மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும்,மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும்,அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? அல்குர்ஆன் 5:90
------------------------------------------அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் "இரகசியமாக என்ன சொன்னீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "அதை விற்று விடச் சொன்னேன்'' என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்'' என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.
அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (3220)
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 4014
-----------------------------------------------------------
நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள் மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல நோய்''என்றார்கள். அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) நூல்: முஸ்லிம் (4015)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: (சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்) பாத்திரங்கள்,எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை. எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: முஸ்லிம் (4067)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதுக் குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள். அறிவிப்பவர்: முஆவியா (ரலி) நூல்: அபூதாவூத் (3886)
நுஐமான் என்பவர் மது குடித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரை கைகளாலும் பேரீச்ச மர மட்டையாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
அறிவிப்பவர்: உக்பா பின் அல்ஹாரிஸ்(ரலி) நூல்: அஹ்மத் (18610)
---------------------------------------------------------------தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.
தமிழகத்தில் நீண்டகாலமாக எழுப்பப்படும் கோஷம் "மது விலக்கு'. இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் "மது விருந்து' தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.புத்தாண்டு மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் மது விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று.முன்பெல்லாம், திரைப்படங்களில் கதாநாயகன் சோகமாக இருக்கும்போது மது அருந்துவதாகக் காட்சிகள் வரும். அதற்கே, ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்த காலம் உண்டு.ஆனால், இப்போது, குடும்பத்தோடு பார்க்கும் டி.வி. சீரியல்களிலேயே மது அருந்துவதாக வரும் காட்சிகள் சர்வசாதாரணமாகி விட்டன.தீய சேர்க்கையால் வளர் இளம் பருவத்தினர் 13, 14 வயதிலேயே மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.விருந்தாளியாக வீட்டுக்குள் நுழையும் மது, நாளடைவில் மோசமான எஜமானனாகி, குடும்பத்தையே நாசமாக்கி விடுவதை பல வீடுகளில் காணமுடிகிறது.கிருமிகளைவிட வேகமாக, தமிழகத்தில் போதைக் கலாசாரம் பரவி வருகிறது.
"எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்..!' என்ற மனோபாவத்தில், வருமானம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு, காணும் இடமெல்லாம் மதுக் கடைகளைத் திறந்துவிட்டு போதைப் பிரியர்களை அரசு குஷிப்படுத்தி வருகிறது. இரவானாலே, இவர்களின் தள்ளாட்டத்தால் பெண்களும், அப்பாவிகளும் வீதிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.
1983-84-ல் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் | 139 கோடி. இப்போதைய நிலவரப்படி 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த வருட தீபாவளி பண்டிகையின் போது 150 கோடி என்ற இலக்கைத்தாண்டி 300 கோடிக்கு விற்கப் பட்டதாக சொல்வது மகிழ்ச்சி அளிப்பதைவிட பல குடும்பங்கள் அதனால் பாதிக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த நிதி, அரசின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டாலும், இந்த அசுர வளர்ச்சியை தமிழனின் சாதனை என்பதா..? வேதனை என்பதா.?பட்டி தொட்டியெங்கும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேலான மதுக்கடைகள் திறக்கப்பட்டு ஏழை பாட்டாளிகள் குடித்தே அழிந்து கொண்டிருக்கின்றனர்.
குடிப்பழக்கம் ஒரு நோய்' என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மனிதனை மெல்ல, மெல்லக் கொல்லும் ஆட்கொல்லி விஷம்தான் "மது' என்பது நிரூபணமாகி விட்டது.பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..!' என எத்தனையோ வீடுகளில் புலம்பல் சத்தங்கள் கேட்கின்றன.ஏழைகள்.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தின் பெரும்பகுதி மதுக்கடைகளுக்கே செல்வதால், அபலைப் பெண்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவைத் தரமுடியாமல் தவிக்கின்றனர்...!கணவன்மார்களின் போதைப் பழக்கத்தால் அவர்களது வளர்ச்சி முடங்கிப் போய், கடைசிவரை ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமலேயே போய்விடுகிறது. அந்த அளவுக்கு "மது' மனிதனின் பகுத்தறிவை இழக்கச் செய்து தரித்திரத்தில் ஆழ்த்திவிடுவதை, சரித்திரத்தில் இடம்பெறத் துடிக்கும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்..!ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்',"மது வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு' போன்ற சம்பிரதாயமான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்தால் மது அருந்துவோர் ஒருபோதும் திருத்தப் போவதில்லை.குடித்துக் குடித்தே உடல்நலம் குன்றி, அவர்கள் மயானத்துக்குப் போகும்வரை, அரசின் வருமானத்துக்கும் குறைவிருக்கப் போவதில்லை.சமூகத்துக்கு பெருந்தீங்கை விளைவிக்கும் மதுக்கடைகளை மூடுக' என உரத்துக் கோஷம் எழுப்பிய ஓர் அரசியல் கட்சியும் எதிர்காலக் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டது.பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளால் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் ஆட்சியாளர்கள் தரப்பில் கனத்த மெüனமே நீடிக்கிறது.படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்..!' என எப்போதோ வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து, மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடப்பட்டன. ஆனால், மற்றொருபுறம் ஏராளமான பார்கள் திறந்துவிடப்பட்டு நள்ளிரவைத் தாண்டியும் மது கிடைப்பதாகக் கூறுகின்றனர்.மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் சில ஆயிரம் ஊழியர்கள் எங்கே போவார்கள்..? என்ற ஆதங்கம் இருக்கட்டும்..!ஆனால், மதுக்கடைகளை மூடாவிட்டால் போதையில் சீரழியும் லட்சக்கணக்கான மனிதர்களால் நாதியின்றி வீதிக்கு வரப்போகும் தாய்மார்களும், குழந்தைகளும் எங்கே போவார்கள்..?இதை உணர்ந்தாவது, தமிழகத்தைப் போதை அரக்கனின் பிடியிலிருந்து விடுவிக்க வெகுசீக்கிரமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு விஷம் விற்பனை செய்தால் மக்கள் வாங்கி குடிப்பார்களா? மனிதர்களின் தனி மனித ஒழுக்கம் , சேமிப்பு, கலாசாரம், பண்பாடு மறந்தது .கற்பை பற்றி நடிகர், நடிகைகளிடம் உபதேசம் வாங்கி நிதிபதிகள் தீர்ப்பு சொல்கின்றனர். வேலை பார்ப்பவர்கள் ஆண்களும் பெண்களும் பார்ட்டி என்று சொல்லி குடிக்கின்றனர். மது குடிப்பதை ஆள்வோர் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. குடிப்பதை நிறுத்துவதும் கட்டு பாட்டுடன் ஒழுக்கமாக இருப்பதும் மக்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டால் எங்கும் மகிழ்ச்சியே..
-- sarfudeen
Even a bad news also getting a good result & response in the similar field because of the issue me from my view don't issue this horror message see one who getting popular by the way of announcement even Political leader,cine hero, product & all the commercial so we don't to make the same for this split case.Use to avoid the stick poster like smoking is injuries to health, Smoking is a main cause of lung cancer like that.It make the slip thought to younger's mind and thy ready to see the result so want to know the symptoms so use to telecast the people who thy seriously what thy had and how thy now let it will be to recover our nation.soon it will come if ever think of their creature.
HAMEEM-SAUDI ARABIA
eid mubarak
assalamu alaikkum.
its good and useful article to clear our mind and unwanted bad things.