Tuesday, July 26, 2011

மருத்துவ துறை மாணவனுக்காக முடிந்தால் உதவலாமே!

0 கருத்துக்கள்
எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.

தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

நன்றி: இந்நேரம்.காம்

இது போன்று திறமையிருந்தும் படிக்க வசதியில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமை. வசதியுடையவர்கள் அந்த மாணவனுக்கு உதவலாம். என்னால் முடிந்த உதவியையும் தருகிறேன். பேங்க் கணக்கு விபரங்களை யாரும் அனுப்பி தந்தால் உதவியாக இருக்கும்.

Monday, July 25, 2011

அதிகளவில் இஸ்லாமை தழுவும் கறுப்பின மக்கள்...

11 கருத்துக்கள்அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தங்கள் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

         சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான "தி கார்டியன் (The Guardian)", இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது. "கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள்.


இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு...  

"கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு. 

என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.

என்னுடைய ஆய்வின் ஆரம்பத்திலேயே நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம், இஸ்லாத்தை தழுவிய இந்த மக்களில் பலர், தாங்கள் "கறுப்பின முஸ்லிம்கள் (Black Muslims)" என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. உலகளாவிய முஸ்லிம்களில் தாங்களும் ஒரு பகுதி, தங்கள் இனத்தை பார்த்து தங்களை அடையாளப்படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றனர்.அது போல, இந்த மக்களில் சிறு பகுதி, தங்களை கறுப்பின முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர்.

இஸ்லாம், கறுப்பின மக்களின் இயற்கை மார்க்கமென்றும், ஆன்மீகரீதியாகவும், உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க வந்த மார்க்கம் என்றும் கூறுகின்றனர்.

நான் நேர்க்காணல் செய்த மக்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒரு கருத்தென்றால், அது, இஸ்லாம் தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக உருவாக்கியது என்பதும், ஆன்மீகரீதியாக ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது என்பதும் தான். 

அதுமட்டுமல்லாமல், Materialism மற்றும் Moral relativism போன்றவற்றால் சீரழிந்த இந்த சமூகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய ஊக்கத்தையும் வலிமையையும் இஸ்லாம் தங்களுக்கு தந்துள்ளதாக கூறுகின்றனர்.நான் நேர்க்காணல் செய்த பெண்களோ, இஸ்லாம் தங்களுக்கு மிகுந்த கண்ணியத்தை அளித்துள்ளதாகவும், பெண்களை அழகு பொருட்களாக காணும் சமூகத்திலிருந்து தங்களை விடுவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் மூலம் நான் கண்டறிந்த மற்றொரு முக்கிய தகவல், இவர்களில் பலர், இஸ்லாத்தை தழுவதற்கு முன்பு கிருத்துவத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். சர்ச்சுக்கு செல்பவர்களாகவோ அல்லது சர்ச்சுடன் தொடர்புடையவர்களை உறவினர்களாகவோ கொண்டவர்கள்.  இது இஸ்லாத்தை ஏற்கும் வெள்ளையின மக்களுடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இஸ்லாத்தை தழுவும் பல வெள்ளையர்கள் அதற்கு முன் எந்த ஒரு மார்க்கத்தின் மீதும் பற்று இல்லாதவர்களாகத் தான் இருப்பர்.   

அதுபோல நான் அறிந்துக்கொண்ட ஒரு சுவாரசியமான விஷயம், இஸ்லாம் என்றால் என்னவென்று இவர்களை, குறிப்பாக ஆண்களை, பார்க்க வைத்ததில் மால்கம் எக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றார். நான் பேசிய பலருடைய மனதிலும் மால்கம் எக்ஸ் என்ற அந்த சகோதரர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். (மால்கம் எக்ஸ் குறித்த கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்)

அமெரிக்காவைப் போன்று பிரிட்டனிலும், குற்றவாளிகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதில் கறுப்பின முஸ்லிம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்படி திருத்தப்பட்ட பலர், தங்களை நல்வழிப்படுத்திய கொள்கையை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வதில் மும்முரமாக இருக்கின்றனர். இதில் அவர்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.  

இறுதியாக நான் சொல்ல விரும்புவது, வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு கிருத்துவத்தில் பதிலில்லாத போது, அதனை முன்வைத்தவர்களுக்கு சரியான மாற்றாக இருப்பது இஸ்லாம்.

சிலர், தங்கள் ஹீரோக்ககளை பார்த்து இஸ்லாம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டு இஸ்லாத்தை தழுவுகின்றனர். மற்றவர்களோ, தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தங்களை தேடி முடிவில் இஸ்லாத்தை வந்தடைகின்றனர்.

எது எப்படியோ, இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை"

சுப்ஹானல்லாஹ்....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

My Sincere Thanks To:
1. The Guardian Newspaper.

Original Article written by:
1. Br.Richard Reddie.

Extract of the article translated by:
1. Aashiq Ahamed A

Reference: 
1. Why are black people turning to Islam? - The Guardian, dated 5th October 2009.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Friday, July 22, 2011

பகுத்தறிவாளர்களின் கடவுள்..!

1 கருத்துக்கள்

                                           ஓரிறையின் நற்பெயரால்.,

                          தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாக பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. 

அத்தகைய நிகழ்வை பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்., "கடவுள்" - என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது.,ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்கு பலர் ஆளாகின்றனர். ஆக கடவுள் மறுப்புக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது.

ஆக இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்கு பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திக சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா... பார்ப்போம் நாத்திகம் -   பொதுவாக ஒருவரின் நாத்திக சிந்தனைக்கு அடிப்படைக்காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மை சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும், அனாச்சாரங்களும், அறிவிற்கு பொருந்தாத மூட பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூக புறக்கணிப்பும் தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கிய காரணியாகிறது.. 

இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களுக்கு தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள் எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்..! இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் .. கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்கு சான்று தரப்படுகிறது. மாறாக நேரடியாக கடவுள் இல்லையென மறுக்க தெளிவான காரணம் இல்லை.,    "பரிணாமம்" அறிவியல் ரீதியாக கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாக கொண்டாலும் அஃது அதுவும் பயனற்று தான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும் (?) கூட "ஏற்பட்ட உயிரின மாற்றத்தை பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடு தான் ஆய்வை தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர். 

ஆக அறிவியல் ரீதியான கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது., சுருங்கக்கூறினால் "எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஒரு உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்க தர்க்கரீதியான வழிகளை தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவு பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்... இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை., அதே நேரத்தில் பொதுவில் அறுதியிட்டு கூறும் தம் வாதத்தை மெய்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும்., இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும். இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வை பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் அல்லது மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப்பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.,

 என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு பேனாவை பற்றி அறிந்திருக்க வேண்டும் அஃது பேனாவை பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.அப்போது தான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என கூற இயலும்., என அவர் கூறினார்.,

  மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இருப்பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படிதான் மேற்கண்ட நாத்திக சிந்தனை கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தை கையாளுகிறது.

  ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..

என் கையில் ஒரு பேனாவை வைத்து கொண்டு. அதை பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை மறுப்பதாக ஒருவர் இருந்தால் மற்ற எல்லா பொருட்களின் வரைவிலக்கணம் குறித்து தெரிந்திருந்தாலும் அஃது இக்கேள்விக்கு பதில் அவரால் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம். 

ஆக இந்த உதாரணத்தை மேற்கோளாக கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும் போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்கு கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.

 மிக தெளிவாக - எளிதாக இஸ்லாம் 
  • (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.  (112:1)
  • அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.  (112:2)
  • அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.  (112:3)
  • அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:4)
        இப்படி குர்-ஆனில் கடவுளுக்கு வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும்  வாதமாகவும், அதே நேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்கு பொருந்தும் படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்த வித ஆட்சபனையுமில்லை., 

ஆக கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்த்தி இது உண்மையானது என குர்-ஆன் கூறும் போது அஃது மேற்கண்ட கோட்பாட்டை பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணம் நாத்திக சிந்தனையாளர்கள் தர வேண்டும். ஆனால் இன்று வரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திக சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும் கூட... ஏனெனில் கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கைச்சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க... இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணம் ஏற்படுத்தி தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவு கண் கொண்டு ஆராயும் நாத்திகம் கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது அஃது ஏன் கடவுளாக இருக்க முடியாது என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உண்டான நாள் முதலே இயற்றி இருக்கவேண்டுமல்லவா..? இதுவரைக்கும் அஃது வரைவிலக்கணம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! அஃது இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலி கடவுளர்களை தான் இவர்கள் இனங்காட்ட முடியும் அஃது அத்தகைய போலி கடவுளர்களை மறுப்பதற்கு பெயர் தான் நாத்திக சிந்தனையென்றால்... நாங்களும் அத்தகைய போலி கடவுளர்களை இல்லை என்று தான் சொல்வோம்.

பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களை சொல்ல வேண்டாம் வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று- அதுவும் மதங்கள் சமைத்த போலி கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப்படுத்தட்டும்.,. உங்களின் அறிவு சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திக சகோதரங்களே...

                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன் 

Tuesday, July 19, 2011

பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்

0 கருத்துக்கள்


shanmugam.jpgஇளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’  என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா 

Monday, July 18, 2011

விமானப் பயணத்தின் சில நினைவுகள்!

0 கருத்துக்கள்


விமானப் பயணத்தின் சில நினைவுகள்!

பயணங்களிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பயணம் விமானப் பயணமே! அதை விடக் காஸ்ட்லியாக சந்திர மண்டலத்துக்கு செல்ல இப்பொழுதே புக்கிங் நடந்து வருவதாகக் கேள்விப் பட்டேன். நான் பயணித்ததில் அதிகம் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில்தான். டிக்கெட் புல்லாகி விட்டால் அவ்வப்போது ஏர் இந்தியா, ஏர் லங்கா பிளைட்களை நோக்கி ஓடுவதும் உண்டு.

இதில் சவுதியாவில் பயணிக்கும் போது ஒரு நிம்மதி ஏற்படும். விமானம் கிளம்பும் போதே பயண பிரார்த்தனை ஒன்றை ஒவ்வொரு முறையும் ஓதச் செய்வார்கள். விமானப் பயணத்திலும் இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் சவுதியா நிர்வாகத்தினருக்கு ஒரு சல்யூட்.

நபிகள் நாயகம் அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை “அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர்” எனக் கூறுவார்கள். பின்னர் ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.

இதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் - 2392

சவுதியாவில் பிரயாணம் செய்யவே அதிகமான பயணிகள் விரும்புகின்றனர். நேரம் தவறாமை. வேலை நிறுத்த போராட்டம் இல்லாத ஒரு ஒழுங்கு. சிறந்த பணிவிடை. தூய்மை என்று பல காரணங்களால் சவுதியாவுக்கு என்றுமே கிராக்கிதான். 2009 வருடத்தை காட்டிலும் போன வருடம் பயணிகள் அதிகம் சவுதியாவை பயன்படுத்தியிருக்கிறார்கள். 14 சதவீதம் போன வருடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

8712668 பயணிகளை 68753 விமானங்களில் முந்திய வருடம் பயணிக்க வைத்தது சவுதியா. அதே போன வருடம் 9915578 பயணிகளை 73544 விமானங்களில் பயணிக்க வைத்து சாதனை புரிந்துள்ளது சவுதியா. பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்க விமானங்களின் எண்ணிக்கையோ 7 சதம்தான் அதிகரித்துள்ளது. லாபத்தில் கொழிக்கிறது சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ்.

இது இவ்வாறு இருக்க நமது நாட்டு ஏர்இந்தியாவின் நிலையையும் சற்று பார்ப்போம். அளவுக்கதிகமான சம்பளம், தேவையற்ற வேலை நிறுத்தம், வேலை செய்பவர்களிடம் அர்ப்பணிப்புத் தன்மை இல்லாதது என்று பல காரணங்களால் இன்று ஏர்இந்தியா மிகவும் அபாயகரமான சூழலுக்கு சென்று கொண்டிருக்கிறது. 'எனது தாய் நாட்டு விமானம்' என்று பெருமையோடு பயணம் செய்ய மனம் விரும்புகிறது. ஆனால் ஏர் இந்தியாவின் சேவைகளில் உள்ள குளறுபடிகளால் பலரும் சவுதியாவையும், ஏர்லங்காவையும்தான் நாடுகிறார்கள். தற்போதய ஏர் இந்தியாவின் நிலையை நேற்றய தினமலரின் செய்தியை பார்ப்போம்.
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு மற்றும் கடன் சுமையால் தத்தளிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, 2007ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில், 20 ஆயிரத்து 320 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதியிழப்பு மற்றும் கடன் சுமையால் திண்டாடிக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்குள் இந்நிறுவனம், 20 ஆயிரத்து 415 கோடி ரூபாய் கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை இந்நிறுவனம் சந்திக்க நேரிடும் என, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்க, பங்குகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி உதவ, மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக்குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
-தின மலர் 16-07-2011

அரபு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நமது நாட்டு மக்களே அதிகம் பணியில் உள்ளனர். தாய் நாட்டுக்கு வருடம் ஒரு முறையும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் போய் வரும் நம் நாட்டவர் அதிகம். நம் நாட்டவர்கள் மட்டுமே ஏர் இந்தியாவை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்நிறுவனத்தை லாப நோக்கில் செயல்பட வைத்து விடலாம். அல்லது நஷ்டத்தில் இயங்கும் இந்நிறுவனத்தை தனியாருக்கு கொடுத்து விடலாம். ஆறே மாதத்தில் தனியாரிடம் கொடுத்தால் லாபமுள்ள தொழிலாக இதனை மாற்றிக் காட்டுவர்.

ஏர்லைன்ஸில் பணிபுரியும் எனது நண்பர் பிரான்ஸிஸிடம் இது பற்றி பேசினேன். 'தேவையற்ற ஆட்கள். அளவுக்கதிமான சம்பளம், நிர்வாகக் குறைபாடு இவைகளே ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்க காரணம்' என்கிறார். அரசு பேசாமல் தனியாரிடம் ஏர் இந்தியாவை விற்று விடுவதே நலம் என்கிறார்.

சவுதியா அதிகம் லாபம் சம்பாதிக்கும் வழித்தடங்களில் ஒன்று ரியாத்-தம்மாம்-சென்னை. எந்த நேரமும் இந்த வழித்தடத்தில் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே இருக்கும். எல்லாமே அட்வான்ஸ் புக்கிங். கர்நாடக, கேரள மாநிலத்தவர் அதிகம் பேர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். நமது ஏர் இந்தியா ஏன் இந்த வழித் தடங்களில் விமான சேவைகளை நடத்துவதில்லை? சவுதியாவை பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ள வேண்டாமா?

மன்மோகன் சிங்குக்கு சோனியாவை தாஜா பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. நரேந்திர மோடிக்கு முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுத்து ஒரு கலவரத்தை உண்டு பண்ணி இந்து ஓட்டுக்களை தக்க வைப்பது என்ற குறி. ராமருக்கு கோவில் அதுவும் ஒரு பள்ளி இருந்த இடத்தை அபகரித்து கட்டிவிட்டால் இந்தியா முன்னேறி விடும் என்பது அத்வானியின் எண்ணவோட்டம். நிலைமை இப்படி இருக்க... இந்த அரசியல் வாதிகளுக்கு நாட்டைப் பற்றிய கவலை வருமா என்ன?

Thursday, July 14, 2011

மும்பையை உலுக்கிய மற்றொரு குண்டு வெடிப்பு!

3 கருத்துக்கள்மூன்று இடங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு நிகழ்நததில் 20 க்கு மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த மனித குல எதிரிகளை இனம் கண்டு தூக்கில் ஏற்ற வேண்டும். எனது நாட்டு மக்களின் மீது அதுவும் அப்பாவி மக்கள் மீது கோழைத் தனமாக தாக்குதல் நடத்தியிருக்கும் பேடிகளை மனித ஜெனமம் என்றே கூற இயலாது.

வழக்கம் போல் குறிப்பிட்ட மதத்தையும், குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரையும் முதலில் தெரிவித்து உண்மையான குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அது இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ எவனாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்களை வருங்காலத்தில் தடுக்க முடியும்.

விலை மதிக்க முடியாத தங்களின் உயிர்களை இழந்த அந்த நல்ல உள்ளங்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவனாவான்...அல்குர் ஆன்:5:32

Describing the serial blasts in Mumbai as a well "coordinated attack by terrorists", Union Home Minister P. Chidambaram on Wednesday appealed to the people to remain calm and maintain peace.
Three blasts in India’s financial capital ripped through crowded places at 6.45 p.m. and occurred within minutes of each other, the Home Minister said after presiding over an emergency meeting of top officials of the ministry. "We infer this was a coordinated attack by terrorists," he told reporters outside North Block. He feared that the death toll in the blasts could go up.
He said the National Security Guard (NSG) hub in Mumbai, set up in the wake of 26/11 terror attack in the city in 2008, has been put on standby. He said the elite force's 'post-blast' team has also been sent to Mumbai.
The Central Forensic Science Laboratory (CFSL) team from Delhi and Hyderabad has been sent to Mumbai, he said. Mr. Chidambaram said that a team of the National Investigation Agency (NIA), led by an IG rank officer, will also leave for Mumbai during the night.
Mr. Chidambaram was directed by Prime Minister Manmohan Singh to do everything necessary after serial blasts rocked Mumbai and keep him updated.
The Prime Minister, who was monitoring the developments related to the three explosions, spoke to the Home Minister as well as Maharashtra Chief Minister Prithviraj Chavan, PMO sources said. While speaking to Mr. Chidambaram, Dr. Singh asked him to do the needful and update him.
The North Block office of the Home Ministry was abuzz with hectic activity as soon as the news of serial blasts in Mumbai trickled in just after 7 p.m. Even as Home Secretary R. K. Singh spoke to the Maharashtra Chief Secretary, Secretary (Internal Security) U. K. Bansal monitored the situation, alerting the machinery and ensuring that NIA, NSG and CFSL teams could leave for Mumbai in time.
Mr. Chidambaram held an emergency meeting which was attended by Mr. Singh, Mr. Bansal and other senior officials of the ministry where the situation in Mumbai was reviewed as well as internal security situation in the country was discussed. It was decided to sound high alert in all States, particularly in cities like Chennai, Hyderabad, Bangalore and Delhi. The Home Ministry was monitoring the situation on a regular basis and putting to use much of crisis-fighting apparatus and practices, like multi-agency centre, put in force after 26/11 Mumbai terror attacks.
Sources in the intelligence set up were inclined to believe that IEDs, used in the blast, appeared to be handiwork of Indian Mujahideen working closely with Lashkar-e-Toiba terrorist outfit. The timing of the serial blast was also significant as it comes barely a fortnight before India and Pakistan engage themselves in yet another round of talks.
-The Hindu

Monday, July 11, 2011

யூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்!

6 கருத்துக்கள்
இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!

1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.

அப்போதய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் மொஸாத்தின் தலைவர் ஸிவி ஸமீரை அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்திருந்தார். ஜெர்மனியின் தாக்குதலால் அனைவரின் முகத்திலும் ஒரு இறுக்கம் தென்பட்டது. 'பதிலடியாக நாம் என்ன செய்யப் போகிறோம்?' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். 'கடவுளின் கோபம்' என்ற ஒற்றை வரியில் பதிலளித்தார் மொசாத்தின் தலைவர் ஸிவி ஸமீர்.

அது என்ன 'கடவுளின் கோபம்?' என்று பலரும் அவரிடம் கேட்டனர். 'பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்துச் சென்றது நமக்கு தலைக்குனிவையும், அவர்களுக்கு மேலும் தைரியத்தையும் உண்டாக்கியுள்ளது. எனவே போராளிகளின் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக பாலஸ்தீன இயக்க தலைவர்களையும் முக்கிய வீரர்களையும் தீர்த்துக் கட்ட போடப்பட்ட திட்டத்தின் பெயர்தான் 'கடவுளின் கோபம்' என்ற ஆபரேஷன்' என்றார் ஸிவி ஸமீர்.

படுகொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை அனைவரின் பார்வைக்கும் வைத்தார் ஸிவி ஸமீர். ஸிவி ஸமீர் கொடுத்த புகைப் படத்தில் 11 பேர்களை மட்டும் இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த 11 பேரும் ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்கள் 11 பேர் இறக்க காரணமானவர்கள். 11க்கு 11 என்ற ரீதியில் கணக்கு தீர்க்க திட்டம் தயாரானது. ஆனால் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? எப்படி தீர்த்துக் கட்டப் பொகிறீர்கள்? அதற்கு எத்தனை காலம் தேவைப்படும்? என்றார் பிரதமர் கோல்டா மேயர்.

'அவர்கள் எவ்வளவு காலத்திற்குள் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற உத்திரவாதத்தை என்னால் தர முடியாது. ஆனால் அவர்கள் கண்டிப்பாக கொல்லப் படுவார்கள்' என்றார் ஸிவி ஸமீர். அவர் சொன்னது போல் இந்த திட்டத்தை செயல்படுத்த மொஸாத்துக்கு 20 வருடங்கள் பிடித்தது.

இவர்களின் திட்டத்தில் முதலில் பழி வாங்கப் பட இருந்தவர் கிறித்தவரான வாதி ஹத்தாத்.

யார் இந்த வாதி ஹத்தாத்?

1927 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் ஷஃபாத் என்னும் கிராமத்தில் பிறந்தார். மிகுந்த ஆச்சாரமிக்க கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்தவ குடும்பத்தில் பிறந்த வாதி ஹத்தாத் சிறு வயது முதலே மத சடங்குகளில் ஆர்வமுடையவராகவும் ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு செல்பவராகவும் இருந்தார். ஷஃபாத் கிராமத்தைப் பொறுத்த வரையில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தனர். அமைதியான அவர்களின் வாழ்க்கையில் அரக்கர்களாக வந்தனர் இஸ்ரேலியர்கள்.

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேலிய போரில் பல பாலஸ்தீன கிராமங்கள் அழிக்கப்பட்டன. அதற்கு ஷஃபாத் கிராமமும் விதிவிலக்கல்ல. ஒரே இரவில் தங்களுடைய வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். சொந்த வீட்டையும் சொந்த நாட்டையும் விட்டு அகதிகளாக லெபனானில் தஞ்சம் புகந்ததில் ஹத்தாதின் குடும்பமும் ஒன்று.

லெபனானின் தலைநகரிலிருந்த பெய்ரூத் அமெரிக்கன் யுனிவர்சிடியில் பல மருத்துவப் பிரிவில் தேர்ச்சி பெற்று மருத்துவரானார். இது குறித்து பிந்தைய நாட்களில் ஹத்தாத் குறிப்பிடும்போது 'அகதி என்ற பட்டத்துடனே மருத்துவர் என்ற பட்டமும் கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்றே கருதுகிறேன்' என்றார். மருத்துவ படிப்பை முடித்து விட்டு தனது கல்லூரி தோழரான டாக்டர் ஹபாஸூடன் சேர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார். 1956 ஆம் ஆண்டு ஐ.நா வின் பாலஸ்தீனர்களின் புனர்வாழ்வுக்கான அமைப்புடன் இணைந்து அகதிகளுக்கான சேவையில் ஈடுபட்டார். அதே வேளையில் பாலஸ்தீன மீட்புக்காக 'அரபு தேசிய இயக்கம்' என்ற அமைப்பை தனது தோழரோடு சேர்ந்து ஆரம்பித்தார். பின்னாலில் இந்த இயக்கம் popular front for the liberation of palastine (pflp) என்ற பெயராக மாற்றப்பட்டது. 1967 லிருந்து 1977 வரை இவர் தலைமையில் பிஎஃப்எல்பி தொடுத்த தாக்குதல்களில் இஸ்ரேலே அரண்டு போனது. இந்த காலகட்டங்களில் இஸ்ரேலியர்கள் விமானத்தில் பயணிக்கவே பதறினர். ஏனெனில் 1930 க்கு பிறகு விமான கடத்தலை உலகுக்கு அறிமுகப்படுத்தியது யார் எனில் அது வாதி ஹத்தாதாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு அரண்டு போயிருந்த நேரத்தில்தான் ஜெர்மனியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் ஹத்தாத் முக்கிய காரணகர்த்தா என்ற விபரம் தெரிய வந்ததும் இவரை தீர்த்துக் கட்டுவதன் அவசியத்தை இஸ்ரேல் உணர ஆரம்பித்தது.

ஆபரேஷன் 'கடவுளின் கோபம்' திட்டத்தின் படி வாதி ஹத்தாதின் தற்போதய இருப்பிடத்தை கண்டறிய ஸிவி ஸமீர் உத்தரவிட்டார். வழமையான ரகசிய படுகொலையில் மொசாத் ஒரு நடை முறையைக் கடை பிடிக்கும். அதாவது கொலை செய்யப்பட வேண்டியவர் இஸ்ரேலுக்கு வெளியே இருந்தால் முதலில் அந்நாட்டிலுள்ள தனது கைக் கூலிகளை உஷார் படுத்தும். இதற்காகவே பல நாடுகளிலும் வாடகை உளவாளிகளை மொசாத் வைத்துள்ளது. நம் நாட்டிலும் இதுபோல் பல உளவாளிகளை (இந்துத்வவாதிகளை) மொசாத் நியமித்துள்ளது. இரண்டாவதாக கேஸ் ஆபீஸர் எனப்படும் பிரத்யேக உளவு அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் கொல்லப்பட வேண்டிய குறிப்பிட்ட நபரைக் குறித்து அனைத்து தகவல்களையும் திரட்டி மொசாத் தலைமைக்கு அனுப்பி விடுவார். மூன்றாவதாக கொலைத் திட்டத்தின் அசல் மாதிரியை இஸ்ரேலில் போலியாக உருவாக்கி பயிற்சி செய்வர். இதன் மூலம் திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் சாதக பாதகங்களை முன் கூட்டியே மதிப்பீடு செய்து திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நான்காவதாக திட்டத்தை செயல்படுத்துவதற்க்கான தேதி குறிக்கப்பட்டு பிரதமருக்கு தெரிவிக்கப்படும். பிரதமர் தலையாட்டியவுடன் கேசரியா எனப்படும் ரகசிய கொலைக் குழு அனுப்பப்படும். இவர்கள் ஏற்கெனவே பயிற்சி பெற்றிருந்ததால் காரியத்தை கணக்கச்சிதமாக முடித்து விட்டு மாயமாய் மறைந்து விடுவர்.

மொசாத்தின் இந்த வழக்கமான பாணி வாதி ஹத்தாதின் விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதன்படி ஹத்தாதின் இருப்பிடம் குறித்து அறிவதற்க்காக பாலஸ்தீன ஆட்காட்டிகளை மொசாத் அணுகியது. இவர்கள் பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் மொசாத்துக்கு தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் அத்தகைய நம்பகமானதாக இல்லை. ஏனெனில் ஹத்தால் தாம் மொசாத்தால் கொல்லப்படுவோம் என்பதை தீர்மானித்து தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார்.

பல கோணங்களில் துப்பறிந்த மொசாத்துக்கு இறுதியாக ஒரு நம்பகமான தகவல் கிடைத்தது. அது பிஎஃப்எல்பி யிலிருந்து ஹத்தாதால் நீக்கப்பட்ட இலிச் ராமிரஸ் சான்செஸ் என்பவன் கொடுத்த நம்பகமான தகவல்தான் ஹத்தாதின் கதையை முடிக்க மொசாத்துக்கு உதவியாக இருந்தது. ஹத்தாத் ஒளிந்திருந்தது ஈராக்கில். அப்போது சதாம் ஹீசைன் மிலிட்டரி கமாண்டர் ஜெனரலாக இருந்தார்.

இலிச் ராமிரஸ் சான்செஸ் கொடுத்த தகவலின்படி ஹத்தாதை கொல்ல ஒரு புது டெக்னிக்கை மொசாத் கையாண்டது. அது என்னவென்றால் ஹத்தாதுக்கு ஒரு பழக்கம் இருந்தது. சிறியவர்கள் சாப்பிடும் சாக்லெட்டுகளை எப்போதும் விரும்பி சாப்பிடுவார். இதை மோப்பம் பிடித்த மொசாத் இவரைக் கொல்வதற்கு அந்த சாக்லெட்டுகளையே பயன்படுத்தியது. 1970 களில் உயர்தர சாக்லேட்டுகள் ஈராக்கில் கிடைப்பது அரிது. இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திய மொசாத் ஹத்தாதின் சமையல்காரனை தனது வலையில் வீழ்த்தியது.

சாக்லெட்டுக்கு பிரசித்திப் பெற்ற பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகளை சமையல்காரன் ஹத்தாதுக்கு கொடுக்க ஆரம்பித்தான். அதில் மிக மிக குறைந்த அளவில் உயிர்க் கொல்லி கிருமி தடவப்பட்டு ஆறு மாத காலம் யாருக்கும் சந்தேகம் வராமல் வழங்கப்பட்டது. அக்கிருமிகள் சிறிது சிறிதாக கல்லீரலைத் தாக்கி லுக்கிமியா நோயை ஏற்படுத்தி ஹத்தாதின் உயிரைக் காவு கொண்டது.

Poison with Sweets
…..Sure, it’s strange to think of a terrorist as a chocoholic, but it was indeed death by chocolate for Wadie Haddad, a medical doctor and onetime leader of the Popular Front for the Liberation of Palestine. A double agent slipped him a batch of poisoned chocolate in 1977, and Haddad went on to suffer a slow, months-long death. Israel’s intelligence agency, Mossad, was pointed to as the source of the poisoning in Aaron J. Klein’s book Striking Back…..
http://www.newsweek.com/2011/05/05/how-to-kill-a-terrorist.html
JERUSALEM (AP) -- Israel's Mossad secret service agency killed a Palestinian wanted for airplane hijackings by feeding him poisoned Belgian chocolate over six months in the late 1970s, according to a new book, the author said Saturday.

The book, "Striking Back," is apparently the first time that details of the killing have come to light and provides a glimpse at how sophisticated Israel is at poisoning.

In his book, author Aaron Klein describes how Israel tracked down Wadia Haddad, an operative of the Popular Front for the Liberation of Palestine, in Baghdad. Haddad had gone into hiding in the Iraqi capital after Israel began killing Palestinian militants around the world, Klein told Israel Radio.

Suspected in multiple hijackings, including the 1976 takeover of an Air France airplane in Entebbe, Uganda, Haddad knew from the Israeli tactics that he could be shot or bombed as he walked the street or picked up a phone.

Haddad was cautious of his every move, avoiding travel outside of Iraq, said Klein, a Time magazine correspondent in Jerusalem. But the 140-kilogram (309-pound) food lover had a weakness: chocolate...

http://www.cnn.com/2006/WORLD/meast/05/06/chocolate.ass...


ஆனால் உலகுக்கு இவர் இயற்கையான மரணத்தை தழுவியதாகத்தான் நம்ப வைக்கப்பட்டது. ஏனெனில் ஈராக்கில் வைத்து கொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலின் மொசாத் காரணம் என்ற செய்தி வெளியானால் அது இஸ்ரேல் ஈராக் உறவை பாதிக்கும். சுற்றிலும் பல பகைகளை பெற்றிருக்கும் இஸ்ரேல் ஈராக்கையும் அந்த நேரத்தில் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

காலங்கள் உருண்டோடின. 2007 ஆம் ஆண்டு முன்னால் மொசாத் அதிகாரியும் 'டைம்' பத்திரிக்கையின் ஜெருசலம் நிருபருமான ஆரோன் கிளீன் எழுதிய Striking Back என்ற புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வாதி ஹத்தாதை மொசாத் படுகொலை செய்ய பயன் படுத்திய டெக்னிக்கை வெளிப்படுத்தினார். தாங்கள் நினைத்த ஒரு காரியத்தை நிறைவேற்ற எத்தனை வருடங்கள் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து திட்டமிட்டு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர் என்பதற்கு ஹத்தாதியின் மரணம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

நமது நாட்டிலும் இந்துத்வவாதிகள் மொசாத்தின் திட்டமிடல் படியே செயல்படுகின்றனர். அத்வானிக்கும் மொசாத்துக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே! மாலேகானிலிருந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வரை இவர்கள் நடத்திய அனைத்துக்கும் மூலம் மொசாத்திலிருந்து பெறப்பட்டவையே!

நமது மும்பை நகரத்தை தாக்கவும் எவ்வளவு கச்சிதமாக பிளான் பண்ணினார்கள். எங்கு பார்த்தாலும் இந்துத்வவாதிகள் கைது செய்யப்பட்ட நேரம். இதே நிலை நீடித்தால் மோடியின் கைகளுக்கும் விலங்கு வரும் என்ற நேரத்தில்தான் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிய கசாப்புக்கும் அவனது கூட்டத்தாருக்கும் குடும்பத்தை காப்பாற்றுகிறோம் என்ற வாக்குறுதி தரப்பட்டது. போலி முல்லாக்களால் மத வெறியும் ஊட்டப்பட்டது. இந்தியாவுக்குள் நுழைய எத்தனையோ வழிகள் இருக்க மோடியின் குஜராத் கடல் மார்க்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடலில் ரோந்து வருபவர்களுக்கு பணமோ அல்லது ராம பக்தியோ மோடி குரூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம்.

இதை சாக்காக வைத்து ஹேமந்த் கர்கரேயையும் போட்டுத் தள்ளியாகி விட்டது. இந்துத்வாவாதிகள் மேலேயோ அல்லது மொசாத்தின் மேலேயோ துளியும் சந்தேகம் வராமல் காரியம் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் முதற்கொண்டு அனைத்து வழக்குகளும் மந்த கதியை அடைந்தது. குற்றவாளிகள் நினைத்த காரியம் எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேறியது. வழக்கம்போல் பாகிஸ்தானின் ஏதாவது ஒரு தீவிரவாத குரூப்பின் பெயரில் ஈமெயிலோ, ஒரு போன் காலோ போட்டு தங்களின் தேச பக்தியை இந்துத்வாவாதிகள் திறம்பட செயல்படுத்தி விட்டார்கள்.

ஜெய் ஹிந்த்!

Wednesday, July 6, 2011

இஸ்லாம் அடிமைகளை நடத்திய விதம்!

1 கருத்துக்கள்
இஸ்லாம் அடிமைகளை நடத்திய விதம்!

'எனக்கு சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் பல நேரங்களில் பொய் சொல்கிறார்கள். கொடுத்த வேலையைச் செய்யாமல் ஏமாற்றுகிறார்கள். ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசுகிறார்கள்'

இது புகார் அல்ல. முகமது நபி அவர்களிடம் சந்தேகம் கேட்க வந்த ஒரு நபித் தோழர் கூறிய வார்த்தைகள்.

அடிமைகளுடன் தனக்குள்ள பிரச்னையை அவர் நபியிடம் எடுத்துக் கூறினார். தன்னுடைய அடிமைகளுடன் கடினமாக நடந்து கொள்வதால் அவர் அமைதியின்றி தவித்தார். அவர் முகமது நபியிடம தொடர்ந்தார்:
'அவர்களிடம் கடுமையாகப் பேச வேண்டி இருக்கிறது. சில சமயங்களில் வரம்பு மீறிய வார்த்தையையும் நான் கூறி விடுகின்றேன். கட்டுப் படுத்த முடியாத கோபம் வரும் போது அடிக்கவும் செய்வேன். நான் இப்படி நடந்து கொள்வது சரியா?”

ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் சந்திக்கும் இது போன்ற நிகழ்வுகள் அவரது மனதை பாதித்ததனால் முகமது நபியிடம் விளக்கம் கேட்க வந்திருக்கிறார். இதற்கொரு மாற்றம் வேண்டும் என்று கருதித்தான் அவர் நபியைக் காண வந்தார்.

இறைவனின் தூதர் அந்த தோழருக்கு பின் வருமாறு அறிவுரை கூறினார்கள்:
'நாளை மறுமையில் இறுதித் தீர்ப்பு நாளில் உங்களுக்கும் அடிமைகளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கணக்கெடுக்கப்படும். அடிமைகள் உங்களை ஏமாற்றி மோசடி செய்ததும், பொய் சொன்னதும், உங்களுக்கெதிராக வேலை செய்ததும், தராசின் தட்டில் வைக்கப்படும்.

தாங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும், அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்ததும் இன்னொரு தட்டில் வைக்கப்படும். இரண்டும் சமமாக இருந்தால் யாருக்கும் ஒன்றும் இல்லாமல் பிரச்னை சுமூகமாக தீரும்.

நீங்கள் அளித்த தண்டனை அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுத்து உங்களுக்குத் தரப்படும். தண்டனை அதிகம் என்றால் உங்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும்.'

அந்த நபித் தோழருக்கு அச்சம் தோன்றி விட்டது. அந்த இடத்தை விட்டகன்ற அவர் அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட இறைத் தூதர் அவர்கள் அவரிடம் சென்று கீழ்க் கண்ட இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

'மீண்டும் உயிர்த்தெழும் நாளில் நீதியின் தராசை நாம் முன்பு வைப்போம். யாரும் ஒரு சிறிது கூட அநீதம் செய்யப்பட மாட்டார்கள். கடுகு போல் ஒரு சிறிய நன்மை செய்திருந்தாலும் அன்று நாம் அதனை வெளியே கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நான் போதுமானவனாகவே இருக்கிறேன்.'
-குர்ஆன் 21:47

இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித் தோழர் பிரச்னைக்குரிய அடிமைகளை விடுதலை செய்வதே தனக்கும் அவர்களுக்கும் நல்லது என்று எண்ணலானார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
30. 'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.
Volume :1 Book :2

97. மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
"இதை எந்தப் பகரமும் இல்லாமல் உமக்கு நாம் வழங்கி விட்டோம். முன்னர் இதை விடச் சின்னப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு" என்று (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்டு வந்தவரிடம்) ஆமிர் கூறினார்.
Volume :1 Book :3


வேலை ஆட்கள் விஷயத்தில் இஸ்லாம் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்க ஒரு சில சவுதிகள் பணிப் பெண்களை நடத்தும் விதம் மிகவும் அருவறுக்கத்தக்கதாக உள்ளது. நம்மிலே கூட பலர் வேலையாட்களை நடத்தும் விதத்தில் நேர்மையாளர்களாக இருப்பதில்லை. ஐந்து வேளை தொழுகிறார்கள். நோன்பு வைக்கிறார்கள். ஆனால் வேலை ஆட்களை சரி சமமாக நடத்துவதில்லை. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பாதிப்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை.

இறைவனின் கேள்விகளுக்கு பயந்து நமக்கு கீழுள்ள வேலையாட்களை முடிந்த வரை சமமாக நடத்தும் மன வலிவை இறைவன் உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக!

Friday, July 1, 2011

அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு

2 கருத்துக்கள்


                                         ஓரிறையின் நற்பெயரால்
        இப்பதிவிற்கு செல்லும் முன் முஸ்லிம் சமுகத்திற்கு ஓர் வேண்டுகோள்., 
    குர்-ஆன் விஞ்ஞான நூலல்ல... விஞ்ஞானத்தையும் உள்ளடக்கிய நூல்!, ஆக குர்-ஆனை விஞ்ஞான நூலாக நிறுவ சிரத்தையெடுத்து ஏற்படும் அறிவியல் விளைவையெல்லாம் குர்-ஆனோடு பொருத்த வேண்டாம்., ஏனெனில் விஞ்ஞானம் எச்செயலை எதன் மூலம் செய்ய வேண்டும் என விளக்கும்., குர்-ஆன் அச்செயலை எப்படி (ஹலாலாக) செய்ய வேண்டும் என விளக்கம் தரும்.,ஆக நவீன அறிவியலுக்கும் மேலான மதிக்க மற்றும் அணுக வேண்டிய படிப்பினை வாய்ந்த நூல் தான் குர்-ஆன்.,
இப்போது பதிவிற்கு வருவோம்.,
அல்லாஹ் குர்-ஆன் அத்தியாயம் அந்நம்ல் (27) வசனம் (82) ல்
 அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
 இது DIVINE ISLAM இணையம் மொழிபெயர்த்த QURA'N VIEWER VERSION 2.910ன் தமிழாக்க வசனம்.,
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) மொழிபெயர்த்த (தாருல் ஹூதா வெளியீடு) குர்-ஆன் தமிழாக்கத்தில் பிராணி என்ற வார்த்தைக்கு பதிலாக "கால் நடை" என்று வருகிறது .,
     ஆக., மேற்கண்ட வசனம் வாயிலாக, உலக அழிவு (கியாமத்) நாள் நெருங்கும்போது பூமியிலிருந்து ஒரு விலங்கு வெளியாகி மக்களிடையே "ஓரிறையே வணங்காது அவனை நிராகரித்து அவனை விசுவாசிக்காதவர் யார் யார் என ஓரிறையை உணரும் பொருட்டு அவர்கள் மத்தியில் பேசும் என கூறுகிறது.,
மேலும் இப்பிராணிக்குறித்து மேலதிக வசனம் ஏதும் குர்-ஆனில் இல்லையெனிலும் கியாமத் (உலக அழிவு) நாளின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக ஹுதைபா (ரலி), அறிவிக்க நூல் முஸ்லிம் எண் 5162 ல் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதிஸ் பதிவாகியுள்ளது., இதனடிப்படையில் ஒப்புநோக்கும் போது உலக அழிவு நாள் சமீபத்தில் மக்களிடையே பேசும் பிராணி தோன்றுவது உறுதி என வேத வரிகளும்- தூதர் மொழிகளும் சான்று பகிர்கின்றன.,
மேற்கண்ட சம்பவ அடிப்படையில் இரு கேள்விகள் முன்னிருத்தப்படுகின்றன.,

  • திடிரென பூமியை பிளந்து ஒரு விலங்கு வருவது எப்படி சாத்தியம்..?
  • அதுவும் மனிதர்களுடன் பேசுவதற்கான மொழியுடன் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்.?  
         -ஆக இது அறிவியலுக்கு முரண்படுகிறது ., எனவே.. குர்-ஆன் பொய்யுரைக்கிறது சொல்ல விளைகின்றன முரண்பாட்டு சிந்தனை.
  "அறிவியல் முரண்பாடு என்பது., நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு நாம் உடன்படுத்தும் ஒரு சோதனை முற்றிலுமாக மாறுபடுவதே ஆகும்"      இதோடு நாம் மேற்குறிப்பிட்ட முதல் வினாவை பொருத்தினால், அதாவது திடிரென பூமியில் ஒரு உயிரினம் தோன்றுவது., அறிவியலுக்கு முரணானதல்ல., ஏனெனில் இன்றும் சர்வ சாதாரணமாக பல வகையான தாவரங்கள் பூமியிலிருந்து முளைப்பதை காண்கிறோம் ஆக ஒரு உயிரினம் பூமிக்கு அடியில் இருந்து உருவாவது விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல. இதற்கு அறிவுஜீவிதனமாக தாவரங்கள் தான் முளைக்கும் விலங்குகள் பூமியில் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அதற்கு அறிவியல் ரீதியான நிருபனம் வேண்டும்.,    
         ஏனெனில் அறிவியல் என்பது., நடைபெற்று முடிந்த நிகழ்வுகளின் அடிப்படையை மையமாக வைத்து காரணத்தை அலசுவது ஆகும். முடிவுற்ற செயலை அஃது அது நடைபெற்ற விதம் குறித்து காரண காரியத்தோடு தெளிவாக வரையறுத்துக்கூறுவதே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் நிருபனம் ஆகும்., அதாவது இந்தபொழுது வரை நடைபெற்று முடிந்தவற்றில் கிடைக்கபெற்ற தொகுப்பை மட்டுமே வைத்து.,  ஒரு செயல் உண்மையென்றோ ,சாத்தியமென்றோ நாம் கூறுகிறோம்.,
   அஃதில்லாமல் இதுவரை நாம் கண்டறியா (சாத்தியமில்லை என வரையறுத்த) ஒரு செயல் பிற்காலத்தில் நடைபெறும் போது அதனையும் அறிவியல் உண்மையாக / அதிசயமாக ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு ஒரு எளிய உதாரணம் உயிர் பிழைப்பதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் இல்லையென மருத்துவர்களால் விரிவாக சோதிக்கப்பட்ட எத்தனையோ நோயாளிகள் உயிர் பெற்று ஆரோக்கியமடைவதை காண்கிறோம். சென்ற நிமிடம் வரை சாத்தியமில்லை என வரையறுத்த அறிவியல் அறிவு அடுத்த நிமிடமே இது ஒரு "Medical Miracle" மருத்துவ உலகின் அதிசயம் என ஏற்று புலங்காகிதமடைவதை காண்கிறோம்., ஆக மனித அறிவுக்கு உடன் படாத, முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களும் உலகில் நடப்பது சாத்தியமே!
    ஆக இவ்வுதாரணம் வாயிலாக இதுவரை இதைப்போன்று ஒரு உயிரினம் உருவாவதை நம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அஃது அந்நேரத்தில் அப்பிராணி வெளிபடும் போது அறிவியல் உலகம் அதிசயமாக கட்டுரை வடிக்கும் போது இறைவனின் அத்தாட்சியை இவ்வுலகம் காணும்..! 
பேசும் மொழி..? 
 ஒரு விலங்கு -மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?
       உண்மைதான்... சாதாரணமாக ஒருவர் மனதில் உள்ளதையே அதிபுத்திசாலியாக இருந்தாலும் பிறிதொரு மனிதனால் கண்டறிய முடியாது எனும்போது.. ஒரு விலங்கால் எப்படி கண்டறிந்து சொல்வது சாத்தியமாகும் மனித மனங்களில் உள்ளவற்றை..? எனும் நோக்கில் சிந்தித்தால்... மேலும் இந்த வசனத்தை உற்று நோக்கினால் அவனது வல்லமையின் வெளிபாடாகவும் அத்தாட்சியின் விளைவாகவும் நடைபெறும் இச்சம்பவம் இது., எனவே அந்நேரத்தில் இறைவன் ஏற்படுத்தும் ஒரு அசாதாரண செயல் என்பதை அறியலாம்..    
   அஃதில்லாமல் மேலும்,
மொழி - உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? 
என்று கூறினால்.,
           இன்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கிளி, மைனா, நாய் மற்றும் ஏனைய உயிரினங்கள் மனிதர்கள் பேசும் மொழியே புரிந்துக்கொள்வதோடு அவர்களுடன் (தத்தமது பேசும் மொழியுடனான) பேச்சு தொடர்பும் வைத்திருக்கிறது., மேலும் உரியவரின் ஏவல்-விலக்கல்களுக்கும் தெளிவாக கட்டுப்படுவதையும் காண்கிறோம்., அவ்வாறு இருக்கும் போது., ஒரு உயிரினம் -தன் இனத்தை சார்ந்த சக உயிரினத்துடன் மட்டும் தொடர்புக்கொள்ள தங்கள் மொழியறிவை பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறுவது எப்படி உண்மையாகும்..? 
    ஆக தன் இனம் தவிர்த்தும் ஏனைய நிலையில் உள்ள உயிரினங்களுடன் தமது மொழியறிவால் தன் /பிற செய்கையே புரிந்துக்கொள்ளவும் புரிய வைக்கவும் முடியும் என்பதையல்லவா இது காட்டுகிறது., ஆக எதிர்காலத்தில் மனிதர்கள் மத்தியில் பேசும் ஓர் அறிவார்ந்த உயிரி தோன்றுவதற்கே அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது., அஃறிணை உயிரினங்களின் பேசும் மொழியறிதல் மனித அறிவுகளாலே சாத்தியமெனும்போதும் மனித அறிவு உணர்த்தும் படி அவ்வுயிர்கள் உணர்ந்து செயல்படுதல் சாத்தியமெனும் போதும் நவீன விஞ்ஞானம் இதுவரை பொய்பிக்காத ஒரு நிகழ்வு எப்படி சாத்தியமில்லாமல் போகும்..?

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22))

                                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்