும் காரணங்களை வைத்து,

  1. ஏற்படும் மரணத்திலிருந்து தப்பிக்க அல்லது 
  2. மரணம் நிரந்தரமாக ஏற்படாமல் இருக்க அல்லது
  3. ஒவ்வொரு உயிருக்கும் மரணம் ஏன் நிகழ வேண்டும்.?

 - என்பதற்காவது நாத்திக அறிவியல் ஒரு வழிவகை செய்திருக்க வேண்டும். அப்படி மரணத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் மரணம் ஏற்படுவதற்கான அறிவியல் ரீதியான காரணம் தெரிந்திருப்பதால் எல்லோர் மரணத்திற்கும் உண்டான காலக்கெடுவை நாத்திக அறிவு மிக துல்லியமாக வரையறுத்திருக்க வேண்டும்.

டிஸ்கி: 

சமகாலங்களில் கூட பிராணிகளில் உண்டு, உறங்கி, உடலுறவு கொள்ளல் என சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே தம் வாழ்நாளை கழிக்கும் சிலவகை ஆமை, முதலை போன்ற உயிரிகளின் ஆயூட்காலம் சராசரியாக நூற்றைம்பது ஆண்டுகளை தாண்டி தொடரும்போது, அனைத்துத் தேவைக்காகவும் தம் வாழ்நாளை கழிக்கும் அறிவார்ந்த மனித உயிரின் ஆயூட் காலம் சராசரி 50 க்கும் 60க்கும் மத்தியில் தொங்கி கொண்டிருப்பது ஏன்..?

ஏனெனில், ஏனைய உயிரினங்களுக்கு மத்தியில் அறிவார்ந்து செயல்படும் ஒரு உயிரினாலே ஆயூட்காலம் மட்டுமில்லாது வாழ்வியலுக்கு தேவையான அனைத்து சிறப்பியல்க்கூறுகளையும் ஏனைய உயிரினங்களை விட அதிகம் பெற்று வாழ முடியும்.

ஆனால் பரிணாமம் உருவாக்கிய மனிதப்படைப்பு ஒரு கொசுவை காட்டிலும் அதிக பலகீனங்களை தன்னுள் கொண்டு வாழ்ந்து - மரணிப்பது விந்தையுலும் விந்தையே..!

உணர்ந்துக்கொள்வதற்கு முன் உணர்வுகளை நிறுத்தும் மரணத்திற்கான காரணங்களை இனியாவது மெய்படுத்துமா நாத்திகம்??

அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான். (22:66)
   
                                                      அல்லாஹ் நன்கு அறிந்தவன்.