Tuesday, November 29, 2011

எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்

3 கருத்துக்கள்

இந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவிரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன. 

பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் 'அதிபயங்கரமான ஐம்பது முஸ்லிம் தீவிரவாதிகள்' பட்டியல் ஒன்றை அண்மையில் நமது உள்துறை அமைச்சகம் தயாரித்தது. அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து, "இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது. 

நமது ஊடகங்களுக்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா? பேனைப் பெருச்சாளியாக்கி, நம் நாட்டின் எல்லா மொழி ஊடகங்களும் அதை எழுதித் தள்ளின  

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த வாஜுல் கமர் கான் என்பவர், இந்தியாவின் மும்பையை அடுத்துள்ள தானேவில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை சில நடுநிலை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "... சிறிய தவறு நடந்துவிட்டது. இத்தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று பெருந்தன்மையாக அறிவித்தார். 

அடுத்த சில நாட்களில் இரண்டாவது 'சிறிய தவறு' வெளிவந்தது. அதே 'அதிபயங்கரமானவர்களின் பட்டியலில்' 24ஆவது ஆளாக இருக்கும் இன்னொரு தீவிரவாதியான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமானது. முதல் தீவிரவாதியான வாஜுல் கமர் கான் என்பவராவது தானேவில் வசிக்கும் சாதாரண இந்திய முஸ்லிம். இரண்டாமவரான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் என்பவர் ஏற்கனவே 1993இல் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் 'சேர்க்கப்பட்டு'க் கடந்த 2010 பிப்ரவரி மாதம் கைதாகிச் சிறையில் இருப்பவர். http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563936_1_arthur-road-jail-mumbai-jail-special-tada-court 

மும்பை (ஆர்தர் சாலை) சிறையில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கு எதிராக இண்டர்போலில் புகார் செய்து "தேடப்படும் குற்றவாளி" ஃபெரோஸ் கானுக்கு எதிராக ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்கும் மேலாக உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது நமது புலனாய்வுத்துறை. அது மட்டுமின்றி, மும்பைச் சிறையிலிருக்கும் ஃபெரோஸைப் பாகிஸ்தானில் 'பதுங்கி'க் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீவிரவாதியைப் பிடிப்பதற்குப் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியும் வந்தது. 

நமது நடு(!)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் முஸ்லிம் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது சேவையைச் செவ்வனே செய்தன. 

*****

ஏறத்தாழ இதேபோன்று ஒரு செய்தியை, சன் குழுமத்தின் நம்பர் ஒன்(?) மாலை இதழான 'தமிழ் முரசு' கடந்த 23.11.2011இல் தலைப்பாக்கி வெளியிட்டது. 

தலைப்பு: "8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கத் தலைவர் கைது!" http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943 

அதிரையைச் சேர்ந்த, தவ்ஃபீக்கைக் காவல்துறை 8 ஆண்டுகளாகத் தேடி வந்ததாகத் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும் அழுத்தம் திருத்தமாக தமிழ் முரசு நாளிதழ் கூறியுள்ளது. காணொளியாக சன் தொலைக்காட்சியில் செய்தியும் சொல்லப்பட்டது. 

தமிழ் முரசு நாளிதழின் இதே செய்தியை அதே "8 ஆண்டுகள் ..." தலைப்பிட்டு நெல்லை ஆன்லைன், தன் செய்தியைப் போன்று அப்படியே வாந்தி எடுத்துப் பதித்துள்ளது. http://nellaionline.net/view/32_24021/20111123164224.html 

இதே செய்தியை தி ஹிண்டுவும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டது. http://www.thehindu.com/news/states/other-states/article2651009.ece?homepage=true  பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் இந்து நாளிதழ் மற்றொரு இடத்தில் 2008ஆம் ஆண்டு தவ்ஃபீக் பிணையில் வெளிவந்ததாகவும் கூறுகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பிணையில் வெளிவருவது சுலபம் அல்ல என்பது இந்து நாளிதழுக்குத் தெரியாததன்று. பின் எந்த வழக்கில் அவர் பிணையில் வந்தார் என்பதையும், அவர்மீது போடப்பட்ட பொடா சட்டத்தின் நிலை என்னவாயிற்று என்பதையும் இந்து நாளிதழ் அறிந்து கொள்ள விரும்பவில்லை.

8 ஆண்டுகள் தவ்ஃபீக்கைத் தேடியதில் என்னதான் சிக்கல்? 

கடந்த 2.12.2002இல் மும்பையின் அம்ருத் நகரிலிருந்து காட்கோபர் இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து இருவர் பலியாயினர்; 49 பேர் காயமடைந்தனர். சுறுசுறு(!)ப்புக்குப் பேர்போன மும்பைக் காவல்துறை உடனடியாக, மும்பை ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் முஹம்மது அப்துல் மத்தீன், ஷேக் முஹம்மது முஸம்மில், ஸாஹிர் அஹ்மது, இம்ரான் அஹ்மது கான், முஹம்மது அல்தாஃப் இஸ்மாயீல் ஆகிய ஐவரை மேற்காணும் வெடிகுண்டு வழக்கில் 'சேர்த்து' வழக்குப் பதிந்தது. ஆறாவது விசாரணைக் கைதியான ஸையித் காஜா யூனுஸ், காவல்துறை கஸ்ட்-அடியில் மரணமடைந்தார். பதறிப்போன மும்பைக் காவல்துறை, ஹைதராபாத் என்கவுண்ட்டரில் நவம்பர் 2002இல் போட்டுத் தள்ளப்பட்ட ஸையித் அஸீஸ் (எ) இம்ரானையும் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்ஃபீக்கையும் இந்த வழக்கில் 'சேர்த்து' அடுத்த வாரம் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. மேலும், இவர்கள் அனைவரும் ஜெய்ஷே முஹம்மது, அல் காயிதா, லஷ்கரே தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என்பதாக வழக்கை ஜோடித்தது மும்பை காவல்துறை. http://articles.timesofindia.indiatimes.com/2003-04-10/mumbai/27270630_1_imran-rehman-khan-supplementary-chargesheet-mohammed-abdul-mateen 

பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. 

குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும், 11.6.2005இல் 'அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அஷோக் பங்காலே, "இந்த வழக்கு அரசுத் தரப்பால் கட்டியெழுப்பப்பட்டது" என்று குட்டும் வைத்தார். http://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200529.htm 

இந்த வழக்கில் தவ்ஃபீக்கின் தொடர்பு என்ன? 

கடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாள்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. இச்செய்தியும் வழக்கம்போல் எல்லா ஊடகங்களிலும் வெளியானது. 

நவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிஸம்பர் 2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது. 

2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவ்ஃபீக், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/AC179CANDIDATE.htm 

பின்னர், கொடுங்கையூர் வழக்கு பிசுபிசுத்துப்போய் பிணையில் வெளிவந்தார் தவ்ஃபீக். என்றாலும் அவ்வப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வரும்போது தவ்ஃபீக்கைக் காவல்துறையினர் அழைத்துப் போய் சிறையில் வைத்திருந்து வெளியே விடுவது 2008வரை வழக்கமாகவே இருந்து வந்தது. 

அவ்வப்போது நமது புலனாய்வு(!) எழுத்தாளர்கள் சிலர், தவ்ஃபீக்கை சர்வதேச பயங்கரவாதி என்பதுபோல் சித்தரிப்பது தொடர்ந்தது. 

இரா. சரவணன் என்பவர் ஜூவியின் 25.5.2008 பதிப்பில் "டென்ஷனில் தமிழகம்! டேஞ்சரஸ் தவ்பீக்..." என்று தலைப்பிட்டு நல்ல கற்பனை வளத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.

அவருடைய கற்பனை வளத்துக்குச் சான்றான பகுதி:

"ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. (ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து). 

இந்தப் பதிவுக்குப் பின்னர் ஜூவியைத் தொடர்பு கொண்டு தவ்ஃபீக்கைப் பற்றி உண்மைக்கு மாற்றமாக எழுதியதை அவருடைய குடும்பத்தார் விசாரித்தபோது, தவ்ஃபீக்கின் குடும்பத்தினரின் கருத்துகளையும் உண்மை அறியும் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரனின் கருத்துகளைப் பெற்று, மூன்று மாதத்துக்குப் பின்னர் ஜூவி வெளியிட்டது. அதில்,  சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகிறார்: 

'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள்.http://adiraixpress.blogspot.com/2008/08/blog-post_4794.html 

கடந்த 2008 மே மாதம் 17இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 13.5.2008இல் ஜெய்ப்பூரின் 9 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பத்தாவது குண்டைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவிகள் 63 பலியாயினர்; 216 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக மும்பையைச் சேர்ந்த விஜய் என்பவனை முதன்முதலாகக் காவல் துறை கைது செய்தது. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1618&Itemid=54 

வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி மீனா எனும் பெயருடைய பெண் கூறியதாகக் காவல்துறையினர் விஜயிடமிருந்து வாக்குமூலம் 'வாங்கினர்'. தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். http://tamil.oneindia.in/news/2008/05/14/india-60-killed-150-injured-as-terror-strikes-raja.html 

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு ஆர் டி எக்ஸ் எனும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர் டி எக்ஸ் என்பது இராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. நமது இராணுவத்துக்குச் சொந்தமான ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளில் பெரும்பகுதி, முன்னாள் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மூலம் கடத்தப்பட்டு சங் பரிவாருக்கு சப்ளை செய்யப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். http://www.satyamargam.com/1096 

மும்பை மாலேகான் ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் சாமியாரிணி சாத்வீ ப்ரக்யா சிங் தாகூரோடு முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டனர். http://www.satyamargam.com/1078 

இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை! காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை. 

சென்னையில் தங்கியிருந்து கொண்டு 2008 மே மாத இறுதியில் குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பேட்டி கொடுத்த தவ்ஃபீக், ஜெய்ப்பூருக்குப் போய் குண்டு வைத்ததாகத் தமிழகக் காவல்துறை கதை புனைந்தது. பின்னர், அவரைத் தங்களுக்கு உளவு சொல்பவராக மாற்ற முயற்சி செய்தது.  அவர் மறுக்கவே, என்கவுண்டரில் போட்டுத் தள்ள அப்போதைய காவல்துறை முயன்றது. இதை தவ்ஃபீக் கூறுகிறார்: 

எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர்.http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html /  http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php 

"எங்களுக்கு உளவு சொல்; இல்லையென்றால் நீ காலி" என மிரட்டிய காவல்துறையிடமிருந்து தப்பி, கடந்த மூன்றாண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தவ்ஃபீக் பட்ட துன்பங்கள் போதும்.

தவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முறையான நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். அதுவும் விரைந்து நடைபெறவேண்டும். அப்போது நீதி நிலைபெறும். அதுவரை, "8 ஆண்டுகள் தேடப்பட்ட..." கதை சொல்லும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கட்டும். 

2003ஆம் ஆண்டு காட்கோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை 1999ஆம் ஆண்டு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

ஊடகங்களில் செயல்பாடுகளை அண்மையில்தான் பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கண்டித்திருந்தார். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பையே மதிக்காத ஊடகங்கள் வழக்கம் போலவே கட்ஜுவின் கண்டிப்பை பெரிதுபடுத்தவில்லை.

குடிமக்களே செய்தியாளர்களாக மாறியுள்ள சூழலில் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மக்களின் நம்பிக்கையை இவை இழக்க நேரிடும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.

***

முன்பு தௌபீக் மீது புனையப்பட்ட பல கேஸ்களில் மும்பை காட்கோபர்-ல் பஸ்ஸில் குண்டு வைத்ததாக புனையப்பட்ட கேசும் ஓன்று. அதில் முக்கிய சாட்சி அந்த பஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் குறுக்கு விசாரணை செய்த டிபென்ஸ் லாயர் திரு மஜீத் மேமன் : "நீங்கள் தௌபீக் -ஐ எங்கு கண்டீர்கள்?


கண்டக்டர் : "ஒரு பையை வைத்துவிட்டு அவசரமாக வெளியே இறங்கினார்"

திரு மஜீத் மேமன் "எப்பொழுது வெடித்தது"

கண்டக்டர் : "ஒரு சில நொடிகளில்"

இப்பொழுது ஜட்ஜின் பக்கம் திரும்பிய திரு மஜீத் மேமன் : "யூஆர் ஆனர், இங்கு கண்டக்டர் குறிப்பிட்ட நாள், நேரம் மாதத்திற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே வேறொரு கேசில் குற்றம் சாட்டப்பட்ட தௌபீக் சென்னை ஜுடிசியல் கஸ்டடி-ல் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளே இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு சான்றுக்கான டாகுமென்ட்களையும் ஜட்ஜின் பார்வைக்கு சமர்பித்தார்.

அதை நன்றாக பார்த்து பரிசீலனை செய்தபின் அதை ஆமோதித்து தலை அசைத்து திரு மஜீத் மேமனைப்பார்த்தார்.

இப்பொழுது மஜீத் மேமன் சொன்னது ஒட்டு மொத்த கோர்ட் வளாகத்தையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.


"யு ஆர் ஆனர், இப்படி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த என் கட்சிக்காரர் பலமான கம்பிகளை வளைத்து பல நூறு கிலோ மீட்டர் பறந்து வந்து இந்த வெடிப்பை ஏற்படுத்திவிட்டு மீண்டும் பறந்து சென்று சிறைக்கம்பிகளுக்குள் புகுந்து கொண்டார் என்று என் கட்சிக்காரரை சூப்பர் மேன் அளவுக்கு உயர்த்துவதை என்னால் நம்பமுடியவில்லை" என்று சொன்னதை ஜட்ஜ் உள்வாங்கிக் கொண்டு இலேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டார். அதே நேரம் கண்டக்டர் பம்பாய் போலீஸ் அதிகாரிகளை பார்த்தவிதம் "உங்களை எல்லாம் ............ டா" என்பதுபோல் இருந்தது.

*** 

கூடுதல் தகவல்களுக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம்

தவ்ஃபீக்கின் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி:

http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php

http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html


Tuesday, November 8, 2011

இணையமும் ஒரு தனிமையே!

3 கருத்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
   என் இணைய தள சகோதரிகளே! பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள்.  உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அறிகின்றனர். பெண்களே! அஃதில்லாமல் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய வழியில் வாழ்வை அமைக்க வல்லோன் நமக்கு நற்கிருபை புரிவானாக! 

• 3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள். ( புஹாரி )

• 1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்!" என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.( புஹாரி )

1862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர்
.( புஹாரி )


• 5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய
(சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்..( புஹாரி )

• மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;( 24;31)
நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான். ( 33;55)

அல்லாஹு ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்கும் உரிமை எவருக்கும் இல்லை
அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்
அல்லாஹு எம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்


• மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)நன்றி :  சகோதரி ருக்கையா அப்துல்லாஹ்Thursday, November 3, 2011

கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."

3 கருத்துக்கள்

                                 ஓரிறையின் நற்பெயரால்
 • இந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...? 
      விவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....
. . .
    விஞ்ஞானத்தை பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு (புதிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.
 
ஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.

கடவுளின் பிறப்பு..?
இறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.

     அதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.

  கடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். ?

 மேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்

      கடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும்.? அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா "பெரிய"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..?

     ஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும்,  யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்..? -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..!

கடவுளின் இருப்பு..?


  கடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...? பார்ப்போம்


     ஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும் கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள்? ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

     ஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.

மேலும் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.

          உதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும் அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே போதுமானது.

  ஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால் இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம் மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும் விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,

  மாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,

   மனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்பதே இதற்கு காரணம்.

   ஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும் திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின் சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும் ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு!

    அதனடிப்படையில்,
 • மனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும், 
 •  எந்த ஒன்றின் ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும், 
 • எண்ணிடலங்காத தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்?????
 ஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக
எதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..!


படைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது.  (02:255)

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


Monday, October 24, 2011

சர்தார்ஜிக்களை விட்டுருவோமே...ப்ளீஸ்

15 கருத்துக்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

சர்தார்ஜி ஜோக்குகள் - இன்றைய காலக்கட்டத்தில் இவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் இன்றும் இம்மாதிரியான நகைச்சுவைகள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆகையால், நமக்கெல்லாம் ஒரு நினைவூட்டலாக இந்த பதிவு. 

நம்மில்  பலரும் அறியாமையால் தான் இன்றும் சர்தார்ஜி நகைச்சுவைகளை பகிர்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.  அதாவது இது தவறென்று தெரியாமலேயே.

இதனை பகிர்பவர்கள் இதன் பின்னணியை அறிந்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.  வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பதினெட்டாம் நூற்றாண்டில் நாதிர் ஸா மன்னனின் படைகளிடம் இருந்து பெண்களை காக்க நள்ளிரவு நேரத்தில் கொரில்லா யுத்தம் செய்து பெண்களை விடுதலை செய்வனராம் சீக்கியர்கள். அவர்கள் குறைந்த அளவில் இருந்ததே இந்த நள்ளிரவு தாக்குதலுக்கு காரணம். ஆனால் இன்றோ இந்த வரலாற்றை அறியாத நம்மவர்கள் சீக்கியர்களை வைத்தே '12 மணி' ஜோக்குகள் என்று ஒன்றை உருவாக்கி அவர்களை கேலி செய்துக்கொண்டிருக்கின்றார்கள். 

அதுமட்டுமல்லாமல், சீக்கியர்கள் மீதான ஈகோவும் இம்மாதிரியான நகைச்சுவைகள் தோன்ற காரணமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

சரி போகட்டும். இஸ்லாமிய பார்வையில் சர்தார் நகைச்சுவைகளை எப்படி கையாள்வது. இது சரியா??

"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல" - நாயகம் (ஸல்) அவர்கள், தன்னுடைய இறுதி பேருரையில்..

எல்லா இனத்தவரும் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது. சீக்கியர்களின் அறிவுத்திறனை பகடி செய்தே சர்தார்ஜி நகைச்சுவைகள் வருகின்றன. இன்னொரு இனத்தவரை நம்மை விட அறிவுத்திறனில் தாழ்ந்தவராக எண்ணுவது இஸ்லாம் நமக்கு வகுத்த தந்த பாதையல்ல. அப்படியிருக்க எப்படி ஒரு முஸ்லிமால் இன்னொரு இனத்தவரை கேலி செய்ய முடியும்?

அதுமட்டுமல்லாமல், நமக்கு என்ன விரும்புகின்றோமோ அதனையே அடுத்தவருக்கும் விரும்ப சொல்கின்றது இஸ்லாம். தமிழ் என்னும் நம் இனம், அறிவுத்திறனில் தாழ்ந்த இனமாக கருதப்பட்டு கேலிச் செய்யப்படுவதை நாம் விரும்ப மாட்டோம். பிறகு எப்படி நமக்கு விரும்பாத ஒன்றை அடுத்தவருக்கு செய்துக்கொண்டிருக்கின்றோம்? 

நான்  முன்னமே சொன்னது போன்று சர்தார்ஜி நகைச்சுவைகளை பலரும் அறியாமையால் தான் பகிர்ந்து வருகின்றனர். சும்மா நகைச்சுவைக்காக தானே என்று நினைத்து தான் பகிர்ந்து வருகின்றனர். நகைச்சுவை என்ற காரணத்தை சொல்லி ஒரு இனத்தையே கேலிக்குள்ளாக்குவது ஏற்புடையதா? 

அறியாமல் செய்த காலங்கள் போகட்டும். இனியும் நாம் இதனை தொடர்ந்தால் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு இந்த செய்கைகளை கைவிடுவோம். சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதிக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

இறைவன்  நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே  எல்லாம் அறிந்தவன்.

Reference: 
1. Sardarji jokes - wikipedia. link

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக்  அஹமத் அ  

Sunday, October 9, 2011

இஸ்லாமிய தேசியம் - எழுச்சியும் வீழ்ச்சியும்...

5 கருத்துக்கள்


நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. அமெரிக்காவில், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான நேரம். அவர்களுக்கு உதவ  வாலஸ் பர்த் முஹம்மது (Wallace D.Fard Muhammed) என்பவரால் 1930ல் தோற்றுவிக்கப்பட்டது தான் "Nation of Islam (இஸ்லாமிய தேசிய அமைப்பு அல்லது இஸ்லாமிய தேசியம்)".

பிறகு, 1933 ஆம் ஆண்டு, பர்த் முஹம்மது அவர்களின் மாணவரான எலிஜா முஹம்மது(Elijah Muhammed) அவர்களின் கட்டுபாட்டுக்குள் அமைப்பு வந்தது. எலிஜா அவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் தான் (1933-1975) அமைப்பு மாபெரும் எழுச்சி கண்டது. அமெரிக்காவை திணறடித்தது.


அமைப்பின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தையை பார்த்தவுடன் இது ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருக்குமோ என்று நீங்கள் கருதினால், அது தவறு.

ஆம், பெயரில் தான் இஸ்லாம் இருந்ததே ஒழிய, இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுமளவு வேறுபாடுகள்.

இவர்களது சில கொள்கைகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்,
 • இவர்களை பொறுத்தவரை, இந்த அமைப்பை தோற்றுவித்தவரான பர்த் முஹம்மது அவர்கள் இறைவனின் அவதாரம் (God Incarnate).
 • அதற்கு பிறகு வந்த எலிஜா முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர். 
 • நோன்பு, தொழுகை, ஜகாத் அவசியமில்லை. 
 • கிருத்துவர்களை போல நாற்காலியில் அமர்ந்து கொண்டே பிரார்த்தனை செய்வார்கள். சஜிதாவெல்லாம் கிடையாது. 
 • ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் தான் உயர்ந்தவர். மற்ற இனத்தவர் இவர்களுக்கு கீழே தான். அதுவும், வெள்ளையர்களை "Devils" என்று அழைத்தவர்கள். 
 • மற்ற இனத்தவருடன் திருமண உறவு வைத்துக்கொள்ள கூடாது என்ற கொள்கையை கொண்டிருந்தவர்கள்.   
ஆக, நாம் மேலே பார்த்த அனைத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கைகள். சுருக்கமாக சொல்லப்போனால் தங்களுக்கு தகுந்தாற்போல வளைத்துக்கொண்டார்கள்.

அதே சமயம், இவர்களிடம் நல்ல விசயங்களும் பல இருந்தன. உதாரணத்துக்கு, இவர்களின் அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள்,
 • மது பழக்கம் இருந்தால் விட்டு விட வேண்டும். 
 • போதை மருந்துகளின் பக்கம் கூட போகக்கூடாது. 
 • சூதாட்டம் கூடாது. 
 • கொள்ளை கும்பல்களின் (Gang, Gangster) உறவு இருக்கக்கூடாது. 
 • மிக கண்ணியமான முறையில் உடையணிய வேண்டும். 
இவை மட்டுமல்லாமல், இவர்கள் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார்கள். குரான் தான் இவர்களுக்கு இறைவேதம்.

இந்த அமைப்பால் தங்களின் தவறான பழக்க வழக்கங்களை விட்டொழித்தவர்கள் பலர்.

அரசியல் ரீதியாக மாபெரும் எழுச்சியை 1950 களில் கண்டது இஸ்லாமிய தேசிய அமைப்பு. அது தான், உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராய் கருதப்படும் மால்கம் எக்ஸ் (Malcolm X) அவர்கள் அந்த அமைப்பில் உறுப்பினராய் சேர்ந்த நேரம் (1952). மால்கம் எக்ஸ் ஒரு புத்துணர்ச்சியை அமைப்பிற்கு கொடுத்தார். இயக்கம் வேகமாக வளர ஆரம்பித்தது.


முஸ்லிம்களுக்கோ பெரும் வேதனையை கொடுத்தது இவர்களுடைய வளர்ச்சி. அமைப்பின் கொள்கைகள் இஸ்லாமிற்கு முரணானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இஸ்லாமிய தேசிய அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களே அல்ல என்று அறிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கேட்க கூடிய நிலையில் எலிஜா அவர்கள் இல்லை. 

எவ்வளவு நாள் தான் பொய்யான முகம் நிலைத்திருக்கும்?

எந்த மால்கம் எக்ஸ் அந்த அமைப்பு எழுச்சி பெற உதவியாய் இருந்தாரோ, அதே எக்ஸ், 1963 ஆம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்து வெளியேறி தூய இஸ்லாமின்பால் வந்து மாபெரும் அதிர்ச்சியை அவர்களுக்கு தந்தார். 

மால்கம் எக்ஸ் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது அவர் சென்ற ஹஜ் யாத்திரை தான்.

அங்கு பலதரப்பட்ட மக்களும் ஒன்றாக, நிற பேதம் பார்க்காமல் சகோதரர்களாய் பழகியது அவருக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வித்திட்டது. ஹஜ் பயணத்திற்கு பிறகு, வெள்ளையர்கள் மீதான அவருடைய எண்ணம் மாறியது. எல்லோரும் ஒன்றே என்ற எண்ணம் பிறந்தது. இது போன்ற எண்ணங்கள் இஸ்லாமிய தேசிய அமைப்பின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானது. வெள்ளையர்களை தாழ்ந்தவர்களாகவே பார்த்து பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.

மால்கம் எக்ஸ், இஸ்லாமிய தேசிய அமைப்பின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு புறம்பானவை என்று கூறினார். ஆனால் கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறைகளுக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்று அறிவித்தார்.

அவருடைய விலகல் அந்த அமைப்புக்கு பலத்த அடியாக அமைந்தது. 

அதே போல, அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி, நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இமாம் சிராஜ் வஹாஜ் என்று எண்ணற்றவர்கள் தொடர்ந்து வெளியேறி சத்தியமார்க்கத்தின்பால் தங்களை இணைத்துக்கொண்டனர்.


இப்படி பல பேர் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கு பின்னணியில் இருந்தவர், இன்று முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் மதிக்கப்படும் நபர்களில் முக்கியமானவர். அவர் செய்த காரியம் நிச்சயம் புரட்சிகரமானது. 

இஸ்லாமிய தேசிய அமைப்பின் 45 ஆண்டு கால வாழ்வை, 1975 ஆம் ஆண்டு முடித்து வைத்தவர் அவர். இஸ்லாமிய தேசிய அமைப்பை கலைத்து அதை இஸ்லாமுடன் ஐக்கியப்படுத்தியவர் அவர்.

அந்த நபர் வேறு யாருமல்ல...நபி என்று சொல்லப்பட்ட எலிஜா முஹம்மது அவர்களின் மகனான வாரித் தீன் முஹம்மது (Warith Deen Mohammed) தான் அவர். 


தன் தந்தையினுடைய செயல்பாடுகள், இஸ்லாமிற்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து போராடி வந்து, எலிஜா அவர்களின் மறைவுக்கு பிறகு அந்த அமைப்பை கலைத்தே விட்டார்.

சிறு வயதிலிருந்தே பர்த் முஹம்மது அவர்களின் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் வாரித். அதன் காரணமாக சிலமுறை அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற மறுத்து தன் இருபத்தி எட்டாம் வயதில் சிறைக்குச் சென்றார்.

அந்த சிறைச்சாலை தான் அவருடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

குரானை நன்கு ஆராய்ந்து தூய இஸ்லாமை அவர் அறிந்து கொண்டது அந்த பதினான்கு மாத சிறை வாழ்க்கையில் தான். சிறையை விட்டு வெளியே வந்த போது, இஸ்லாமிய தேசிய அமைப்பு தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும், இஸ்லாமின்பால் வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். வெள்ளையர்களையும் சமமாக பார்க்க வேண்டுமென்று கூறினார்.

இவருடைய தாவாஹ் தான் மால்கம் எக்ஸ் அவர்களையும், இன்னும் பலரையும் அமைப்பிலிருந்து வெளியேற வைத்தது.

அவருடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு, அதாவது, 1975 ஆம் ஆண்டு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். அழகிய முறையில் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அமைப்பின் உறுப்பினர்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தார். இஸ்லாமிய தேசிய அமைப்பு (Nation of Islam), முஸ்லிம் அமெரிக்கர்கள் சங்கம் (American Society of Muslims) என்று பெயர் மாறி சத்தியமார்க்கத்தின்பால் வந்தது.

ஆக, முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை வாரித் தீன் முஹம்மது அவர்கள், ஒரு மிகச் சிறந்த தலைவராக பார்க்கப்படுகிறார். இஸ்லாமிய நாடுகள் பலவற்றால் கவுரவிக்கபட்டவர். 2008ல், இவரது மறைவுக்கு பிறகு, அமெரிக்காவின் முக்கிய இஸ்லாமிய அமைப்பான CAIR (Council on American-Islamic relations) இவரை, "அமெரிக்காவின் இமாம்" என்று அழைத்து இவருக்கு பெருமை சேர்த்தது.

வாரித் தீன் அவர்கள், சுமார் 25 லட்சம் மக்களை தூய இஸ்லாமின்பால் கொண்டு வந்ததாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய தேசிய அமைப்பை சார்ந்தவர்கள் ஆவர்.  

1970 களின் பிற்பகுதியில் Nation of Islam கலைக்கப்பட்டாலும் பிரச்சனை முழுவதுமாக முடிந்து விடவில்லை. வாரித் தீன் அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்ளாத சிலர், 1981 ஆம் ஆண்டு மறுபடியும் இஸ்லாமிய தேசிய அமைப்பை நிறுவினர். லூயிஸ் பராகான் (Louis Farrakhan) அதனுடைய தலைவராக பொறுப்பேற்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பு வீரியம் குறைந்த அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. முன்பு போல அதற்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த அமைப்பினரை குறி வைத்து நடத்தப்படும் தாவாஹ் பணிகள் இந்த அமைப்பில் சேருபவர்களை எளிதில் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடுகின்றன.       

இதையெல்லாம் விட மேலாக, இஸ்லாமிய தேசிய அமைப்பும் சிறுக சிறுக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

தங்களுடைய பல தவறான கொள்கைகளை ஒவ்வொன்றாக களைந்து விட்டு இஸ்லாத்தின்பால் வந்து கொண்டிருக்கின்றனர்.    

2000 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவரான பராகான் அவர்கள் "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனின் இறுதி தூதர்" என்று அறிவித்து வியப்பை ஏற்படுத்தினார்.   

இப்பொழுதெல்லாம் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொழ, நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.     

"...சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே போகும்..."  - குர்ஆன் 17:81  

அமெரிக்காவின் இஸ்லாமிய அறிஞர்கள் தொடர்ச்சியாக லூயிஸ் பராகான் அவர்களை சந்தித்து தான் வருகின்றனர். தாவாஹ் பணியை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். 

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் இறைவன் இந்த அமைப்பினரை முழுவதுமாக இஸ்லாத்தின்பால் கொண்டுவர வேண்டுமென்று துவாச்செய்வோம்.

அதுபோல, யாரெல்லாம் தூய இஸ்லாத்தை விட்டு வெளியே இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் இஸ்லாத்தின்பால் கூடிய விரைவில் இறைவன் கொண்டு வருவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Brief history on the origin of Nation of Islam - noi.org
2. Nation of Islam in the Balance of islam - Islam online.
3. Nation of Islam FAQs - beleivenet.com
4. Differences between Islam and Nation of Islam - differencebetween.com
5. Malcolm X - malcolmx.com
6. Muhammed Ali - ali.com
7. Warith Deen Muhammed, Elijah Muhammed, Malcolm X, Siraj Wahhaj, Muhammed Ali - wikipedia. 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.  
     

Monday, October 3, 2011

நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..

4 கருத்துக்கள்

    ஓரிறையின் நற்பெயரால்.,
           
தம் கொள்கைப்படி வாழ மக்களை பின்பற்ற அழைக்கும் ஒரு மதமோ அல்லது மதம் சாரா இயக்கங்களோ தங்களுக்கென ஒரு கோட்பாட்டை ஒரு வரையறை செய்திருக்க வேண்டியது அவசியம். அக்கோட்பாடு சரியானதா அல்லது தவறானதா என்பது அதுக்குறித்து விவாதிக்க படும்போது அறிந்துக்கொள்ளலாம். 

       ஆனால் கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் நாத்திகம் என்ற ஒரு கொள்கை(?) கடவுள் மறுப்பு அல்லது எதிர்ப்பு என்ற பிரதான ஒரு காரணத்தை மட்டுமே முன்னிருத்தி இச்சமுகத்தில் தன்னை ஒரு இயக்கமாக நிறுவ முயல்கிறது, கம்யூனிஷ மற்றும் திராவிட இயக்க சாயல் இவற்றில் இருந்தாலும் உலகம் தழுவிய அளவில் ஒரே கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பேரியக்கமாக நாத்திகம் இல்லை., கொள்கைரீதியில் தனக்கென வரையறை கொள்ளாவிட்டாலும் வாழ்வியல் முறையிலாவது தனக்கென தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.,  

        மதங்கள் முன்னிறுத்தும் சடங்கு சம்பிரதாயங்கள் போலியானது என புறந்தள்ளி வாழ்க்கைக்கும் வாதத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எந்த ஒரு செய்கையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவர்களே நாத்திகர்கள் என இச்சமுகத்தில் அவர்களுக்கு ஒரு குறீயிடு உண்டு. ஆனால் எதை மதங்கள் மேற்கொள்வதாக விமர்சித்து அதை விடுத்தார்களோ அத்தகைய செயலை பகுத்தறிவு போர்வையில் தமது அன்றாட நடைமுறை வாழ்வில் அவர்கள் மேற்கொள்வது தான் அபத்தமானது... ஏன் அறிவுக்கு பொருந்தாததும் கூட., அவற்றில் ஓரிரண்டு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

 வணக்கம்???

    பொதுவாக மதங்களின் அடிப்படை கொள்கை "இறையை வணங்குதல்" ஆகும். ஆக வணங்குதல் அவசியமற்ற ஒன்று என்று அசெய்கையே எதிர்க்கும் நாத்திகர்கள்., அச்செயலுக்கு சொல் வடிவம் கொடுத்து ஏற்பது தான் நடை முறை வாழ்க்கையில் நாத்திகம் கொள்ளும் நூறு சதவீகித தெளிவான முரண்பாடு.

         இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களை பின்பற்றுவோர் சர்வசாதாரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது பெரும்பாலும் "வணக்கம்" என்ற வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிமுகப்படுத்தும்போது வாழ்த்துச்செய்தியாக கொண்டாலும் இது இறைவனுக்கு மட்டுமே உரித்தாக வேண்டிய ஒரு செயல் வடிவ வார்த்தை.

   சரி மதங்களை பின்பற்றோர் தான் தவறாக இறைவனுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கண்ணியத்தை சக மனிதர்கள் மத்தியில் சொல்கிறார்களென்றால் பகுத்தறிவில் செயல்படும் நாத்திகர்களும் அதே வார்த்தையே சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.

        ஏனெனில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று சொல்வதே ஏற்புடைய வார்த்தையாக இருக்கும் ஏனெனில் எந்த ஒரு மனிதருக்கும் அமைதி மற்றும் சமாதானம் என்பது எல்லா காலங்களிலும் தேவையான ஒன்று. மேலும் இவ்வாக்கியத்தை ஒருவரை சந்திக்கும் எல்லா தருணங்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆக மேற்கண்ட வரிகளே மனித அறிமுக பொழுதுகளில் சொல்வது ஏற்புடையதும் பிறிதொருவர் மேல் கொண்ட அக்கறைக்கு உரித்தான வார்த்தையாக இருக்கும்.,

  எனினும் அவ்வார்த்தை ஒரு மார்க்க/ மத ரீதியான அடையாளத்தை ஏற்படுத்தும் என குறை சொன்னாலும் பரவாயில்லை., உடன்பாட்டு முறையில் அதை ஏற்றுக்கொள்வோம்., மேற்கண்ட வார்த்தைகள் சொல்வது வேண்டாம் என்ற போதிலும் குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதே ஏற்புடைய வார்த்தையாகும்.

             வணக்கம் என்ற வார்த்தையின் விளக்கம் குறித்து சற்று ஆராய்ந்தால் இவ்வார்த்தை தமிழ் மொழியில் இருவேறு அர்த்ததில் கையாளப்படவில்லை., மேலும் இதற்கு வேறு மறைமுக பொருளும் இல்லை., இவ்வார்த்தை வணங்குதல் அல்லது வணங்கப்படுதலை மட்டுமே மையப்படுத்திய ஒரு  இணைப்பு வார்த்தையாகும்-  தமிழ் பொருளகராதியில் இவ்வார்த்தையின் பொருள் குறித்து பார்த்தாலும் வணக்கம் என்ற தனிச்சொல்லுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது வேறு வினை/பெயர்ச்சொல்லுடன் சேரும் போதே பொருள்கொள்ளப்படுகிறது. உதாரணமாக வணக்கம் தெரிவிக்கிறேன்., உன்னையே வணங்குகிறேன்.. இப்படி.,

    ஆக எதிரில் நிற்கும் ஒருவரை சுட்டி "வணக்கம் என்ற சொல்லை உபயோகித்தால் அச்சொல் அர்த்தம் பெற்று அவர் வணக்கத்திற்குரியவராக பொருள்படும். எதையும் அறிவுரீதியாக அணுகி சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்? அதுவும் அவர்களின் அடிப்படைக்கு கூற்றுக்கு எதிராக அவ்வார்த்தை இருந்தும்..?

   இல்லை...இல்லை வணக்கம் என்ற வார்த்தையை வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்த வில்லை மாறாக ஒருவரின் அறிமுக துவக்கத்தில் வெறும் வழக்கு சொல்லாக தான் பயன்படுத்துகிறோம் என்றால்., மேற்குறிப்பிட்ட அற்புத முகமனோடு அனேக வார்த்தைகள் அழகிய தமிழில் அணிவத்திருக்க வெறுமனே வாய் உச்சரிப்பிற்காக பொருளற்ற வெற்று வார்த்தையே பயன்படுத்த வேண்டிய அவசியமென்னே?

அடுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம்.

      மதம் தவிர்த்தும் ஏனைய இயக்கம் சாந்தவர்களாலும் பிறந்த நாள் கொண்டாடுவதை நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து தான் வருகிறோம்., அதிலும் இறந்த தலைவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் தேவையா இல்லையா என்பதை விட முதலில் அது அறிவுக்கு பொருத்தமானதா...? (( இங்கு எல்லோரையும் குறித்து பேசவில்லை, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களை குறித்தே ))

      ஏனெனில் ஒருவர் இறந்தவுடனேயே அவரது வாழ் நாள் வரையறுக்கப்பட்டு அவரது ஆயூட்காலமும் கணக்கிடப்பட்டு அவரது செய்கைகள் முடிவுறுகின்றன. அப்படியிருக்கும் போது இறந்த மனிதர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எப்படி சாத்தியமாகும்..? வருடா வருடம் பிறந்த நாள் என்ற பெயரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழகத்தில் திராவிட கழக பெயரில் நாத்திகர்கள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

   உயிருள்ளவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையில்லையென்ற போதிலும் அது அவர்களுக்கு மன மகிழ்ச்சியளிக்கும் என்ற விதத்திலாவது அச்செய்கையை நியாயப்படுத்தலாம்., ஆனால் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பெயர் தானா.. பகுத்தறிவு???

      இச்செயலை நியாயப்படுத்த, நாங்கள் பெரியார் புரிந்த சேவைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் முகமே அவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என சமாதானம் சொல்கின்றனர்., ஆனால் ஒரு மனிதர் மேற்கொண்ட சேவைக்கு கொடுக்கும் கண்ணியத்தின் வழிமுறை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதிலா இருக்கிறது..? அதுவும் எதை வணங்கும் பொருளாக ஆக்க வேண்டாம் என்று மறுத்தாரோ அத்தகைய கல்லிலே அவரை வடித்து மரியாதை எனும் பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மாலை அணிவிப்பதை சடங்காக செய்து வருவதுதான் உச்சக்கட்ட கொடுமை.,

     ஆக இறந்த ஒருவரை கண்ணியப்படுத்துதல் என்பது அவரது எண்ணத்தை பூர்த்தி செய்வது , அல்லது அவரது சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கிறது., இன்னும் அதிகப்பட்சமாக அவர் பெயரில் பொது மக்களின் நலத்திற்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மற்றும் உருவாக்குவது அவர் கொணர்ந்த கொள்கைக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமையும். மாறாக "மாலை அணிவிப்பதில் மாற்றமடைய போவதில்லை மரித்தவரின் மரியாதை.!"
 
          இச்செயலை நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நாத்திகர்களும் செய்யவில்லை மாறாக சில "இயக்க தோழர்கள்" மட்டுமே செய்வதாக சொன்னாலும் .இஃது அறிவுக்கு பொருந்தாத இச்செயலை ஏன் ஏனைய நாத்திகர்கள் எதிர்க்கவில்லை... குறைந்த பட்சம் விமர்சிக்கக்கூட வில்லை?

ஆக,     
 • 1. இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும்
 • 2. ஒருவரை கண்ணியப்படுத்த அவரது உருவப்படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவிப்பதும்
நடைமுறை வாழ்வில் நாத்திகம் சந்திக்கும் இரண்டாவது தெளிவான முரண்பாடு.  

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
-தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
(This quote taken from tamil oviya blogspot)

அதுப்போல, பெரியாரின் போதனைகளை பின்பற்றுவோரை குறித்து இங்கு நான் விமர்சிக்க வில்லை மாறாக அவரது பெயரை வைத்து பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செய்கைகளின் ஈடுபடும் நாத்திகர்களை குறித்தே இங்கு விமர்சனம்.!

சார்ட்டா சொல்லணும்னா...

   மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட???

இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)
                                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

Saturday, September 24, 2011

"துஆக்களின் தொகுப்பு முதல் பாகம்"

4 கருத்துக்கள்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்


நம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக!..............................


நம்மை படைத்து பாதுகாப்பவனாக இருக்கும்

இறைவனால் இறைக்கியருளப்பட்ட குர்ஆனிலிருந்து துஆக்களின் தொகுப்பு முதல் பாகம் இங்கே தரப்படுகின்றது. இந்த துஆவை நாம் அதிகம் ஓதுவதின் மூலம் இறைவனின் கருனையைப் பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

அல்ஹம்துலில்லாஹ்!...

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸுலுஹி ஸ்ய்யிதினா முஹம்மதின் வஆலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.


إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ


(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7


رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201


نَرَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِي


“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250


سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ


எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285


رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ


“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286


رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ


“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8


رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ


“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.


اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ


“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26


رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ


“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” 3:38


رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ


“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” 3:53


رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ


“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. 3:147


رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ


“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194


رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ


“எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!” 5:83


رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ


“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23


رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ


“எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”. 7:89


رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ


“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126


لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ


“எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:149


وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ


“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156


حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ


“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129


عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ


“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 10:85


وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ


“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” 10:86