Thursday, August 26, 2010

காவி தீவிரவாத அதிர்ச்சி ப.சிதம்பரம்-ஞாநி

9 கருத்துக்கள்
காவி தீவிரவாதமும் ப.சிதம்பரமும்!

டில்லியில் நேற்று அனைத்து மாநிலக் காவல் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தெரிவிததுள்ளார்.

தற்போது புதிதாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது. சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் காவி உடை அணிந்தவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு சிறு திருத்தம் என்னவென்றால் புதிதாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது என்பதாகும்.

என்றைக்கு இந்து மகா சபையும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார்க் கும்பலும், அவற்றின் அரசியல் வடிவமான ஜனசங்கமும், பாரதீய ஜனதாவும் தோற்றமெடுத்தனவோ, அந்த நொடி முதலே அதன் குருதி ஓட்டத்தில் மதக் கலவர எண்ணங்கள் கருத் தரித்து அவ்வப்போது வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கலவரத்துக்குக் கத்தி தீட்டிதான் வந்திருக்கின்றன.

அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆணையங்களும் ஆதாரப் பூர்வமாகவே இந்தக் கூட்டத்தின் வன்முறைக் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தியும் உள்ளன. இதற்காகவே இந்த அமைப்பின் முக்கிய கூர்மையான அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பலமுறை தடை செய்யவும் பட்டது.

இந்தியா முழுவதும் நடைபெற்று வந்திருக்கிற பல்வேறு கலவரங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும், சங் பரிவார்க் கூட்டத்தின் தலைமை அமைப்புகளுக்கும் சங்கிலித் தொடர்போன்ற இணைப்புகள் இருந்திருக்கின்றன என்ற தகவல் ஆதாரப் பூர்வமாகக் கிடைத்துவிட்டது.

மாலேகான் குண்டு வெடிப்பில் பிரக்யா தாகூர் எனும் சாத்வி (சன்யாசியாம்) லெஃப்டினண்ட் கர்னல் சிறீகாந்த் புரோஹிட், தயானந்த பாண்டே எனும் சங்கராச்சாரியார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

இந்தச் சங்கராச்சாரியாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லாப்டாப் கருவியிலிருந்து அதிர்ச்சியூட்டக்கூடிய சதித் திட்டங்கள் வெளிப்பட்டன. இந்தச் சதித் திட்டங்களையெல்லாம் நுண்மையாக ஆய்வு செய்த ஹேமந்த் கர்கரே என்ற உயர் காவல்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்டதும் சாதாரணமானதல்ல.

சங்பரிவார் கும்பலின் மிகப் பெரிய சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது கருதப்படுகிறது.

இந்தப் படுகொலையில் சதியுள்ளது என்று மத்திய அமைச்சராக உள்ள ஏ.ஆர். அந்துலேயே கூறி இருக்கிறார் என்றால், இதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாமே.

புதுடில்லியில் உள்ள ஹெட்லைன்ஸ் டுடே என்னும் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய தகவல்கள் சங் பரிவார்க் கூட்டத்திற்கு நெரிகட்டச் செய்துள்ளன. காவிக் கூட்டத்துக்கும், அதன் தீவிரவாத வன்முறைக் கூட்டத்துக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பினை அது அம்பலப்படுத்திவிட்டது.

காந்தியார் படுகொலை (காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்திக்கொண்டு முஸ்லிகளைப் போல் சுன்னத் செய்து கொண்டிருந்தான்) , தென்காசி சதித்திட்டம், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மாலேகான் குண்டு வெடிப்பு என்று மிகப் பெரிய வன்முறைப் பாதைகளின் சுவடுகளையெல்லாம் மிகத் திறமையாக உளவுத் துறையையும் விஞ்சிய சாமர்த்தியத்தோடு இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அலசி எடுத்துத் தோரணமாகத் தொங்க விட்டுவிட்டது.

தாம் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டோம் அதன் மூலம் சட்ட ரீதியான கடுந்தண்டனைக்கு ஆளாக்கப்படப் போகிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்த இந்தக் காவிக் கூட்டத்தால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

கடந்த மாதம் (ஜூலை 16) புதுடில்லியில் உள்ள அந்தத் தொலைக் காட்சி நிறுவனத்தின் முன் காவிக் கூட்டத்தினர் ஆயிரக்கணக்கில் கூடி அந்நிறுவனத்தைத் தரைமட்டமாக்க ஆவேசமாக எழுந்தனர். காவல் துறையின் சாமர்த்தியத்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்பது போல, நான்காவது மாடியில் இருந்த அந்த நிறுவனத்துக்குள் இந்தக் காலிகளாகிய காவிகள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும் கல்லெறி எனும் கலையில் தேர்ந்தவர்களாயிற்றே! அதைப் பயன்படுத்தி கண்ணாடிக் கதவுகளை யெல்லாம் அடித்துத் தூள் தூளாக்கிவிட்டார்கள்.

இந்த ஆத்திரமே அவர்களின் குற்றங்களுக்கான அளவுகோல் என்பதை மத்திய அரசு அறிந்திருக்க வேண்டும்..

அபினவ் பாரத் என்ற மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் காந்தியார் கொல்லப்பட்ட பின்பு நமக்கு நேர்ந்த கதியை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களே அலற ஆரம்பித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, மத்திய உள்துறை சட்ட ரீதியாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமோ, அவற்றைக் கொஞ்சமும் தயக்க மின்றி எடுத்தாகவேண்டும். இல்லையென்றால், நிவர்த்திக்க முடியாத கடும் விலையை இந்தியா கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

THANKS TO: http://viduthalai.periyar.org.in/20100826/news21.html
****************
பயங்கரவாதத்தின் நிறம் காவி!

எல்லா மதங்களின் வெறி அமைப்புகளையும் தடை செய்யும் நடவடிக்கைதான். இதைஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யிலிருந்து தொடங்க வேண்டும்..

இந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல.

ஆனால் பயங்கரவாதத்தின் நிறம் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பச்சை அல்லது இடதுசாரிகளின் சிவப்பு என்று மட்டுமே நம் மனங்களில் பத்திரிகைகளும் ஊடகங்களும் நீண்ட காலமாகப் பதியவைத்து வந்திருக்கின்றன. காவியையும் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்தியதே இல்லை.

காவி, சிவப்பு, பச்சை எல்லாமே நல்ல நிறங்கள். மனிதர்களின் தவறுக்காக நாம் நிறங்களை இழிவுபடுத்துகிறோம்.

இந்த வாரம்தான் சில ஆங்கில செய்தி சேனல்கள் பயங்கரவாதத்தின் நிறம் காவியாக மாறுகிறது என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தித் தொகுப்புகள் வழங்கியிருக்கின்றன.

காரணம் மாலேகாவ்ன். மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இருக்கும் இந்தச் சிறுநகர், மதக் கலவரங்களுக்கும் மோதல்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பெயர் வாங்கிய இடம்.

2006ல் இஸ்லாமியர் வாழும் பகுதிகளிலும் மசூதி, கல்லறைப் பகுதிகளிலும் சைக்கிள்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 37 பேர் இறந்தார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இந்த கொடூரத்துக்குக் காரணமானவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது.

இப்போது ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 29 அன்று மோட்டார் சைக்கிளில் வைத்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தனர். சுமார் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஹிந்து பயங்கரவாதிகள் என்று இப்போது காவல்துறை அறிவித்திருக்கிறது. கைதாகியிருக்கும் நால்வரில் ஒருவர் பெண் `சாது'!

சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி (வயது 38). இரு வருடம் முன்பு சந்நியாசினி ஆனவர். அதற்கு முன் ப்ரத்ஞா சிங்காக இருந்தபோது விஸ்வ ஹிந்து பரீக்ஷத் அமைப்பில் பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னால் 18 வருட காலம் பி.ஜே.பி.யின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் உறுப்பினராக இருந்தவர்.

மீதி நான்கு கைதிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்குச் சொந்தமானது.

மாலேகாவ்னில் குண்டு வெடித்த அதே நேரத்தில் குஜராத்தில் மொடாசா என்ற ஊரிலும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. அங்கே 16 வயதுச் சிறுவன் இறந்தான். பத்துப் பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரத்திலும் சாத்வி கோஷ்டிதான் தொடர்புடையது என்று காவல்துறை கருதுகிறது. இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்பட்டிருக்கிறது.

விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம் போன்ற பல்வேறு ஆர்.எஸ்.எஸ். அவதாரங்களையெல்லாம் மீடியா அதிகபட்சமாக மதவாத அமைப்புகள் என்று சொல்லுமே தவிர, பயங்கரவாத அமைப்புகளாக வர்ணித்ததில்லை.

வெடிகுண்டு, ஆர்.டி.எக்ஸ். கொடூரங்கள் செய்பவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்ற கருத்தையே மீடியா பரப்பி வந்திருக்கிறது.

ஆனால் ஆயுதப் பயிற்சி முதல் வெடிகுண்டுத் தயாரிப்பு வரை பல சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அவதாரங்கள் ஈடுபட்ட செய்திகள் வெளிவந்தபோதும் அவை அடக்கி வாசிக்கப்பட்டன.

2006-ல் மகாராஷ்டிரத்தில் நாந்தெத் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீயருமான லக்ஷ்மண் ராஜ்கொண்டவார் வீட்டில் குண்டு வெடித்ததில் அவர் மகனும், இன்னொரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இறந்தார்கள். நான்கு பேருக்குக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஒருவர் தப்பி ஓடி பின்னர் கைதானார். எல்லாரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள்.

ஆகஸ்ட் 2008-ல் கான்பூரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது ராஜீவ் மிஸ்ரா, பூபேந்திர சோப்ரா என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்தார்கள்.

சுமார் நான்கைந்து வருடங்களாகவே மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் மசூதிகளுக்கருகே குண்டுகள் வெடித்த பல நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ்.சின் வெவ்வேறு அவதார புருஷர்கள் சம்பந்தப்பட்டிருப்பது காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில், குண்டு வைத்ததே ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக அவதாரமான இந்து முன்னணிதான் என்பது அம்பலமாகிவிட்டது.

ரவி பாண்டியன் என்ற இந்து முன்னணிக்காரரும் இன்னும் 7 இந்து முன்னணியினரும் இதில் கைதானார்கள். 2002-ல் ஈரோடு மாவட்டத்தில் சதுமுகை என்ற கிராமத்தில் அம்மன், விநாயகர், முனீஸ்வரன் சிலைகள், கோயில்கள் நாசப்படுத்தப்பட்டன.

இதைச் செய்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று காவல்துறையில் மாவட்ட இந்து முன்னணியினர் அதிகார பூர்வமாகப் புகார் செய்தார்கள்.

கடைசியில் துப்புத் துலக்கியதில் நாசவேலை செய்ததே இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற செய்திகள் சில சமயம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வந்தாலும், அவற்றுக்கு தொப்பியும் தாடியும் வைத்த பயங்கரவாதிகள் சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

இஸ்லாமிய சிமி அமைப்பினர் கைதுகள் எல்லா தினசரிகளிலும் 4 காலம், எட்டுக் காலம் தலைப்புகள், முதல் பக்கச் செய்திகள்.

சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி கைது ஒரு தினசரியிலும் முதல் பக்கத்தில் இல்லை. உள்ளேயும் சின்னதாக ஒரு மூலையில்.

ஹிந்து மத வெறி அமைப்பினர் குஜராத்தில் முஸ்லிம்களையும் ஒரிசாவில் கிறிஸ்துவரையும் கொத்துக் கொத்தாக கொன்றபோதும் சரி, இப்போது ஓரிரு சாமியார்கள் சிக்கும் போதும் சரி இதையெல்லாம் ஹிந்து பயங்கரவாதம் என்று வர்ணிக்கத் தயங்கும் நிலைதான் இருக்கிறது.

தவிர, பயங்கரவாதம் என்பது வெடிகுண்டும் ஆர்.டி.எக்ஸும் துப்பாக்கித் தாக்குதலும் மட்டுமா ?

மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான்.

தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல், ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான்.

காந்தியைக் கொல்வதற்கு முன்பாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொன்டதும் (காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்திக்கொண்டு முஸ்லிகளைப் போல் சுன்னத் செய்து கொண்டிருந்தான்) ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை.

அது ஒரு விஷமத்தனமான உத்தி.

மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மத வெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன.

இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. முதல் முஸ்லிம் லீக், அல் உமா வரை பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90_களில் வருவதற்கு முன்னால் அல் - உமா இல்லை.

ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு.

இன்று மதவெறியர்களின் பயங்கரவாதத்தின் முகம் மாறி வருகிறது.

பாபர் மசூதியை இடிக்கத் திரண்ட கும்பலின் முகங்களைப் பார்த்தாலே தெரியும்.

படிப்பறிவு இல்லாமல், அடித்தட்டு வாழ்க்கையில் பொருளாதார நலிவுற்ற முகங்கள். இந்த முகங்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகக் கைதாகும் முகங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஒரே வேறுபாடு தொப்பியும் தாடியும்தான்.

ஏழ்மையும் படிப்பறிவின்மையும் பொதுத் தன்மைகள்.

ஆனால், நாம் எப்போதும் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளையே துரத்திக் கொண்டு இருக்கிறோம்.

மத வெறி பயங்கரவாதத்தின் அசல் முகம் இந்த அம்புகளல்ல. இரு தரப்பிலும் அடிமட்டத் தொண்டர்களை உணர்ச்சி வசப்படுத்தி நாச வேலைகளுக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கும் முகங்கள், வளமான சொந்த வாழ்க்கை உடையவை.

பெரும் பல்கலைக்கழகங்களில் உயர்படிப்புப் படித்து நவீன தொழில்நுட்ப அறிவுடன் இயங்கும் முகங்கள். முகத்தைப் பார்த்து இவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியாத முகமூடிகள் அணிந்த முகங்கள். வள்ளுவர் இதைத்தான் `மக்களே போல்வர் கயவர்' என்று குறித்திருக்கிறார்.

இன்று இணையதளத்தில் ஒரு வாரம் உலவினால் போதும். இந்த முகங்களைத் தரிசித்துவிடலாம். ஹிந்துத்துவா, பெரியாரியம், தமிழ் தேசியம், இஸ்லாமிய சர்வதேசியம், முழுமுச்சான முதலாளித்துவம், அதி தீவிர மார்க்சியம், என்று பல வகைக் கோட்பாடுகளை முன்வைக்கும் குரல்களின் ஊடே கலந்து ஒலிக்கும் பயங்கரவாதக் குரல்களும் உண்டு.

எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை.

உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள்.

பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும்.

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான். மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள். பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை.

அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை.

இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான்.

உடனடியான தேவை பாரபட்சம் இல்லாமல் எல்லா மதங்களின் வெறி அமைப்புகளையும் தடை செய்யும் நடவடிக்கைதான். இதை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யிலிருந்து தொடங்க வேண்டும்..

நன்றி:   "ஞாநி" - குமுதம்
THANKS TO: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1081&Itemid=51
********
vanjoor

9 கருத்துக்கள்:

 • August 26, 2010 at 8:13 PM
  Anonymous :

  இத்தாலிக்காரியின் முந்தானையில் தொங்கும் கந்து வட்டி சிதம்பரம் செட்டியார் கூறுவதை எப்படி நம்புவது?

 • August 27, 2010 at 1:04 AM
  Anonymous :

  கோட்சே தன கையில் இஸ்மாயில் என்று குதி கொண்டான் என்பது மிக பெரிய புருடா !! நீங கோட்சேவின் வழக்கின் முழு பிரதியையும் படித்து இருக்கிறேன். அதில் இது மாத்ரி எந்த செய்தியும் இல்லை , அவனின் அண்ணனும் இதை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார் , மேலும் கோட்சே கொண் பொது அவர் நெற்றியில் முழு குங்குமம் இருந்தது. அவன் காந்தின் காலில் விழுந்து வணங்கிவிட்டு தான் காந்தியை கொன்னான் . எந்த முஸ்லிம் இப்படி செய்வான் ?? சும்மா உளற கூடாது !! இது போன்ற அப்பட்ட பொய்களை பரப்புவதை நிறுத்தவும் !!

 • August 27, 2010 at 3:29 AM
  Anonymous :

  Anonymous :
  //இத்தாலிக்காரியின் முந்தானையில் தொங்கும் கந்து வட்டி சிதம்பரம் செட்டியார் கூறுவதை எப்படி நம்புவது?//

  குமுத‌ம் "ஞானி" யார் முந்தானையில் தொங்கிகொண்டு காவிக‌ளின் வண்ட‌வாள‌த்தை த‌ண்ட‌வாள‌த்தில் குமுதத்தில் ஏற்றி இருக்கிறார்?

  //August 26, 2010 9:09 PM# 2 Anonymous :
  உங்களைப் பாத்து படிச்சிருப்பாங்க.
  குண்டு வைக்கிரதுலதான் உங்க ஆட்கள் ஸ்பெஷலிஸ்டுகள் ஆச்சே.//

  அறிவிஜீவியின் அழகான ப‌தில். வாழ்த்துக்க‌ள்

  // August 26, 2010 10:43 PM# 4 தாலிபன் :
  சிதம்பரமும் தாலிபன் முல்லா ஓமரும் பங்காளி ஆன கதை இப்போது தான் தெரிகிறது

  அறிவிஜீவியின் அழகான ப‌தில். வாழ்த்துக்க‌ள்

  //August 27, 2010 1:04 AM# 6 Anonymous :
  கோட்சே தன கையில் இஸ்மாயில் என்று குதி கொண்டான் என்பது மிக பெரிய புருடா !! நீங கோட்சேவின் வழக்கின் முழு பிரதியையும் படித்து இருக்கிறேன். அதில் இது மாத்ரி எந்த செய்தியும் இல்லை , அவனின் அண்ணனும் இதை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார் , மேலும் கோட்சே கொண் பொது அவர் நெற்றியில் முழு குங்குமம் இருந்தது. அவன் காந்தின் காலில் விழுந்து வணங்கிவிட்டு தான் காந்தியை கொன்னான் . எந்த முஸ்லிம் இப்படி செய்வான் ?? சும்மா உளற கூடாது !! இது போன்ற அப்பட்ட பொய்களை பரப்புவதை நிறுத்தவும் !! //

  பூனை கண்ணை முடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமா?

  ஏதோ ஒன்றை யாரோ எழுதியதை படித்துவிட்டேன். அதுதான் உண்மை மற்றதெல்லாம் உளற‌ல் என்பதன் மூலம் அணானி தன்னை வெளிக்காட்டிய திறமை போற்றத்தக்கது.

  நெற்றியில் முழு குங்குமத்துடன் காலில் விழுந்து வணங்கும் நடிப்பை கொண்டு தானே காந்தியின் அருகில் நெருங்கி அவரை சுட்டு கொல்வதற்கு கோட்சேக்கு சரியான தருணம் கிட்டியது?

  கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்திக்கொண்டு முஸ்லிகளைப் போல் சுன்னத் செய்து கொண்டிருந்ததன் மூலம் தான் பிடிபட்டவுடன் கையிலுள்ள பச்சை குத்தப்பட்ட பேரையும் பெயருக்கு ஏற்றார் போல சுன்னத் அடையாளத்தையும் கொண்டு ஒரு முஸ்லீம் காந்தியை சுட்டு கொன்றுவிட்டான் என உருவாக்கி அகில இந்தியாவிலும் வன்முறை ஆட்கொள்ள செய்து அப்பாவி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டு இரத்தவெள்ளம் ஓட கோட்சேயும் இந்துத்வாக்களும் இட்ட மிக மிக கேவலமான மிருகத்தனமான சதி .

  இதை எந்த முஸ்லீமும் நிச்சயமாக செய்யமாட்டான் என்பது உண்மை.

  கோட்சே தான் காந்தியை கொன்றான் என்பதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லையே?

  ச‌த்ய‌மேவ‌ ஜெய‌தே.
  .................

  உள்ளதை சொல்வோன்.

 • August 27, 2010 at 6:18 AM
  Anonymous :

  கோட்சே தான் கொன்னான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை ,ஆனால் அவன் கையில் இஸ்லாமில் என்று பச்சை குத்தி கொள்ள வில்லை , இது தமிழ் நாட்டில் திக கும்பலும் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மட்டும் சொல்லும் கட்டு கதை , அது இஸ்லாமிய வெறி ஏத்தவே செய்யும் பிரச்சாரம். இந்த காவி தீவிரவாதம் என்பது , இந்த முறை இஸ்லாமியர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வோட்டு போட்டதுக்கு காங்கிரஸ் தரும் பரிசு . இவர்கள் ஹிந்துக்கள் சம்பந்தபட்டதாக சொல்லும் பல குண்டு வெடிப்புகளில் ஹுஜி என்னும் இஸ்லாம்ய அமைப்பு செய்ததாக உலகத்தில் உள்ள பல நாடுகள் சொல்கிறது. அப்படியே இருந்தாலும் காவி தீவிரவாதம் ஒரு எச்சரிக்கை மணி , யார் குண்டு வைத்தாலும் குண்டு வெடிக்கும் என்பதற்கு !!

 • August 28, 2010 at 2:27 PM
 • August 28, 2010 at 2:29 PM
 • August 28, 2010 at 2:32 PM
  தாலிபன் :

  August 26, 2010 10:43 PM

 • August 28, 2010 at 2:35 PM
 • August 28, 2010 at 2:40 PM
  உம்மத் :

  மேற்குறிப்பிடப்பட்ட நேரங்களில் இடப்பட்ட பின்னூட்டங்கள் ஆக்கத்திற்கு தொடர்பில்லாமல் பேசுப்பொருளை திசைத்திருப்புவதோடு தேவையில்லாத வீண் விவாதங்களுக்கும் வழிவகுக்கும்.அடிப்படையில் அமைந்ததால் அவைகள் இங்கு நீக்கப்பட்டுள்ளது

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!