Friday, July 1, 2011

அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு

2 கருத்துக்கள்


                                         ஓரிறையின் நற்பெயரால்
        இப்பதிவிற்கு செல்லும் முன் முஸ்லிம் சமுகத்திற்கு ஓர் வேண்டுகோள்., 
    குர்-ஆன் விஞ்ஞான நூலல்ல... விஞ்ஞானத்தையும் உள்ளடக்கிய நூல்!, ஆக குர்-ஆனை விஞ்ஞான நூலாக நிறுவ சிரத்தையெடுத்து ஏற்படும் அறிவியல் விளைவையெல்லாம் குர்-ஆனோடு பொருத்த வேண்டாம்., ஏனெனில் விஞ்ஞானம் எச்செயலை எதன் மூலம் செய்ய வேண்டும் என விளக்கும்., குர்-ஆன் அச்செயலை எப்படி (ஹலாலாக) செய்ய வேண்டும் என விளக்கம் தரும்.,ஆக நவீன அறிவியலுக்கும் மேலான மதிக்க மற்றும் அணுக வேண்டிய படிப்பினை வாய்ந்த நூல் தான் குர்-ஆன்.,
இப்போது பதிவிற்கு வருவோம்.,
அல்லாஹ் குர்-ஆன் அத்தியாயம் அந்நம்ல் (27) வசனம் (82) ல்
 அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
 இது DIVINE ISLAM இணையம் மொழிபெயர்த்த QURA'N VIEWER VERSION 2.910ன் தமிழாக்க வசனம்.,
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) மொழிபெயர்த்த (தாருல் ஹூதா வெளியீடு) குர்-ஆன் தமிழாக்கத்தில் பிராணி என்ற வார்த்தைக்கு பதிலாக "கால் நடை" என்று வருகிறது .,
     ஆக., மேற்கண்ட வசனம் வாயிலாக, உலக அழிவு (கியாமத்) நாள் நெருங்கும்போது பூமியிலிருந்து ஒரு விலங்கு வெளியாகி மக்களிடையே "ஓரிறையே வணங்காது அவனை நிராகரித்து அவனை விசுவாசிக்காதவர் யார் யார் என ஓரிறையை உணரும் பொருட்டு அவர்கள் மத்தியில் பேசும் என கூறுகிறது.,
மேலும் இப்பிராணிக்குறித்து மேலதிக வசனம் ஏதும் குர்-ஆனில் இல்லையெனிலும் கியாமத் (உலக அழிவு) நாளின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக ஹுதைபா (ரலி), அறிவிக்க நூல் முஸ்லிம் எண் 5162 ல் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதிஸ் பதிவாகியுள்ளது., இதனடிப்படையில் ஒப்புநோக்கும் போது உலக அழிவு நாள் சமீபத்தில் மக்களிடையே பேசும் பிராணி தோன்றுவது உறுதி என வேத வரிகளும்- தூதர் மொழிகளும் சான்று பகிர்கின்றன.,
மேற்கண்ட சம்பவ அடிப்படையில் இரு கேள்விகள் முன்னிருத்தப்படுகின்றன.,

 • திடிரென பூமியை பிளந்து ஒரு விலங்கு வருவது எப்படி சாத்தியம்..?
 • அதுவும் மனிதர்களுடன் பேசுவதற்கான மொழியுடன் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்.?  
         -ஆக இது அறிவியலுக்கு முரண்படுகிறது ., எனவே.. குர்-ஆன் பொய்யுரைக்கிறது சொல்ல விளைகின்றன முரண்பாட்டு சிந்தனை.
  "அறிவியல் முரண்பாடு என்பது., நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு நாம் உடன்படுத்தும் ஒரு சோதனை முற்றிலுமாக மாறுபடுவதே ஆகும்"      இதோடு நாம் மேற்குறிப்பிட்ட முதல் வினாவை பொருத்தினால், அதாவது திடிரென பூமியில் ஒரு உயிரினம் தோன்றுவது., அறிவியலுக்கு முரணானதல்ல., ஏனெனில் இன்றும் சர்வ சாதாரணமாக பல வகையான தாவரங்கள் பூமியிலிருந்து முளைப்பதை காண்கிறோம் ஆக ஒரு உயிரினம் பூமிக்கு அடியில் இருந்து உருவாவது விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல. இதற்கு அறிவுஜீவிதனமாக தாவரங்கள் தான் முளைக்கும் விலங்குகள் பூமியில் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அதற்கு அறிவியல் ரீதியான நிருபனம் வேண்டும்.,    
         ஏனெனில் அறிவியல் என்பது., நடைபெற்று முடிந்த நிகழ்வுகளின் அடிப்படையை மையமாக வைத்து காரணத்தை அலசுவது ஆகும். முடிவுற்ற செயலை அஃது அது நடைபெற்ற விதம் குறித்து காரண காரியத்தோடு தெளிவாக வரையறுத்துக்கூறுவதே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் நிருபனம் ஆகும்., அதாவது இந்தபொழுது வரை நடைபெற்று முடிந்தவற்றில் கிடைக்கபெற்ற தொகுப்பை மட்டுமே வைத்து.,  ஒரு செயல் உண்மையென்றோ ,சாத்தியமென்றோ நாம் கூறுகிறோம்.,
   அஃதில்லாமல் இதுவரை நாம் கண்டறியா (சாத்தியமில்லை என வரையறுத்த) ஒரு செயல் பிற்காலத்தில் நடைபெறும் போது அதனையும் அறிவியல் உண்மையாக / அதிசயமாக ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு ஒரு எளிய உதாரணம் உயிர் பிழைப்பதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் இல்லையென மருத்துவர்களால் விரிவாக சோதிக்கப்பட்ட எத்தனையோ நோயாளிகள் உயிர் பெற்று ஆரோக்கியமடைவதை காண்கிறோம். சென்ற நிமிடம் வரை சாத்தியமில்லை என வரையறுத்த அறிவியல் அறிவு அடுத்த நிமிடமே இது ஒரு "Medical Miracle" மருத்துவ உலகின் அதிசயம் என ஏற்று புலங்காகிதமடைவதை காண்கிறோம்., ஆக மனித அறிவுக்கு உடன் படாத, முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களும் உலகில் நடப்பது சாத்தியமே!
    ஆக இவ்வுதாரணம் வாயிலாக இதுவரை இதைப்போன்று ஒரு உயிரினம் உருவாவதை நம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அஃது அந்நேரத்தில் அப்பிராணி வெளிபடும் போது அறிவியல் உலகம் அதிசயமாக கட்டுரை வடிக்கும் போது இறைவனின் அத்தாட்சியை இவ்வுலகம் காணும்..! 
பேசும் மொழி..? 
 ஒரு விலங்கு -மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?
       உண்மைதான்... சாதாரணமாக ஒருவர் மனதில் உள்ளதையே அதிபுத்திசாலியாக இருந்தாலும் பிறிதொரு மனிதனால் கண்டறிய முடியாது எனும்போது.. ஒரு விலங்கால் எப்படி கண்டறிந்து சொல்வது சாத்தியமாகும் மனித மனங்களில் உள்ளவற்றை..? எனும் நோக்கில் சிந்தித்தால்... மேலும் இந்த வசனத்தை உற்று நோக்கினால் அவனது வல்லமையின் வெளிபாடாகவும் அத்தாட்சியின் விளைவாகவும் நடைபெறும் இச்சம்பவம் இது., எனவே அந்நேரத்தில் இறைவன் ஏற்படுத்தும் ஒரு அசாதாரண செயல் என்பதை அறியலாம்..    
   அஃதில்லாமல் மேலும்,
மொழி - உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? 
என்று கூறினால்.,
           இன்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கிளி, மைனா, நாய் மற்றும் ஏனைய உயிரினங்கள் மனிதர்கள் பேசும் மொழியே புரிந்துக்கொள்வதோடு அவர்களுடன் (தத்தமது பேசும் மொழியுடனான) பேச்சு தொடர்பும் வைத்திருக்கிறது., மேலும் உரியவரின் ஏவல்-விலக்கல்களுக்கும் தெளிவாக கட்டுப்படுவதையும் காண்கிறோம்., அவ்வாறு இருக்கும் போது., ஒரு உயிரினம் -தன் இனத்தை சார்ந்த சக உயிரினத்துடன் மட்டும் தொடர்புக்கொள்ள தங்கள் மொழியறிவை பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறுவது எப்படி உண்மையாகும்..? 
    ஆக தன் இனம் தவிர்த்தும் ஏனைய நிலையில் உள்ள உயிரினங்களுடன் தமது மொழியறிவால் தன் /பிற செய்கையே புரிந்துக்கொள்ளவும் புரிய வைக்கவும் முடியும் என்பதையல்லவா இது காட்டுகிறது., ஆக எதிர்காலத்தில் மனிதர்கள் மத்தியில் பேசும் ஓர் அறிவார்ந்த உயிரி தோன்றுவதற்கே அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது., அஃறிணை உயிரினங்களின் பேசும் மொழியறிதல் மனித அறிவுகளாலே சாத்தியமெனும்போதும் மனித அறிவு உணர்த்தும் படி அவ்வுயிர்கள் உணர்ந்து செயல்படுதல் சாத்தியமெனும் போதும் நவீன விஞ்ஞானம் இதுவரை பொய்பிக்காத ஒரு நிகழ்வு எப்படி சாத்தியமில்லாமல் போகும்..?

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22))

                                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்

2 கருத்துக்கள்:

 • July 5, 2011 at 11:25 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்


  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22))

  இதுதான் குர்ஆன்.........

  அன்புடன்,

  காதர் மைதீன்

  மாஸலாமா.

 • October 10, 2011 at 10:00 PM

  எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..ஆமீன்
  அற்புதங்களின் அற்புதமாகிய அல் குரானின் மற்றுமோர் உண்மை சாட்சியை இவ் உலகம் கூடிய
  சீக்கிரத்தில் காணப்போகிறது ......இன்ஷ அல்லாஹ்

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!