Thursday, September 23, 2010

அமைதி காப்போம்

6 கருத்துக்கள்
பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி அலஹபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.


 வதந்திகள், உணர்ச்சியை தூண்டக்கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் முதலியவற்றிற்கு பதிலளிக்கவோ எதிர்வினைகளில் ஈடுபடவோ வேண்டாம். இதுபோன்ற விஷமிகளின் வன்முறையை தூண்டும் முயற்சிகளுக்கு நாம் பலியாகிவிட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்படும் எனவே இவர்களின் இம்முயற்சிகளுக்கு அடிபணிந்து விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நாம் முயற்ச்சிகளை மேற்கொள்வோம் இன்ஷா அல்லா.

எனவே பொதுமக்கள் கீழ்காணும் வழிமுறையை கடைபிடித்து பொறுமையுடன் அமைதி காப்போம்

  1. வதந்திகளுக்கு செவிசாய்க்க, பரப்புவதற்கு உதவ வேண்டாம்
  2. மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய SMS அனுப்ப வேண்டாம் அது பிரார்தனையாகவோ செய்தியாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பாக இருந்தாலும் சரியே
  3. முஹல்லா அல்லது ஏரியா சமுதாய தலைவர்கள் காவல்துறையினரின் தொடர்பில் இருக்கவேண்டும்
  4. ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனேயே அதனை காவல்துறையினரிடம் தெரியப்படுத்திவிடவேண்டும்
  5. இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம், எனவே தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும்
  6. நீதித்துறையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும் எனவே நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அதில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கும் வழிவகை உள்ளது
அமைதிக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து பாடுபட வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .

எதிர்காலத்தில் உலகளாவிய தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில் உள்ளதால் முழு உலகமே இந்தியாவை உற்று நோக்கிக்கொண்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்

6 கருத்துக்கள்:

  • September 23, 2010 at 2:24 PM

    பிரமாதம்! மிகப் பொறுப்பான, மிகத் தெளிவான, தேசப்பற்று மிகுந்த இடுகை. வாழ்த்துக்கள். இதே பண்பும் பக்குவமும் ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் இருக்குமானால் நம்மை யாராலும் அசைக்க முடியாது.

    கீப் இட் அப்!!

    http://kgjawarlal.wordpress.com

  • September 24, 2010 at 11:19 AM

    சகோதர சகோதரிகள் அனைவருக்கும்,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    தீர்ப்பு எதுவாகினும் அது இறைவனின் நாட்டம் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். அதனால் முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை தூண்டுமாறு sms வந்தால் அதை தயவுக்கூர்ந்து forward செய்யாதீர்கள். இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அவனுக்கு அஞ்சி கொள்வோம்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  • September 24, 2010 at 2:42 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் தீர்ப்பு எதுவாயினும் அஃது அது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடப்பதே ஆகும்.எனவே முஸ்லிம்களுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எத்தகைய தீர்ப்பும் வரலாம். தீர்ப்பு சாதகமாக வந்தால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக இரு ரக்அத் தொழுங்கள்..அஃதில்லாமல் பாதகமான முறையில் தீர்ப்பு வந்தாலும் நாம் பொறுமை மேற்கொள்ள வேண்டும் விதமாக இரு ரக்அத் தொழுங்கள். இன்ஷா அல்லாஹ் மிக்க அறிந்து தான் எதையும் இந்த மனித சமுகத்திற்கு வழங்குவான். எவர் கரங்களாலோ,நாவாலோ ஏனையோர் அச்சமின்றி பாதுகாப்பு பெறுகிறாரோ அவர் தான் உண்மை முஸ்லிம் -எனும் நபி மொழிக்கேற்ப அல்லாஹ் நம்மை பொறுமை கொள்ளும் உண்மை முஸ்லிம்களாக ஆக்கி அருள்வானாக!

  • September 24, 2010 at 3:04 PM

    தீர்ப்புகள் தீர்வல்ல. மதங்கள் மதிக்கப்பட்டு, மனிதம் பேனப்படவேண்டும்.

    அல்லாவும், ராமனும் ஓரிடத்தில் அருள் செய்யட்டும்.

  • September 24, 2010 at 3:12 PM
    Anonymous :

    wonderful and great post.
    i pray for everyone.

  • September 30, 2010 at 2:20 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்
    தீர்ப்பு சாதகமாக இருக்கும்பட்சத்தில் ஆரவாரம் செய்வதையோ பாதகமாக இருக்கும்பட்சத்தில் கலவரம் செய்வதையோ இரண்டு தரப்புமே தவிர்க்க வேண்டும். அமைதி கெட கூடாது என நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
    அன்பின் சகோதரர் ஒருவனின் அடிமை கவனிக்க,
    இந்த தளத்தில் எந்த அமைப்பை சார்ந்த கருத்துக்கள வர கூடாது எனபதுதான் போது விதியாக வைத்திருக்க நீங்கள் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையை அதன் பெயரோடு வெளியிட்டிருப்பது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும். இனிவரும் காலங்களில் இதை தவிர்க்க வேண்டுகிறேன்.

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!