Wednesday, August 18, 2010

சிரித்து வாழ வேண்டும்.

0 கருத்துக்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
"இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்'
என்று போதித்திருக்கிறார்கள்.

ஒருநாள் ஒரு மூதாட்டியார் நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், ""அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். "


"இறைத்தூதரே! எனக்கு ஒரு ஒட்டகம் தேவைப்படுகிறது. பயணம் செய்வதற்கென எனக்கு ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் சிரமப்படுகிறேன்,'' என்றார்.

அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம் (ஸல்) அவர்கள், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள்.

அந்த மூதாட்டி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார்.

""இல்லை, இல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண் ஜாடை காட்டினார்கள்.

சற்று நேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார்.

""நாயகமே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,'' என்றதும்,

நாயகம் சிரித்தபடியே, ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,'' என்றார்.

இதைக் கேட்ட அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார்.

மனிதர்கள் சிரித்து வாழ வேண்டும். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

vanjoor

0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!