Monday, October 24, 2011

சர்தார்ஜிக்களை விட்டுருவோமே...ப்ளீஸ்

15 கருத்துக்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

சர்தார்ஜி ஜோக்குகள் - இன்றைய காலக்கட்டத்தில் இவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் இன்றும் இம்மாதிரியான நகைச்சுவைகள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆகையால், நமக்கெல்லாம் ஒரு நினைவூட்டலாக இந்த பதிவு. 

நம்மில்  பலரும் அறியாமையால் தான் இன்றும் சர்தார்ஜி நகைச்சுவைகளை பகிர்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.  அதாவது இது தவறென்று தெரியாமலேயே.

இதனை பகிர்பவர்கள் இதன் பின்னணியை அறிந்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.  வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பதினெட்டாம் நூற்றாண்டில் நாதிர் ஸா மன்னனின் படைகளிடம் இருந்து பெண்களை காக்க நள்ளிரவு நேரத்தில் கொரில்லா யுத்தம் செய்து பெண்களை விடுதலை செய்வனராம் சீக்கியர்கள். அவர்கள் குறைந்த அளவில் இருந்ததே இந்த நள்ளிரவு தாக்குதலுக்கு காரணம். ஆனால் இன்றோ இந்த வரலாற்றை அறியாத நம்மவர்கள் சீக்கியர்களை வைத்தே '12 மணி' ஜோக்குகள் என்று ஒன்றை உருவாக்கி அவர்களை கேலி செய்துக்கொண்டிருக்கின்றார்கள். 

அதுமட்டுமல்லாமல், சீக்கியர்கள் மீதான ஈகோவும் இம்மாதிரியான நகைச்சுவைகள் தோன்ற காரணமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

சரி போகட்டும். இஸ்லாமிய பார்வையில் சர்தார் நகைச்சுவைகளை எப்படி கையாள்வது. இது சரியா??

"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல" - நாயகம் (ஸல்) அவர்கள், தன்னுடைய இறுதி பேருரையில்..

எல்லா இனத்தவரும் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது. சீக்கியர்களின் அறிவுத்திறனை பகடி செய்தே சர்தார்ஜி நகைச்சுவைகள் வருகின்றன. இன்னொரு இனத்தவரை நம்மை விட அறிவுத்திறனில் தாழ்ந்தவராக எண்ணுவது இஸ்லாம் நமக்கு வகுத்த தந்த பாதையல்ல. அப்படியிருக்க எப்படி ஒரு முஸ்லிமால் இன்னொரு இனத்தவரை கேலி செய்ய முடியும்?

அதுமட்டுமல்லாமல், நமக்கு என்ன விரும்புகின்றோமோ அதனையே அடுத்தவருக்கும் விரும்ப சொல்கின்றது இஸ்லாம். தமிழ் என்னும் நம் இனம், அறிவுத்திறனில் தாழ்ந்த இனமாக கருதப்பட்டு கேலிச் செய்யப்படுவதை நாம் விரும்ப மாட்டோம். பிறகு எப்படி நமக்கு விரும்பாத ஒன்றை அடுத்தவருக்கு செய்துக்கொண்டிருக்கின்றோம்? 

நான்  முன்னமே சொன்னது போன்று சர்தார்ஜி நகைச்சுவைகளை பலரும் அறியாமையால் தான் பகிர்ந்து வருகின்றனர். சும்மா நகைச்சுவைக்காக தானே என்று நினைத்து தான் பகிர்ந்து வருகின்றனர். நகைச்சுவை என்ற காரணத்தை சொல்லி ஒரு இனத்தையே கேலிக்குள்ளாக்குவது ஏற்புடையதா? 

அறியாமல் செய்த காலங்கள் போகட்டும். இனியும் நாம் இதனை தொடர்ந்தால் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு இந்த செய்கைகளை கைவிடுவோம். சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதிக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

இறைவன்  நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே  எல்லாம் அறிந்தவன்.

Reference: 
1. Sardarji jokes - wikipedia. link

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக்  அஹமத் அ  

15 கருத்துக்கள்:

 • October 24, 2011 at 10:47 AM

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  சொல்ல வந்ததை நச் என சொல்லி விட்டீர்கள்

  //சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதிக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.//

 • October 24, 2011 at 11:01 AM

  மார்க்கம் சொல்லித் தந்த வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, எந்த ஒரு தனிமனிதனுக்கேனும் தீங்கிழக்காது வாழக்கூடிய இந்த 60க்கும் 70க்கும் உள்ள வருடங்களை சிறப்பாக வாழ முயற்சி செய்வோமாக

  // சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதிக்கொள்வோம். //

  இன்ஷா அல்லாஹ்.

  அபு நிஹான்

 • October 24, 2011 at 11:26 AM
 • October 24, 2011 at 4:07 PM

  உங்களின் இந்த பதிவு ஒரு விழிப்புணர்வு! பகிர்ந்தமைக்கு நன்றிகள். அதோடு வீண் விவாதங்களோடு கூடிய அநாகரிக, கேலி-கிண்டல், காழ்ப்புணர்ச்சி போன்ற இஸ்லாத்துக்கு ஒத்து வராத பின்னூட்டங்களை நாம் பிரசுரிக்க மாட்டோம் என்பதில், இன்ஷா அல்லா, உறுதியாக இருப்போம்; ஒற்றுமையுடன் செயல் படுவோம். மற்றும் சீக்கிய சமூக மக்களிடம் கலந்து உறவாடும் நமது தமிழ் உறவுகள், இந்த விழிப்புணர்வு பற்றி எடுத்துரைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

 • October 24, 2011 at 5:16 PM

  இன்ஷா அல்லாஹ்

  (யார் மீதும் ...)

 • October 25, 2011 at 1:37 PM

  இன்ஷா அல்லாஹ்...

  உண்மையில் பிறரை கேலிக்குள்ளாக்குவதும் ஒரு சித்திரவதைதான்...
  அருமையான பதிவு....
  விழிப்புணர்வை தூண்டியிருக்கிறது சகோ.....

 • October 25, 2011 at 3:00 PM

  arumaiyana thakaval pathivu intha pathivukkum athan thaakkathukkum nichchyam kooli undu insha allah
  yaar ethai seithaalum oru muslim iraithirupthikkaha setpada vendum ethilum nari

 • October 26, 2011 at 12:49 PM
 • October 27, 2011 at 12:34 PM

  மிக அருமையான விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு பதிவு


  //"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல" - நாயகம் (ஸல்) அவர்கள், தன்னுடைய இறுதி பேருரையில்//


  இனி எங்கும் சர்தார்ஜிகள் பதிவை பகிரமாட்டேன்.

 • October 27, 2011 at 9:39 PM

  அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  நல்ல விழிப்புணர்வு பதிவு..

  நம் நாட்டை காப்பதில் பெரும்பங்கு வகித்தவர்கள், வகித்துக் கொண்டிருப்பவர்கள் சீக்கியர்கள் என்றால் அது மிகையில்லை.

  சுதந்திரப் போராட்டத்தில் 121 பேர் கொல்லப்பட்டனர். அதில் 93 பேர் சீக்கியர்கள் இதிலிருதே அவர்களின் நாட்டுப் பற்று நமக்கு புரியும்.

  இயற்கையாகவே நல்ல உடல் வலிமை உள்ளவர்களை எதிர்க்க முடியாதவர்கள் செய்த சதியே அவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற செய்தியை பரப்பியது. அதில் அவர்கள் கொஞ்சம் வெற்றியும் பெற்று விட்டார்கள் என்பதை காட்டுவது தான் இப்போது நாம் பார்க்கும் அவர்களை பற்றி வரும் நகைச்சுவை பதிவுகள்.

  உண்மையில் போற்றப் பட வேண்டியவர்களை நாம் காமெடியனாக சித்தரித்து ரசித்து மகிழ்நது கொண்டிருப்பது மிகவும் வருத்தபட வேண்டிய ஒன்று

  இனியாவது சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

  இன்ஷா அல்லாஹ்.

 • October 28, 2011 at 8:49 AM

  அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  \\சுதந்திரப் போராட்டத்தில் 121 பேர் கொல்லப்பட்டனர். அதில் 93 பேர் சீக்கியர்கள் இதிலிருதே அவர்களின் நாட்டுப் பற்று நமக்கு புரியும்.//

  121 பேர் கொல்லப்பட்டனர்.என்பது சரியில்லை.
  121 பேர் தூக்கிலிடப்பட்டனர்.என்பது தான் சரி

  சுதந்திரப் போராட்டத்தில் 121 பேர் தூக்கிலிடப்பட்டனர் அதில் 93 பேர் சீக்கியர்கள் இதிலிருதே அவர்களின் நாட்டுப் பற்று நமக்கு புரியும்.

  தவறு நேர்ந்தமைக்கு மன்னிக்கவும்.

 • October 30, 2011 at 6:16 AM

  ஸ்ஸலாமு அலைக்கும்,அன்பு சகோதரர் அவர்கட்கு ,இஸ்லாத்தை இப்போது புக கம்யுனிஸ்ட்கள் அதிகமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.திறந்த புத்தகம் போல உள்ள நபி[ஸல்]அவர்கள் வாழ்க்கை யை கம்யுனிஸ்ட்கள் தங்களது மனம் போன போக்கில் கையாள தொடங்கி உள்ளனர்.ஆதலின் தங்களைப் போன்றோர் கம்யுனிச கொள்கைகளைப் பற்றியும் இனைய தளங்களில் உள்ள அதன் தலைவர்கள் பற்றிய விமர்சனம் களையும் ஆய்வு செய்து மக்கள் மத்தியில் கொண்டுவர முயற்சிக்க செய்யுங்கள்.நன்றிகள்

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!