Wednesday, September 1, 2010

ஏன் இஸ்லாம்..?

4 கருத்துக்கள்
                                         ஓரிறையின் நற்பெயரால்,

   "இஸ்லாம் " என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதம் சார்ந்த/ சாரா கொள்கையுடையவர்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. ஏன் ?

இஸ்லாம் இந்த மனித சமுகத்திற்கு அளித்தது என்ன?

மனித சமுகத்திலிருந்து அழித்தது என்ன? என்று அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 முதலில் யாவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்., இஸ்லாம் சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாக அரேபிய பாலையில் முஹம்மது நபியால் தொடங்கப்பட்ட மதமல்ல., மாறாக முஹம்மது நபி அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமே இஸ்லாம்.

ஏனெனில் மனித மூலத்தின் ஆதி பிதா மண்ணில் படைக்கப்பட்டதிலிருந்தே இஸ்லாம் மனித மனங்களில் உலாவர துவங்கிய மார்க்கம்.

இத்தெரிவை ஆயிரம் முறை உலகுக்கு அறிவுறுத்தியும் ஆயிரத்தொருமுறை இவ்வுலகு அதனை தவறாக புரிந்துக்கொண்டது அல்லது இவ்வுலகிற்கு தவறாக புரிய வைக்கப்பட்டது., எனவே தான் இஸ்லாம் குறித்து "மிக மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட அழகான மார்க்கம்" என பெர்னார்ட் ஷா கூறினார்.

    ஏனைய மதங்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை ஒரு வரையறுத்தலின்றியே வைத்திருக்கும் இக்காலக்கட்டத்தில் இஸ்லாம் மட்டுமே மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்னமே அதன் கொள்கை கோட்பாடுகளை முன்மொழிந்து அது எக்காலத்திற்கும் எதற்காகவும் யாருக்காகவும் நெகிழ்வடையாது என உரக்கக்கூறிய மார்க்கம்.

ஆனால் இன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாத்திற்கு எதிராக நடுநிலை சிந்தனை தவிர்த்த ஏனையோரால் அநாகரிகத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி விமர்சனம் என்ற பெயரில் தன்னின் மட்டரக எண்ணங்களுக்கு நாகரிக ஆடை கட்டி நாடெங்கிலும் நடமாட விட்டு மகிழ்கின்றனர்.

அதிலும் இணையத்தில் விமர்சிப்போர்  தங்கள் வார்த்தை வாகனத்தில் வன்முறை எழுத்துக்களையே வறுத்தமின்றி சுமந்து வருகின்றனர். இஸ்லாமிய (?) பயங்கரவாதத்தை வேரறுக்கிறோம் என கூறி எழுத்து பயங்கரவாதத்தை அமோகமாக இணையத்தில் அறுவடை செய்கிறார்கள்.

அவர்களிடம் நாம் கேட்டு கொள்வது எல்லாம் ஒன்று தான் "இஸ்லாம் முன் மொழியும் எந்த ஒரு நடைமுறை சட்டம் இன்று மனித சமுகத்திற்கு பொருந்தாது? என்பதை குறித்து விமர்சனம் செய்யுங்கள்

   இவ்வாறு கேட்ட மாத்திரத்தில் "உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? என்பதே ஏனையோரின் எதிர்கேள்வியாக இருக்கும்.

உங்களோடு சேர்ந்து நாங்களும் கேட்கிறோம்...உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? இஸ்லாமும் அது கூறும் வழி முறைகளுமா...? அல்லது இஸ்லாமிய பெயரில் அறியாமையால் செய்யும் தனிமனித அல்லது சுயநலம் விரும்பும் சமுக குழுக்களா...?

எங்கோ உயிர்க்கொலைகள் -முகவரியில்லா முஸ்லிம் முகங்கள் செய்வதாக கூறப்படுபவை உண்மையல்ல.அஃது அது உண்மையென்றால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல!

ஏனெனில் எந்த காரணமுமின்றி ஒருவனை கொலை செய்தவன் சமுகம் முழுவதையும் கொலை செய்தவன் போலாவான் என்ற நபிவழியில் வார்ர்த்தெடுக்கப்பட்டவர்கள் தான் உண்மை முஸ்லிம்கள்.

ஆப்கானிய தாலிபான்களையும், எங்கோ இருக்கும் அல் கொய்தாவையும் விடுங்கள் (அவர்கள் செய்வதை நானறியேன்)  உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் முஸ்லிம்கள் எத்தனை முறை உங்களை வாளெடுத்து வெட்ட வந்திருக்கிறார்கள்?

தாங்கள் இல்லாத பொழுது எத்தனை முறை உங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்க முற்பட்டிருக்கிறார்கள்...?

அல்லது யாரும் இல்லாதபோது உங்கள் வீடுகள் குண்டு வைத்து எத்தனை முறை தகர்க்க பட இருந்தது...?

சற்று நடு நிலையோடு சிந்தித்து சொல்லுங்கள்   

இஸ்லாமல்லாத இணைய சகோதர்களே மேற்கத்திய ஊடகங்களின் பயங்கரவாத சாட்சியாக சித்தரிக்கபடும் முஸ்லிம்கள் ஆளுயர ஆடையும், அதைவிட பெரிதாக ஆயுதமும் கொண்டு காட்சியளிக்கும் நிலை மாற்றி., உங்கள் தெரு கோடியில் டீ கடை வைத்திருக்கும் அப்துல் ரஹ்மானும்,உங்கள் கண்ணெதிரே ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வும் முஸ்லிம்கள் தான் என்பதை உணருங்கள்.

இஸ்லாமின் ஏனைய ஆக்கங்கள் குறித்து விமர்சனம் எழுதுவதை விட பர்தா குறித்து எழுவதே அதிகம்,அனைத்திற்கும் பதில் அளித்தாலும் மீண்டு(ம்) அவர்களிடம் முளைக்கும் கேள்வி ஏன் கட்டாய படுத்துகிறீர்கள்?

இக்கேள்விக்கு முன் இம்மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை என்பதன் அர்த்தம் அறிவார்களா குர்-ஆனை கரைத்து குடித்த இந்த அரைகுறை அறிவு ஜீவிகள்,. இஸ்லாம் முன் மொழியும் பர்தா (அது பெண்களுக்கு மட்டுமானது அல்ல பார்க்க :அல்குர்ஆன்-24:30)  இந்த சமுக பெண்களுக்கு எத்தகைய கேடுகளை விளைவித்தது?

பர்தா அணிந்த பெண்களை நெருப்பில் விழுந்த விட்டில்களாக வர்ணிக்க முற்படுவோர் இஸ்லாம் ஏன் பெண்களுக்கு அவ்வாறு கூறுகிறது என்ற உண்மையே அறிந்துக்கொண்டே மறுக்காதீர்கள்.(பர்தா குறித்து மேலும் அறிய)
   
அதுப்போலவே பலதார மணமும்., பலதார மணத்தை எதிர்ப்போர் வாழும் நாட்டில் தான் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறை அணியுங்கள் என விபச்சாரத்தின் வாசலுக்கு விலாச விளம்பரம் செய்யப்படுகிறது.

மேலும் சின்ன வீடு என்றும் வைப்பாட்டிகள் என்றும் பெண்களுக்கு உயர் அந்தஸ்து(?) வழங்கவதை பலதார மணம் முற்றாக தவிர்க்கிறதே அதற்காகவா இஸ்லாத்தின் மீது கோபம்?

இதை எதிர்ப்போர் முதலில் "இன்று உலகில் நடைபெறும் விபச்சாரம் முழுவதையும் சின்ன வீட்டு பிரச்சனைகளையும் முற்றாக ஒழியுங்கள் பின்பு நாமும் ஒத்துக்கொள்கிறோம் பலதார மணம் வேண்டாம் என்று.

இங்கு தடுப்பது ஒரு விசயமல்ல ஒழிப்பது தான் முக்கியம்.அதை தான் இஸ்லாம் சொன்னது, செய்யவும் சொன்னது. இஸ்லாமியனாக பிறக்கும் எல்லா முஸ்லிம்களும் நான்கு மனைவிகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது மார்க்கம் வலியுறுத்தும் கட்டாய கடமையல்ல...அது ஒரு சலுகை மட்டுமே...அதற்கு உங்கள் வீடுகளுக்கு அருகாமையில் வாழும் முஸ்லிம்களே சாட்சி!
  
இணைய சகோதரர்களே தாங்கள் தாராளமாக இஸ்லாத்தின் மீது ஆதாரத்தோடு குற்றச்சாட்டை முன் வையுங்கள். உங்களுக்காக பதில் தர இஸ்லாம் காத்திருக்கிறது உங்களது எண்ணங்களை சந்தேகமாக வையுங்கள் ஆனால் காழ்ப்புணர்ச்சியில் மட்டும் வேண்டாம்.

இன்று இஸ்லாமியர்களை விட அஃதில்லாதோர் தான் இஸ்லாத்தில் குறை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாமிய நூல்களை அதிகமாக பார்வையிடுகிறார்கள்

அல்ஹம்துலில்லாஹ்! தனக்கு அறவே பிடிக்காது என்று சொல்வனவற்றோடு தான் தங்கள் அன்றாட வாழ்வை கழிக்கிறார்கள்.

இது தான் இஸ்லாம் மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம்.

நீங்கள் இஸ்லாத்தை நேசிக்க வேண்டாம் உங்கள் எண்ணங்கள் உண்மையே சுவாசிக்கட்டும் ஏனெனில் இஸ்லாம் பற்றி அறிய அதுவே முதற்படி

ஏன் இஸ்லாம் என இஸ்லாத்தில் குறை காண புறப்பட்டவர்களின் தேடுதல் நடுநிலையோடு இருந்ததனால் தான் மால்கம்X ,பிலால் பிலிப்ஸ் போன்றோர்கள் முதல் இன்று பெரியார்தாசன் வரை சொல்லிக்கொள்கிறார்கள் "என் இஸ்லாம்"

குறிப்பு:இன்று நீங்களோ, நானோ இஸ்லாத்திற்கு வருவதாலோ, வெளியேருவதாலோ இஸ்லாத்திற்கு எந்த உயர்வும், தாழ்வும் இல்லை மாறாக நன்மையும் தீமையும் நமக்கே!
    
  எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (இறுதி வேதம் 2:146)

                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்

4 கருத்துக்கள்:

  • September 2, 2010 at 2:53 PM
    Anonymous :

    vandhe matharam paada mattom engalakku kurane vedham athil irunthu anu alavum pisagamattom, allavai thavira yaaraiyum vananga maattom thaai naattaiyo thaai moliyaiyo yen pettra thaiyai kooda vananga maattom endru koorum athe muslim varathatchanai vaangum pothu yenge ponathu iraiacham (naangalo allathu engalakku therinthavargal yaarume varathatchanai vaanguvathillai yendru ungalal sathiyam seyya mudiyuma ) vangiyil FD pottu vatti vangum pothum arasu mattrum thaniyaar velaiyil irunthu kondu vaangum PF vatti panathai perumpoluthum enge ponathu irai acham, ungalakku vendum yendraal kuraanai thunaikku alaippirgal illavittal athanaiye thooki yerivirgal, ondarai mattum ninaivilkoolungal neengal engalai yemattralam arasanagthai yemattralam, yellam valla eraivanai yemattra mudiyathu

  • September 2, 2010 at 3:13 PM

    சகோதர் அவர்களுக்கு நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    இந்த ஆக்கத்தின் பேசுப்பொருள் இஸ்லாம் குறித்த நடுநிலையற்ற பார்வைக்கு சிறு விளக்கமே., தாங்களே இவ்வாறு மேற்கோள் காட்டுகிறீர்கள், அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறீர்கள் அவனுக்கு இணை வைக்கமாட்டோம் என கூறுகிறீர்கள் சரியே., பிறகு எப்படி மண்ணுக்கு வணக்கத்தை செலுத்த முடியும்? ., வரதட்சணை குறித்து கேட்கிறீர்கள்., இங்கு குர்-ஆனோ,ஹதிஸ்களிலோ எங்காவது வரதட்சணை வாங்குங்கள் என பிரகனப்படுத்தி இருக்கிறாதா?(இந்த ஒப்பிட்டு புரிதலுக்காக தான் பயங்கரவாதம் பற்றி ஒரு உதாரணமும் ஆக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது)
    அடுத்து வட்டி, இதை அங்கீகரிப்பது இஸ்லாமிய சட்டமா? அல்லது இந்திய சட்டமா? தாங்கள் தாரளாமாக வங்கிகளின் நிரந்தரவைப்பு நிதி மற்றும் ஏனைய நிதிகளுக்கு கூடுதல் பங்காதாயம் எனும் பெயரில் வட்டி தரும் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை வையுங்கள் உங்களோடு சேர்ந்து நாங்களும் எதிர்க்கிறோம்.அதுப்போன்ற ஏனைய முஸ்லிம்கள் செய்யும் தவறுகளும் ஐயா., நாம் உங்களிடம் சொல்லிக்கொள்வது ஒன்று தான்.,முஸ்லிம்கள் செயவது எல்லாம் இஸ்லாம் ஆகாது.இஸ்லாம் சொல்வதை நடைமுறை படுத்துவர்கள் மட்டுமே முஸ்லிம்கள் அவ்வாறு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் தவறுகளை ஆங்காங்கே சுட்டி காட்டப்பட்டு கொண்டிருக்கத்தான் செய்கிறது., இங்கு கேள்வி இஸ்லாம் மனித சமுகத்திற்கு என்ன ஒழுக்க மற்றும் சமுக சீர்க்கேட்டை விளைவித்தது என்பதே?ஆதார ரீதியாக விளக்க முயற்சியுங்கள்.,
    யார் யாரை எமாற்றுவது., பாருங்கள் உங்கள் பெயர் கூற கூட நேர்மையற்று தான் உங்கள் கருத்துக்களை பதிகிறீர்கள் இதுதான் வேண்டாம் என்கிறோம், நாங்கள் யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை சகோதரர் நன்கு புரிந்துக்கொள்ளுங்கள்.இங்கு உங்கள் எண்ணங்கள் எழுப்பும் கேள்விகள் நடுநிலையோடு அமைய வேண்டுமென்பதே எங்கள் எழுத்தின் ஆவா

    மேலும் உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்ற்ச்சாட்டுக்களை உம்மத் வரவேற்கிறது நியாயமான முறையில்

  • September 2, 2010 at 11:48 PM
    shankar :

    சகோதரருக்கு வணக்கம்,
    குரான் பின்பற்றாதவர்களை நீங்கள் உங்கள் மதத்தை விட்டு விளக்கி வைப்பிர்களா?
    எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்லும் அல்லா அவர்களை தடுப்பதில்லை?
    ஹிந்து மதத்தில் எல்லாம் அவர் அவர் விருப்பபடி செய்யலாம். செய்யும் செயலுக்கு ஏற்ப அவருக்கான தண்டனை ஆண்டவனிடம் கிடைக்கும்.ஹிந்து மதம் துறவு பற்றி சொல்லும்போது விருப்பம் உள்ளவர்கள் மட்டும் மேற்கொள்ளலாம். அதுவும் அவர்கள் கல்யாணம் முடித்து மரணத்தின் தருவாயில் மேற்கொள்ளலாம். இல்லை அப்துல் கலாம் அல்லது வாஜ்பாய் போள்ளவும் இருக்கலாம் எதுவும் கட்டாயம் கிடையாது. துறவின் முக்கிய அம்சம் பட்டற்ற மனநிலை மற்றும் யாசித்து புசிப்பது. இது எல்லோராலும் முடியாது.

  • September 3, 2010 at 4:11 PM

    சகோதர் அவர்களுக்கு நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    தங்களின் பகிர்வுக்கு நன்றி.,
    //குரான் பின்பற்றாதவர்களை நீங்கள் உங்கள் மதத்தை விட்டு விளக்கி வைப்பிர்களா?எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்லும் அல்லா அவர்களை தடுப்பதில்லை?//
    இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல., நமது வாழ்வில் மேற்கொள்ளும் அனைத்து செயல் பாடுகளுக்கும் நடைமுறை ரீதியாக நன்மைகளையும் தீமைகளையும் பிரித்தறிவிக்கும் ஒரு வழிமுறை. ஏனெனில் குர்-ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலகத்தார் யாவருக்கும் பொதுவான ஒரு நூல்
    இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும் (2:2)
    (இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது.(31:3)
    மேலும் பார்க்க:17:9&82, 18:2, 19:97, 20:2, 27:2, 39:41, 43:44)
    மேற்குறப்பட்ட திருக்குர்-ஆன் வசனங்கள் மிக தெளிவாக வாழ்வின் அடிப்படையே விளக்குவதால் அவரவர் வாழும் முறைமைக்கேற்ப இறப்புக்கு பின்னுள்ள வாழ்வில் அதற்கான வெகுமதியோ,தண்டனையோ வழங்கப்படும்.எனவே மிகவும் உலகளாவிய தெளிவுறுத்தல்கள் விரிவாக விவரிக்கப்பட்டிருப்பதால் யாரையும் யாரும் இஸ்லாத்தை விட்டு தள்ளி வைக்க முடியாது.
    //ஹிந்து மதத்தில் எல்லாம் அவர் அவர் விருப்பபடி செய்யலாம்.//
    நமது விருப்பபடி செய்யலாம் என்றால் எப்படி நாம் ஒன்றை பின்பற்றுவது அல்லது ஒன்றுக்கு கட்டுபடுவது ஆகும்?.ஏனெனில் ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி ஏனைய மற்ற செயல்பாடுகளை நமது எண்ணத்தில் நிறைவேற்றலாம் என்றால் நாம் பின்பற்றும் அந்த ஒரு சட்டவரையறைகள் முழுமையடையவில்லை என்பதே அதன் அர்த்தம்.எல்லா சூழ்நிலைகளிலும்,காலங்களிலும் நிரந்தமாக பின்பற்ற தகுந்த சாத்தியக்கூறுகள் இந்து மதத்தில் இல்லையா?சகோதரர் தாங்கள் தான் இதற்கு விளக்கம் தர வேண்டும்
    பிறகு துறவறம் பற்றி கூறுகிறீர்கள்., , சகோதரரே., துறவறம் ஏன் மேற்கொள்ள வேண்டும்? இந்து மத வேத கிரகந்தங்களிருந்து இதற்கு மேற்கோள் காட்ட முடியுமா? இறைவன் மனிதர்களை படைத்தது அவனது ஏவல் விலக்கல்களை முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என்பதற்காக தான்.அத்தோடு குடும்பவாழ்வியலிலும் அவன் ஈடுபட வேண்டும் அதன் மூலமாக ஏனையோர் மத்தியில் இறைவனுக்கு பயந்து நீதமாக நடந்துக்கொள்கிறானா என்பதை இஸ்லாம் எதிர்பார்க்கிறது.தாங்கள் கூறும் துறவறம் மூலம் இறைவனை அடைய வேண்டும் என்பது சரியா? வாழ்வின் மீது பற்றற்ற நிலை ஏன் வர வேண்டும்? வாழ்வின் மீது விரக்தியோ,வாழ்வாதாரத்தை பெற இயலா கோழை தனமோ தான் துறவறத்திற்கு மூலாதாரம்.மேலும் அவ்வாறு துறவறம் மேற்கொள்ளும் முற்றும் துறந்தவர்கள் எதை திறக்கிறார்கள் என்பதை நாம் ஊடகங்களை திறந்தால் நாள்தோறும் பார்க்கலாம்.இஸ்லாம் இதை அடியோடு அனுமதிக்கவில்லை என்பதை விட வன்மையாக கண்டிக்கிறது

    கடவுள் தொடர்பான உங்களின் ஏனைய சந்தேகங்களுக்கு இங்கே பார்வையிடவும்

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!