Saturday, July 31, 2010

ஹஜ் புனிதப் பயணம்

0 கருத்துக்கள்
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இறுதியாக இறைவனால் வகுத்து தந்துள்ள கடமை ஹஜ் செய்வதாகும். இந்த ஹஜ் கடமையில் என்ன இருக்கின்றது என்பதையும், வாழ்க்கையில் ஒரு முறை நிறைவேற்றப்படுகின்றகடமை என்ற அளவில் மட்டும் அதன் முக்கியத்துவம் நின்று விடாது. யாரொருவர் எந்த ஒரு தீயச் செயலிலும் ஈடுபட்டு விடாமல் இந்த ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு இறைவன் சொர்க்கத்தை ஹலாலாக்கி விடுகிறான். ஒருவர் ஹஜ் செய்வதற்கான காரணத்தையும், ஹஜ்ஜில் செய்யவேண்டிய கடமைகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எவர் ஒருவரும் ஏனோதானோ என்றும், வெறும் சடங்குக்காகவும் ஹஜ் செய்யக்கூடாது

லப்பைக்கல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீகலக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஃமத லகவல் முல்க், லா ஷரீகலக்

பொருள்:
இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். யா அல்லாஹ்! இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். உனக்குக் கூட்டுக்காரர் (எவரும்) இல்லை. உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். நிச்சயமாக புகழ், அருட்கொடை, ஆட்சி யாவும் உனக்கே உரியது உனக்கு கூட்டுக்காரர் (எவரும்) இல்லை.
இந்த தல்பியாவை ஜம்ரத்துல் அகபா என்ற ஷைத்தானின் மீது கல்லெறியும் வரைக்கும் முழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஹஜ்ஜின் சிறப்புகள்:
ஹஜ் புனிதப் பயணம் எந்த ஒரு ஆராவாரமும் இல்லாமல் எளிய வகையில் இறைவனும், அன்னல் நபி (ஸல்) அவர்களும் எவ்வாறு செய்ய வேண்டும் என வழியுருத்தினார்களோ! அதன் அடிப்படையில் ஹஜ் பயணம் அமைய வேண்டும். ஹஜ் என்பது அல்லாஹ்வின் வீடாகிய மக்கமா நகரில் அமைந்துள்ள கஃபாவைத் தரிசிப்பதும், இன்னும் சில கடமைகளையும், இவற்றை ஷவ்வால், துல்காயிதா, துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் வரை செய்வதைக் குறிக்கும். ஹஜ் கடமையானது ஹிஜ்ரத்திற்குப் பிறகு 9 ஆம் வருடத்திலிருந்து வயது வந்த ஆண் பெண்கள் மீதும், புத்தியுள்ள சுய நினைவில் இருக்கக் கூடியவர்கள் மீதும், ஹஜ் செய்ய சக்திப் பெற்ற ஒவ்வொரு முஃமீன்கள் மீதும் அவரது வாழ்நாளில் ஒரு முறையாவது நிறைவேற்ற வேண்டும் என்று கடமையாக்கப்பட்டுள்ளது.
இதனை இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார் இன்னும் அதற்குச் செல்வதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. (ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம். செயல்களிலேயே மிகச் சிறந்த செயல் எது? என்று கேட்ட பொழுது, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நம்பிக்கைக் கொள்வது, எனக் கூறினார்கள். மீண்டும் மிகச் சிறந்த செயல் எது? என்று கேட்ட பொழுது, இறைவனுக்காக ஜிஹாத்தில் கலந்துக் கொள்வது என கூறினார்கள். அடுத்து மீண்டும் மிகச் சிறந்த செயல் எது? எனக் கேட்ட பொழுது, குறைகள் ஏதும் இல்லாத் வகையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவது எனக் கூறினார்கள்.(நூல் புகாரி, முஸ்லிம் இன்னும் பல)

மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
ஹஜ் கடமையை யார் வரம்புகளை மீறாமலும், உடலுறவுகளில் ஈடுபடாமலும் அல்லது இறைவனுக்கு கீழ்படியாமை போன்ற தன்மைகளிலிருந்து விலகிய நிலையில் அந்தக் கடமையை நிறைவேற்றுவார்களெனில் அவர்கள், அன்று பிறந்த பாலகர்களாக பாவங்களற்ற நிலையில் தங்களது இல்லங்களுக்குத் திரும்புவார்கள்.(நூல் : புகாரி, முஸ்லிம்)

ஹஜ்ஜில் தவிர்க்க இயலாத முதல்நிலைக் கடமைகள்:
1.இஹ்ராம் அணிந்திருத்தல் வேண்டும்.

2.அரஃபா மைதானத்தில் தங்குவது

3.தவாஃபுல் இபாழா (பெருநாளில் செய்யும் தவாஃப்)

4.ஸயீ செய்வது.


ஹஜ்ஜின் வாஜிபுகள்:
இந்த கீழ்கண்ட வாஜிபான கடமைகளில் ஏதாவதொன்று தவறினாலும், அதற்குப் பரிகாரமாக பிராணி ஒன்றை மக்காவில் அறுத்து ஏழைகளுக்கு அதன் இறைச்சியை வழங்க வேண்டும். இந்தப் பரிகாரத்தை வழங்குபவ்ர் அந்த பரிகாரப் பிராணியின் இறைச்சியிலிருந்து எதனையும் உண்ணுவது கூடாது. இவ்வாறு ஒருவரால் பரிகாரம் செய்ய இயலவில்லை எனில் அதற்குப் பதிலாக அவர் பத்து நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அதில் மூன்றை ஹஜ்ஜின் பொழுதும், மீதமுள்ள ஏழு நாட்களை ஹஜ்ஜிலிருந்து வீடு திரும்பியவுடன் நோற்க வேண்டும்.

1.மீக்காத் எல்லையில் இஹ்ராம் கட்டுவது

2.மாலை நேரம் வரை அரஃபா மைதானத்தில் தங்குவது

3.அரஃபாவை அடுத்து முஸ்தலிஃபாவில் தங்குவது (பலவீனர்களையும், பெண்களையும் தவிர, இவர்கள் பாதி இரவு வரை தங்குவது கூடும்)

4.தஷ்ரீக்குடைய இரவுகளில் மினாவில் தங்குவது (தஷ்ரீக்குடைய இரவுகள் துல்ஹஜ் 1,12,13 ஆகிய இரவுகள்)

5.தஷ்ரீக்குடைய நாட்களில் கல்லெறிதல்

6.தலைமுடி மழிப்பது அல்லது கத்தறிப்பது (ஆண்கள் மட்டும்)

7.தாஃபாவுல் வஃதா

ஹஜ்ஜை நிறைவேற்றுகின்ற போது முஸ்லிம்கள் தங்களது ஹஜ் இறைவனால் திருப்தியைப் பெற்றுத்தரக் கூடியதாக அமைய வேண்டுமென்ற எண்ணத்துடனும், பேணுதலுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். ஹஜ்ஜின் நடைமுறைகளான இஹ்ராம் அணிதல், உம்ரா செய்தல், தவாப் செய்தல், ஸயீச் செய்தல், அரபா, முஸ்தலிபா, மினா போன்ற மைதானங்களில் தங்குவது, கல்லெறிதல், உழ்ஹிய்யாக் கொடுத்தல் போன்ற எல்லா நடைமுறைகளையும் இறைவனுடைய அங்கிகாரத்தைப் பெற்றுத் தரும் வகையில் அமைய வேண்டும். மேலும் ஹஜ்ஜில் வீண் வார்த்தைகள், புறம் பேசுதல், தீய செயல்களை விட்டும் விலகி, ஹஜ்ஜில் தங்கியிருக்கும் நாட்களில் நல்ல முறையிலிம், முழு மனதுடனும் இபாதத் செய்தல், நற்செயல்கள் புரிதல், மார்க்க விளக்கங்களை தெளிவான முறையில் பகிர்ந்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

ஹஜ்ஜுக்குறிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும், எனவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான். மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது (நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும். எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். ( திருக்குர்ஆன் 2:197)

நீங்கள் அறுத்துப் பலியிடுகின்ற பிராணிகளின் மாமிசமோ அதனது இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைய மாட்டாது. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.

ஸஹாபாக்கள் தமது ஹஜ் அங்கீகரிக்கப்பட்டதாக வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இஸ்லாத்தின் ஆரம்பப் பொழுதில், மனிதர்கள் ஹஜ் காலத்திலும் ஏனைய காலங்களிலும், மினா, அரபா, துல்மஜாஸ் ஆகிய இடங்களில் வியாபார கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் ஸஹாபாக்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் இந்த இடங்களில் வியாபாரம் செய்வதற்குப் பயந்தனர். அப்பொழுது அல்லாஹுதஆலா கீழ்வரும் திருமறை வசனத்தை இறக்கியருளினான்.

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலங்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது, பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது "மஷ்அருள் ஹராம்" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.  (திருக்குர்ஆன் 2:198)

இறைவன் மனிதர்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுத்து அவன் எவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்று கவனித்தவனாகவே இருக்கிறான், நம்முடைய அத்துமீறிய போக்கு இறை அங்கீகாரத்தை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்களிலும் பெண்களிலும் உடல் உள இயல்புகளை நன்கறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் இருவருக்குறிய கடமைகளையும், பொறுப்புகளையும் தனித்தனியே அமைத்து வைத்துள்ளான். ஆண்களுக்கு அறப் போராட்டம் கடமையாக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அல் ஜிஹாதை சிறந்த நற்செயல் என்று நாம் கருதுகின்றோம். நாங்களும் இறைவழியில் போராடலாமா? என வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள். வேண்டாம்! உங்களுக்குறிய சிறந்த ஜிஹாத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் என பதிலளித்தார்கள். (நூல் - புகாரி)

ஹஜ்ஜின் ஒழுக்கங்கள்:
1.ஹஜ் செய்ய விரும்பும் ஒருவர் தான் ஹஜ்ஜுக்குப் பயனமாகும் முன்னர் தனக்குத் தேவையான ஹஜ்ஜின் சட்டங்களை படித்தோ கேட்டோ தெரிந்து கொள்வதும் அல்லது யாராவது ஒரு ஆலிம் அல்லது ஹஜ்ஜின் அனைத்து காரியங்களையும் அறிந்த அறிஞர்கள் அடங்கிய குழுவோடு செல்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.

2.தன் ஹஜ்ஜை நிறைவேற்றுவதைக் கொண்டு நம்மைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நெருக்கத்தையும், உவப்பையும் பெற ஆர்வம் இருக்க வேண்டும்.

3.நாம் பேசுகின்ற பேச்சு ஒவ்வொன்றும் இறைவனை போற்றி புகழ வேண்டும், தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து நல்ல வார்த்தைகளையும், திக்ரு, துஆ செய்துக்கொண்டிருக்க வேண்டும்.

4.பெண்கள் அனைவரும் புர்கா அணிந்து தன்னை மூடி மறைத்துக் கொண்டு, இறையச்சத்தோடு அங்கு செயல்பட வேண்டும்.

ஹஜ்ஜின் சில் கருத்துகள்: (பெண்களுக்காக)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருளினார்கள், பெண்கள் தங்களுடன் வருவதற்கு மஹ்ரமான ஆண் துணையைப் பெற்று விட்டார்கள் என்றால், ஆண்களைப் போலவே பெண்கள் மீதும் ஹஜ் கடமையாக இருக்கிறது. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஹ்ரமான ஆண் துணையுடன் இருக்கின்ற பெண்களைத் தவிர்த்து, பெண்கள் தனியாக இருக்கும் நிலையில் எந்த ஆணும் அவ்விடத்தில் நுழைவதுக் கூடாது.

இவ்வாறு மஹ்ரமில்லாத ஆண் துணையுடன் ஹஜ் செய்யக் கூடிய பெண்ணின் ஹஜ் நிறைவேறும், இருந்தாலும் அப்பெண்ணின் மஹ்ரமில்லாத ஆண் துணையுடன் சென்றதற்காக, ஒரு பாவத்தைச் செய்ததாகக் கருதப்படும். மேலும், ஒரு பெண் இன்னொரு பெண் துணையுடனோ அல்லது ஒரு பெண்ணின் குழுவுடனோ சென்று ஹஜ் செய்வதும், பயணம் செய்வதும் சட்டப்படி ஆகுமானதல்ல. அல்லது எங்கு சென்றாலும் ஒரு பெண்ணின் துணையுடனோ அல்லது பெண் குழுவின் துணையுடனோ செல்வது என்பது மஹ்ரமான ஆண் துணையுடன் செல்வதற்குறிய ஈடாக கருதப்பட மாட்டாது.

ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டுமானால் தன் கணவ கணவரிடம் முதலில் அனுமதிப் பெற வேண்டும் என்பது மிகவும் போற்றக்கூடிய செயலாகும். கணவன் அனுமதி தர மறுத்தால், எதாவது ஒரு மஹ்ரமான ஆண் துணையுடன் அப்பெண் ஹஜ் செய்யலாம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், தன்னைப் படைத்தவனுக்கு மாறு செய்யக் கூடிய வகையில் நிர்பந்திக்கப் பட்டால் எந்தப் படைப்பினத்தின் மீதும் கீழ்ப்படிவது கடமையில்லை. (நூல் - முஸ்லிம்)

மேலும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்வது என்பது விரும்பத்தக்கதல்ல, தன்னுடன் இறுதி ஹஜ் செய்ய வந்திருந்த மனைவிமார்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

இந்த ஹஜ் உங்களுக்குப் போதுமானது, இதன் பின் நீங்கள் உங்கள் வீட்டிலேயே தனித்திருங்கள் என்று (அதாவது இதற்குப் பின் உங்களுக்கு ஹஜ் என்பது கிடையாது, உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருந்துக் கொள்வது நல்லது) என்று கூறினார்கள்.

ஹஜ் (பிறருக்காக):
ஒருவர் ஹஜ் செய்வதற்குண்டான அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தும், அவரால் எப்பொழுதும் ஹஜ் செய்ய முடியாத நிலையில் இருப்பின், அவருக்காக ஒருவர் (ஆண் அல்லது பெண்) ஹஜ் செய்வது அவர் மீது தவிர்க்க இயலாத கடமையாக இருக்கிறது. அந்த நபருக்காக ஹஜ் செய்பவர், முதலில் தனக்காக ஒரு ஹஜ் செய்திருக்க வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் இவ்வாறு கேட்டார். யா அல்லாஹ் சுப்ருமா என்ற மனிதருக்காக ஹஜ் செய்வதற்காக, உன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்த்தவனாக உன்னிடம் ஆஜராகி உள்ளேன் என்று கூறினார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? எனக் கேட்டார்கள், அந்த மனிதர் இல்லை என பதில் கூறவே, முதலில் உனக்காக நீ ஹஜ் செய்துக் கொள், பிறகு சுப்ருமாவிற்காக ஹஜ் செய்துக் கொள் என பதில் கூறினார்கள். (நூல் - அபூதாவூத் மற்றும் இப்னு மாஜா)

குறிப்பு:
இஸ்லாத்தின் கடமைகளில் அனைத்தையும் கடைப்பிடித்து இறைவழியில் நாமும் சென்று நம்மால் முடிந்த அளவு இறைவனின் துணைக் கொண்டு பிறருக்கும் உதவிசெய்து இறைவனுடைய அன்பையும் நெருக்கத்தையும் பெற்று ஈருலகிலும் வளமான வாழ்வைப் பெறுவோமாக! ஆமீன்!!

Posted by Haja.....

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

0 கருத்துக்கள்
சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.           தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன்.


திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார். மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது. மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்.

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

Thursday, July 29, 2010

நற்போதனைகள்...

0 கருத்துக்கள்
"உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!"
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்"
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 6438

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்.
அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது.
காட்டிக் கொடுக்கக் கூடாது.
யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.
யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான்.
யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 2262, முஸ்லிம்

''உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்.
நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும்.
பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும்.
பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும்.
பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.
உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.''
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதீ, இப்னு ஹிப்பான்

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராவர். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும்.
ஆதாரம் : திர்மிதி.

"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்Wednesday, July 28, 2010

ஜக்காத் (இஸ்லாமிய வரி)

0 கருத்துக்கள்
"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)
இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இறைவனை வழிபடுவத்ற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவத்ற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.
காலில் முள் தைத்தால் கண்ணில் நீர் வழிகிறது. உடம்பில் எங்கேனும் அடிபட்டால் கரம் உடனே அவ்விடத்தைத் தேய்த்துக் கொடுக்கிறது. விரலில் பட்ட காயத்துக்காக இரவெல்லாம் கண் தூங்க மறுக்கிறது. இது போன்று சமுதாயத்தில் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை மற்றவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வறுமையால் வாடும் சகோதரனுக்கு வாழ்வளிக்க இஸ்லாம் ஜக்காத் என்ற கடமையின் மூலம் வழிவகைச் செய்கிறது.
பிறரின் ஏழ்மையை விரட்ட:
ஜக்காத்தின் தலையாய நோக்கமாக திகழ்வது ஏழ்மை எனும் ஒரு நிலையை விரட்டியடிக்க இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஐம்பது பைசா, ஒரு ருபாய் போன்ற நாணயங்களாக அல்லது ஆடைகளாக கொடுப்பதினால் ஜக்காத் நிறைவேறிவிட்டது என கருதவேண்டாம்.
ஒரு செல்வந்தர் தனது ஆண்டு ஜக்காத்தின் மூலம் வாழத்துடிக்கும் ஒருவருக்கு ஒரு தொழில் துவங்க ஒத்துழைப்புத்தந்தால், அவர் தனது செல்வத்தைப் பெருக்கி, அவரும் பலருக்கு ஒத்துழைப்புத்தரும் சாத்தியக்கூறு ஏற்படலாம். அல்லது பல செல்வந்தர்கள் தங்கள் ஜக்காத்தை ஒன்று திரட்டி பல ஏழைகளுக்கு கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் துவங்க வழிவகை செய்யலாம். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு செல்வந்தரும் ஆண்டொன்றுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் ஏழ்மை விரண்டோடிடும் என்பதில் ஐயமில்லை.
இக்கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அருமையாக சித்தரிக்கிறார்கள்.
"ஓரிரு கவள உணவு அல்லது ஓரிரு பேரீத்தம்பழம் பெறுவதற்காக மக்களின் மத்தியில் சுற்றித் திரிபவர் ஏழையல்ல, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதியைப் பெறாதவரே ஏழை. தருமம் கொடுப்பதற்காக அவரை யாரும் எளிதில் இனம் கண்டுக்கொள்ள இயலாது. யாசகம் பெறுவதற்காக அவர் மக்களின் மத்தியில் நிற்கவும் மாட்டார்" - (அல்ஹதீஸ் - நூல்:புகாரி)
அருள்மறை இவ்வாறுக் கூறுகிறது:
"அல்லாஹ்வின் பாதையில் சிறைப்பட்டுவிட்ட ஏழைகளுக்கு அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவும் சக்தி பெறமாட்டார்கள். அவர்களின் முகவாட்டத்தைக் கொண்டு நீர் அவர்களை இனங்கண்டு கொள்வீர்! அவர்கள் மக்களிடம் வற்புறுத்தி யாசகம் கேட்கவும் மாட்டார்கள்" (2:273)
ஜக்காத் கடமையாக்கப்பட்டிருப்பதற்கு சமுதாய நோக்குமட்டும் காரண்மல்ல. ஒருவரின் செல்வம் அவரை விட்டு அகலாமல் நீடித்திருப்பதற்கும், செல்வத்தை அழிவின் பாதைகளிலிருந்து காப்பதற்காகவும் ஜக்காத் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாக தேவையான சக்திகள் உடலுக்குள் செல்வதைப் போன்று, ஊறுவிளைவிக்கும் சில குணங்களும் புகுந்துவிடுகின்றன. நோன்பின் மூலமாக அக்குணங்களிலிருந்து உடலை சுத்தப்படுத்த இறைவன் வகுத்துதந்துள்ளான். அதுபோல நாம் செல்வத்தைத் தேடும் போது, அழிவை தேடித்தரும் சில பகுதிகள் செல்வத்தில் புகுந்து விடுகின்றன. தேடிய செல்வத்திலிருந்து, நம்மை அழிவுப் பாதைக்கு கொண்டுச் செல்லும் ஒரு பகுதியை அப்புறப்படுத்துவதற்குள்ள ஒரே வழி ஜக்காத்தாகும். இக்கருத்தை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது.
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான். (9:103)
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை மன்னிப்புக் கோருதலை ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (9:104)
நபிகள் நாயகம் (ஸல்) விளக்குகிறார்கள்.
"நோன்பு உடலை சுத்தம் செய்வதைப் போன்று ஜக்காத் செல்வத்தை சுத்தம் செய்ய வல்லதாகும்". (அல் ஹதீஸ்)
செல்வத்திலிருந்து, இறைவன் கூறும் அளவை அப்புறப்படுத்தும் போது, எஞ்சிய செல்வம் பரக்கத்தானதாக, பலன் தருவதாக, நிலைப் பெற்றதாக மாறிவிடும். அஃதனின்றி அந்த அளவை அப்புறப்படுத்தாவிடில் திரட்டிய செல்வத்துக்கும் அழிவு ஏற்படும் நிலையுண்டாகும். ஒரு பாத்திரப் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தால் அது முழுவதும் எவ்வாறு நஞ்சாகிவிடுமோ! அதுப்போன்றுக் கொடுக்கப்படாத ஜக்காத் தொகை எல்லாச் செல்வத்தையும் பரக்கத்தற்றதாக, தேவையின் போது கை கொடுக்காததாக முறையற்ற வழியில் செல்விட வேண்டிய கட்டாயத்துள்ளானதாக மாற்றி விடும்.
கடலிலோ, திடலிலோ ஒருவரின் பொருள் அழிவதற்கு ஜக்காத் செலுத்தப்படாமலிருப்பதேயன்றி வேறு காரணமில்லை. (அல் ஹதீஸ்)
ஜக்காத்தின் மூலம் உங்களின் செல்வத்தைக் காப்பாற்றுங்கள். தருமத்தைக் கொண்டு உங்களின் நோய்க்கு மருந்திடுங்கள். சோதனைகளை பிரார்த்தனையைக் கொண்டு வெல்லுங்கள். (அல் ஹதீஸ்)
செல்வத்தின் மாமருந்து:
செல்வத்தை எல்லோரும் தேடுகின்றனர். ஆனால் தேடிய செல்வத்தை அழியாததாக, உரிய நேரத்தில் கை கொடுக்கவல்லதாக நினைந்தறியா விதத்தில் வளர்ச்சியடையக் கூடியதாக ஆக்கும் முறையை அறிந்து செயல்படுபவர் மிகவும் குறைவே!
கோடைக்காலத்தில் இலைகள் காய்ந்து உதிருவது மரத்துக்கு வறட்ச்சியான தோற்றத்தை தந்தாலும், அடுத்து வரும் வசந்த காலத்தில் புத்தளிர் விட்டு மரம் பசுமையடையப் போவதற்கு அது அறிகுறியாகும். நோன்பு நோற்பதால் உடல் மெலிவதைப் போன்றிருந்தாலும், பின்னர் நல்ல சக்திகள் சேகாரமாகி உடல் திடகாத்திரம் ஆவதுப் போல, ஜக்காத் செலுத்துவதால் செல்வத்தின் ஒரு பகுதி செலவிடப்பட்டு, குறைந்துவிட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அதனால் செல்வம் வளர்ச்சியே அடைகிறது.
"(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜக்காத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது) அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்". (30:39)
எப்போது கொடுப்பது:
இறைவனுக்காக மட்டும் செய்யப்படும் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் உரிய தருனத்தை விட்டு முந்தக்கூடாது. ஆனால் இறையடியார்களுக்குப் பலனளிக்கும் ஜக்காத் கடமை வருவதற்கு முன்பே கூட கொடுக்கலாம். எனவே ஆண்டு முழுவதும் ஜக்காத்தைக் கொடுக்கலாம். இருப்பினும் ஒரு ந்ற்செயலுக்கு எழுபது பங்கு அதிகமான கூலி வழங்கப்படும் நாளாகிய ரமலான் மாதத்தில் கொடுப்பதை மக்கள் ஏற்புடையதாகக் கருதுகின்றனர். அதுவும் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த லைலத்துல் கத்ரி இரவில் வழங்குவதை அநேகர் வழமையாகக் கொண்டுள்ளார்கள்.
குறிப்பாக ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பனம், பொருள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!.
முறையான வகையில் ஜக்காத்தை (இஸ்லாமிய வரியை) கொடுத்து நாமும் வழம் பெற்று நம்மை சார்ந்தவர்களையும் வழமோடு வாழவைத்து, வல்ல ரஹ்மானின் கிருபையையும், நெருக்கத்தையும் பெருவோமாக! ஆமீன்!!.
Posted by Haja

Tuesday, July 27, 2010

குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதே!

0 கருத்துக்கள்
ஓரிறையின் நற்பெயரால்..

பொதுவாக வேறு எந்த ஒரு வேத நூலுக்கும் இல்லா சிறப்பு குர்-ஆனுக்கு மட்டும் வழங்கப்பட்டது யாதெனில் அந்நூலின் "பிரத்தியேக பாதுகாப்பு".இங்கு குர்-ஆனின் பாதுகாப்பை மற்ற வேத நூல்களுடன் ஒப்பிட்டு சொல்லும்போது,இக்கூற்றை எதிர்க்க விரும்புவோர்.,ஆரம்பமாக வைக்கும் வாதம் தாம்


1.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?
2.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது போல் அதற்கு முந்தைய வேதங்களை ஏன் இறைவன் பாதுக்காக்கவில்லை?அஃது இறைவனால் ஏன் பாதுக்காக்க முடியவில்லை?

இந்த இரண்டும் இரு வேறு கேள்விகளாக இருந்தாலும் இரண்டும் ஒரே பதிலைதான் அடிப்படையாக கொண்டிருக்கிறது எப்படி?.. காண்போம்.,

குர்-ஆனின் பாதுகாப்பு:
அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும்.,

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(15:9)


இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்., ஒலி வடிவில் இறக்கப்பட்ட குர்-ஆனை மக்கள் மத்தியில் பாதுக்காக்க இப்படி ஒரு பிரத்தியேக ஏற்பாட்டையும் இறைவன் செய்தான்.

அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (29:49)

மேற்கூறப்பட்ட வசனத்தில் "கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில்" என்ற வாசக அமைப்பை இறைவன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுமிகுந்தவர்களுக்கு மனன சக்தி மூலம் அவர்களின் மனங்களில் இறைவசனங்கள் பாதுக்காக்கப்படுகின்றன எனபதையும் அறியலாம். நம்மில் பலருக்கு பள்ளிக்காலங்களில் படித்த பாடங்களில் சில வரிகள் இன்றளவும் நம் மனதில் ஞாபகம் இருக்க காண்கிறோம். குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயிலும் பள்ளிப்பாடங்களே இன்றும் மனதின் ஓரத்தில் ஒட்டிருக்கும்பொழுது தினம் ஐவேளை தொழுகையில் குர்-ஆனிய வசனங்கள் அதுவும் பார்க்காமல் திரும்ப திரும்ப ஓதப்பட வேண்டும் எனும்போது அத்தகைய இறை வசனங்கள் மனதிலேயே பதிய செய்வதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்!ஏனெனில் தொழுகையானது வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வு.உளத்தூய்மைக்காக இது பின்பற்றப்பட்டாலும் இயற்கையாகவே மனித மனங்கள் மனனம் செய்வதற்கு இறைவன் உருவாக்கிய மிக சிறப்பான,அழகான ஏற்பாடாகும்.

இந்த இடத்தில் ஒரு அடிப்படை கேள்வி அனைவருக்கும் எழலாம் (சிலருக்கு ஏற்படாமல் இருக்கலாம்-அவர்களுக்கும் சேர்த்தே இங்கு விளக்கம் -ஏனெனில் தன்னிலை விளக்கமளிப்பதே குர்-ஆனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனிச்சிறப்பு)
சஹாபாக்கள் முதல் அவர்களை தொடர்ந்து இன்றுமுள்ளவர்கள் வரை குர்-ஆன் மனதளவில் மனனம் செய்யப்பட்டு பாதுக்காக்கப்பட்டது சரிதான்.ஆனால் குர்-ஆன் அக்கால மக்கள் அனைவருக்கும் கேட்றியும் பொருட்டு பொதுவாக அருளப்படவில்லை.நபிகளாருக்கு அவர்கள் மட்டும் தனியாகவே அறிந்துக் கொள்ளும் பொருட்டும் பிரத்தியேகமாக அருளப்பட்டது.எனவே வான்வழி வந்த இறைச்செய்தியை வாய்வழி அறிவிக்கும் பொழுது நபிகளார் மிக சரியாக கருத்து சிதைவின்றி உள்ளதை உள்ளபடி சொல்லிருப்பார்களா., ஏனெனில் அவர்கள் எழத,படிக்க தெரியாதவராயிற்றே என அவர்களது ஞாபக சக்தியின் மேல் யாரும் சந்தேகம் கொள்ளவாராயின் அக்கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக இறைவன் குர்-ஆனை மக்களிடத்தில் சேர்ப்பிக்க நபிகளார் மேற்கொள்ளும் செயல்களுக்கும் தாமே பொறுப்பு என்கிறான்.

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள் (75:16)

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. (75:17)

எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (75:18)
  
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (75:19)

சுப்ஹானல்லாஹ்! எத்தகையதொரு தெளிவானதொரு விளக்கம்
எனவே குர்-ஆனின் பாதுகாப்பு எழுத்துவடிவில் இருப்பதாக சொல்வதைவிட ஒலி வடிவில் மனதில் இருப்பதாக கொள்வது நல்லது.இதன் காரணமாக குர்-ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படவில்லையென யாரும் (வேண்டுமென்ற) பொருள் கொண்டு அதன் எழுத்து வடிவிலான நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பினார்களால் அஃது ஏற்பட்ட மாற்றம் குறித்து வரலாற்று சான்றுகள் தர வேண்டும்.ஏனெனில் உஸ்மான் (ரலி)அவர்களால் தொகுக்கப்பட்ட குர்-ஆன் அதன் மூல மொழியி(அரபி)லேயே துருக்கியிலும்,ரஸ்யாவிலும் மக்களின் பார்வை மத்தியில் இன்றளவும் இருக்கிறது.

குர்-ஆன் பற்றிய எதிர்மறை கருத்துக்களுக்கு சரியான விளக்கம் குறித்த அனைத்துவிதமான ஆய்வுகளும் அந்தந்த கால கட்டங்களிலேயே அறிஞர்ப் பெருமக்களால் மேற்கொள்ளப்பட்டு மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதனை கீழ்காணும் சுட்டிகள் வாயிலாக காணலாம்

அருளப்பட்ட வரலாறு
http://www.tamililquran.com/revelation.asp?file=history.html
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/arulappatta-varalaru/

தொகுக்கப்பட்ட வரலாறு
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru/

குர்-ஆன் குறித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கான விளக்கங்களுக்கு
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_05.html
http://abumuhai.blogspot.com/2008/09/7.html
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_14.html

இரண்டாவது கேள்விக்குறித்த குற்றச்சாட்டைக் காண்போம். ஏனைய கிரந்தங்களை இறைவன் ஏன் பாதுகாக்கவில்லை என்ற கூற்றுக்கு குர்-ஆனை மட்டும் பாதுக்காத்த காரணம் அறிந்தாலே போதுமானது.நூஹ்,ஸாத்,லூத் போன்ற ஏனைய சமுகங்கள் குர்-ஆன் முன்மொழிந்திருப்பினும் முஹம்மது நபிக்கு முன்பாக வந்த இரு சமுகங்கள் மற்றும் அவற்றிற்கு கொணர்ந்த வேதங்கள் குறித்த பார்வை இங்கே.நபி மூஸா(மோசஸ்) அவர்களுக்கும் நபி ஈஸா(ஜீஸஸ்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட தவ்ராவும்,இஞ்ஜிலும் அந்தந்த சமுக மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன அதாவது அப்போதைக்கு இருந்த (வாழ்ந்த) யூத,கிறித்துவ சமுகத்திற்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வணக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைக்கு தேவையான சட்டங்கள் (விதிமுறைகள்-விதி விலக்குகள், அனுமதிக்கப்பட்டவைகள், விலக்கப்பட்டைவைகள் போன்றவை) குறித்து தெளிவுறுத்தப்பட்டது.எனவே ஒரு குறிப்பிட்ட சமுகம் சார்ந்த மக்களுக்காகவே அருளப்பட்ட வேதங்கள் எனும்போது எல்லா மனிதர்களுக்கும் அஃது அது பொதுவான விதிகள் குறித்த மூலங்கள் வரையறுக்கப்பட்ட வேதமாக அணுகமுடியாது.ஏனெனில் அவ்வேதங்கள் அனைத்து மக்களின் அதாவது,யுக முடிவு நாள் வரை வரக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும்படியான கருத்துக்கள் வகுக்கப்படவில்லை.அந்த காலகட்டத்தில் உள்ள மக்களின் செயல்பாடுகளுக்கு தகுந்தாற்போல் இறைவேதங்கள் அருளப்பட்டன.(எனினும் அவைகள் குறைப்பாடுடைய வேதங்கள் அல்ல., அல்லாஹ்வின் ஏற்பாடு அப்படி) எனவே எல்லோருக்கும் பொதுவானதாக கருத்துக்களை அடங்கிய வேதமாக அல்லாஹ் முஹம்மது நபிகளின் மூலமாக இவ்வுலகத்திற்கு வழங்கினான்.அரபு மொழி பேசும் சமுக மத்தியில் இவ்வேதம் வழங்கப்பட்டாலும்,உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிப்பொருட்டு மேற்கொள்ளப்படும் ஏவல்களும்-விலக்கல்களும், முழுமைப்பெற்ற வாழ்வியல் சட்டத்திட்டங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டு நம் முன் இறுதி வேதமாக காட்சி தருகிறது

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)

இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. (06:90)

மேலும் பார்க்க:(2:2,17:9,82,18:2, 19:97, 20:2, 27:2, 31:3, 43:44, 50:45, 80:11)

கீழ்காணும் வசனங்களும் முன்னர் வருகை புரிந்த இறைத்தூதர்களையும்,அவர்கள் கொணர்ந்த வேதங்களையும் உண்மைப்படுத்துவதாக கூறுகிறது

இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)

(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிபோனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.(41:43)

மேலும் பார்க்க ( 2:91,4:47, 5:48, 6:92,29:47, 43:45)

மேலும் எதுக்குறித்து தூதுவர்கள் இறைப்புறத்திலிருந்து அனுப்பப்பட்டார்களோ அந்த தூதுத்துவப்பணியின் நோக்கமும் முஹம்மது நபிகளாரோடு முடியுற்றது -அதாவது மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டிய- சேர்க்க வேண்டிய அனைத்து செயல்பாடுகளையும் இறுதித்தூதின் மூலமாக இறைவன் முழுமைப்படுத்திவிட்டான்.

...இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; (05:03 சுருக்கம்)

அல்லாஹ்வே இஸ்லாத்தை முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாக தேர்ந்தெடுத்தால் உலக இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது "முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது!" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல...உலகின் இறைவன்!

மனிதன் என்ற முறையில் இவ்வாக்கத்தில் எங்கேனும் தவறிருப்பின் அதற்கு நானே பொறுப்பு
ஆதாரத்துடன் சொன்னால் -திருத்தலாம்

அல்லாஹ் மிக்க அறிந்தவன்!

Friday, July 23, 2010

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

0 கருத்துக்கள்
கேள்வி: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?

விளக்கம்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்

இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது.

இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) யின் கருத்து:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை' (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள் (Coptic Christians)

கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.

இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்

அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.

எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:

அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான 'அல்மனாக்' பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை 'தி ப்ளெய்ன் டிரத்' என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:

இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்

'ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.' என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

-ஒற்றுமை இணையத்திலிருந்து
Dr.டாக்டர் ஜாகிர் நாயக்

"சொர்க்கம்"-முஸ்லிம்களுக்கு மட்டுமா?

0 கருத்துக்கள்
ஓரிறையின் நற்பெயரால்...


கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும்,சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி,பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறி
ஆனால் உண்மையில் -கேள்விக்குறியுடன் முடிந்த அவ்வாக்கியமே உண்மை. பார்த்தீர்களா...உலகத்தை படைத்து அனைத்து மக்களையும் இரட்சிக்கும் கடவுள் இப்படி பாரபட்சமாக நீதி செலுத்தலாமா.?-என போர்க்கொடி தூக்கும் சக மனித நல விரும்பிகள் அதற்கு முன்பாக இஸ்லாம் ஏன் அவ்வாறு கூறுகிறது என்பதை அறிய நடுநிலை சிந்தனையை மேற்கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.
இந்நிலையில் ஒரு விசயத்தில் யாராக இருந்தாலும் உடன் பட வேண்டும். ஒன்று,இஸ்லாத்தின் அடிப்படையில் இக்கோட்பாட்டை விளங்குவதற்கு முன் வர வேண்டும்,அவ்விளக்கங்களில் உடன்பாடு இல்லையென்றால் குறைந்தபட்சம் சமுக நிலை ஒப்பிட்டு அடிப்படையிலாவது அதை ஏற்க முன் வர வேண்டும்.

முதலில் சமுக நிலை ஒப்பிடு -புரிதலுக்காக...

ஒரு தேர்ந்த பள்ளியில் மாணவர்கள் சேர்வதாக இருந்தால் முதலில் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்பட்ட பிறகே அப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.மாறாக சமுக அந்தஸ்து பெற்றவராக இருப்பினும்,பொருள் வளம் நிரம்ப பெற்றவராக இருப்பினும்,மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்டவராக இருந்தாலும்-மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக அப்பள்ளியில் அவரது சேர்க்கை இருக்காது. வேண்டுமானால் அச்சேர்க்கைக்கான கூடுதல் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.இன்னும் சொல்லப்போனால் மேற்குறிப்பிட்ட பண்புகள் பெற்றிருப்பினும் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்படவில்லையென்றால் அப்பள்ளியில் சேர்க்கவே படமாட்டார் ஏனெனில்,அப்பள்ளியின் செயல் திட்டங்கள் யாவருக்கும் பொதுவாக முன்னரே வகுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் எந்த ஒரு மாணவனும், ஒன்று அப்பள்ளியின் வரையறைக்கு உட்பட்டு அதில் சேரலாம் அல்லது தன் சுய விருப்பத்தின் பேரில் அப்பள்ளியில் சேராமலும் இருக்கலாம்.சேர்ந்த மாணவர்களை மட்டுமே அப்பள்ளியின் நிர்வாகம் கட்டுப்படுத்தும்.அஃகுதில்லாத ஏனைய மக்களை அப்பள்ளி கட்டும் படுத்தாது தம் மாணவர்கள் என்றும் சொல்லாது,அப்படி ஒரு நிலையை அத்தகையோரும் எதிர்ப்பார்க்கவும் மாட்டார்கள்.மேலும் கல்விப்பயிலும் தம் மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கும்.அதன் விளைவால் அவர் பெற்ற வெற்றிக்காக அவருக்கும் பாராட்டும்,வெகுமதியும் அப்பள்ளி வழங்கும்.மாறாக அப்பள்ளியின் சட்டடத்திட்டங்களை பேணாத,படிக்கவும் செய்யாத ஏனையோர் பாராட்டையோ,வெகுமதியையோ எதிர்ப்பார்க்கவும் கூடாது,எதிர்ப்பார்ப்பதில் எத்தகையே நியாயமும் கிடையாது எனினும் அப்பள்ளியின் அடிப்படை சட்டத்திட்டங்களை உணர்ந்து கல்வி பயில விரும்பும் எவராக இருப்பினும் அவரின் செயல் திறன் அடிப்படையில் அவருக்கு வெகுமதியோ பாராட்டோ வழங்கப்படும்.
இந்த சம கால நிகழ்வு உதாரணத்தை ஒப்பிடாக கொண்டு (அளவு கோலாக அல்ல)மேற்காணும் தலைப்பின் கீழ் செல்லுங்கள்.,

இஸ்லாத்தின் பார்வையில்...

முஸ்லிம்-என்ற பதத்தை அறிந்துக் கொள்வதற்கு முன் இஸ்லாம் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக குர்-ஆன் மீது வைக்கப்படும் முதல் மற்றும் பொதுவான குற்றச்சாட்டான "காஃபிர்" என்ற பதம் குறித்து அறிவோம்.

காஃபிர் யார் ..?
 
காபிர்- இந்த ஒரு வார்த்தை மதம் சார்ந்த /சாரா மக்களால் அருவறுக்கத்தக்க வகையில் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் குறித்து குர்-ஆன் கூறும் போது ஓரிறைவனை நிராகரிப்போரை,அவனுக்கு இணை கற்பிப்போரை அவன் கூறும் வழிமுறைகளை பின்பற்றாதவர்களை,சட்டத்திட்டங்களை ஏற்காதோரை காஃபிர்கள் என்கிறது.அதன் விளைவாக அவர்களுக்கு "சொர்க்கமும்" கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனெனில் பொதுவாக ஒருவருக்கு கிடைக்கப்பெறும் பரிசோ,கூலியோ அவரின் நன்னடத்தை மற்றும் சொல்லிற்கிணங்க மேற்கொண்ட செயல்களுக்கே கொடுக்கப்படும்,எனும்போது இறைவனின் கட்டளைக்கிணங்க செயல் பாடாத காஃபிர்களுக்கு சொர்க்கம் மட்டும் கொடுக்க வேண்டும் என கேட்பது என்ன நியாயம்?
 
இங்கு ஒரு விசயம்.,காஃபிர் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் இறை நிராகரிப்பாளர் என்பதே ஆகும்.குர்-ஆனில் சில வார்த்தைகள் ஏனைய மொழிபெயர்ப்புகளிலும் அதன் மூல(அரபி)மொழியிலேயே பயன்படுத்தப்படுகின்றன. ஈமான்(இறையச்சம்), தக்வா(பயபக்தி), தவ்பா(பாவ மன்னிப்பு), ஸலாம்(சாந்தி), முனாஃபிக் (நயவஞ்சகன்) போன்றவைகள் அவற்றில் சில,அதன் அடிப்படையிலே காஃபிர் என்ற வார்த்தையும் குர்-ஆனிய மூலமொழியிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது.ஒருவேளை அச்சொல்லின் அவசியம் உணர்ந்தோ,விளங்குவதற்கு எளிதாக இருப்பதற்கோ அவ்வாறு பயன்ப்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் நிய்யத், அமல், பர்ளூ, சுன்னத்,போன்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் சொற்கள் இருப்பினும் பெரும்பாலும் முஸ்லிம்கள் அதனை நடைமுறையில் அரபி(மொழி)யிலேயே பயன்படுத்துவதிலிருந்து மேற்கூறிய செயல்முறை காரணமே சரியானது என்பது தெளிவாகிறது.இதையும் மீறி காஃபிர் என்ற பதம் கேவலப்படுத்துவதற்கோ, மததுவேசத்திற்கோ பயன்படுத்தபடுவதாக யாரும் கூறுவாரானால் அதனை தக்க சான்றுகளோடு நிறுவட்டும்.
 
யார் முஸ்லிம் ?
 
தாடி வைப்பதோ தொப்பி அணிவதோ,முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதோ ஒருவன் முஃமீன் என்பதற்கு போதுமானதன்று.இவை முஸ்லிம் என்பதற்கான சமுக குறியீடுகள் தான்.மாறாக யாராக இருப்பினும்,, எக்குடும்பத்தில் பிறப்பினும் "ஒரே இறைவனை ஏற்று அவனது இறுதித் தூதரை உண்மைப்படுத்தி இறைவன் கூறிய நேரிய பாதையில் தமது செயல்களை யார் தம் வாழ்வில் அமைத்து கொள்கிறார்களோ அவர்கள் தான் -"முமீன்கள்".இறை பார்வையில் அவன் சொல்லிற்கிணங்க செயல்ப்பட்ட தூயவர்கள். அதற்காகவே அவர்களுக்கு சொர்க்கம் தருகிறான்.இதில் எங்கிருந்து வந்தது பாரபட்ச நிலை? போர்க்கொடி தூக்குவோர்கள் விளக்குவார்களா?

மேலும் சிறு விளக்கம்,

குர்-ஆன் மற்றும் அல்லாஹ் (என்ற அரேபிய சொல்லுக்கு கடவுள் என்றுதான் அர்த்தம்) இவ்வுலக அனைத்து மக்களுக்கும் பொதுவானவை தவிர முஸ்லிம் என்ற சமுகத்திற்கு மட்டும் உண்டானவை அல்ல.மாறாக கடவுள் தேர்ந்தெடுத்தது (குர்-ஆன் அடிப்படையில்,நபிகாளாரின் வழிகாட்டுதலுகிணங்க வாழ்வை அமைத்துக்கொண்ட)"முஸ்லிம்களை" -அது தான் உண்மையும் கூட! (முஸ்லிம் -பெயர் காரணம் முதல் பத்தியில் மிக தெளிவாக) ஏனெனில் குர்-ஆன் மொத்த மனித சமுதாயத்திற்கும் பொதுவானது என்பதை விளகக தன்னை இவ்வாறே அறிமுகப்படுத்துகிறது.
. . . இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக.-6:90
மேலும் பார்க்க
(42:7, 81:27)
அதைப்போலவே அல்லாஹ் என்ற (அரேபிய கடவுள் அல்ல) உலகத்தின் ஒரே கடவுள் தன்னை குர்-ஆனில் அனைத்து மக்களின் இரட்சகன் என்ற தன்னை பிரகடனப்படுத்துகிறான்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். -2:21
ஏனைய வசனங்களிலும் இறைக்குறித்து மேலும் பார்க்க (11:123, 18:28, 39:3,11,14, 53:62, 94:8)

அல்லாஹ் விடுத்து அவனுக்கு இணைக்கற்பிக்கும் வகையிலோ,அவனது தன்மைக்கு பொருந்தாத நிலை தவிர்த்து ஏனைய பெயர்களால் அவனை அழைக்கலாம் எனவும் குர்-ஆன் விளிக்கிறது
"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக -17:110
 

மேலும் பார்க்க (7:180, 20:8, 40:3, 57:3, 59:22-24)
 
மக்களை மாய்க்கும் போலி மத ச்சடங்குகள் அழித்து மனித நேயம் காக்க விரும்புவதாக கூறி இஸ்லாத்தையும் அத்தகையை பட்டியலில் சேர்க்காதீர்கள்.புரோகித விலங்கொடைத்து மனித இறைத்தொடர்புக்கு இடையில் எதனையும்,எவரையும் எற்படுத்தாதே எனக்கூறிய மனித நேய மார்க்கம்!படைப்பாளன் அனைத்து படைப்புகளையும் சமமாக பார்க்கும் பொழுது படைப்பினம் மட்டும் படைத்தவன் குறித்து பாகுபாடு பார்ப்பதேன்....?(பெருபான்மை மக்களால் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட மிக அழகான வாசகம்)படைத்தவன் அல்லாது படைப்பினங்களை வணங்குவோரும், படைப்பினங்களை தாண்டி படைத்தவன் அல்ல என சொல்வோரும் படைத்தவன் சொல்வதை மட்டும் கேட்க மறுப்பதேன்?

-ஓர் இறையின் அடிமை
அல்லாஹ் மிக அறிந்தவன்

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

0 கருத்துக்கள்
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு
---------------------------------------------------------------------
ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நாளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர்.
பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.
***
கட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்
சத்தியமார்க்கம்.காம்
இதுதான்இஸ்லாம்.காம்
இஸ்லாம்கல்வி.காம்
http://palanibaba.blogspot.com
http://a1realisam.blogspot.com
http://masdooka.blogspot.com
http://majinnah.blogspot.com
ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா.
---------------------------------------------
நன்றி: சத்தியமார்க்கம்.காம்
மீள்பதிவு: தமிழ் முஸ்லிம் தாரகை

Thursday, July 22, 2010

இஸ்லாத்தை மறைத்தல்

0 கருத்துக்கள்
ஒரிறையின் நற்பெயரால்...

இஸ்லாம் மறைக்கப்படாத, மறைக்கக்கூடாத, மறைக்க முடியாத மார்க்கம். இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு விளக்கவுரையாக இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைக்கப்படாத வாழ்க்கை குறித்த அறிவிப்புகளும் எவரும் எளிதில் நெருங்கும் அளவுக்குத் திறந்த நூல்களாகவுள்ளது. இணைய வசதி உள்ளவர் விரல் நுனியின் சொடுக்கில் தேவைப்படும் திருக்குர்ஆன் வசனங்களையும், நபிவழி அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இறை மார்க்கம் இஸ்லாத்தை முஸ்லிம்கள் மறைத்தார்கள் என்று கூறுவது ஒன்றும் அறியா அப்பாவித்தனமாகும். இவ்வளவு வெளிப்படையான மார்க்கத்தை மறைத்திடவும் முடியாது. ஒன்றை மறைத்தல் என்று சொன்னால் அது யாருக்கும் கிடைக்கவேக்கூடாது. மறைத்து விட்டார்கள் என்று சொல்பவர்கள் மறைத்தது கிடைக்கப் பெற்றதால் தான் மறைத்து விட்டார்கள் என்று சொல்ல முடியும். எனவே மக்களின் பகிரங்கப் பார்வையில் உள்ளதை யாரும் மறைக்க முயலமாட்டார்கள்.

எவரும் எளிதில் அணுகும் வகையில் வெளிப்படையாக இருக்கும் இஸ்லாத்தை, முஸ்லிம்கள் மறைத்து விட்டனர் என்ற பிற மத நண்பர்களின் குற்றச்சாட்டு தவறானது!


(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)

முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?


(இஸ்லாம் வளால் பரவிய மார்க்கமா? என்பதுப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.)

மார்க்கத்தை மறைத்தல்

இஸ்லாத்தை மறைப்பது குறித்து இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முஸ்லிம்கள் சத்தியத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை.

''அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.'' (திருக்குர்ஆன், 002:042)

''நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது'' (திருக்குர்ஆன், 002:119)

இறைவன் உண்மையுடன் அனுப்பிய இஸ்லாமியத் தூதுத்துவத்தை முஸ்லிம்கள் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். (புகாரி)

உண்மையை மறைக்கக்கூடாது!

உண்மையுடன் பொய்களையும் சேர்க்கக்கூடாது!

உண்மையை எடுத்துக்கூறி மக்களை எச்சரிக்க வேண்டும்!

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அறிந்த ஒரேயொரு செய்தியையும் மற்றவருக்கு எடுத்துச் சொல்லிட வேண்டும்!

முக்கிய கவனத்திற்கு: நபியவர்கள் கூறாததை கூறியதாகவும், கூறியதை கூறவில்லை என்றும் நபி (ஸல்) அவர்களின் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவன் நரகத்தில் தன் இருப்பிடத்தைச் சித்தப்படுத்திக்கொள்கிறான்! என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை முன் வைத்துள்ளது இஸ்லாம்.

எதை வேண்டுமென்றே மறைக்கக்கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கின்றதோ, அதைக் குறித்து ''இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள்'' என்ற பிற மத நண்பர்களின் விமர்சனம் மிகவும் பரிதாபத்திற்குரியதாகவுள்ளது.

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''

ஓமன் நாட்டு மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதத்தின் மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பு மூலமொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்தது. தமிழில் மொழிபெயர்க்கும் போது இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் நபியவர்களின் கடிதம் இதுதான்.

இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் குற்றப்படுத்துவது மூலமொழி அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தழுவியதாகும். ஆங்கிலமும், தமிழும் வருமாறு

//ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.//

பிற மத நண்பர்கள் ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்தது சரியா? என்பது வாதமல்ல. ஏனெனில் நபியவர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி அனுப்பவில்லை! ஆங்கிலம் ஒரு மொழிபெயர்ப்புதானே தவிர, ஆங்கிலம் மூலமொழி அல்ல. அரபியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திருந்து தமிழ், இவ்வாறு மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்க்கும்போது மூலமொழியில் சொல்லப்பட்ட கருத்தில் சிதைவு ஏற்படும்.

அதற்காக மொழிபெயர்ப்பு கூடாது என்று நாம் சொல்லவில்லை. விவாதம் என்று வந்தால் மொழிபெயர்ப்பில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் ''எது சரி?'' என்பதை மூலமொழியோடு ஒப்பிடுவதே முறையாகும். அண்டை நாட்டு அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய அரபிமொழி கடிதத்தை இஸ்லாமிய அறிஞர்கள் தமிழுக்குத் தழுவிய கடிதமும், இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் மூன்றாம் மொழி தமிழுக்குத் தழுவிய கடிதமும் மேலே இடம் பெற்றுள்ளன.

இங்கு,

''இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர்.

பிற மத நண்பர்களின் இன்னொரு கேள்வி?

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?


பிற மத நண்பர்களே!

கேள்வி எழுப்பியதோடு ''மறைத்த உண்மை எது?'' என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே!

நன்றி!
அன்புடன்,
அபூ முஹை