கண்ணியமான முஸ்லிம்களின் வீடுகளுக்குள்ளேயும் டிவி மூலம் வண்டி வண்டியாக ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆபாசத்தை முற்றிலுமாக வெறுக்கும் முஸ்லிம்களுக்கு சிறிது ஆறுதலாக மக்கள் தொலைக்காட்சி கிடைத்திருக்கிறது.
அதிலும் சில நெருடலான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.
'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.
ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண்.
இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை.
'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.
இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும்.
ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.
அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும்.
இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும்.
அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார் 'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.
அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.
ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், "முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள். அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள்.
ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது.
எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்" என்றார் (உரையின் சுருக்கம்)
இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார்.
நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்
மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.
அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்
அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.
அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்லவில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள்.
பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
'வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல.
அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்
தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - இப்னு ஃபாத்திமா
நன்றி: முத்துப்பேட்டை
உங்களுக்கே.!!!
அருட்கொடையாம் தொழுகை
ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி
உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?
ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.
இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.
ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்
இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?
உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.
இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.
உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற
உண்மை உணர்ந்தீரா?
தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,
நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?
உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.
பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.
இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.
தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."
தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.
தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.
தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.
நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.
வாஞ்சையுடன் வாஞ்சூர்.
திருக்குர்ஆன் 3:104
"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்."
.......... க்ளிக் செய்யுங்கள்
***************
திருக்குரானில்
அதிசயத்தக்க சான்றுகள்.
....................
நேரடியாக காணுங்கள் !!!!
மஸ்ஜிதில் ஹரம் - மக்கா
********
மஸ்ஜிதுன் நபவி மதினா
*******
உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?
நபிமொழி அறிவோம்!
செய்தீர்களா?
1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?
2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?
3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?
4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?
5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?
6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?
7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?
8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?
9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?
10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)
11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?
12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?
13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?
14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?
15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?
16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?
17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?
18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?
19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?
20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?
21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?
22. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)
23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?
24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?
25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?
26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?
27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?
28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?
29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?
அஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா? 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?
31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?
32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?
33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?
34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?
35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?
36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?

வெள்ளிக்கிழமைகளில்
37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா?
38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா?
39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா?
40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா?
ஒரு வாரத்துக்கு - சிறப்பாக
1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா?
2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா? யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா?
3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா?
4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா?
5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா?
....................
ஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்
அதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்
பதிவர்கள்
- 'ஒருவனின்' அடிமை (7)
- அபு இஸாரா (1)
- அபூ முஹை (1)
- அன்னு (2)
- அஸ்மா (1)
- ஆயிஷா அபுல் (2)
- ஆஷிக் அஹ்மத் (24)
- குலாம் (26)
- சுவனப்பிரியன் (1)
- பி.ஏ. ஷேக் தாவூத் (1)
- மஸ்தூக்கா (9)
- முஹம்மத் ஆஷிக்_citizen of world (6)
- ருக்கயா அப்துல்லாஹ் (2)
- வாஞ்ஜுர் (12)
- ஜாஃபர் (1)
- ஜெமில் (5)
- ஹாஜா (5)
- ஹைதர் அலி (1)
பிரிவுகள்
synthetic cell
(1)
அழகிய முகமன்
(1)
ஆதம் (அலை)
(1)
இணைவைத்தல்
(2)
இறைத்தூதர் வரலாறு
(1)
இன இழிவு
(1)
இஸ்லாம்
(25)
உதவி
(1)
உலகம்
(3)
எய்ட்ஸ்
(1)
ஏழை வரி
(1)
ஏற்றத்தாழ்வு
(1)
கடவுள்
(8)
குர்ஆன்
(4)
குற்றச்சாட்டுகள்
(2)
சகோதரத்துவம்
(3)
சிந்திக்க
(4)
சொர்க்கம்
(1)
டாட்டூ
(1)
திரித்தல்
(1)
தீர்வுகள்
(1)
நகைச்சுவை
(1)
நபித்தோழர்கள்
(1)
நாத்திகம்
(12)
நிகாப்
(1)
நோய் பாக்டீரியா
(1)
நோன்பாளி
(2)
பரிணாமவியல்
(3)
பரிந்துரை
(1)
பாதுகாப்பு
(1)
பெண்கள்
(2)
மன்னிக்கப்படாத பாவம்
(1)
மஸ்ஜித் அல் அக்ஸா
(1)
முஸ்லீம் மீடியா
(1)
ரமழான்
(3)
வரலாறு
(3)
ஜக்காத்
(2)
ஹஜ்
(1)
ஹிஜாப்
(3)
Saturday, September 4, 2010
வணக்கத்திற்கு பதிலாக வாழ்த்துக்கள்.
at
Saturday, September 04, 2010
Posted by
மஸ்தூக்கா
0
கருத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment
அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.
நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!