Thursday, September 16, 2010

பெண்களே உங்களைத் தான்!

1 கருத்துக்கள்
                     நம் அனைவரின் மீதும் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக!



   இன்று உலக அளவில் ஏனைய சோஷியல் நெட்வொர்க் இணைய பார்வைகளை விட "ஃபேஸ்புக்" எனப்படும் மேற்கத்திய கலாச்சார அடிப்படையில் ஆண்,பெண் நட்புறவை(?) வலுப்படுத்தும் சமுக வலையிலேயே பெரும்பாலான மக்கள் தம் நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்களே அதிகமாக உலா வருகின்றனர் அத்தகைய நேரத்தில் நட்பின் அடிப்படையில் சாட்டிங்கில் ஈடுபடும் பெண்கள் பலர் இதற்காகவே காத்திருக்கும் காமுகர்களின் நரித்தந்திர பேச்சுக்கு தம் நேரத்தை அற்பணித்து இறுதியில் தம் கற்பையும், உயிரையும் இரையாக்குகின்றனர். இதை படிக்கும் இந்நேரத்தில் கூட நம் வீட்டு பெண்கள் அவ்விணையங்களில் உலா வந்துக்கொண்டிருக்கலாம் எனவே கலாச்சாரம்,நாகரீகம் என்ற போர்வையில் நாம் நம் பெண்களுக்கு அளிக்கும் சுதந்திரம் அவர்களின் வாழ்வுக்கே உலை வைக்கும் அளவிற்கு போகவிடாமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.அதற்கான ஒரு நினையுட்டலே இக்கட்டுரை!
   

உயிரைக் குடித்த பேஸ்புக்

இளைஞர்கள் மத்தியில் சமூக இணையதளமான பேஸ்புக் பிரபலமானது. இதனைப் பயன்படுத்தி பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் இந்த இணைய தளத்தின் காரணமாக ஒரு கொலை
ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது அந்த அரசாங்கத்தை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 18 வயது இளைஞி நோனா பிளோமிசாப். இவர் பேஸ்புக்கில் தனது முழு விபரங்களையும் வெளியிட்டு தனது நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டோபர் ஜேம்ஸ் என்ற 20 வயது இளைஞர் தான் மிருக நலச் சங்கத்தில் வேலை செய்வதாக தெரிவித்தார். இவரது பேஸ்புக் இணையதளத்திலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். நோனாவும் மிருக நலத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் ஜேம்ஸூடன் நட்பு வைத்திருந்தார். நோனாவின் மதிப்பைப் பெற்ற ஜேம்ஸ் நோனாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னோடு சுற்றுலா வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்.
சுற்றுலா சென்று இரண்டு நாட்கள் கழித்து மே 14ம் திகதி சிட்னியின் கடற்கரையோரத்தில் நோனா பிணமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கிறிஸ்டோபர் ஜேம்ஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தாலும் பேஸ்புக்கின் மீதான கவர்ச்சி குறைந்தபாடில்லை. இணையம் மூலம் ஏற்படுகின்ற நட்பை நம்பி நம்மைப் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது பாதுகாப்பானது.
  நன்றி:இந்நேரம் டாட் காம்
        மேற்கண்ட கட்டுரைப் போன்றவற்றை ஆயிரம் முறை வாசித்திருக்கின்றோம்.ஆறாயிரம் முறைஅதைப்பற்றி சகாக்களோடு நாம் விவாதித்தும் இருக்கிறோம். எனினும் இது அடுத்தவருக்கு எனும்போது அதை வெறும் ஒரு சம்பவமாகவே பார்க்கிறோம். முதலில் அந்த எண்ணத்தை முழுவதும் மாற்றுங்கள்., பட்டுத்தான் தெளிவு பெற வேண்டும் என்பது எல்லாவற்றிருக்கும் பொதுவான விதியில்லை. எனவே இது எல்லோருக்கும் பொதுவான ஒரு அறிவிப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்., "அறிவாளி ஓரே புற்றில் இருமுறை தீண்டப்பட மாட்டான்" - நபி மொழி

              இங்கு உண்மையான அறிவாளிகள் யார் என்பதை   உரியவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்



1 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!