Tuesday, December 28, 2010

பரிணாமத்தில் மனிதன்..?

0 கருத்துக்கள்
                                                       ஓரிறையின் நற்பெயரால்...
             பொதுவாக, ஒரு செல் உயிரி மூலமாக ஏனைய உயிரிகள் வளர்ச்சியடைந்தன என்றாலும், அஃது அவ்வாறு ஒரு உயிரி பிறிதொரு உயிரியாக மாற்றமடைய அவ்வுயிரியின் சுய தேவை, வாழும் சூழல், மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இவற்றை அடிப்படையாக கொண்டுதான் ஒரு உயிரி காலப்போக்கில் தன்னை பிறிதொரு உயிரினமாக மாற்றிக்கொள்கிறது. -என்பது தான் பரிணாமத்தின் தகவமைப்பு கோட்பாடு.        ஏனைய உயிரினங்களைப்போல மனிதன் என்ற உயிரினமும் மேற்கண்ட சங்கிலித்தொடர் உயிரின வளர்ச்சியிலேயே இறுதியாக உருவான ஒரு உயிரினம் என்பதும் பரிணாமம் எடுத்து வைக்கும் வாதம்.
   
ஒரு உயிரிலிருந்து மேற்கண்ட அடிப்படையில் பிறிதொரு உயிரினம் உருவாவதென்றால் அதன் முந்தைய நிலையில் இருக்கும் உயிரின் அனைத்து சிறப்பியல் கூறுகளையும் மாற்றமடையும் உயிரி இயல்பாகவே பெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு உயிரியும் அதன் முந்தைய நிலையில் இருக்கும் ஏனைய உயிரினங்களின் எந்த ஒரு சிறப்பியல் கூறுகளை தாங்கி உருவாதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம் இனி., உயிர் படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மனிதனின் தோற்றம் குறித்து பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் சில இயல்பான சந்தேகங்கள் குறித்து காண்போம்.,


சங்கிலித்தொடர் வரிசையில் ஏனைய உயிரிகளைப்போல் பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் உருவானான் என்றால் இயல்பாகவே ஏனைய உயிரினங்களின் சிறப்பியல்புகளை தாங்கி உருவாகி இருக்கவேண்டும் அஃது உருவாகாதது ஏன்?


உதாரணத்திற்கு, எந்த ஒரு உயிரினமும்
நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன >>> பறப்பன 

போன்ற இயற்பண்புகள் அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.இதன் அடிப்படையில் வாழ்வை தொடரும் உயிரினத்தில் இறுதியாக உருவாகும் ஓர் உயிரி மேற்கண்ட பண்புகளை தாங்கி உருவாவது அவசியமாகும். அதுவும் ஒர் அறிவார்ந்த உயிரி மேற்கண்டவற்றை தாங்கி வளர்வது எளிதே., ஆனால் மேற்கண்ட பண்புகளில் நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன போன்ற பண்புகளை பெற்று உருவான மனிதன் "பறப்பன" என்ற பறவைகளின் மிக சாதாரண ஒரு பண்பை தாங்கி உருவாகாதது ஏன்? 


ஏனெனில் உயிரியின் பிரத்தியேக மாற்றத்திற்கு மிக முக்கிய காரணி., அவ்வுயிரியின் சுயதேவை மற்றும் கால சூழல் ஆகும் எனும்போது மனிதன் பறக்கவேண்டும் என்பது அவனது சுயதேவை என்ற நிலையும் தாண்டி... காலகாலமாக அவனது தேடுதலின் அதிகப்பட்ச பேராசையாக இன்றும் ஆழ்மனதில் நிறைவேறாத எண்ணமாக தொடர்கிறது, மனிதனால் பறக்கமுடிந்தால் ஏனைய நிலைகளை விட எந்த ஒரு பணியையும் விரைவாகவும், எளிதாகவும் செய்ய முடியும். எனவே பறக்கும் மனிதனால் சாரதாரண நிலையில் இருக்கும் மனிதனை விட அதிக அளவில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஆக செயல் ரீதியான காரணங்களின் உந்துதலால் ஏற்படும் மாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பரிணாமத்தில், உயிரின வளர்ச்சி விளைவால் இன்னும் மனித உயிரி பறக்க முற்படாதது ஆச்சரியமே.....

இதைத்தவிர தர்க்கரீதியாகவும் பல இடர்பாடுகள் இருக்கிறது பரிணாமம் உருவாக்கிய மனிதனுக்கு..
   
மனிதன் என்ற ஒரு உயிரினம் ஏனைய உயிரினங்களைப்போல் இல்லாமல் தனித்தொரு சீராய் ஒழுங்குப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட படைப்பினமாக காண்கிறோம். அஃதில்லாமல் பரிணாமம் தான் மனிதனை உருவாக்கியது என்றால்... ஏனைய உயிரினங்களைப்போல் ஊண், உறக்கம், பசி, இச்சை, கோபம், வேகம், பாசம் போன்ற ஏனைய வாழ்வியல் பண்புகள் மனிதனுக்கும் பொதுவாக கொண்டாலும் "வெட்கம்" என்ற உயரிய பண்பை எந்த உயிரின் மூலத்திலிருந்து பெற்றான்..? பொதுவாக உலகில் பல்வேறு பகுதியில் வாழவேண்டி இருந்ததால் மனிதன் கால சூழலுக்கு தகுந்தாற்போல் ஆடை அணிய கற்றுக்கொண்டான் என்றாலும் அஃது தங்களின் வெட்கத்தலங்கள் மறைக்கப்படவேண்டியவைகள் என்பதை எந்த பரிணாம மூலத்தில் கற்றுக்கொண்டான்.


ஏனெனில் உயிரின மாற்றத்தின் விளைவாக உணவு, பாதுகாப்பு போன்ற வாழ்வாதார தேவையை மட்டுமே கண்டறிந்து அதற்கான செய்கைகளை 
வேண்டுமானால் அதிகப்படுத்த முடியுமே தவிர உயிர் வாழ தொடர்பே இல்லாத வெட்கம் என்ற பண்பை கற்ற வேண்டியது அவசியமே இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டும் அத்தகைய பிரத்தியேக பண்பு உண்டானது எப்படி?


இன்றும், நாம் சர்வ சாதாரணமாக பார்க்கிறோம், கால்நடைகளில் குட்டியே தன் தாயோடு கூடுவதை காண்கிறோம். மேலும் உடல் உறவில் எந்த ஒரு ஒழுக்க நெறியையும் அவை பின்பற்றுவதில்லை. ஆனால்., மனித உயிரி., தாய் (தகப்பன்)- சகோதரி(சகோதரன்) - மகள்(மகன்) - என்று தரம் பிரித்து மனைவியோடு (கணவனோடு) மட்டுமே கூடும் அசாத்திய ஒழுக்க மாண்பை எங்கிருந்து பெற்றது... எந்த பரிணாம உயிரியின் இயல்புகள் மனிதனுக்கு அத்தகைய சிறப்பை வழங்கியது? 
   
அத்தோடு மட்டுமில்லாமல்., மனைவி/ கணவன் தவிர்த்து மாற்றாருடன் கூடுவது தவறு என்ற உயிரிய பண்பையும் எந்த பரிணாம உயிரின வளர்ச்சியில் கற்றுக்கொண்டான்...?

 ஆக மனிதன் பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டு ஒழுக்க நெறி முறைகளின் படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான தனியானதொரு படைப்பு என்பது தெளிவு! இதை தாண்டியும் உயிரின வளர்ச்சியின் விளைவாக குரங்கினம் >>>> நியண்டர்தால் >>> மனிதன் உருவானதாக சொன்னால் எதிர்ப்பார்ப்போம்.. மேற்குறிப்பிடப்பட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாமம்...?

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (திருக்குர்-ஆன் 04:170)
                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Sunday, December 26, 2010

படுகேவலமான அயோத்தி தீர்ப்பு. ‍ பேரா.அருணன். VIDEO.

0 கருத்துக்கள்
அயோத்தி பாப்ரிம‌சூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது.

அயோத்தியில் ராமர் கோயிலே இடிக்கப்படவில்லை. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் என்று ஒன்று இருந்ததே இல்லை.

இல்லாத கோயிலை சொல்லி இருந்த மசூதியை இடித்தார்கள். ராமர் பெயரை சொல்லி நாட்டிலே கலவரத்தை தூண்டுவதே குறிக்கோள்.

Tuesday, December 14, 2010

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்...

5 கருத்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

      எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் நம்பிக்கை என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று பிரார்த்தனை செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.     

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு. 

இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர்.            



1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம்.


"அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.

மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன். இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை.

குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.

இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது.

பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்....

"இறைவா நீ இருந்தால்..."

அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன்.

என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.

நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது.

பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர்.

என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றவும் முடியவில்லை.

பிறகு ஒருநாள் குரானும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் புத்தகமான "Muhammed: His life based on the Earliest Sources" னும் அறிமுகமாயின.

நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களை பற்றி குறிப்பிடுவதை படித்திருக்கிறேன். யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்?      

பைபிளில் ஏசு(அலை) அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றி குறிபிட்டிருக்கிறார்கள்.

ஆக, குரானைப் படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make sense). நபிமார்கள், ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்தது.

இஸ்லாத்தை ஏற்று கொண்டேன்.

நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாம் என்னும் உண்மையை அறியாமல் இருக்கின்றனர்.

நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம்.

"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குரான் 42:13  
"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46     

அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான். அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட கோருவது.

அவன் யாருக்கு நல்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழிகெட செய்ய முடியாது..."    


அல்ஹம்துலில்லாஹ்.

இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின் கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற நிலையை தாண்டி தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள் அதிகமாகவே இருக்கின்றன.


"நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார்.

நீதிபதி "உங்களுக்குள் என்ன பிரச்சனை" என்று கேட்ட போதும், "விவாகரத்து வேண்டுமென்று" மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டுமென்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும்.

என் குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.

என் பெற்றோர்களோ என்னை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். ஒருமுறை அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்ப கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது.

என் மனைவி மீதோ அல்லது என் பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணி பார்க்கவேண்டும். அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.

என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான்.



தற்போது நிலைமை பெரிதும் மாறி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான்.

அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவன். எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.

தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளனர். என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது.

இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்ட காலங்களுக்கு பின்னர் சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான். நான் இழந்ததை விட பெற்றவை அதிகம்.

என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள். அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள்.

என் அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட மேலானதாக இருக்கும்....."


சுபானல்லாஹ்....ஈமானை இறுக பற்றி பிடித்திருக்கும் இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம்  நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது.
  
டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. இவருடைய கட்டுரையான "The Big Questions", ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது.

பல நூல்களை எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார். 

இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக...ஆமின்...

---------
இஸ்லாத்தை தழுவியோர் குறித்த எதிர்க்குரலின் அனைத்து கட்டுரைகளையும் காண <<இங்கே>> சுட்டவும்.
---------

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Dr. Laurence Brown's official website: 
1. http://www.leveltruth.org

Canadian Dawah Association's official website: 
1. cdadawah.com

My Sincere thanks to: 
1. Br.eddie

References: 
1. Dr.Brown's Conversion story - leveltruth.org
2. Purpose of Life - Dr.Brown's interview with Br.eddie, thedeenshow.com
3. Dr.Brown's jihad - Dr.Brown's interview with Br.eddie, thedeenshow.com
4. Dr.Laurence Brown - Wikipedia.

  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Sunday, December 5, 2010

விதி! மாற்றமா -ஏமாற்றமா?

3 கருத்துக்கள்
   ஓரிறையின் நற்பெயரால்
           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை  கடவுள் நமக்கு வழங்க வேண்டும் .. நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,

இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"
  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.

                                                                                    
     பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." 3:29

     எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?
   அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார்,  அஃதில்லாமல் தமது வாழ்வாதார  தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?
   இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான். அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ...? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?
ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.9:115

    முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்., ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கமுமே எல்லாம் இறை நாட்டமே எனும் விதி அங்கு அவசியமாகிறது.,
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. -57:23
    ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே  தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை
    ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. 53:39
                        
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Wednesday, November 24, 2010

இறைவனின் எதிரியா -இப்லிஸ்?

0 கருத்துக்கள்
                                             ஓரிறையின் நற்பெயரால்
     குர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய  வாதம் தான் இப்லிஸ் இறைவனுக்கு எதிரி  ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா...? பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார்  என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்

  உண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா? அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்
 இறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்
1. மலக்குகள் (வானவர்கள்)
2. ஜின்கள்                
3. மனிதர்கள்       
       
இப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது
  சைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.
     இப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)
  இறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன?
 இறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது
  (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."
"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான். (15:28 லிருந்து 35 வரை)
      இப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க குர்-ஆன் 07:12)
 இவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்
(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை?
(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ்  அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்?
  * மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள்.அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.
அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)
  அஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான். அவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.
"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)
   * அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும்  பொருட்டு  சில சோதனைகளை ஜின் -மனித  மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா? அல்லது தவறானதா? என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக., உதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான். எனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்
அவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு? இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.
     "என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான். (15:36)
"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;" (15:37)  
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)
     இங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை தருகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு!.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168) 
 மேலும் பார்க்க:2:208, 5:91, 6:142, 7:27, 7:200, 16:36, 19:44)
    இவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே  கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்பொல. ஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக,இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல... சுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை
                              அல்லாஹ் மிக்க அறிந்தவன் 

Monday, November 22, 2010

பிரார்த்தனை

0 கருத்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதா
க!

நாம் வாழும் இவ்வுலகில் போட்டி, பொறாமை, நல்லென்னம் இல்லாமை போன்ற காரணங்களால் மனிதன் பல வழிகளில் சபிப்பிற்கு உள்ளாகி வாழ்க்கையை துறந்து விடுகிறான். பிறகு அவனால் எந்த ஒரு செயலையும் சி
றப்பாக செய்யமுடியவில்லை. வாழ்க்கை என்னவோ இருண்டு விட்டதாக என்னி முடங்கி விடுகிறான். ஆனால் இதிலிருந்து மீள வழித் தெரியாமல் இருக்கிறான். பிரார்த்தனை (துஆ) செய்தால் நம் வாழ்க்கையை திரும்ப பெற்றுவிடலாம் எனப்தை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து
க்கொள்ளலாம்.

எல்லாம் வல்ல இறைவன் யாருடைய பி
ரார்த்தனையையும் நிராகரிப்பது இல்லை. யார் இறைவனிடத்தில் இரு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை செய்கிறார்களோ! அவர்களை வெரும் கைகளாக திருப்பி அனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என் அருள்மறையில் கூறுகிறான். இறைவன் படைத்த எந்த ஒரு ஆன்மாவும் இறைவனிடத்தில் வேண்டினால் அதன் வேண்டுதலுக்கு ஏற்றார்ப்போல் நற்கூலியை தருவதாக இறைவன் கூறுகிறான். மேலும் எந்த ஒரு வேண்டுதலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும். இறைவனிடத்தில் எந்த முறையில் வேண்டுதல் வேண்டும் என்ற சில வரைமுறைகள் இருக்கின்றன, அதன் அடிப்படையில் வேண்டினால் அவர்களுடைய துஆவை இறைவன் ஒரு போதும் மறுப்பதில்லை. மேலும் அடியார் அழைக்கும் அழைப்புக்கு வெகு விரைவில் பதில் தர ஏதுவாக நம் பிடரி நரம்பைவிட மிக அருகாமையில் இருப்பதாகக் கூறுகிறான். அல்குர்ஆனில் இறைவன் பிரார்த்தனையைப்பற்றி 44 அத்தியாயத்தில் 49 தடவை விளக்கியுள்ளான்.

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (50:16)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (2:186)

நாம் கேட்கும் பிரார்த்தனை இறைவனிடத்தில் கண்டிப்பாக ஏற்கப்படும். நாம் ஒன்றுக்காக பிரார்த்தனை செய்துக்கொண்டு இருப்போம் ஆனால் அது நம்க்கு நிறைவேறி இருக்காது நாம் நம்முடைய துஆவை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்று தவறுதலாக புரிந்துக் கொண்டிருப்போம் ஆனால் இறைவனோ! நம்முடைய பிராத்தனைக்கு பகரமாக, நம்க்கு வரக்கூடிய துன்பதிலிருந்து நம்மை காப்பாற்றிருப்பான். ஆக மொத்தத்தில் நம்முடையப் பிரார்த்தனை ஏதோ ஒரு வகையில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது காலத்தால் அறிந்த உண்மை.

மேலும் வல்ல ரஹ்மான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது தாங்கக்கூடிய அளவுக்குதான் கஷ்டங்களைக்கொடுகிறான், மனிதன் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இறைவனை துதிக்கவேண்டும், இறைவனிடத்தில் மன்றாடி துஆ செய்யவேண்டும் என்பதற்காகவே படைத்த இறைவனே, எவ்வாறு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை (துஆ) செய்யவேண்டும் என்று அருள்மறையாம் குர்ஆனிலேயே அழகாக சொல்லித் தருகிறான்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286). மேலும்,

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (3:8)

இதன் மூலம் இறைவன் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அதிகப்படியான துன்பங்களையோ, கஷ்டங்களையோ கொடுப்பது இல்லை என்பது நன்றாக விளங்குகிறது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது 'அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்' (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ற கூறிவந்தோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாம்' (சாந்தியளிப்பவன்) ஆக இருக்கிறான். எனவே, உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில் இருக்கும்போது 'அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன' (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் என அமையும். 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்' என்றார்கள். (புகாரி: 79:6230) இதன் மூலம் யார்வேண்டுமானாலும் யாருக்காகவும் பிரார்த்தனை (துஆ) செய்யலாம்.

பிரார்ததனை இறைவனிடத்தில்:

எந்த ஒரு ஆத்மாவும் இறைவனிடத்தில் மட்டும் தான் தன்னுடைய பிரார்த்தனையை வைக்கவேண்டும், உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவியும் தேடுகிறோம் என்ற குர்ஆன் வசனத்திற்கு ஒப்ப ஒவ்வொரு ஆத்மாவும் செயல்படவேண்டும். நம்மைப்படைத்த இறைவனிடத்தில் எதற்காக வேண்டுமானலும் பிரார்த்தனை செய்யலாம். உதாரணத்திற்கு இறைவனிடத்தில் இப்லீஸ் தன்னை உலகம் அழியும் நாள் வரை விட்டு வைக்குமாறு வேண்டினான், அதைக்கூட இறைவன் மறுக்காமல் அவனுடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டான். அப்படிப்பட்ட இறைவன் நம் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளமாட்டானா! என்ன?

மன ஓர்மையுடன் பிரார்த்தனை:

நாம் செய்யக்கூடிய பிரார்த்தனை எளிதில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும் என்றால் அவனிடத்தில் மன ஓர்மையுடனும், தூய்மையுடனும், அழகியமுறையிலும் அவனிடத்தில் கேட்க வேண்டும். அப்படிக் கேட்கக் கூடிய துஆ இறைவனிடத்தில் உடனே அங்கிகரிக்கப்பட்டு எதற்காக அவன் பிரார்த்தனை செய்தானோ அது நிறைவேற்றப்படுகின்றது. மேலும் இறைவனிடத்தில் எந்த நேரத்திலும் பிரார்த்தனையை மேற்கொள்ளலாம் இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (13:14)

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது. (18:28)

ஆகவே இறைவனிடத்தில் நாம் எவ்வாறு பிரார்த்தனை (துஆ) செய்ய வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும். மேலும் யாருடைய பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. இறுதியாக ஒரு குர்ஆன் ஆயத்தை எடுத்துக்கூறி என் சிறிய படைப்பை முடிக்கிறேன். அல்லாஹ் எல்லாருடைய பிரார்த்தனையையும் ஏற்று (கபுல்) கொள்வானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............!

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். (66:8)

Sunday, November 21, 2010

மனித வாழ்வில் மனசாட்சி!

0 கருத்துக்கள்
                                                       ஓரிறையின் நற்பெயரால்
"மனசாட்சிக்கு பயந்து நடந்துக்கோ...."
"மனசாட்சி இருந்தா இப்படி செய்வியா..?"
      இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதை காண்கிறோம். ஆக இவ்வாக்கியங்கள் மனசாட்சிக்கு பயந்தால் மட்டுமே போதுமானது எல்லா செயல்களிலும் நீதமாக இருக்க முடியும் என்பது போல் தோன்றுகிறது... உண்மையாக மனசாட்சி மட்டும் மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீதி செலுத்த போதுமானதா - கண்டிப்பாக முடியாது ...ஏன்?
 ஒரு செயலை செய்வதால் 
ஏற்படும் விளைவு நன்மையா? தீமையா என பகுத்து அஃது தீமையே தவிர்த்து நன்மையே செய்ய தீர்மானிப்பதே மனசாட்சியின் பிரதான வேலை.பொதுவாக மனசாட்சி என்பது பெரும்பாலும் நன்மை செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இரண்டு அடிப்படை காரணங்கள் மனசாட்சியின் செயல் போக்கை மாற்றுகிறது 

(1) நிலையற்ற மனித எண்ணங்கள் 
(2) மனிதர்கள் வாழும் சூழல்,சமுகம் இவ்விரு நிலைகளும் மனசாட்சியின் செயல் திறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.
    மனசாட்சியின் அடிப்படை செயல் நிர்வாகத்திற்கு மிக முக்கிய காரணியாக அமைவது மனித எண்ணங்கள் ஆகும்.சாதரணமாக அனைத்து நிலைகளிலும் நன்மை தீமைகளே தரம் பிரித்து செயல்படுத்தினாலும் சாதாரண நிலை கடந்த அதாவது ஆசை, கோபம், விரக்தி, வேகம் மற்றும் தேவை போன்றவை மிகைக்கும் போது மனசாட்சியால் நன்மையை மட்டும் மேற்கொள்ள முடியாது. மாறாக அந்நேரங்களில் ஏற்படும் மனித எண்ணங்களுக்கே மனசாட்சி முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக மனிதனுக்கு கோபம் வரும் வரை இயல்பாக பேசக்கூடியவன் அஃது கோபம் மிகுதியால் தவறான வார்த்தை பிரயோகமும் ஏன் கொலை செய்யக்கூடிய அளவிற்கு கூட அவனை தள்ளும் நிலைக்கு காண்கிறோம். 
    அதுப்போலவே., அடுத்தவர் செய்யும் ஒரு தவறை கண்டிக்கும் மனசாட்சி அதே தவறை தமது மனம் உட்பட்டு செய்யும் போதும் நியாயம் கற்பிக்கவே முயலும் மது அருந்துவது இதற்கு நல்ல உதாரணம் பொதுவாக மது அருந்துவதை வன்மையாக கண்டித்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிருத்தி தாம் மது அருந்த செய்வதை மனசாட்சி தவறென்று சொல்லாது. மேலும் பாதிப்பும் -தீங்கும் மனசாட்சி செயல் போக்கை முற்றிலும் மாற்றக்கூடியவை., நாம் பிறருக்கு தீங்கோ பாதிப்போ ஏற்படுத்தாமல் இருந்தும் நமக்கு பிறரால் மிக பெரிய பாதிப்போ தீங்கோ ஏற்படுத்தப்பட்டால் பழிக்குப்பழி வாங்குவதை தான் முதலில் நமது மனசாட்சி ஊக்குவிக்கும். ஆக பிறர் நமக்கு தந்தது தீது என்று உணர்ந்தும் அதே தீமையே தான் நாம் அவருக்கு வழங்க வேண்டும் என மனசாட்சி வலியுறுத்தும் போது அதன் நீதத்தன்மை பூஜ்யமாக்கப்படுகிறது. மனதளவில் பாதிக்கப்பட்டவர், சிறுவர், வயோதிகர் போன்ற சிலரின் மனங்களே பழிவாங்கும் எண்ணம் தவிர்த்து மாற்று தீர்வை எதிர்பார்க்கிறது.           மேலும் ஆசையும் மனசாட்சியை நன்மை செய்வதை விட்டு திசை திருப்பவே செய்கிறது. விபச்சாரம் தவறு என்பது இயல்பாக நம் மனசாட்சி ஏற்றுக்கொண்டு அஃது விபச்சாரத்தின் பக்கம் நம் மனதை நாட விடுவதில்லை. ஆனால் ஆணோ பெண்ணோ தம் மனம் உடன்பட்டு விபச்சாரம் புரிவதாக இருந்தால் அதற்கு மனசாட்சி ஆசையின் மிகுதியால் அதை குற்றம் காண்பதில்லை. மேலும் இதை சமுக குற்றமாக பார்க்காமல் இருவரும் உடன்பட்டு தானே செய்கிறோம் என ஆறுதல் கூறி மேலும் இத்தகாத செயலை மனசாட்சி நியாயப்படுத்தவே செய்கிறது.
 ஆக சிந்தனை மாறுபாடும் சுயநலமிக்க எண்ண வெளிபாடும் மனசாட்சி அதன் உண்மை நிலைக்கு புறம்பாக அல்லது எதிராக முடிவெடுப்பதை தவறாக காணாது.
   கொலை, கொள்ளை மற்றும் வன்முறை போன்றவைகள் யாவும் பொதுவாக எல்லோராலும் சமுக சீர்கேடுகளாக கருதப்பட்டாலும் அச்செயல்கள் தவறென்று மிக நன்றாக தெரிந்தும் அத்தகைய தீய செயல்களை செய்யக்கூடியவர்கள்., அவர்களின் மனசாட்சிக்கு உடன்பட்டு தான் செய்கிறார்கள் என்பது தெளிவு. அஃது அவர்களின் மனநிலையும் இச்செயல்பாடுகளுக்கு அவர்கள் இயங்கும் சமுக பிண்ணனியே குற்றம்சாற்றி தமது தவறான போக்கிற்கு நியாயத்தை கற்பிக்கிறது. ஆக அங்கு மனசாட்சியின் நடு நிலை செயல்பாடு பொய்தே போய்விடுகிறது. 
  சுய தேவையின் அடிப்படையில் மாற்றமடையும் எண்ணங்களும் சமுக சூழ்நிலைகளின் குறுக்கீடும் மனசாட்சியின் செயல் திறத்தை மாற்றவல்ல ஆயுதமாகும். எனவே  மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது. ஆக மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு 100 சதவீகித உண்மையான வாழ்வை எவராலும் மேற்கொள்ள முடியாது.
   அப்படியானால் நமது எண்ணத்திற்கு -தேவைக்கு -நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றமடையாத, எல்லா சமுக சூழலிலும் ஒரே நிலையில் செயல்பட, மனிதர்களுக்கு மனிதர் மாறுபடாத நீதமாக இருக்க மனசாட்சியை விட உயரிய சக்தி இருக்கிறதா....? உங்களுக்குள்ளேயே வினா எழுப்புங்கள் விடை தெரிந்தால் அதுவே நேர்வழிக்கு அழைத்து செல்லும் பாதையாகும்.
      உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா ?   (51:21)

                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Monday, November 15, 2010

குர்ஆன் இறைவேதமா?

1 கருத்துக்கள்
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)



உலகில் பல மதங்களும், பலவகையான வேதங்களும் இருக்கின்றன, ஆனால் எந்த ஒரு வேதமும் காலப் போக்கில் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. ஆனால் அருள்மறையாம் திருகுர்ஆன் இறைவனால் இறக்கிய நாளில் இருந்து இன்று வரை துளி அளவு கூட மாற்றமில்லாமல், எப்படி அது அருளப்பெற்றதோ! அப்படியே இன்று வரை மட்டுமல்லாது இறுதி நாள் (கியாமத் நாள்) வரை அவை எந்த ஒரு மாறுதலுக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகமில்லை. ஏனென்றால் குர்ஆன் இறைவேதம் என்ற சிறப்பை பெற்றிருப்பதனால்.

குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு இறைவனே பல இடங்களில் தெளிவாக விளக்கி கூறுகிறான். குர்ஆனில் 38 அத்தியாயத்தில் 41 தடவை குர்ஆனைப் பற்றி தெளிவாக எடுத்து கூறுகிறான் இறைவன்.

மக்கள் அறிவு எழுச்சி பெறாத காலத்திலேயே பல அறிய தகவல்களை எளிய முறையிலும், புரியும் வகையிலும் 1400 வருடங்களுக்கு முன்பாகவே எடுத்துரைத்திருகின்றன என்றால், குர்ஆன் இறைவேதம் தான் என்று சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஆராய்ந்து பார்த்தாலே போதுமானது அதன் உன்மை நிலை புரியும். முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நபர்கள் குர்ஆனின் உன்மை நிலையை அறிவதற்காகவே. திருமறையாம் அல்குர்ஆன் பல மொழிகளில் வெளிவந்துள்ளது அனைத்து சகோதர மக்களும், அவரவர்களுக்கு ஏற்ற மொழியில் படித்து புரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒரு வேதமும் அனைத்து மொழிகளிலும் இதுவரை வெளிவந்ததே இல்லை, ஆனால் குர்ஆன் அந்த சிறப்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

குர்ஆன் இறைவேதம் தான் என்பதை பல வகைகளில் தெளிவாக்களாம். அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகள் அன்றி வேறில்லை. எந்த ஒரு மனிதனாலும் அதை இவ்வளவு தெளிவாகவும், அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற வகையிலும் நயமாக யாருடைய மனதையும் புன்படுத்தாமல் தொகுக்க முடியாது, அதை தொகுக்க உலகைப்படைத்த இறைவனால் மட்டுமே முடியும் என்பதில் ஐயமில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் 23 ஆண்டுகாலமாக குர்ஆன் சிறிது சிறிதாக இறைவனால் அவர்களுக்கு அருளப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அதுமட்டுமல்லாது இறைவன் சில இடங்களில் நபியையே எச்சரிக்கை செய்திருக்கிறான். உதாரணத்திற்கு நபியே குர்ஆனை இயற்றிருந்தால் இது மாதிரியான எச்சரிக்கை அவசியமில்லாத ஒன்றாகிவிடுமே! பலரின் உள்ளங்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் குர்ஆனை இயற்றியுள்ளார்கள் என்ற என்னமிருந்தால் அதை அடியோடு அழித்துவிட கீழே உள்ள குர்ஆன் வசனம் ஏதுவாக அமையும்.

இறைவனே தனது அருள்மறையில் பின்வருமாறு கூறுகிறான்.


இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. (10:37)


(நபியே!) "சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?" எனக் கேளும்; "அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) "இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே" என்று கூறிவிடும். (6:19)

குர்ஆனில் எந்த ஒரு இடத்திலேயும் முன்னுக்கு முரனாக திரித்து கூறவில்லை, அது எப்பொழுது அருளப்பெற்றதோ! அன்றுமுதல் இன்றுவரை மாறுதலுக்கு உட்படாமல் அப்படியே நிலைத்திருப்பதை வைத்தே குர்ஆன் இறைவேதம் தான் என்பது புலனாகிறது. குர்ஆன் எந்த ஒரு முரன்பாடுக்கும் உட்படவில்லை என்பதை இறைவனே திருமறையில் விளக்கி கூறி இருக்கிறான்.


அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)

நாம் எதை முன்னிருத்தி குர்ஆனில் தேடினாலும் அதற்கு ஏற்ற பதிலை நமக்கு தரக்கூடிய ஒரு பொக்கிஷமாக இறைமறை விளங்குகிறது. எந்த ஒரு காலத்திற்கும் ஏற்ற வகையில் இதில் புதைந்திருக்கும் தகவல்கள் ஏராளம், அதை அனுபவிக்கும் மனமிருந்தால் குர்ஆன் தகவல்களை வெளிபடுத்தும் தாராளம்.

குர்ஆன் எல்லாவற்றிலோடும் ஒத்து போகக்கூடிய ஒன்றாகும். 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் பல அறிவியல் உன்மைகளை இவ்வுலகிற்கு இலை மறைக்காய் போல எடுத்து கூறியிருக்கின்றது. அப்பொழுதே அது கூறியதை, விஞ்ஞானிகள் இப்பொழுதுதான் கண்டுபிடித்துவிட்டு என்னவோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி மார்தட்டிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ...........

சமீப காலத்தில் விஞ்ஞானிகள் இரு கடல்களுக்கும் மத்தியில் தடுப்பு சுவர் இருப்பதாகவும், ஒரு கடல் நீர் மற்ற நீருடன் கலக்கவில்லை என்றும், ஒரு கடலின் நீர் இனிப்பாகவும், மற்றென்றின் நீன் உப்பாகவும் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் இறைவனோ அருள் மறையாம் திருகுர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன்னரே இச்செய்தியை விளக்கியுள்ளான்.

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)

இது போல பல அறிய கருத்துக்களை குர்ஆன் தன்னுள் தாங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாது உலகம் அழியும் வரை நடக்கும் பல அறிய செய்திகளை முன்கூட்டியே முன்னறிவிப்பாக குர்ஆன் கூறியிருக்கிறது. இறைவன் அருளால் நம் உயிருக்கு அவகாசம் இருந்தால் அப்படிப்பட்ட அரிய செயல்களை கான நம்மால் முடியும்.

எவர் ஒருவர் (முஸ்லீமாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் சரி) முழு மனதுடனும், ஓர்மையுடனும் குர்ஆனை அனுகினால் அவர்களுக்கு குர்ஆன் நல்வழியைக்காட்டி சிறப்பான வழியில் வாழ்வை செலுத்த வழிவகை செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. கீழே உள்ள இறைவசனம் இவற்றை தெளிவுப்படுத்துகிறது.

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (2:2)

posted by haja

Saturday, November 13, 2010

தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே.

3 கருத்துக்கள்
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும்,மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219


நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும்,அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? அல்குர்ஆன் 5:90
------------------------------------------


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் "இரகசியமாக என்ன சொன்னீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "அதை விற்று விடச் சொன்னேன்'' என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்'' என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.
அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (3220)

நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 4014
-----------------------------------------------------------
நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள் மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல நோய்''என்றார்கள். அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) நூல்: முஸ்லிம் (4015)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: (சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்) பாத்திரங்கள்,எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை. எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: முஸ்லிம் (4067)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதுக் குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள். அறிவிப்பவர்: முஆவியா (ரலி) நூல்: அபூதாவூத் (3886)

நுஐமான் என்பவர் மது குடித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரை கைகளாலும் பேரீச்ச மர மட்டையாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
அறிவிப்பவர்: உக்பா பின் அல்ஹாரிஸ்(ரலி) நூல்: அஹ்மத் (18610)
---------------------------------------------------------------


தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.

தமிழகத்தில் நீண்டகாலமாக எழுப்பப்படும் கோஷம் "மது விலக்கு'. இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் "மது விருந்து' தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.புத்தாண்டு மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் மது விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று.முன்பெல்லாம், திரைப்படங்களில் கதாநாயகன் சோகமாக இருக்கும்போது மது அருந்துவதாகக் காட்சிகள் வரும். அதற்கே, ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்த காலம் உண்டு.ஆனால், இப்போது, குடும்பத்தோடு பார்க்கும் டி.வி. சீரியல்களிலேயே மது அருந்துவதாக வரும் காட்சிகள் சர்வசாதாரணமாகி விட்டன.தீய சேர்க்கையால் வளர் இளம் பருவத்தினர் 13, 14 வயதிலேயே மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.விருந்தாளியாக வீட்டுக்குள் நுழையும் மது, நாளடைவில் மோசமான எஜமானனாகி, குடும்பத்தையே நாசமாக்கி விடுவதை பல வீடுகளில் காணமுடிகிறது.கிருமிகளைவிட வேகமாக, தமிழகத்தில் போதைக் கலாசாரம் பரவி வருகிறது.


"எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்..!' என்ற மனோபாவத்தில், வருமானம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு, காணும் இடமெல்லாம் மதுக் கடைகளைத் திறந்துவிட்டு போதைப் பிரியர்களை அரசு குஷிப்படுத்தி வருகிறது. இரவானாலே, இவர்களின் தள்ளாட்டத்தால் பெண்களும், அப்பாவிகளும் வீதிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.

1983-84-ல் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் | 139 கோடி. இப்போதைய நிலவரப்படி 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த வருட தீபாவளி பண்டிகையின் போது 150 கோடி என்ற இலக்கைத்தாண்டி 300 கோடிக்கு விற்கப் பட்டதாக சொல்வது மகிழ்ச்சி அளிப்பதைவிட பல குடும்பங்கள் அதனால் பாதிக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த நிதி, அரசின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டாலும், இந்த அசுர வளர்ச்சியை தமிழனின் சாதனை என்பதா..? வேதனை என்பதா.?பட்டி தொட்டியெங்கும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேலான மதுக்கடைகள் திறக்கப்பட்டு ஏழை பாட்டாளிகள் குடித்தே அழிந்து கொண்டிருக்கின்றனர்.

குடிப்பழக்கம் ஒரு நோய்' என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மனிதனை மெல்ல, மெல்லக் கொல்லும் ஆட்கொல்லி விஷம்தான் "மது' என்பது நிரூபணமாகி விட்டது.பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..!' என எத்தனையோ வீடுகளில் புலம்பல் சத்தங்கள் கேட்கின்றன.ஏழைகள்.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தின் பெரும்பகுதி மதுக்கடைகளுக்கே செல்வதால், அபலைப் பெண்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவைத் தரமுடியாமல் தவிக்கின்றனர்...!கணவன்மார்களின் போதைப் பழக்கத்தால் அவர்களது வளர்ச்சி முடங்கிப் போய், கடைசிவரை ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமலேயே போய்விடுகிறது. அந்த அளவுக்கு "மது' மனிதனின் பகுத்தறிவை இழக்கச் செய்து தரித்திரத்தில் ஆழ்த்திவிடுவதை, சரித்திரத்தில் இடம்பெறத் துடிக்கும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்..!ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்',"மது வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு' போன்ற சம்பிரதாயமான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்தால் மது அருந்துவோர் ஒருபோதும் திருத்தப் போவதில்லை.குடித்துக் குடித்தே உடல்நலம் குன்றி, அவர்கள் மயானத்துக்குப் போகும்வரை, அரசின் வருமானத்துக்கும் குறைவிருக்கப் போவதில்லை.சமூகத்துக்கு பெருந்தீங்கை விளைவிக்கும் மதுக்கடைகளை மூடுக' என உரத்துக் கோஷம் எழுப்பிய ஓர் அரசியல் கட்சியும் எதிர்காலக் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டது.பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளால் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் ஆட்சியாளர்கள் தரப்பில் கனத்த மெüனமே நீடிக்கிறது.படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்..!' என எப்போதோ வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து, மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடப்பட்டன. ஆனால், மற்றொருபுறம் ஏராளமான பார்கள் திறந்துவிடப்பட்டு நள்ளிரவைத் தாண்டியும் மது கிடைப்பதாகக் கூறுகின்றனர்.மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் சில ஆயிரம் ஊழியர்கள் எங்கே போவார்கள்..? என்ற ஆதங்கம் இருக்கட்டும்..!ஆனால், மதுக்கடைகளை மூடாவிட்டால் போதையில் சீரழியும் லட்சக்கணக்கான மனிதர்களால் நாதியின்றி வீதிக்கு வரப்போகும் தாய்மார்களும், குழந்தைகளும் எங்கே போவார்கள்..?இதை உணர்ந்தாவது, தமிழகத்தைப் போதை அரக்கனின் பிடியிலிருந்து விடுவிக்க வெகுசீக்கிரமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு விஷம் விற்பனை செய்தால் மக்கள் வாங்கி குடிப்பார்களா? மனிதர்களின் தனி மனித ஒழுக்கம் , சேமிப்பு, கலாசாரம், பண்பாடு மறந்தது .கற்பை பற்றி நடிகர், நடிகைகளிடம் உபதேசம் வாங்கி நிதிபதிகள் தீர்ப்பு சொல்கின்றனர். வேலை பார்ப்பவர்கள் ஆண்களும் பெண்களும் பார்ட்டி என்று சொல்லி குடிக்கின்றனர். மது குடிப்பதை ஆள்வோர் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. குடிப்பதை நிறுத்துவதும் கட்டு பாட்டுடன் ஒழுக்கமாக இருப்பதும் மக்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டால் எங்கும் மகிழ்ச்சியே..
-- sarfudeen