Tuesday, August 23, 2011

நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...

34 கருத்துக்கள்
                  ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகம்: 

    பிறிதொருவரின் கொள்கையை தவறென்று வாதிட்டால் அதற்கு மாற்றமாக தான் கொண்ட கொள்கை குறித்த இலக்கணத்தை மிக தெளிவாக வரையறை செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் இறை பின்பற்றுதலை எதிர்க்கும் நாத்திகம் இறை மறுப்புக்கான ஒரு வரைவிலக்கணத்தை இதுவரை ஏற்படுத்த வில்லையென்பதை விட தான் நிராகரிக்கும் இறைக்குறித்துக்கூட ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை.  விக்கிபீடியா நாத்திகம் குறித்து இவ்வாறு கூறுகிறது 

நாத்திகம் - கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் ஒரு கொள்கையாகும்.

பொதுவாக இறை மறுப்பை அடிப்படையாக கொண்டாலும் இறைமறுப்பு என்றால் என்ன என்பதை வரையறை செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதாவது, இறை என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் குழப்பம் இருப்பதால், இறைமறுப்பு என்பதை வரையறை செய்வதிலும் குழப்பம் வருகிறது. இறை என்றால் தொன்மங்கங்களில் வரும் கடவுள்களா, அல்லது மெய்யியலில் வரையறை செய்யப்படும் கருத்துருவா, அல்லது இயற்கைச் சுட்டும் வேறுபெயரா என்ற பல விதமான கருத்துருக்கள் உள்ளன.

ஒரு கொள்கைக்கு மாற்றமாக உருவாகும் நேர் எதிர் கொள்கை தனக்கென ஒரு உறுதியான நிலைப்பாட்டை இதுவரை வைத்திருக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே..! இன்னும் இதில் வேடிக்கையென்னவென்றால் நாத்திகம் குறித்து கூறுகையில் எங்கெணும் பகுத்தறிவு என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை., ஆனால் இறை மறுப்பை பேசும் நாத்திகர்களுக்கு தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என குறியீடு இருப்பது தான் வருத்தத்திற்குரியது.,

நீண்ட காலமாக நாத்திக பார்வையில் விரியும் செந்திற காட்சி இஸ்லாத்தின் வெண்மையை பொய்மையாக்க குறை கண்டு காழ்ப்புணர்ச்சியை யூனிக்கோடில் கக்கிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய வெறுப்புக்கு தெளிவான மறுப்பு அழகாய் சொல்லப்பட்ட போதிலும் கடவுளை விமர்சிக்கும் நாத்திகர்கள் இதுவரையிலும் நாத்திகம் குறித்து உரையாட வாய் திறப்பதில்லை. ஆகவே அன்புள்ளம் கொண்ட இணைய வாழ் பெருமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்...

நாத்திகரா  நீங்கள்..?
      
Good!.. உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்., கீழ்க்கண்ட ஆத்திக பதிவர்கள் உங்களோடு நாத்திகம் குறித்து நாகரிமான முறையில் உரையாட காத்திருக்கிறார்கள்., அவர்களின் நாத்திகம் குறித்த சந்தேக பார்வையை நீங்களும் பாருங்கள்., உங்கள் பார்வையில் நாத்திகம் உண்மையென்றால் அதுக்குறித்து உரையாட வாருங்கள்., 




"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"


மேலும் நாத்திகம் குறித்த

1. சந்தேகங்கள்...
2. பார்வைகள்...
3. எண்ணங்கள்..



"மனிதர்க்கு மட்டுமே பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, அதன்மூலம் மனிதர் தன்னை (இறைவனை) உணர்ந்து, தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி, வழங்கப்பட்ட கிருபைகளுக்கு வணங்கி தனக்கு நன்றி தெரிவித்து, இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா" என்று சோதிக்க நாடுகிறான், இறைவன்..!

ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில் வெகு சிலர், எதோ பார்த்து உணரும் ஓரறிவு பிராணிகள் போல...'கண்ணால் கண்டால்தான் நம்புவேன்' என்கின்றனர்..!

இதில் வேடிக்கை என்னவென்றால் கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள், தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்..!

...என்றும் உங்கள் அன்புள்ள சகோ.,
முஹம்மத் ஆஷிக்.
mohaashik[at]gmail.com




நாத்திகம் என்றால் என்ன???....

     கடவுளை மறுப்பது என்று விளக்கம் சொல்கின்றார்கள் நாத்திகர்கள். எப்படி மறுக்க முடியும்?? தர்க்கரீதியான காரணங்கள் இருக்கவேண்டுமல்லவா??. காரணம் கேட்டால் அறிவியலை நோக்கி கைநீட்டுகின்றார்கள் நாத்திகர்கள். ஆச்சர்யம். ஆம் நிச்சயம் ஆச்சர்யமான ஒன்றுதான். ஏனென்றால், ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பதாக பிரபல பெர்க்கிலி பல்கலைகழக தளம் கூறுகின்றது. அறிவியல் இறைவனை மறுப்பதாக இருந்தால், எப்படி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்க முடியும்???. இதற்கு நாத்திகர்கள் என்ன பதில் வைத்திருக்கின்றார்கள்?

அதுபோல, எந்த அறிவியலை வைத்து இறைவனை மறுக்கின்றார்களோ, அதே அறிவியலை வைத்து தான், "இந்த உலகம் தற்செயலாக தோன்றியிருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு அறிவார்ந்த சக்தி இருக்கின்றது" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர் பல விஞ்ஞானிகள். 

ஆக, அறிவியல் துணைக்கொண்டு இறைவனை மறுப்பது நிச்சயம் புரியாத புதிராகவே உள்ளது. 

ஒருசில நாத்திகர்கள் உணர்வுரீதியாக இறைவனை மறுக்கின்றனர். "உலகில் இவ்வளவு பிரச்சனை நடக்கின்றதே...அதனை போக்க இறைவன் வரவில்லையே. அதனால் இறைவன் இல்லை"....இம்மாதிரி வாதங்கள் எப்படி இறைவனை மறுக்கும்?. உதவி செய்யவில்லை என்றால் இறைவன் இல்லையென்று ஆகிவிடுமா??. 'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற அளவுக்கோலை இவர்களுக்கு யார் கொடுத்தது???


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 
aashiq.ahamed.14[at]gmail.com

           ===============================================================
* நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..?

*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள் எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்?., குறிப்பாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..?

*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..?


G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...
gulamdhasthakir[at]gmail.com

===============================================================



      நாத்திகர்களின் பிரதான ஆதாரமாகிய பரிணாமம் என்பது பொய் என்று சமீப காலத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. இருப்பினும் நாத்திக கொள்கையினால் மக்களுக்கு உள்ள ஆபத்துக்களை விளங்கி கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் பல மத கொள்கைகள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை பிற மனிதர்களை கொல்லாதே, தவறு செய்யாதே என்பதே.  அப்படி தவறுகள் செய்தால் தண்டனை, நரகம் என்பதே இந்த கொள்கைகளில் போதிக்கப்படும் பிரதான விஷயங்கள். இந்த தண்டனைக்கு பயந்துகொண்டே பலவகையான குற்றங்கள் நடைபெறுவதில்லை.

கடவுளே இல்லை என கூறும் நாத்திகர்கள் இவ்வகையான குற்றங்களின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இவர்களுடைய கொள்கையே உலகில் உள்ள கொள்கைகளில் மோசமான கொள்கை என்பதற்கு இவ்வுலகில் நடந்த, நடக்கும் சம்பவங்களே சாட்சி.

இவ்வுலகில் பெரிய தவறு பிற மனிதனை கொலை செய்வது. அதிக மக்களை கொன்று குவித்தவன் யாரென்று அனைவரும் அறிந்ததே, ஹிட்லர், அனைத்து யூதர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். பிறப்பால் ஒரு கிறித்துவனாக இருந்தும் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்தான்.

வெள்ளை காலர் குற்றங்கள் (White collar crime)  என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள், குற்ற உணர்வு இல்லாமல் மெத்த படித்த மேதாவிகளால் செய்யப்படும் வரி ஏய்ப்பு, திருட்டு, கொள்ளை, சட்ட விரோதமாக பணம் ஈட்டல் மற்றும் சைபர் குற்றங்கள். அமெரிக்க வணிக அமைச்சரவையின் 1996 ன்  அறிக்கையின் படி வெள்ளை காலர் குற்றங்களால் நிறுவனங்களுக்கு  ஏற்பட்ட நஷ்டத்தின் மதிப்பு 400பில்லியன் டாலர்கள். மேலும் இந்த குற்றங்களினால் ஏற்படும் இழப்பு அதிகரிந்து தான் செல்கிறது. ஏனெனில் இப்படிப்பட்ட குற்றங்கள் மிகவும் சாமர்த்தியமான முறையில் செய்யபடுகின்றன, குற்றங்கள் புரிபவர்களை கண்டறிவது என்பது அரசாங்கத்திற்கே சவாலாக உள்ளது. என்னதான் மறைவாக செய்தாலும் நமக்கு மேலே ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் மனிதர்களுக்குள் இல்லாமல் இந்த வெள்ளை காலர் குற்றங்களை எப்படி குறைக்க முடியும் என்பதற்கு நாத்திகர்கள் பதில் தருவார்களா?

மேலும் தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான குற்றங்களை எந்த அரசாங்கத்தாலும் கட்டுபடுத்த முடியாது அவற்றிக்கு முக்கியம் கடவுள் நம்பிக்கை மட்டுமே, மனிதன் பயப்படுவது தப்பு செய்தால் கடவுள் தண்டனை கொடுத்துவிடுவார் என்பதற்கே... கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரை பார்த்து பயப்பட வேண்டும்?

இதுபோல பல, இந்த நாத்திக கொள்கையினால் தனி மனித ஒழுக்கம் கெட்டு குற்றங்களும் குழப்பங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

carbonfriend[at]gmail.com

        ==============================================================



1) உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?

2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு? 

4) 'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா?

5) பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும் கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள‌ அறிவியல் தத்துவம்தான் என்ன?

6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?

7) பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக் கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும், அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த‌ விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த இன்னும் பற்ப‌ல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும் அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல் மிகுந்த/மகத்தான‌ இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில் இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன? 

8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட‌ டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"

அன்புடன்,
உங்கள் சகோதரி,
அஸ்மா.
costblog[at]gmail.com

            =============================================================


    ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனிதன் உருவானான் என்றால் ஏன் மனிதன் பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை? ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..! 

N.H. ABDUL BASITH
"You can't satisfy all the people with your wealth, but satisfy them with a cheerful face and a good character" - PROPHET MUHAMMAD (S.A.W)


basith27[at]gmail.com

       ===============================================================================


      நாத்திகர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் என்ன கொள்கையுடையவர்கள் என்று விளக்குவார்களா..? 

ஏனெனில் பெரியார் தொண்டனாக இருந்தால் அவர்களது கள்ளத்தனங்கள், கயமைத்தனங்கள், முட்டாள்தனங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியும், கம்யூனிசத்திற்கு சப்போர்ட் செய்பவர்களாக இருந்தால் அவர்களது கொலைப்பட்டியலுடன் ஏராளமான கொள்கை ஓட்டைகளை குறித்தும், இதல்லாமல் எந்த கொள்கையுமின்றி வெறும் இறை மறுப்பாளர்களாக இருப்பவர்களை அவர்கள் பானியில் அதாவது விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் குறித்தும் விவாதிக்கலாம்.

  -Mohamed Ihsas
 mohamedihsas786[at]gmail.com

      ==============================================================

     உலகத்தில் மதம் மற்றும் கடவுள் போன்ற கொள்கைகளை நம்பாமல் போனால், இவ்வுலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மனிதர்கள் எவ்வாறு தீர்வு காணுவர்? அதாவது தீர்வுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் யாருக்கு எந்த தீர்வு சரியெனபடுகின்றதோ அதையே அவர் தீர்வாக எடுத்துக் கொள்வர். அதனால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு வராது. சரி அப்படியே அவரவருக்கு பிடித்த தீர்வையே வைத்துக் கொண்டாலும் அதை பின்பற்றுபவர்களின் அளவுகோல் என்ன? 

      அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?

     அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?

இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன் அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்.

இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்.

தோழைமையுடன்
அபு நிஹான்                                                                                       
hajamydheen[at]gmail.com

                           =====================================================


       நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..

இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???

உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா?? ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?

ஆம்! பகுத்தறிவு...அல்லவா? எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும், எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும், பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே!

நீங்கள் சொல்லலாம், வீடு உட்பட என் வீட்டில் இருக்கும் அத்துனையும் மனிதன் உருவாக்க அதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன், அதனால் படைப்பாளி இல்லாமல் வந்திருக்க முடியாது என சொல்கிறேன் என்று,..சரிதான்..வீடு கட்டும் போது நீங்கள் பார்த்ததால் நம்புகிறீர்கள்...

அதுபோல இவ்வுலகம் படைக்கப்படும் போது குத்துக்கால் போட்டு, கண்ணத்தில் கைவைத்து உக்காந்து நான் பார்க்கவில்லை அந்த ஒரே காரணத்தால் நம்பவில்லை என்கிறீர்கள் சரிதானே!

இயற்கையாகவேதான், இந்த பூமி 100% பெர்ஃபெக்‌ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்‌ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்‌ஷன்...நீங்கள் விரும்பிய, அல்லது, குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.

அப்படி இருக்க இவ்வுலகில் இருக்கும் அத்துனையும் முழுமைபெற்றும், அதில் ஒரு நேர்த்தியுடனும் இருக்க, அதுவோ இயற்கையாக வந்துவிட்டது என சொல்வது உங்களின் அறிவை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் காரியம் இல்லையா?? 

ஒரு முறை முழு உலகையும் விழிவிரித்து திறந்த மனதுடன் பாருங்கள். எத்தனை ரம்யமான படைப்பு,,,மாஷாஅல்லாஹ் (அல்லாஹ் போதுமானவன்) ...ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்ட,வடிவமைப்பில் உச்சம் பெற்ற படைப்பு....எங்கிருந்து வந்துவிட்டன இவை???

உதாரணத்திற்கு ஒன்றை பார்ப்போம்.

நீர்???இப்படியான ஒரு திரவத்தை மனிதன் காண்பதற்கு முன்புவரை சிந்தித்திருக்க முடியுமா?உலகில் மனிதன் உண்டாக்கிய அத்துனை விலைமதிப்புமிக்க பானங்கள், நிறமற்ற சுவையற்ற எளிய நீரின் சுவையை விஞ்ச முடிந்ததா?? இதுவும் இயற்கை என்றால்..இந்த நீர் ஏன் ஒரு அமிலமாக உருவாகி இருக்ககூடாது?..ஏன் வேறுவிதமான அடர்த்தியில் வெளியாகி இருக்ககூடாது...

மாசுக்களால் நிறைந்த உலகத்தில் மாசுமறுவற்று கண்ணாடிபோல் எப்படி உண்டானது...இந்த தன்மையும் தானாக வந்துவிட்டதா? இவ்வாறு எப்படி எப்படியோ இருந்திருக்க வேண்டிய நீர்..ஏன் தனிச்சிறப்பு மிக்க இத்தகைய குணாதிசியங்களை கொண்டதாக இருக்க வேண்டும்? இதை உலகில் உள்ள பிற உயிரினங்கள் பயன்படுத்தும்,அதனால் இப்படித்தான் நீர் இருக்க வேண்டும் என இயற்கை முடிவு செய்துவிட்டதோ??? 

இயற்கை என்ற அறிவற்ற எந்திரத்தில் இருந்து வெளியாகும் இந்த திரவம் இத்தனை தன்மைகளை கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்க சிரத்தை யாருடையது?இத்தனை குவாலிட்டி,இத்தனை பெர்ஃபெக்‌ஷன் யாருடையது???

ஒரு வேலை எல்லாம் சரியாக உருவாகி நீர் மட்டும் கரியமிலமாக இந்த இயற்கையில் இருந்து, இயற்கையாக வெளியாகி இருப்பின்..மனிதன் அதை உண்டுதான் வாழ்ந்திருக்க வேண்டுமா???..இல்லை வெவ்வேறு விதமாக இயற்கையாக உருவான நீரானது...உயிரினங்களின் தேவையறிந்து பரிணாம வளர்ச்சி(???) கண்டு இன்று இத்தனை தெள்ளியதாக இருக்கிறதா சகோதரர்களே!!!

இது போல இயற்கை படைப்பு ஒவ்வொன்றையும் சிந்தித்தாலே போதுமே!

நீங்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ள போதுமான ஆதாரங்கள் கிடைத்துவிடுமே!அப்ரம் வருவோம் அந்த இறைவன் யார்?யாராக இருக்க முடியும்? என்ற கேள்விகளுக்கெல்லாம்...

முன் முடிவுகளை தூர எறிந்துவிட்டு திறந்த மனதுடன் சிந்திப்போம்...

நிச்சயமாக வானங்கள்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும், இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும், அறிவுடையோருக்கு திடமான அத்தாட்சிகள் பல இருக்கின்றன - அல்குர்ஆன் 3:90

அன்புடன்
ரஜின்
askabt.islam[at]gmail.com


படைத்தவன் நாடினால் பகுத்தறிவாளர்களின் பட்டியல் தொடரும்...





இறைவன் நாடினால் இத்தளத்திலோ அல்லது மேற்கண்டவர்களின் எந்த தளத்திலோ நாத்திகம் குறித்து உரையாட பதிவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
      இங்குள்ளவர் யாவரும் முகவரி தந்தே கருத்து தந்திருக்கிறார்கள்., போலி பெயரில் ஆநாகரிக பின்னூட்டமிடாமல் உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து உண்மையையும் கொண்டு வாருங்கள்., 

அல்லாஹ் நன்கு அறிந்தவன் 

34 கருத்துக்கள்:

  • August 23, 2011 at 6:11 PM

    வணக்கம்
    இறை மறுப்பு என்பஹற்கு விக்கிபீடியாவில் சொன்ன விளக்க்த்தையோ,அல்லாஹ் இருக்கிறார் என்பதற்கு சில முஸ்லிம் பதிவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    1.என்னை பொறுத்தவரை இறை மறுப்பு என்பது மதங்களை மறுப்பது.மறுமை வாழ்வு இல்லை ,அதற்கு ஆசப் படுவது பேராசை. மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் .இதற்கு மேல் ஒன்றும் இல்லை.

    2.மதங்களில் உள்ளதை பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தராத வரையில் பின்பற்றலாம்.சர்ச்சைக்குறிய விஷயங்களை நடைமுறையில் தவிர்ப்பது போல் பிரச்சாரத்திலும் என் மதம் மட்டுமே 100% உண்மை,சர்வ ரொஹ நிவாரணி என்பதை தவிர்பது மத சார்பின்மை நல்லது.
    ___________
    இறை மறுப்போ,நம்பிக்கையாளரோ பிறருக்கு துன்பம் தராமல்,இயற்கையை பாழ் படுத்தாமல் வாழ்வதே சிறந்தது.ஜன்நாயகம்,மதச்சார்பின்மை இரண்டும் போற்றி பாது காக்கப் பட வேண்டிய விஷயங்கள் இவற்றுக்கு எதிரான் எதுவும் கடுமையாக் எதிர்க்கப் படவேண்டிய விஷயங்கள்.

  • August 23, 2011 at 6:41 PM

    இறைவன் மனிதனை எதற்க்காக படைத்தார்???? இந்த பூமியை எதற்க்காக படைத்தார்? நான் கேட்ப்பது மதத்தை தாண்டியது எல்லா மதத்துக்கும் பொதுவான் ஒரு கேள்வி.. நான் இறைவன் இருக்காரா இல்லையா என்று கேட்க்கவில்லை நான் கேட்ப்பது இறைவன் மனிதனை எதற்க்காக படைத்தார்???? இந்த பூமியை எதற்க்காக படைத்தார்? நான் கேட்பது மார்க்கத்தின் பதில் இஸ்லாத்தின் பதில்.
    தோழமையுடன்
    விஷ்ணுராம்
    மதுரை
    vishnuram.madurai@gmail.com

  • August 23, 2011 at 7:59 PM

    சகோதரர் JK,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களின் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

    ///இறைவன் மனிதனை எதற்க்காக படைத்தார்????///

    ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை - குர்ஆன் 51:56

    ///இந்த பூமியை எதற்க்காக படைத்தார்?///

    வணங்குவதற்காக படைக்கப்பட்ட அந்த மனிதன் வாழுவதற்காக... பல வசனங்களில் குரான் இதனை விவரிக்கின்றது.

    சகோதரர், இந்த பதிவு நாத்திகர்களுக்கானது..உங்கள் கேள்விகள் அதனை திசை திருப்பி விடுமோ என்று அஞ்சுகின்றேன். புரிந்துக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.

    உங்களுடைய ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்) குரான் பதில் சொல்லும். உதாரணதுக்கு, கடவுள் யார்?, அவன் ஏன் ஒருவன்?, ஏன் தூதர்களை அனுப்ப வேண்டும், உலக பிரச்சனைகளுக்கு இதில் என்ன தீர்வு? ஏன் மக்கள் துன்பப்படும் போது அவன் வருவதில்லை? ----- இப்படி etc

    தாங்கள் குரானை ஒருமுறை படித்து பார்க்க முன்வருமாறு அழைக்கின்றேன்.

    தங்களுக்கு விருப்பமிருந்தால், அதன் தமிழாக்கத்தை படிக்க எனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் (aashiq.ahamed.14@gmail.com). Quran softcopy அனுப்புகின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  • August 23, 2011 at 8:03 PM

    தெளிவான கருத்துக்கள். ஆதரிக்கிறேன்

  • August 23, 2011 at 9:36 PM

    http://aatralarasau.blogspot.com/2011/08/blog-post_23.html
    ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்ச படைப்புக் கொள்கை சரியா?
    ___________

  • August 23, 2011 at 11:01 PM

    ibnu shakir has left a new comment on your post "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...":

    நாக்கை புடுங்கிக்கிறமாதிரி கேள்விகளை கேட்டு நாத்திகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறீர்கள்.
    நானும் இப்படித்தான் நிறைய தாவாப்பணியில் உழைத்துகொண்டிருக்கிறேன்.
    உங்கள் பதிவில் என்னையும் இணைத்துகொள்ளுங்கள் சகோதரர்களே, சகோதரிகளே.

    சேர்ந்து இந்த நாத்திகர்களை ஒரு வழி பண்ணுவோம்.

    Publish
    Delete
    Mark as spam

    edited and posted...

  • August 24, 2011 at 6:00 AM

    வணக்கம் நண்பரே உங்கள் கேள்விகளும் பதில் பதிவு இட்டு விட்டேன்.கேள்விகளை என் பதிவில் இட்டால் இன்னும் விவாதிக்க தயாராக் இருக்கிறேன்.இப்பதிவில் நான் இஸ்லாம் மீது எந்த விமர்சனமும் வைக்க வில்லை.விவாதிக்கும் போது தவிர்க்க இயலாது. நானும் ஒரு கேள்வி கேட்பேன்.நன்றி.
    ____________
    இஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு இறை மறுப்பாளனின் பதில்கள்.
    http://aatralarasau.blogspot.com/2011/08/blog-post_24.html

  • August 24, 2011 at 8:59 AM

    நாத்திகர்கள் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது மொதல்ல உங்க மதத்துல இருக்குற தீவிர வாத்த ஒளிச்சிட்டு எங்க கிட்ட பேசுங்க ஜிஹாத் ஜிஹாத் நு எல்லாரையும் கொன்னுக்கிட்டு இருக்கீங்க நீங்க நதிகத எதிர்க்க வந்துட்டிங்கள இதுவரைக்கும் எந்த நாத்திகன் படுகொலை செஞ்சிருக்கன் உங்க அல்ல பேர்ல எத்தன கொலை ,குண்டு வைப்பு எல்லாம் உங்க அல்ல பண்ற வேலை தான இல்ல மனிதன் பண்ற வேலைய ??????????

  • August 24, 2011 at 9:03 AM

    மனிதன் தான உருவானான் நு சொன்ன அது எப்படி முடியும் ஒரு பொருள் இருந்த அத படச்சவன் இருக்கணும் அதுக்கு அழிவும் இருக்கணும் நு எல்லா மதமும் சொல்லுது அப்பா மொதல்ல உங்க அல்லா வ படச்சது யார் நு சொல்லுங்க பாப்போம் பதில் இருந்த சொல்லுங்க இது எல்லா மதத்துக்கும் பொதுவானது தான் எப்ப அல்லா உருவானார் எந்த நாள் குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் நு விஞ்ஞானம் சொல்லுது அதுக்கு ஆதாரமும் நம்பும்படியா இருக்கு ஆனா நீங்க சொல்றது ஏதும் நம்பும்படியா இல்லையே ............

  • August 24, 2011 at 11:03 AM

    அன்பு சகோதரர்
    சார்வாகன் உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!
    //வணக்கம் // - இவ்வார்த்தையே முதலில் எதை அடிப்படையாக வைத்து சொல்கிறீர்கள் என அறிந்து கொள்ளலாமா..?
    இறை மறுப்பு
    எதையும் மதம் சார்ந்த கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ளாதவர்களுகாகவே இறை மறுப்பு - என்பதற்கான விக்கிபிடியா கூறிய விளக்கம் தான் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
    //என்னை பொறுத்தவரை இறை மறுப்பு என்பது மதங்களை...//
    என்னை பொருத்தவரை என்று எந்த ஒன்றைப்பற்றி குறிப்பிடும்போதே அது விவாதிக்கும் பொருளல்ல வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக போய்விடுகிறது., அதனடிப்படையில் கடவுள் மறுப்பு / மதம் போன்றவை உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக கொண்டால் அதுக்குறித்து விளக்கவோ - விவாதிக்கவோ தேவையில்லை., ஆனால் நாத்திகத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமாக கொள்ளாமல் அறிவு ரீதியாக எடுக்கப்பட்ட ஒரு மாற்றுத்தீர்வாக கொண்டதால் அதுக்குறித்து விளக்கம் தந்தாக வேண்டும்
    //மறுமை வாழ்வு இல்லை ,அதற்கு ஆசப் படுவது பேராசை.//
    எது பேராசை., கண்ணுக்கு தெரியாத ஒரு வாழ்விற்காக கண்ணேதிரே விரியும் வாழ்வில் இறைவனுக்கு பயந்து அவனது கட்டளைப்படி நல்லவனவற்றை பின்பற்றி- தீயவனவற்றை விட்டு விலகி வாழ்வதற்கு பெயர் நாத்திக அகராதியில் பேராசையோ...? மறுமை வாழ்வென்று ஒன்று இல்லாவிட்டாலும் மேற்கண்ண்ட ஏவல்-விலக்கல்களை இந்த வாழ்க்கையில் சரிவர பேணி வாழ்வதால் மனித குலத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு ஏற்பட போவதில்லை மாறாக தனி மனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் பேணுதல் போன்றவையே உயரும்.

    //மதங்களில் உள்ளதை பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தராத வரையில் பின்பற்றலாம். & பிறருக்கு துன்பம் தராமல்,இயற்கையை பாழ் படுத்தாமல் வாழ்வதே சிறந்தது.//
    யார் யாருக்கு தொல்லை தருகிறார்கள்.? நாம் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். மேற்கத்திய ஊடகம் வளர்க்கும் தீவிரவாத செயல்களோடு இஸ்லாத்தை முடிச்சி போடாதீர்கள்.,ஏனெனில் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல- இஸ்லாம் அஃது சொல்லவும் இல்லை.,அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களே தவிர மார்க்கமல்ல., சண்டை சச்சரவிற்கு பிரதான காரணம் மதம் தான் என்றால் ஒரே குடும்பத்தில் சொத்திற்காக சண்டையிட்டு சகோதரர்களுக்கிடையில் கொலைகள் கூட நடைபெறுகிறதே இதற்கு எந்த மதம் காரணம்..?

    //என் மதம் மட்டுமே 100% உண்மை//
    தான் பின்பற்றும் வழிமுறையில் ஒருவனுக்கு 100 சதவீகித திருப்தியிருந்தால் அதனை பிறரிடம் சொல்வது இயல்பே! அதிலும் மனித குல முழுமைக்கும் பொருந்தக்கூடிய எல்லா நடை முறை சாத்தியக்கூறுகளும் கொண்ட கொள்கையே உண்மை என்று கூறுவதற்கு என்ன தயக்கம் ? மேலும் கடவுள்- மத போதனை போன்றவைகளை இஸ்லாமல்லாத ஏனைய மதங்கள் வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகிகொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது
    100 சதவீகிதம் உண்மையானது என குறிப்பிடுவதில் தவறில்லை சகோ..
    இது இஸ்லாம் குறித்த பதிவல்ல- ஏனெனில் இஸ்லாம் பற்றிய கருத்தாடல்கள் பதிவின் நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்,, ஏனைய நாத்திகம் குறித்தே வினாக்களுக்கு விடை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
    இறை நாடினால் இனியும் சந்திப்போம்

  • August 24, 2011 at 11:25 AM

    சகோதரர்கள் யாரும் பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. மாறாக கேள்விகளை தொகுத்துள்ளீர்கள்.

    நேரடியாக பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கலை எதிர்ப்பார்க்கிறோம்.

    சகோ சார்வகான் அவர்களுக்கு, வணக்கம் என்ற சொல்லின் அர்த்தம் என்ன? அப்படியானால் மனிதனை நீங்கள் வணங்குவதன் நோக்கம் என்ன?

  • August 24, 2011 at 11:37 AM

    நாத்திகம் என்பதே உண்மையான ஆத்திகம் என்பது என் தாழ்மையான கருத்து. வினோபா அவர்கள் கூற்றுப்படி கடவுளுக்கு இனணயான ஒருவர் மட்டுமே கடவுளை மறுக்க முடியும். பொதுவாக கடவுள் வந்து தனது இருப்பைக் காட்டுவதில்லை. பொதுவாக நாம் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்ததினாலேயே அம்மார்க்க நம்பிக்கைக்கு உட்பட்டவர்களாக மாறிவிடுகிறோம். பின்னாளில் நாம் புனித நூல்/கேள்வியறிவு வாயிலாக நமது ஆர்வத்தைப் பொறுத்து அந்தந்த மத நம்பிக்கையில் நிலை பெறுகிறோம். உண்மையில் சமயங்கள் வலியுறுத்தும் பிறரன்பு செய்ல்களுக்கெதிரான ஆத்திகர்களினால்தான் நாத்திக உணர்வே வலுப்பெறுகிறது. உண்மையில் நாத்திகவாதி பகுத்தறிவைப் பயன்படுத்துவதாகத் தெரிந்தாலும் அது ஒரு ஆழ்ந்த அனுபத்திற்கான தேடலினால் உண்டாகிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். எந்த ஒரு சமய நம்பிக்கைக்கும் உட்படாதபடி நல்லவ்ற்றையே (அளவுகோல் உங்களுக்குத் தெரியும்) நின்னந்து/செய்து வருகிற நபரையே கடவுளும் விரும்புவார். கடவுளுக்கு எதிராய் இராதவன் அவர் பட்சத்தில் இருக்கிறான் என்பது விவிலிய வாக்கு.

  • August 24, 2011 at 11:43 AM

    /இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது
    100 சதவீகிதம் உண்மையானது என குறிப்பிடுவதில் தவறில்லை/

    என்னுடையது நம்பிக்கை மட்டுமாக் இருந்தாலும் பிற‌ருக்கு தொல்லை தராத ஒன்று.
    _________
    நம்பிக்கையை தாண்டி என்றால் எப்படி?
    எப்படி என்று விளக்க முடியுமா?.வரையறுங்கள் பார்க்கலாம். கடவுளை வரையறுக்க முடிந்தால் கடவுளே அல்ல.
    _______________
    ஏவல் விலக்கல் எல்லா சட்ட திட்டங்களிலும் உண்டு.இஸ்லாம் சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை குழந்தைகல மனக்க அனுமதி தருகிற‌து அப்ப்டி செய்தால் மன்நிலை பாதிக்கப்ட்ட குழந்தைகள் பிற‌க்கிரார்கள் எனப்து நிரூபிக்கப் பட்ட உண்மை.அல்லா அனுமதித்தது த்வறாகி விட்டது.
    ____________

  • August 24, 2011 at 12:34 PM

    /மதம் போன்றவை உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக கொண்டால் அதுக்குறித்து விளக்கவோ - விவாதிக்கவோ தேவையில்லை.,/

    இத்னை நீங்கள் கடைப்பிடித்து இருந்தால் விவாதம் செய்ய மாட்டீர்கள்.சரி உங்கள் மதம் நம்பிக்கைக்கு மேல் என்றால் அது பற்றி ஒரு பதிவு பிற‌கு இடுங்கள்.இப்போது வேறு விஷயம் பார்ப்போம்.

    / ஆனால் நாத்திகத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமாக கொள்ளாமல் அறிவு ரீதியாக எடுக்கப்பட்ட ஒரு மாற்றுத்தீர்வாக கொண்டதால் அதுக்குறித்து விளக்கம் தந்தாக வேண்டும்./

    வாழ்வு என்பது இயல்பான விஷயம்.சர்வ ரோஹ நிவாரணி தீர்வு என்று எதுவும் கிடையாது.தீர்வு என்பது எதற்கு என்கிறேன்.பிரபஞ்சம் எப்படி தோன்றியது ,மனிதன் தோன்றியது என்பது எனக்கு தேவையில்லாத பிரச்சினை.அதை அறிவியல் சொல்வது ஏற்புடையதக்வே இருக்கிற‌து.சமூகம் சார்ந்த பரம்பரையான் வாழ்வியலை பின்பற்றி வாழ்ந்து விட்டு போகிறோம்.கால்த்திற்கு ஒவ்வாத விஷயத்தை தூக்கி எறிவோம். இப்படித்தான் எங்கள் வழ்வியல் நடைமுறைக்கு வந்தது. அவ்வளவுதான்.இதனை செய்/செய்யாதே என்று ஒரு புத்தகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.இதில் மிக மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் .
    இஸ்லாமின் வாழ்வியல் நடைமுரைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்ற‌ன.
    ________________
    /எது பேராசை., கண்ணுக்கு தெரியாத ஒரு வாழ்விற்காக கண்ணேதிரே விரியும் வாழ்வில் இறைவனுக்கு பயந்து அவனது கட்டளைப்படி நல்லவனவற்றை பின்பற்றி- தீயவனவற்றை விட்டு விலகி வாழ்வதற்கு பெயர் நாத்திக அகராதியில் பேராசையோ...? மறுமை வாழ்வென்று ஒன்று இல்லாவிட்டாலும் மேற்கண்ண்ட ஏவல்-விலக்கல்களை இந்த வாழ்க்கையில் சரிவர பேணி வாழ்வதால் மனித குலத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு ஏற்பட போவதில்லை மாறாக தனி மனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் பேணுதல் போன்றவையே உயரும்./

    குரான் சொல்லும் சுவன் வாழ்வு மீது பிரியமா.மத சொர்க்கங்களிலேயே வித்தியாசமான் சுவனம்.நினைத்தாலே சிரிப்பு வரும்.வாழ்த்துக்கள்.
    ஒரு இஸ்லாமியர் மறுமை வாழ்வு இல்லையென்று சொல்ல்லாமா?.இதை பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள் அப்போது விவாதிப்போம்.

    _________
    /யார் யாருக்கு தொல்லை தருகிறார்கள்.? நாம் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். மேற்கத்திய ஊடகம் வளர்க்கும் தீவிரவாத செயல்களோடு இஸ்லாத்தை முடிச்சி போடாதீர்கள்.,ஏனெனில் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல- இஸ்லாம் அஃது சொல்லவும் இல்லை.,அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களே தவிர மார்க்கமல்ல., சண்டை சச்சரவிற்கு பிரதான காரணம் மதம் தான் என்றால் ஒரே குடும்பத்தில் சொத்திற்காக சண்டையிட்டு சகோதரர்களுக்கிடையில் கொலைகள் கூட நடைபெறுகிறதே இதற்கு எந்த மதம் காரணம்..?/

    அப்ப இஸ்லாமும்& இஸ்லாமியரும் பிற்ர் போல்தான்.!!!!!!! எதுவும் நடக்கும் .
    _____________________
    /தான் பின்பற்றும் வழிமுறையில் ஒருவனுக்கு 100 சதவீகித திருப்தியிருந்தால் அதனை பிறரிடம் சொல்வது இயல்பே! அதிலும் மனித குல முழுமைக்கும் பொருந்தக்கூடிய எல்லா நடை முறை சாத்தியக்கூறுகளும் கொண்ட கொள்கையே உண்மை என்று கூறுவதற்கு என்ன தயக்கம் ? /

    நானும் அப்ப்டித்தான் 100% அந்தோஷமாக் இருக்கிரேன்.எனது கொள்கையை பின்பற்றுங்கள் என்று கூறி பிரச்சாரம் பண்ண நேரம் இல்லை.அது என்ன சாத்தியக் கூறு?,இதுவும் நம்பிக்கையே.நம்பிக்கை மட்டுமே!!!!!!.
    ____________
    /மேலும் கடவுள்- மத போதனை போன்றவைகளை இஸ்லாமல்லாத ஏனைய மதங்கள் வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகிகொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது
    100 சதவீகிதம் உண்மையானது என குறிப்பிடுவதில் தவறில்லை சகோ..
    இது இஸ்லாம் குறித்த பதிவல்ல- ஏனெனில் இஸ்லாம் பற்றிய கருத்தாடல்கள் பதிவின் நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்,, ஏனைய நாத்திகம் குறித்தே வினாக்களுக்கு விடை தருவீர்கள் என்ற /

    கடவுளை வரையரையா ஆஆஆஆஆஆஅ!!!!!!!!!!!!!!!!!!.செய்யுங்கள் பார்க்கலாம்.பிற‌ மத புத்தக்த்தில் இல்லாத குரானில் மட்டுமே உள்ள விஷய்த்தை கூற் வேண்டும்.

    இஸ்லாமின் ஏவல் விலக்குகளில் பல வில்லங்கம் உண்டு.எ.கா வேண்டுமானால் தருகிறேன்.இத்னை அப்புறம் பார்க்கலாம்.கடவுளை ஒரு பதிவுக்கு மிகாமல் வரையறுக்க.

  • August 24, 2011 at 12:37 PM

    சகோ. சார்வாகன்,
    //.என்னை பொறுத்தவரை இறை மறுப்பு என்பது மதங்களை மறுப்பது.மறுமை வாழ்வு இல்லை ,அதற்கு ஆசப் படுவது பேராசை. மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் .இதற்கு மேல் ஒன்றும் இல்லை//

    சிலருக்கு சில தனிப்பட்ட கருத்து இருக்கலாம், பொதுவான கருத்து நடைமுறை விசயங்களை கூறினால் நன்றாக இருக்கும்.

    // மதங்களில் உள்ளதை பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தராத வரையில் பின்பற்றலாம்.//

    சரியான வாதம் தான். மற்றவர்களுக்கு தொல்லை தருவதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது.
    //சர்ச்சைக்குறிய விஷயங்களை நடைமுறையில் தவிர்ப்பது போல் பிரச்சாரத்திலும் என் மதம் மட்டுமே 100% உண்மை,சர்வ ரொஹ நிவாரணி என்பதை தவிர்பது மத சார்பின்மை நல்லது.//

    உண்மை இல்லை என்று கூருவீர்கலானால் நாகரீகமான முறையில் வாதிடுவதுதான் சரி. ஏன் நாத்திகம் 100% என்று உங்களால் வாதிடமுடியவில்லை, 90% இருப்பதை விட 100% உண்மை இருப்பதை பின்பற்றுவதே சரி.

    // இறை மறுப்போ,நம்பிக்கையாளரோ பிறருக்கு துன்பம் தராமல்,இயற்கையை பாழ் படுத்தாமல் வாழ்வதே சிறந்தது.ஜன்நாயகம்//

    நல்ல கருத்து.

    // ஜன்நாயகம்,மதச்சார்பின்மை இரண்டும் போற்றி பாது காக்கப் பட வேண்டிய விஷயங்கள் இவற்றுக்கு எதிரான் எதுவும் கடுமையாக் எதிர்க்கப் படவேண்டிய விஷயங்கள்.//

    இது உங்கள் கருத்து, ஜனநாயகம், மதச்சர்ப்பின்மையால் தனி மனித ஒழுக்கத்தை தரமுடியுமா? தனி மனித ஒழுக்கம் நாட்டிற்கு பயனில்லை என்கிறீரா?

  • August 24, 2011 at 12:50 PM

    //நாத்திகர்கள் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது மொதல்ல உங்க மதத்துல இருக்குற தீவிர வாத்த ஒளிச்சிட்டு எங்க கிட்ட பேசுங்க ஜிஹாத் ஜிஹாத் நு எல்லாரையும் கொன்னுக்கிட்டு இருக்கீங்க நீங்க நதிகத எதிர்க்க வந்துட்டிங்கள இதுவரைக்கும் எந்த நாத்திகன் படுகொலை செஞ்சிருக்கன் உங்க அல்ல பேர்ல எத்தன கொலை ,குண்டு வைப்பு எல்லாம் உங்க அல்ல பண்ற வேலை தான இல்ல மனிதன் பண்ற வேலைய ??????????//

    சகோ. நான் குறிப்பிட்ட ஹிட்லரை பற்றி பார்க்க வில்லை என நினைகிறேன்.

    //அப்பா மொதல்ல உங்க அல்லா வ படச்சது யார் நு சொல்லுங்க பாப்போம்//

    தங்களின் இந்த கேள்விக்கு என்னுடைய பதிவில் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

    http://carbonfriend.blogspot.com/2010/08/blog-post_31.html

    //குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் நு விஞ்ஞானம் சொல்லுது அதுக்கு ஆதாரமும் நம்பும்படியா இருக்கு//

    அறிவியல் அப்படி கூறவில்லை, இதுவரையில் பரிணாமத்திற்கு ஆதாரம் இல்லை, அது வெறும் கற்பனையே.

    //ஆனா நீங்க சொல்றது ஏதும் நம்பும்படியா இல்லையே ...........//

    இது முழுமையாக இஸ்லாத்தை விளங்காததால் வந்த கருத்து, அல்லது இஸ்லாத்திற்கு எதிரான பிரசாரர்களால் நம்ப வைக்கப்பட்ட செய்திகள்.

  • August 24, 2011 at 12:51 PM

    //நாத்திகர்கள் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது மொதல்ல உங்க மதத்துல இருக்குற தீவிர வாத்த ஒளிச்சிட்டு எங்க கிட்ட பேசுங்க ஜிஹாத் ஜிஹாத் நு எல்லாரையும் கொன்னுக்கிட்டு இருக்கீங்க நீங்க நதிகத எதிர்க்க வந்துட்டிங்கள இதுவரைக்கும் எந்த நாத்திகன் படுகொலை செஞ்சிருக்கன் உங்க அல்ல பேர்ல எத்தன கொலை ,குண்டு வைப்பு எல்லாம் உங்க அல்ல பண்ற வேலை தான இல்ல மனிதன் பண்ற வேலைய ??????????//

    சகோ. நான் குறிப்பிட்ட ஹிட்லரை பற்றி பார்க்க வில்லை என நினைகிறேன்.

    //அப்பா மொதல்ல உங்க அல்லா வ படச்சது யார் நு சொல்லுங்க பாப்போம்//

    தங்களின் இந்த கேள்விக்கு என்னுடைய பதிவில் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

    http://carbonfriend.blogspot.com/2010/08/blog-post_31.html

    //குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் நு விஞ்ஞானம் சொல்லுது அதுக்கு ஆதாரமும் நம்பும்படியா இருக்கு//

    அறிவியல் அப்படி கூறவில்லை, இதுவரையில் பரிணாமத்திற்கு ஆதாரம் இல்லை, அது வெறும் கற்பனையே.

    //ஆனா நீங்க சொல்றது ஏதும் நம்பும்படியா இல்லையே ...........//

    இது முழுமையாக இஸ்லாத்தை விளங்காததால் வந்த கருத்து, அல்லது இஸ்லாத்திற்கு எதிரான பிரசாரர்களால் நம்ப வைக்கப்பட்ட செய்திகள்.

  • August 24, 2011 at 1:28 PM

    தங்கள் மீது சலாம் உண்டாகட்டும் சகோ.

    //நாத்திகம் என்பதே உண்மையான ஆத்திகம் என்பது என் தாழ்மையான கருத்து//--???--அது சரி...!

    மெய்யாலுமே கொஞ்சம் சீரியஸாக விவாதிக்கலாமே சகோ.Bosco..!

    //உண்மையில் சமயங்கள் வலியுறுத்தும் பிறரன்பு செய்ல்களுக்கெதிரான ஆத்திகர்களினால்தான் நாத்திக உணர்வே வலுப்பெறுகிறது.//----???

    என் அப்படி உங்களுக்கு எண்ணம் வருகிறது...?

    ஒரு மிகவும் ஸ்ட்ரிக்டான... நல்லொழுக்கத்தை முதன்மை பாடமாக போதிக்கும்... எப்போதுமே பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழுத்தேர்ச்சி காட்டும்... நாட்டிலேயே மிகச்சிறந்த ஒரு பள்ளியில் படிக்கும் ஒரிரு மாணவர்களை ரவுடியாக பொறுக்கியாக கொலைகாரனாக முட்டாளாக கல்வி அறிவில் குன்றிய மாணவர்களாக காணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்..!

    இப்போது சொல்லுங்கள் சகோ.பாஸ்கோ..!

    அந்த இரண்டு மாணாக்கர்களை திருத்த முயல்வேர்களா..? திருந்தாவிடின் தண்டிப்பீர்களா..?

    அல்லது...

    ஒட்டுமொத்தமாக எல்லா பாடத்திட்டம் மற்றும் மாணாக்கர், ஆசிரியர், அனைவரையும் குற்றம் சுமத்தி வெளியேற்றி அந்த பள்ளியையையே இழுத்து மூடிவிட வேண்டும் என்று அந்த பள்ளியின் மீது குறை கானுவீர்களா..?

  • August 24, 2011 at 1:29 PM

    அனைவருக்கும் வணக்கம்,
    நாத்திகம் - இதை ஒரு மதமாக்கி விடாதீர்கள், கடவுள் எனும் பெயரையும், அதனால் கற்பிக்கப்படும் மூடநம்பிக்கைகளையும், முட்டாள்தனைத்தையும் வேரறுக்கவே எம் தந்தை பெரியார் மூலம், கற்பிக்கப்பட்ட பாடம் தான் இது.

    தன்கைகளை நம்பாதவந்தான், பிறர் கைகயை (இறைவன்) நம்புவான்.

    அடுத்தவன் அது இறைவனாக இருந்தாலும், அவன் போடும் பிச்சை நமக்கு வேண்டாம்.

    இறந்தாலும் தன்மாணத்தோடு இறக்கவேண்டும்....

    தன்மாணத்தில் மிகசிறந்தவன்... தமிழன் என்பதை எம்பெரியார் நமக்கு கற்றுகொடுத்தார்....

    அதன்படி வாழ்ந்தாலே போதும் யாரையும் நாம் அடிமை போல வணங்க வேண்டாம்....

  • August 24, 2011 at 1:38 PM

    சகோ.Bosco..!

    //எந்த ஒரு சமய நம்பிக்கைக்கும் உட்படாதபடி நல்லவ்ற்றையே (அளவுகோல் உங்களுக்குத் தெரியும்) நின்னந்து/செய்து வருகிற நபரையே கடவுளும் விரும்புவார்.//

    ---"எந்த ஒரு சமய நம்பிக்கைக்கும் உட்படாத நல்லவற்றை"....கடவுள் எங்கே எப்போது யாருக்கு வழங்கி இருக்கிறார்..?

    'இப்படி ஒன்றைத்தான் கடவுள் விரும்புகிறார்' என்றும் இவ்வளவு தெளிவாக எங்கிருந்து எதன்மூலம் யார் சொல்லி எப்படி அறிந்து கொண்டீர்கள்..?

    சொல்லுங்கள் சகோ.பாஸ்கோ. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

  • August 24, 2011 at 1:47 PM

    @ சகோ.Rajkumar

    //அனைவருக்கும் வணக்கம்,//===>>>//கடவுள் எனும் பெயரையும், அதனால் கற்பிக்கப்படும் மூடநம்பிக்கைகளையும், முட்டாள்தனைத்தையும் வேரறுக்கவே எம் தந்தை பெரியார் மூலம், கற்பிக்கப்பட்ட பாடம் தான் இது.//

    ஓஹோ..! இப்படித்தான்... கடவுளுக்கு பதில் மனிதனை வணங்கத்தான் பெரியார் சொன்னாரா..?

    அல்லது தனக்கு சிலை வைத்து மாலை மரியாதையுடன் தன்னை வணங்க சொன்னாரா..?

  • August 24, 2011 at 1:50 PM

    @ சகோ.Rajkumar

    //அடுத்தவன் அது இறைவனாக இருந்தாலும், அவன் போடும் பிச்சை நமக்கு வேண்டாம்.

    இறந்தாலும் தன்மாணத்தோடு இறக்கவேண்டும்....

    தன்மாணத்தில் மிகசிறந்தவன்... தமிழன் என்பதை எம்பெரியார் நமக்கு கற்றுகொடுத்தார்....//

    ----இப்படியெல்லாம் பெரியார் சொன்னாரா..?

    அப்புறம்...

    "இன வேற்றுமை ஒழிய இஸ்லாமே நன்மருந்து" என்று ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம் எதற்கு சொன்னார்..?

  • August 24, 2011 at 1:56 PM

    சகோதரர் ராஜ்குமார்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன்.

    //தன்மாணத்தில் மிகசிறந்தவன்... தமிழன் என்பதை எம்பெரியார் நமக்கு கற்றுகொடுத்தார்....//

    இப்படி ஒருவேளை பெரியார் அவர்கள் சொல்லிருந்தால் எவ்வளவு பெரிய அறியாமை கருத்து இது.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  • August 24, 2011 at 4:50 PM

    நம் அனைவர் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    //தன்மாணத்தில் மிகசிறந்தவன்... தமிழன் என்பதை எம்பெரியார் நமக்கு கற்றுகொடுத்தார்....//
    எவ்வளவு பெரிய முரண்பாடு
    தமிழகம் தாண்டிய நாத்திகர்களெல்லாம் தன்மானத்தில் சிறந்தவர்கள் இல்லையா...? அல்லது பெரியாரின் பாடத்திட்டத்தின் படி அவர்கள் நாத்திகர் இல்லையா..?

  • August 25, 2011 at 11:29 PM

    ibnu shakir has left a new comment on your post "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...":

    சகோதரர் மொஹம்மத் ஆஷிக், சகோதரர் ஆஷிக் அஹமது ஆகியோர் மிகச்சிறப்பாக பதில் எழுதியுள்ளார்கள்.

    அல்ஹம்துல்லில்லாஹ்

    யா அல்லாஹ்

    இன்ஷா அல்லாஹ்

    Publish
    Delete
    Mark as spam

  • August 28, 2011 at 7:35 AM

    /இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது../
    இது நண்பர் குலாமின் கருத்து.நம்பிக்கையாளர் யாரும் விடையளிக்கலாம்.

    உங்கள் நம்பிக்கையின் படி வரையறுக்க இயலுமா?செய்யலாமா?

    இயலும்,செய்யலாம் என்றால் இஸ்லாமிய கடவுளை வரையறுக்கவும்.

  • August 28, 2011 at 7:49 AM

    ஹாய்,(இதில் எதுவும் பிரச்சினை இல்லையே!!!!!!!!!!!!)

    வணக்கம் ஏன் சொல்கிறேன் என்றால் நான் வணக்கம் சொன்னால் நகரிகமுடையவர் திருப்பி வண்க்கமோ,அல்லது எதையாவ்து திருப்பி சொல்கிறார்.கடவுள்களும் என்றாவது திருப்பி சொல்லும் என்றால் அட இந்து மத முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும்,மிச்சம் மீதி பிற மத கடவுள்களுக்கும் வணக்கம்.

    திருப்பி வண்க்கம் என்று ஏதவது ஒரு கடவுள் பின்னூட்டம் இட்டால் சரிதான்!!!!!!!!!!!.நித்யானந்தல் போல் வாழும் கடவுள்கள் தவிர்க்கவும்.

    நான் என்னுடைய நாத்திகத்தை வரையறுத்து விடுகிறேன்.

    1.மத புத்தகங்கள் கூறும் கடவுள்,அவற்றில் உள்ள சம்பவங்கள் அனைத்தும் வரலாற்று ஆதாரம் இல்லாததால் உண்மையாக் இருக்கவே முடியாது.மத புத்த்கம் பற்றிய வரலாற்றிலேயே அவர்கள் சான்றுகளே முரண் படுகின்றன.

    2.மதம் தவிர்த்த பல வேற்று கிரக மனிதர்கள் குடும்பம் குட்டியோடு உள்ளவர்கள் உலக்ம் உயிர்கள் படைத்தார்கள் என்று வைத்துக் கொண்டால்.இதுவரைக்கும் இது நிரூபிக்கப் படவில்லை.இதில் நமக்கு ஆட்சேபனை இல்லை.

    அது போல் நீங்களும் கடவுளின் வரையறை பற்றி சகோ குலாம் கூறிதை பதில் அளியுங்கள்.பதில் அளித்ததும் என் தளத்திலும் அதே பின்னூட்டத்தை இட்டால் பை பை(நன்றி என்றால் பிரச்சினையாஆஆஆஆஆஅ.

  • August 29, 2011 at 3:01 PM

    நம் அனைவர் மீதும் ஏகனின் சாந்தி நிலவட்டுமாக
    // நான் வணக்கம் சொன்னால் நகரிகமுடையவர் திருப்பி வண்க்கமோ,அல்லது எதையாவ்து திருப்பி சொல்கிறார்.//
    வணக்கம் ஏன் சொல்கிறீர்கள் என்பதற்கு இது பதில் தவிர, வணக்கம் என்பதன் பொருள் என்ன என்பது குறித்து தான் இங்கு கேள்வி., ஒருவர் திருப்பி சொல்வதற்காக சொல்லப்படும் ஒரு வழக்குச்சொல்லாக இருப்பின் நலமா.. உங்கள் மீது அமைதி உண்டாகட்டும் என்று சொல்வதே பிறரை சந்திக்கும் போது சொல்வதற்கு ஏற்றமான வார்த்தையாக இருக்கும்.சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்?

    //நீங்களும் கடவுளின் வரையறை பற்றி சகோ குலாம் கூறிதை பதில் அளியுங்கள். //
    என் பதிவுகளை சரியாக பார்க்கவில்லை என்பது இந்த பதிலில் நன்றாக தெரிகிறது.கேள்விகளோடு பதிலையும் கொஞ்சம் பாருங்கள்... பகுத்தறிவாளார்களின் கடவுள் குறித்த வரையறையை...

    //மத புத்த்கம் பற்றிய வரலாற்றிலேயே அவர்கள் சான்றுகளே முரண் படுகின்றன.//
    குர்-ஆனில் எந்த வரலாறு எங்கு முரண்படுகிறது கொஞ்சம் விளக்குவீர்களா..?
    சகோ., போலி கடவுள்கள் சமைக்கும் மதங்களோடு இஸ்லாத்தை இணைக்காதீர்கள்., நித்தியானந்தா போன்றர்களை கடவுளாக பார்க்கும் சமுகத்திற்கு வேண்டுமானால் உங்களைப்போன்றோர்களால் விடையில்லா கடவுள் குறித்த கேள்விகளை மில்லியன் கணக்கில் அடுக்க முடியும்., முடிந்தால் ஒருமுறை குர்-ஆன் கூறும் ஓரிறை குறித்து அறிய முற்படுங்கள் ... பின் அது குறித்து வினவுங்கள்.

    வழக்கம் போல் பகுத்தறியும் (?) நாத்திகர்களிடம் நாம் கேட்கும் கேள்வி ஒன்றுதான்..
    இஸ்லாமிய சட்டங்கள் இவ்வுலக வாழ்க்கைக்கு பொருந்தாதென்றால் எதன் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வது?
    அதாவது மனித வாழ்விற்கு பயன்படும் வகையில் பின்பற்ற வேண்டிய ஏவல் -விலக்கல்களை எவ்வாறு அறிந்துக்கொள்வது? மேலும் ஒரு செயலினால் ஏற்படும் விளைவு நல்லதா அல்லது தீயதா என்பதை எதன் அடிப்படையில் நாம் ஒப்பு நோக்குவது?

    அப்படியே இங்கோ, நான்முஸ்லிம் தளத்திலோ நாத்திகம் குறித்த தர்க்கரீதியான கேள்விகளுக்கு விடையளிக்க முற்படுங்கள், விடையளித்தால் நாத்திகம் மறுக்கும் கடவுள் இல்லை என்று சொல்ல நானும் தயார்..
    வேறு எங்கோ இஸ்லாத்தை பிடித்திழுக்காமல்., நாத்திகம் குறித்த பதிவுகளை ஒருமுறை பார்வையிடுங்கள்

  • August 29, 2011 at 10:13 PM

    வணக்கம் நண்பர்களே,
    நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு,வேறு கோட்பாடுகள் இல்லை என்பது உங்கள் வாதமாக இருக்கலாம். எமக்கு கடவுள் என்பது ஒரு (பொய்யான)கருத்து.ஆகவே அதை நம்புவது வீண்வேலை. நிரூபிக்கப்பட்ட கடவுள் என உலகத்தில் எதுவும் இல்லை. நீங்கள் வணங்கும் கடவுள் கண்டுபிடிக்கப்பட்டு வெறும் 1400 வருடங்கள்தான் ஆகிறது.

    //ஒருசில நாத்திகர்கள் உணர்வுரீதியாக இறைவனை மறுக்கின்றனர். "உலகில் இவ்வளவு பிரச்சனை நடக்கின்றதே...அதனை போக்க இறைவன் வரவில்லையே. அதனால் இறைவன் இல்லை"....இம்மாதிரி வாதங்கள் எப்படி இறைவனை மறுக்கும்?. உதவி செய்யவில்லை என்றால் இறைவன் இல்லையென்று ஆகிவிடுமா??. 'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற அளவுக்கோலை இவர்களுக்கு யார் கொடுத்தது???///

    அப்படியானால்'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற அளவுக்கோலை உங்களுக்கு யார் கொடுத்தது??? யாருக்கும் உதவாமல் வெட்டியாக இருப்பதற்கு எதற்கு கடவுள்?

    // தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான குற்றங்களை எந்த அரசாங்கத்தாலும் கட்டுபடுத்த முடியாது அவற்றிக்கு முக்கியம் கடவுள் நம்பிக்கை மட்டுமே, மனிதன் பயப்படுவது தப்பு செய்தால் கடவுள் தண்டனை கொடுத்துவிடுவார் என்பதற்கே... கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரை பார்த்து பயப்பட வேண்டும்?

    இதுபோல பல, இந்த நாத்திக கொள்கையினால் தனி மனித ஒழுக்கம் கெட்டு குற்றங்களும் குழப்பங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் அறிவர்.///

    நாத்திக கொள்கையில் வாழ்பவர்கள் தங்கள் மனசாட்சியை நம்புவர். சக மனிதன் தன்னைப்போன்றவன் என்பதால் யாருக்கும் கேடு நினைக்கவேண்டிய அவசியமில்லை. கடவுளை நம்புவன் நிலை அப்படியல்ல. எந்தத்தவறை செய்தாலும் கடவுளை கும்பிட்டால்போதும், சொர்க்கம் நிச்சயம் எனும் நினைப்பில் இருப்பவந்தான் எல்லா தவறுகளுக்கும் தயாராக இருப்பான்.என் கடவுளை நம்பாதவன் நரகத்துக்குத்தானே போகப்போகிறான், அதை இப்போதே காட்டுவோம் என அராபியர்கள் தங்கள் பணிப்பெண்களிடம் காட்டும் கொடுமையை நீங்கள் மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு இல்லை என மறுக்கலாம்.

    //ஒரு முறை முழு உலகையும் விழிவிரித்து திறந்த மனதுடன் பாருங்கள். எத்தனை ரம்யமான படைப்பு,,,மாஷாஅல்லாஹ் (அல்லாஹ் போதுமானவன்) ...ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்ட,வடிவமைப்பில் உச்சம் பெற்ற படைப்பு....எங்கிருந்து வந்துவிட்டன இவை???///

    அதையேதான் நானும் கேட்கிறேன். இவ்வளவு ரம்மியமான, உச்சம் பெற்ற படைப்பு அனைத்தையும் ஒரே ஒரு கடவுளால் உருவாக்க முடியும் என எப்படி உங்களால் நம்ப முடிகிறது? அதுவும் அந்தக்கடவுளுக்கு ஒரு தூதரைக்கூட சரியாக அனுப்பத்தெரியாமல் தூதர்களையும், வேதங்களையும் மாற்றி மாற்றி அனுப்பி இப்போதுதான்(தற்காலிகமாக) ஓய்ந்திருக்கிறார்.

    இறுதியாக ஒன்று,
    எனக்கு ஒருவன் வேலை கொடுத்து தினமும் என்னை புகழ்ந்துகொண்டே இரு என்று கூறினால், அவனை மன நோயாளி எனக் கருதுவேன், நீங்கள் கடவுள் எனக் கருதுகிறீர்கள்.

    நன்றி.

    மட்டறுக்காமல் வெளியிட்டால் மகிழ்ச்சி.

  • August 31, 2011 at 8:39 AM

    நம் அனைவரின் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    //வணக்கம்//
    மறுபடியும் முதல்லே இருந்தா..?

    //. நிரூபிக்கப்பட்ட கடவுள் என உலகத்தில் எதுவும் இல்லை//
    ஓகே கடவுள் இல்லையென நிரூபித்து விட்டீர்களா...? சகோ

    // நீங்கள் வணங்கும் கடவுள் கண்டுபிடிக்கப்பட்டு வெறும் 1400 வருடங்கள்தான் ஆகிறது//
    தவறு என்னைப்போன்றோர்கள் அறிந்து 30 -40 வருடங்கள் ஆகிறது.,

    //கண்டுபிடிக்கப்பட்டு //
    உங்கள் இஸ்லாமிய அறிவு என்னை புல்லரிக்க வைக்கிறது.,
    ஓ! நபி ஆதம் முதல் இயேசு வரை நாத்திகர்களோ???????

    //யாருக்கும் உதவாமல் வெட்டியாக இருப்பதற்கு எதற்கு கடவுள்?//
    ஆமாலே., உதவாமல் இருக்க ஏன் கடவுள்?

    //நாத்திக கொள்கையில் வாழ்பவர்கள் தங்கள் மனசாட்சியை நம்புவர். சக மனிதன் தன்னைப்போன்றவன் என்பதால் யாருக்கும் கேடு நினைக்கவேண்டிய அவசியமில்லை//
    அடடே மனசாட்சி... ஒண்ணு இருக்குல...அப்ப உங்க மனசாட்சி என்ன சொல்லுது இத பாருங்க

    //கடவுளை கும்பிட்டால்போதும், சொர்க்கம் நிச்சயம் //
    அப்படில்லாம் இல்லைங்க.,

    //கொடுமையை நீங்கள் மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு இல்லை என மறுக்கலாம்.//
    இல்லை கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம். ஐயா பெரியவரே ., சவூதி மக்கள் இஸ்லாத்திற்கு அத்தாரிட்டி இல்லை., குர்-ஆன் சுன்னாவிற்கு மாறுப்பட்டு கொடுமைகளை மேற்கொள்ளும் எத்தரப்பு மக்களையும் இஸ்லாம் கண்டிக்கவே செய்கிறது., இதற்கும் லிங்க் தரவா..? உஷ்ஷ்....

    //உச்சம் பெற்ற படைப்பு அனைத்தையும் ஒரே ஒரு கடவுளால் உருவாக்க முடியும் என எப்படி உங்களால் நம்ப முடிகிறது//
    இதே கேள்வியே பரிணாமத்தை முன்னிருத்தி கேட்கப்பட்டால் பதில் தருமா பரிணாமம்..? கிடைத்திருக்கின்ற எலும்புக்கூடுகளை வைத்துக்கொண்டு பதில் சொல்வது கடினம் தான் என ஒரு சகோ அங்கு சொன்ன பதில் உங்களுக்கு உதவலாம்.

  • August 31, 2011 at 8:45 AM

    அதுவும் அந்தக்கடவுளுக்கு ஒரு தூதரைக்கூட...அதைத்தொடர்ந்த கேள்விக்களுக்கு
    இறைத்தூதர்கள் ஏன்?
    தேவையுடையவனா இறைவன் ? போன்ற பதிவுகள் பதில் தரும் என நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்

    சகோ., நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனேக கேள்விகளுக்கான பதில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது., உங்கள் புரிதலில் தவறா அல்லது புரிந்துக்கொள்ள மறுக்கிறீர்களா...? என்பது தெரியவில்லை.சகோ எந்த ஒரு கோட்பாடை மறுப்பதாக இருந்தாலும் அவற்றால் ஏற்படும் தீமைகளையும் -அஃது அவற்றை களைவதற்கான வழிமுறைகளையும் அக்கோட்பாட்டிற்கு எதிரான ஒருவாகும் ஒரு கொள்கை தெளிவாக கூற வேண்டும்
    நீங்கள் அறிந்தோ - அறியாமலோ முஸ்லிம் பெயர்களில் செய்யும் தவறுகளை இஸ்லாத்தோடு முடிச்சிட்டு இஸ்லாமிய கடவுட்கோட்பாட்டை தவறாக சித்தரிக்க முயல்கிறீர்கள்., ஓகே உடன் பாட்டு அணுகுமுறையில் அதை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் - கடவுள் வேண்டாம் ஓகே., ஆனால் இச்சமுகத்தில் மனிதர்களின் மேற்கொள்ளும் செயல்களுக்கு உகந்தார்ப்போல் நீதிமான தீர்ப்பு உலகம் முழுவதும் வழங்க வேண்டும் அதாவது.,
    ஒருவர் ஒரு கொலை செய்கிறார்., அவருக்கு அதிகப்பட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது., மற்றொருவர் ஒரு கொலையும் ஒரு கற்பழிப்பும் செய்கிறார் அவருக்கு அரசாங்கம் என்ன தண்டனை கொடுக்கும்? சரி அவருக்கும் அதே தண்டனையே வழங்குவதாக இருக்கட்டும் ஒருவர் பத்து கொலைகளும் பத்து கற்பழிப்பும் அத்தோடு வங்கி கொள்ளையும் செய்தவராக இருந்தால் ...என்ன பத்து முறை அவருக்கு தூக்கு தண்டனையா...?

    அதுப்போலவே அப்பாவி ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கு எதிராக பொய் சாட்சியங்கள் புனையப்பட்டு நீதிபதியும் சாட்சியங்களின் அடிப்படையில் அவரை தூக்கிலிட்டால் அவரின் உண்மை நிலைக்கு இதுதான் பரிசா..?
    உதாரணத்திற்கு தான் இங்கு இரண்டு, இதைப்போல ஏராளம் இருக்கிறது தனிமனிதனுக்கு- ஒரு நாட்டின் சட்டங்களால் 100 சதவீகித நீதமான நீதியே செலுத்தமுடியுமா..?
    இவை யாவற்றும் பதில் தாருங்கள் உங்களோடு நான் மட்டுமல்ல இவ்வுலகமே கடவுள் இல்லையென ஏற்றுக்கொள்ளும்.
    உங்கள் உள்ளம் உண்மையான தேடுதலின்பால் செல்ல உங்களுக்காக கடவுளிடம் நானும் பிரார்த்திக்கிறேன்.,
    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

  • September 3, 2011 at 1:19 AM

    நேர்வழியை பின்பற்றுவோர் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!சகோ ராஜ் குமார்! இறைவனின் பிச்சை என்றாலும் வேண்டாம் என்கிறீர்களே.உங்கள் உயிர் பிச்சை யாருடயது? பரிணாமத்தின் பரிசா?
    உங்கள் உடலில் மட்டும் லட்சக்கனக்கான கடவுளின் பிச்சைகளை சுமந்துகொண்டு நன்றிமறந்த உங்கள் உணர்வு தான் தன்மானமா?

  • September 5, 2011 at 12:04 PM

    நாத்திகம் பேசிக் கொண்டு,நாட்களைக் கடத்திக் கொண்டு நரக விளிம்பில் இருக்கும் நாத்திக மாக்களுக்கு - இஸ்லாம் விடும் சவால்களை நம் சகோதரர்கள் அழகான முறையில் எடுத்து வைக்கிறீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

    http://anboduungalai.blogspot.com/

  • September 14, 2011 at 6:51 PM

    நேரடி விவாதம்தான் என ஒற்றைக்காலில் நின்றதை விடுத்து பின்னர் இரண்டு காலையும் ஊன்றி இணைய விவாதத்திற்கு தயாரான, ”நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என பீற்றிக்கொள்ளும் இஸ்லாமிய நண்பர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை பதிந்து கொள்கிறேன்.
    இங்கு வணக்கம் என்று சொல்லுவது ஏதோ மனிதனை வணங்கும் பொருளில் கூறப்படுவது போன்று ஆத்திக சகோ.கள் கருதிக்கொள்கிறார்கள். வணக்கம் என்பது ஒருவரை சந்திக்கம் சமயம் மரியாதை நிமித்தம் கூறும் ஒன்றுதானே ஒழிய ஒருவரை வணங்கும் நோக்கத்திற்காக சொல்லப்படும் ஒன்றல்ல. முதலில் இவர்களுக்கு அல்லாவின் கருத்து ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். ஒருவன் இதயங்களில் இல்லாதவறை வாய்களினால் கூறுவதை நன்கறிந்த பிடரியை விட சமீபத்தில் இருக்கும் அல்லா ஏற்றுக்கொள்வதில்லை என்றிருக்க மரியாதை நிமித்தம் கூறப்படும் வணக்கம் என்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை. நீங்கள் சகோதரர்கள் என்று கூறுவதைப் போன்றுதான் இந்த வணக்கமும்.

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!