அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் 2009-ஆம் வருடம் அமெரிக்க முஸ்லிம்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று.
இதற்கான பதில் -
ஆம் - 80%
முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.
காலப் நிறுவனத்தின் அமெரிக்க முஸ்லிம்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....
1. இனப் பின்னணி:
அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.
அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.
28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.
அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..
1. இனப் பின்னணி:
அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.
அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.
28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.
அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..
2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.
இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.
அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் அமெரிக்க முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர்.
அமெரிக்க முஸ்லிம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.
80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.
3. பெண்கள்
யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான்.
அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம்.
முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.
4. மற்றவைகள்:
- 70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
- அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.
- மது அருந்துவோரின் சதவிதம், மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
- அமெரிக்க முஸ்லிம் பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
- கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%), வெள்ளையர்களும் (72%) வருகின்றனர்.
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
My Sincere Thanks to:
1. Sister Dalia Mogahed.
2. Gallup's Center for Muslim Studies.
Reference:
1. Muslim Americans: A National Portrait - The center for Muslim Studies, Gallup, 2009.
One can download the complete document from:
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.
நல்ல தகவல். வாசிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அருள் புரியட்டும்
CLICK OVER THE LINK BELOW AND READ.
இஸ்லாம் வெறுக்கப்பட வேண்டுமா? எதை மறுக்க? எதை மறைக்க?
அறிஞர்கள் தலைவர்கள் வரலாற்றாசிரியர்கள் பிரபலங்கள் கூற்றில் எதை மறுக்க? எதை மறைக்க?
அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும் - பெர்னார்ட் ஷா.
இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்?
.
MASHA ALLAH.....
I FEEL HAPPY ABOUT OUR AMERICAN MUSLIMS.
JAZAKALLAHU HAIRAN FOR ANOTHER USEFUL ARTICLE.
SALAM.
சகோதரர் Mohamed Faaique,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ்...
தங்களின் வருகைக்கும், துவாவிற்கும் மிக்க நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அன்பிற்குரிய வாஞ்சூர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
வருகைக்கும் சுட்டிகளுக்கும் நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான தகவல். தொடருங்கள்
Alhamthulillah
very nice;
alhamdulillah
allah thunai iruppan
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்...
தங்களுடைய பகிர்வுக்கு நன்றி, மேலும் உலக முஸ்லிம்களின் நிகழ்வுகளை தமிழில் தங்களின் பணி அளப்பரியது, இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்!
உலக முஸ்லிம்கள் இஸ்லாத்தை அறிந்து அதனை வாழ்வியல் நெறியாக அதிகமானோர் கடைபிடிக்க முயற்சி செய்யும் இவ்வேளையில் சவூதியில் சவூதி குடிமக்கள் அதிகமானோர் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக மட்டும் வாழ்கின்றனர்! சமீப காலமாக இங்கு அதிகமானவர்கள் வழிப்பரியில் ஈடுபடுகின்றனர் அவர்களை இங்கு உள்ள காவல் துறையும் கண்டு கொள்வதில்லை! வரும் காலத்தில் இவர்களின் நிலை என்னவாகுமோ? அல்லாஹ்தான் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும். முக்கியமாக சவூதியில் வாழும் நமது சகோதரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுகிறேன், ஒருவர் போனால்தான் தாக்குவார்கள் என்பது போய் சமீபத்தில் ரியாதில் 4 நபர்கள் சென்றவர்களை வழிமரித்து தாக்கி அவர்களிடம் இருந்த பணம், விலை உயர்ந்த கை பேசி மற்றும் கார் பேங்க் கார்டு உட்பட அனைத்தையும் கத்தி முனையில் பரித்துக் கொண்டு சென்றுள்ளனர். ஆகையால் சகோதரர்கள் மிகவும் கவனமாக முடிந்தால் தற்காப்புக்கு ஏதாவது ஆயுதம் வைத்துக் கொள்வது சிறந்தது. இருந்தாலும் இதுவரை நமக்கு தெரிந்த வரை திருடர்கள் தான் தாக்கி சென்றிருக்கிறார்களே தவிர பாதிக்கப்பட்டவர்கள் தாக்கியது கிடையாது. நாம் உண்மை முஸ்லிமாக இருந்தால் நமது உரிமையை நிலை நாட்ட அவர்களை தாக்கினாலும் அதில் நாம் மரணமடைந்தாலும் (ஷகீதாக அந்தஸ்து) உறுதி உள்ளவர்கள் தயாராக இருங்கள் நான் உட்பட இன்ஷா அல்லாஹ்! “இறைவன் விதித்ததை தவிர நம்மை வேரொன்றும் நெருங்காது”
is nt this old data?
Brother Aaqil Muzammil,
Assalaamu Alaikum. Yes, this post was initially published in ethirkkural last year. Here, it is re-published.
wassalaam,
Your brother,
Aashiq Ahamed A
good service.nice and useful informations. may almighty Allah bestow his great blessing and reward immensely to you brother.
அல்ஹம்துலில்லாஹ்!!!!!!!!!!!!!!!!