Wednesday, September 14, 2011

தோண்ட தோண்ட அறிவியல் புதையல்...

1 கருத்துக்கள்
இறைவனின் திருப்பெயரால்...


நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக.

நமது முந்தைய பதிவான “கடவுளை தெளிவுபடுத்தும் காலமும் வெளியும்” பதிவை காண இங்கு சொடுக்கவும்.

இறைமறையின் காலம் பற்றிய செய்திகளையும், தவறாக காண்பிக்கப்படும் நபியின் விண்வெளி பயணத்தை பற்றிய அரிய சில செய்திகளையும், சில விசயங்களை மறைத்து பொய் தகவல்களை இணைத்து வெளிப்படுத்திய நாத்திக, கம்யுனிச பொய்களையும் உடைப்பதற்கே நம்முடைய இந்த பதிவுகள்.

இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் காரண காரியங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் விதி. இப்பிரபஞ்சம் நேர்த்தியாக வடிவமைக்கபட்டதுமில்லாமல் பொதுவான இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதன் பயணத்தை தொடர்கிறது. ஒரு சிறு பொருள் அசைந்தாலும் கூட ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், இயற்பியல் விதிகளின் படியே செயல்படும். மனிதன் தான் செயல்படுத்தும் செயல்களில் கூட ஒரு நேர்த்தியை எதிர்பார்க்கிறான். அப்படியிருக்க இறைவனின் அரசாட்சி இப்பிரபஞ்சம் நேர்த்தியாக உள்ளதும், அடிப்படை இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனின் நேர்த்தியை குறிப்பது. தானாக உருவானது என்ற வாதத்தை வைக்கும் நாத்திகர்கள் இயற்பியல் விதிகளை பின்பற்றி அனைத்தையும் சரியான முறையில் இயக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

இப்பிரபஞ்ச இயக்கதிற்காகவே முதலில் விதிகள் உருவாக்கப்பட்டன. விதிகள் இல்லாத பொருள் எப்படி இருக்க, இயங்க முடியும்? விதிகள் இல்லையெனில் பிரபஞ்சமே இல்லை, உயிரினமும் இல்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படியெனில் இயற்பியல் விதிகளை பின்பற்றும் இயற்கையை உருவாக்கியது வேறு ஒரு சக்தியாகத்தானே இருக்க முடியும்.

ஆக இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் இயற்பியல் விதிகளை மீறமுடியாது, அதை உருவாக்கியவனை தவிர. விதியை இயற்றியவன் இறைவன் என்கிற போது அது இறைவனுக்கு இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளை எவ்வளவு அறிவியல்பூர்வமாக விளக்கினாலும் அது அடிப்படை நம்பிக்கை சார்ந்த மார்க்கமாகும். ஆதாரங்களின் அடிப்படையிலான நம்பிக்கையே அது. இஸ்லாத்திற்கு மட்டும் அல்ல, அறிவியலுக்கும் அதே நம்பிக்கை தான் ஆணிவேர். ஆம் ஒரு கண்டுபிடிப்பை ஆதாரங்களுடனான நம்பிக்கை மூலம் அணுகினால் மட்டுமே அதை உருவாக்க முடியும்.

பல நாத்திகர்கள் இறைவனின் ஆற்றல், அதிசயம் சார்ந்த கேள்விகளை எழுப்புவதை காண முடிகிறது. இயற்கையாக நடைமுறையில் உள்ளதை யாராவது அதிசயம் என்று கூறுவார்களா? மனிதனின் சக்திக்கு மீறிய இயற்கைக்கு மாறாக நடைபெறுவது தான் அதிசயம். அது இயற்பியல் விதிகளுக்கு மாறாக கூட இருக்கலாம். இதில் தான் நாத்திகர்களின் கேள்விகள் எழுகின்றன. மற்ற அனைத்தும் சில வரையரைகுட்பட்டவைகள்.

இதை வைத்து பார்க்கும் போது இஸ்லாம் விளக்கிய அனைத்தும் கூட இறைவன் உருவாக்கிய பிரபஞ்ச விதிகளுக்குள் கட்டுப்பட்டுதான் நடக்கும். அந்த விசயங்களை மனிதனால் சுலபமாக விளக்க முடியும். இதுவல்லாமல் இறைவனின் அதிசயங்கள், ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகள். 

உதாரணமாக சந்திரன் பிளக்கப்பட்டது, இறந்த மனிதனை ஏசுநாதர் எழுப்பியது, மோசேயின் கைத்தடி பாம்பாக மாறியது etc. இது போன்றவைகள் இயற்பியல் விதிகளுக்கு மாறாகத்தான் இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அது அதிசயம் என்றும் கூறப்படும், மேலும் இது இறைவனால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை சார்ந்தது, இதற்கு அறிவியலில் ஆதாரம் கேட்பது, இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று வாதிடுவது ஏற்றுகொள்ள முடியாதது. ஏனெனில் இறைவன் உருவாக்கியதை இறைவனால் மீற முடியாதா என்ன? என்ற ஏற்றுகொள்ளத்தக்க கேள்வி வரும். அந்த அதிசயங்களும் நேரில் கண்டால் மட்டுமே புரியக்கூடியது ஆகும்.

இந்த வரைமுறைகளை வைத்து இறைவனும் விதிகளுக்கு உட்பட்டவன் என்பதாக கருதுகின்றனர். இறைவன் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே. இதை இறைவனின் சில வசனங்கள் மூலம் விளங்கலாம்,

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன்‘ –ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வேஅவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன்ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்10:03)

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு  வசனங்களும் ஒன்றுக்கொண்டு மாறுபட்டவையாக தோன்றலாம், அவன் ‘ஆகுக’ என்றால் ஆகிவிடும் அப்படி இருக்க எதற்காக ஆறு நாட்கள் (காலங்கள்). இரண்டுமே உண்மைதான், இந்த ஆறு நாட்கள் என்பது பிரபஞ்சம் உருவாகி ஆறு நாட்களாக, ஆறு பகுதிகளாக கூட இருக்கலாம். இறைவனின் புறத்தில் ஆகுக என்றால் ஆகிவிடுகிறது, ஏனெனில் அவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். அவனுடைய பார்வை நாளை என்ன நடக்க போகிறதோ என்று எதிர்பார்க்கும் பார்வை அல்ல. மனிதனுடைய பார்வையில் காலம் என்றொன்று சேர்ந்து விடுகிறது.

இதை இறைவனே இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும்அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால்நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
(அல் குர்ஆன் 70:4–7)

“இஸ்லாம் கூறும் சார்வியல் கோட்பாடு” என்ற தலைப்பில் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிலளிக்கிறேன் என்ற பெயரில் செங்கொடி என்பவர் தன்னுடைய பொய்களை இணைத்து “கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா” என்ற தலைப்பில் பதிவாக இட்டது நம்மில் சிலர் அறிந்ததே. இவரின் பதிவில் குர்ஆன் வசனங்களையும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையையும் விளங்கி கொள்ளாமல் தனக்கு தோன்றிய கருத்துக்களை கூறியுள்ளார் என்றால் அது மிகை இல்லை.

சார்பியல் கொள்கைகளை தெள்ள தெளிவாக எடுத்து வைக்கும் மூன்று குர்ஆன் வசனங்களுக்கும் சார்பியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே செங்கொடி போன்ற இறைமறுப்பாளர்களின் வாதம். தங்களுடைய பொய் பிரசாரத்திற்காக அவர்களால் எடுத்து கொள்ளப்பட்ட சில குர்ஆன் வசனங்களும் அதன் விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, 

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். 

22:48. அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.

22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.

22: 48. And to how many populations did I give respite, which were given to wrongdoing? in the end I punished them. To me is the destination [of all].

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

எதற்காக இறைவன் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூற வேண்டும்?, இங்குதான் சார்பியல் கோட்பாடு வருகிறது.

மேலே கொடுக்கப்பட்ட முதல் இரண்டு வசனங்கள் (22:47-48) இறைவனின் வேதனையை பற்றிய வசனங்கள், அதாவது வேதனை வந்தடைவதற்கான கால அளவை பற்றி குறிப்பிடுகிறது, அதை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள் என்றும், இரண்டாம் பகுதியில் குறிப்பிடும் போது கால அளவையும் குறிப்பிடுகிறான், தண்டனையின் வேகத்தை பற்றி குறிப்பிடும் போது கால அளவை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?, அப்படியெனில் காலத்தை குறிப்பிட்டாலே அதில் வேகமும் உள்ளது என்று தான் அர்த்தம். கடந்த நூற்றாண்டில் தான் வேகத்தை பொருத்து காலம் மாறுபடும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது, சார்பியல் கொள்கைக்கு பிறகுதான்.


அதே போன்று 70:4 வசனத்தில் வானவர்களின் பிரயாணம் பற்றி பேசும் குர்ஆன் பிரயாணத்தில் இருக்கும் போது வானவர்களின் ஒரு நாளின் அளவு என்பது பூமியில் இருக்கும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறுகிறது.

அடுத்த வசனமான 32:5 என்ற வசனமும் கால மாறுதல்களை பற்றி குறிப்பிட்ட போதும் இதற்கு மாறாக ஒவ்வொறு காரியமும் பயணிப்பதாக கூறுகிறது. (அதை பிறகு பார்போம்)

மேலே கூறப்பட்ட மூன்று வசனங்களும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகத்தில் பயணிக்கும் வெவ்வேறு பொருள்களை அல்லது செய்திகளை பற்றி விளக்குகிறது.

முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டியது, பிரயாணத்தின் போது கால மாறுதல்கள் ஏற்படும் என்ற சென்ற நூற்றாண்டில் கண்டறிந்த உண்மையை முஹம்மது நபி (ஸல்) எவ்வாறு கூறி இருக்க முடியும்? இதைப் பற்றி நாத்திகவாதிகள் கூறும்போது அல்லாஹ்வின் நாள் என்பது பெரியது என்று கூறி மக்களை ஏமாற்றவே முஹம்மது நபி (ஸல்) அவ்வாறு கூறியதாக கூறுகின்றனர். இதை பார்க்கும் போது வசனங்களையும், சார்பியல் கொள்கை பற்றியும் எதையும் தெரியாமல் உளறுகின்றனர் என்றே கூறலாம்.

ஏனெனில் இதே கருத்து குர்ஆனில் சில வசனங்களில் தெளிவான முறையில் அமைந்துள்ளது. மேலும் எதை வைத்து ஆயிரம், ஐம்பதாயிரம் என்ற அளவுகள் கூறி இருக்க முடியும்? இரண்டு அளவுகளும் சரியான எப்படி அமைய முடியும்? எப்படி சரியாக அமைகிறது என்று வரும் விளக்கங்களில் பார்க்கலாம்.

சார்பியல் விதிப்படி ஒளியின் வேகமே பிரபஞ்சத்தில் அதிகபட்ச வேகம், எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்திலோ அல்லது அதைவிட வேகமாகவோ செல்ல முடியாது, ஒளியின் வேகத்தில் ஒன்று பயணிப்பதாக இருந்தால் அதற்கு காலம் என்பது நின்று விடும். இன்று வரை எவ்வளவோ முயற்சி செய்தும் ஒளியின் 99.9999.. % அளவிற்கு நுண்ணிய அணுக்களை (Sub Elementary Particles) அனுப்பினாலும் ஒளியின் வேகத்தை தொடமுடியவில்லை. அதற்கு ஒரு தடையும் (Barrier) உள்ளது. அப்படியும் ஒளியை மிஞ்சிய வேகத்தில் ஒன்று பயணித்தால் (ஒரு வாதத்திற்கு மட்டும்) அதற்கு இயற்கை விதிகள் முற்றிலும் மாறுபடும்.

ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் 99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.

22:47 வசனத்தில் வேதனைகள் வருவதற்கான செய்திகளை பற்றி குறிப்பிடுகிறது, தற்போதைய அறிவியலே அதற்கு நேரிடையாக அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது என்ற அறிந்த நிலையில் அதை பற்றிய விளக்கம் தேவை இல்லை. 

அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம், வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் : ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

சரி, அது என்ன ஒரு நாள் என்பது ஆயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூறுகிறது? அதற்குதான் Lorentz transformation வருகிறது. இயற்பியல் விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், ஜோசப் லார்மேர் மற்றும் ஹென்றிக் லாரன்ஸ் ஆகியோர் கால மாறுதல்களுக்கு அளவை அறிய lorentz factor  என்ற ஒரு சூத்திரத்தை (Formulae) வெளியிட்டனர். இயக்கத்தில் உள்ள பொருளுக்கும் நிலையாக உள்ள பொருளுக்கும் இடையே உள்ள கால மாறுதல்களை (Time Dilation) அதன் திசை வேகத்தை வைத்து கணக்கிடகூடிய ஒரு சூத்திரத்தை பயன்படுத்தினர். அது loretz factor என்று அழைக்கப்படுகிறது. இதை கொடுக்கப்பட்ட இறை வசனங்களுக்கு பொருத்தி பாப்போம்.

                   
            Δt’- நாம் கணக்கிட கூடிய கால அளவு (நிலையாக உள்ள பொருள்)
            Δt  - நகரும் பொருளின் காலம்
             V   - திசைவேகம் (நகரும் பொருளின் வேகம்)
             C   - ஒளியின் வேகம் (299,792,458 மீட்டர்/செகண்ட் = 1C) 

உதாரணமாக, நகரும் பொருளின் காலம் நாள் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், அதன் திசை வேகத்தையும் ஒளியின் வேகத்தையும் வைத்து மேற்கண்ட சமன்பாட்டை செய்தால் பூமியில் நிலையாக உள்ளவரின் காலம் வந்துவிடும்.

Δt’= 1/ (1-(299792457.9988748489258802)2 / (299792458) 2)1/2

சமன்பாடுகள் செய்ய கடினமாக இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று Input கொடுத்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

Time dilation:

பொதுவாக அரை மடங்கு (.5C) ஒளியின் வேகத்தில் செல்லும் பொருளுக்கும் கூட கால மாறுதல்கள் தோராயமாக ஒன்றரை மடங்காக இருக்கும், அதுவே ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அதன் கால மாறுதல்கள் வேகமாக அதிகரித்து, ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைந்து விட்டால், அந்த பொருளுக்கு காலம் என்பதே நின்று விடுகிறது. கீழே உள்ள படத்தில் மாற்றங்களை காணலாம்.

                                                   
ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்கிற போது, ஆண்டுகளையும் முதலில் நாட்கணக்கில் கொண்டுவருவோம்.
       
        1000 ஆண்டுகள் = 365000 நாட்கள்
        T என்பதில் 365000 என்பதை இட 

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது,  0.9999999999962469 என்ற ஒளி வேகத்தில் பயணித்தால் பூமியில் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு (365000~ நாட்கள்) சமமாக இருக்கும் என்பது உறுதியாகிறது.

ஆயிரம் ஐம்பதாயிரம் என்று இருவேறு மாதிரி வசனங்கள் கூறுவதால், குறிப்பிடப்பட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பது கவனிக்கத்தக்கது,  0.9999999999962469 C என்ற ஒளி வேகத்தில் பயணித்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமாகும் என்கிறபோது, அதைவிட ஐம்பது மடங்கு அதிகமாக காலம் மாறுகிறது எனில் ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தால் மட்டுமே சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம், அதுதான் இல்லை. வெறும் சில மில்லிமீட்டர் அளவு வேகத்தை அதிகபடுத்த அதன் கால மாறுபாடு ஐம்பதாயிரம் என்று ஆகிறது.

        50000 ஆண்டுகள் = 18250000  நாட்கள்
        T என்பதில் 18250000  என்பதை இட 

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது வெறும் சில மில்லிமீட்டர் வேகத்தை அதிகரித்து அதாவது 0.9999999999999984 C  என்கிற வேகத்தில் பயணித்தால் போதும், அது பூமியில் கணக்கிடகூடிய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்பதையும் அறிய முடியும். மேலே குறிப்பிட்ட இணையத்தில் சென்று நாட்களையும் வேகத்தையும் சரியாக அளந்து கொள்ளலாம்.

ஆக தற்போதைய அறிவியலின் படி ஒரு ஒளி அல்லது ஒளியின் ஆன்மா ஒளிக்கு இணையான 99.999...% வேகத்தில் செல்வது சாத்தியமே, 99.999… அந்த வேகத்தில் செல்ல முடியும் என்பதை இறைவேதம் பறைசாற்றுகிறது என்பதை ஒப்புக்கொள்கின்றார்களா? என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

நாம் கூறாமல் விட்ட மற்றொரு வசனமான 32:5 ல் ஒரு நாள் அனைத்து பொருள்களும் முடிவில் அவனிடத்தில் திரும்ப செல்லும் என்றும் செல்லக்கூடிய (நகரும் பொருளின்) அந்த நாளின் அளவு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையாக இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றான்.

அனைத்து பொருள்களும் என்று இவ்வசனத்தில் குறிப்பிடபட்டுள்ளது, அனைத்து பொருள்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அளவுள்ள வேகத்தில் பயணிக்க போவதாக குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது என்று சிந்திக்கிறீர்களா... அதை பற்றியும் பார்க்கலாம்.


பிரபஞ்ச உருவாக்கத்தை பற்றி விவரிக்கும் பிக் பாங் கொள்கை, பிரபஞ்சம் உருவாகும் போது அது விரிவடையும் விகிதம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகவோ அல்லது அதற்கு இணையான வேகத்திலோதான் விரிவடைந்த தாக கூறுகிறது. சார்பியல் விதிகளுக்கு எதிராக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம், பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் தான் ஒளி வேகத்தில் செல்லாது ஆனால் வெளியே ஒளி வேகத்தில் விரிவடையும் என்கின்றனர் அறிவியலாளர்கள். வெளி விரிவடைவது உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இதை எட்வின் ஹப்ல் (Edwin hubble) என்ற விஞ்ஞானி டோப்ளர் எபக்ட் (Doppler Effect) மூலம் விளக்கினார்.

அதே போல விரிவடைந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு  அதன் வேகத்தை குறைத்து விரிவடையும் உச்சத்தை அடையும், பிறகு மீண்டும் அதே அழுத்தத்துடன் சுருங்க ஆரம்பிக்கும், விரிவடைந்த அதே வேகத்தில் தான் சுருங்கும், இதை விவரிக்கும் விதமாக உள்ளதே பிக் ரிப், பிக் கிரன்ச் ஆகிய கொள்கைகள், அதாவது குர்ஆன் கூறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணை என்கிறபோது அது ஒளியின் 99.999... %C என்ற வேகத்தில் சுருங்கும்.


(Its expansion will slow down until it reaches a maximum size. Then it will recoil, collapsing back on itself. As it does, the universe will become denser and hotter until it ends in an infinitely hot, infinitely dense singularity.

இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அந்த நாள் என்பது வேகத்தையே குறிக்கிறது, அதை பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனமே இது.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.


                                                          தொடரும்...
- உங்கள் தோழன் 

References:

http://webs.morningside.edu/slaven/Physics/relativity/relativity6.html
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://ihsasonline.blogspot.com/2011/03/12.html
http://www.onlinepj.com/Test/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/293/
http://senkodi.wordpress.com/2010/08/03/time-space/
http://senkodi.wordpress.com/2010/01/13/about-sky/
http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=451:2009-01-26-03-53-15&catid=37:2008-07-26-14-12-36&Itemid=58
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://www.tamilquran.in/t293.php
http://en.wikipedia.org/wiki/Big_Rip
http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_11.html

1 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!