Friday, August 13, 2010

"இது"மூலமும் எயிட்ஸ் வரும்

0 கருத்துக்கள்
‘டாட்டூ’ (பச்சை) குத்திக் கொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் வரும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவு பழங்குடியினர் பயன்படுத்திய வார்த்தை ‘டட்டாவ்’. இதையும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வசதியாக உச்சரித்து ‘டாட்டூ’ என ஆக்கியதில் உலகம் முழுவதும் பேஷன் ஆக்கிவிட்டனர். 
 
இப்போது லேசுபாசாக விழித்துக் கொண்டு கிராமத்துக்காரர்கள் பச்சையை மறந்து விட்டனர்.
 
ஆனால், பச்சை அப்படியே டாட்டூவாக்கி மேல்தட்டு நாகரிக நகரவாசிகள் இன்னும் அதை தொடர்கின்றர்.உடம்பில் மறைவிடங்கள் உட்பட எல்லா பாகங்களிலும் பச்சை (டாட்டூ) குத்தி கொள்கின்றனர்.
 
அதிகளவில் டாட்டூ குத்துவது ஆபத்து என்று தற்போது தெரியவந்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக ஒரு ஆய்வு. அமெரிக்கா, ஈரான், இத்தாலி, பிரேசில் உள்பட 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 124 ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரிப்போர்ட் தயார் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பது:
 
டாட்டூ போடும்போது தோல் ஒரு வினாடிக்கு 80 முதல் 150 முறை பஞ்சர் செய்யப்படுகிறது. மேலும் ரத்தம் உள்ளிட்ட உடல் திரவங்கள் மீது இக்கருவியின் ஊசிமுனை படுகிறது. கருவியை முறையாக ஸ்டெரிலைஸ் செய்யாமல் பலருக்கும் பயன்படுத்தினால் கிருமிகள் பரவி நோய் ஏற்படும். டாட்டூவில் பயன்படுத்தப்படும் நிறமிகளும் பெரும்பாலும் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை. நோய்களை பரப்புவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு.
 
டாட்டூ அகற்றும்போதும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. டாட்டூ அகற்ற தெர்மல் இன்ஜுரி, டெர்மப்ரேஷன், க்ரயோதெரபி போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதிலும் அதிக கவனம், பாதுகாப்பு அவசியம். சுத்திகரிக்கப்படாத கருவிகளை பயன்படுத்தினால் எச்.ஐ.வி., எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் வரலாம்.
 
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இஸ்லாம் பச்சை குத்துவதை அன்றே முற்றிலும் தடை செய்துள்ளது. நபிகள் (ஸல்) அவர்கள் இவர்களை சபித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பச்சை குத்திக்கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்! 
நூல்: புகாரி- 2238

0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!