உம்மத் - அறிமுகம்


                      

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களை ஒன்றிணைத்து, தூய இஸ்லாத்தினை நாமும் முழுமையாகத் தெரிந்துக் கொண்டு, மாற்றுமத சகோதரர்களுக்கும் எடுத்துரைப்பதே இந்த உம்மத் தளத்தின் நோக்கமாகும். மேலும்,

  • முஸ்லிம்கள் மார்க்கம் என்னும் பெயரில் மேற்கொள்ளும் மூடநம்பிக்கைகளை - செயற்பாடுகளை அகற்றவும்,
  • இஸ்லாம் அல்லாத ஏனைய மதத்தைச் சார்ந்தோர்களுக்கு இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களைக் களையவும்,
  • 'கடவுள் மறுப்பாளார்கள்' எனத் தங்களை சமூகத்தில் இனங்காட்டுவோர் முன்வைக்கும் இஸ்லாம் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு முறையான பதில் தருவதும் மற்றும் அவர்களின் தவறான நம்பிக்கைகளை உலகறியச் செய்வதும்,
  • மக்கள் யாவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்த சமூக சிந்தனைகள் நிறைந்த பொதுவான சிந்தனைகளை - செயல்களை உருவாக்க முனைவதுமே இத்தளத்தின் நோக்கங்களாகும்.

இத்தளம் எந்த ஓர் அரசியல் கட்சியையோ, தனிப்பட்ட அமைப்பையோ சார்ந்தது அல்ல!

இத்தளம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும், அமைப்பையும் சாடவோ, பாராட்டவோ பயன்படுத்தபட மாட்டாது!

உலக உம்மத்(சமுதாயம்) யாவரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் தங்கள் எழுத்தாக்கங்களை  இந்த "உம்மத்"தில் இடம் பெற வேண்டுமென எண்ணினால், கீழ்காணும்  மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்:

மின்னஞ்சல் முகவரி: 1ummath@gmail.com

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (திருக்குர்ஆன் 16:125)

அல்லாஹ் இந்த சிறிய முயற்சியை  சீரிய முயற்சியாக ஆக்குவானாக!