Saturday, March 5, 2011

சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அவசர மடல்

5 கருத்துக்கள்
முஸ்லிம்களின் ஓட்டை தீர்மானிக்கும் TNTJ வின் அவசர மாநிலச செயற்குழு சென்னை டி நகர் இன்ஷா அல்லாஹ் வரும் 6-3-11 அன்று கூடுகின்றது.
இடம் – வேங்கடேஸ்வரா விவாஹ மஹால், பாண்டி பசார் காவல் நிலையம் பின்புறம். டி நகர் சென்னை.
நேரம் – காலை 10 மணி
நாள் – 6-3-11
http://www.tntj.net/
------------------------------------------------------------------------------------------------

வரும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு த த ஜ சென்னையில் அவசர கூட்டத்தைக் கூட்டி,விவாதிக்க உள்ளது.இந்த நேரத்தில் அதன் தலைவர்,சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

அரசியல் வெற்றிடத்தை தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை ம ம க,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகள் மட்டுமே நிரப்பி வருகின்றன.இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் நம் முஸ்லிம் சகோதரர்களுக்காக தங்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கவேண்டும்.
சில சூழ்நிலையின் பேரில்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் யூதர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நாம் நம் மார்க்க சகோதரர்களிடம் அழகிய ஒப்பந்தம் போடலாம் அல்லவா?
நம்மை அழிக்க என்னும் பா ஜ க போன்ற கட்சிகளுக்கு நாம் மறைமுகமாக உதவக்கூடாது.

நாம் தி மு க,அதிமுக ,காங்கிரஸ்,மற்றும் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அவர்கள் நம் பிரச்னையை பேச மாட்டார்கள்.மாறாக நாம்தான்,நம் முஸ்லிம் வேட்பாளர்தான் வெற்றி பெற்றால் சட்டசபை சென்று பேசமுடியும்.நமக்கென குறைந்தது ஐந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் எனில் சட்ட சபையை நம் சமுதாய பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்தி பேசும் அளவுக்கு கொண்டு சென்று இன்ஷா அல்லாஹ் சாதிக்க இயலும்.

நம்மிடையே என்னதான் பிரச்சனைகள் என்றாலும்,தங்கள் இயக்கம் ஒரு குழு அமைத்து ம ம க,முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகளிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு,நம் பிரச்சனைகள் என்னென்ன இருக்கிறது,அவற்றை களைய நாம் செய்ய வேண்டியது என்ன,நீங்கள் வெற்றி பெற்றால் இப்படி செய்யவேண்டும்,நமக்குள் எவ்வித சண்டை,சச்சரவு எதுவும் இல்லாமல் சமுதாய நலன் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவோம் போன்ற கோரிக்கைகள் வைத்து,ஒப்பந்தம் போட்டு,இந்த சமுதாயத்தின்,அல்லாஹ்வின் மார்க்கம் தழைத்தோங்கவும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் உம்மத் இன்னும் வளம் பெறவும் சேர்ந்து களப்பணி ஆற்றலாம் அல்லவா?

தமிழகத்தைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான மக்கள் த த ஜவில் இருக்கிறார்கள்.அதன் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள்.இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.சமுதாயம் ஒன்றுபட இனிய தருணம்.அல்லாஹ்விடம் கூலி வேண்டி - என்னைப்போன்ற லட்சக்கணக்கான மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளேன்.
தயவு செய்து,எல்லா முஸ்லிம் இயக்கங்களும், கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடுபடுவோம்,நமக்கு எதிரான சதியை இன்ஷா அல்லாஹ் முறியடிப்போம்.
எனவே,தாங்கள் கூட்டும் இந்த அவசர கூட்டத்தில் நல்லதொரு முடிவெடுக்கும்படி அன்போடு வேண்டும் உங்கள் மார்க்க சகோதரன்.

5 கருத்துக்கள்:

  • March 5, 2011 at 2:47 PM

    சமுதாய பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்தி பேசும் அளவுக்கு கொண்டு சென்று இன்ஷா அல்லாஹ் சாதிக்க இயலும். - so idarkaagavaavadhu. நல்லதொரு முடிவெடுக்கும்படி அன்போடு வேண்டும் உங்கள் மார்க்க சகோதரன்.

  • March 5, 2011 at 4:16 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஒருவனின் அடிமை,
    முதலில் உங்களுடைய சமுதாய அக்கறைக்கு ஏக இறைவன் அல்லாஹ் கூலியை வழங்குவானாக.

    எந்தவொரு அடிப்படை பார்வையுமில்லாமல் வெறுமனே தட்டையான பார்வையுடன் எழுதப்பட்ட ஒரு பதிவாகவே இது காட்சி தருகிறது. உங்கள் கட்டுரையின் பேசுபொருளாக இருப்பது முஸ்லிம் பெயர் வைத்து முஸ்லிம் கட்சிகளின் சார்பாக (பொதுவாக முஸ்லிம் பெயர் தாங்கி கட்சிகள் என்றே இவர்களை நான் குறிப்பிடுவேன்) யார் போட்டியிட்டாலும் அவர்களை ஆதரியுங்கள் என்பதாகத்தான் இருக்கிறது.

    ஆனால் இந்த முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய லீக், மமக ) வென்று சட்டசபைக்கு சென்றால் என்னவென்ன உரிமைகள் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கும்? அதை நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடவே இல்லை. இந்த கட்சிகள் கூட ஒரே கூட்டணியில் இல்லை என்பது வேறு விஷயம். தம்முடைய கட்சி நலனை மட்டுமே அடிப்படையாக வைத்து தான் இவர்கள் தங்கள் அரசியல் கூட்டணியை தேர்வு செய்கிறார்களே தவிர சமுதாய நன்மையை கருதியல்ல என்பதும் உங்களுக்கும் தெரியும். இருந்தும் இவர்களை முஸ்லிம் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் பேராவல் கொள்கிறீர்களே. முதலில் இவர்கள் எந்த வகையில் முஸ்லிம் கட்சிகள் என்பதை கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும். பெயர் மட்டும் வைத்திருப்பதால் முஸ்லிம் கட்சிகளா? இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனை என்றைக்காவது வெளிப்படுத்தியிருக்கிறார்களா? எந்த அடிப்படையில் முஸ்லிம் லீக் திமுகவையும் மமக அதிமுகவையும் கூட்டணியாக தேர்வு செய்தது? இந்த கேள்விகளை இந்த பெயர்தாங்கி முஸ்லிம் கட்சிகளை என்றைக்காவது நீங்கள் கேட்டதுண்டா? இந்த ஐந்து பெயர்தாங்கிகள் சட்டமன்றம் செல்வதற்கு முஸ்லிம் சமூகம் தன்னுடைய சுயத்தை அடகு வைக்க வேண்டுமா? இன்னும் பல கேள்விகள். தாங்கள் பதில் சொன்னால் இன்ஷா அல்லாஹ் உரையாடலாம்.

  • March 5, 2011 at 4:17 PM

    மேலும் தேர்தல், ஒற்றுமை சம்பந்தப்பட்ட விளக்கங்களுக்கு பின்வரும் சுட்டிகளில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. உண்மையை அறிந்து கொள்ள விரும்புவோர் சுட்டியில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கேட்கலாமே.

    தேர்தலில் முஸ்லிம் அமைப்புகளை ஏன் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவில்லை?
    http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/muslim_amipai_athrikathathu_en/

    தேர்தல் சிந்தனைகள்
    http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/therthal_nilaipadu/

  • March 5, 2011 at 6:10 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இலாஹிலாஹ இல்லால்லாஹ் என்ற ஏகத்துவ பிரச்சாரம் செய்த போது

    எதிரிகள் நபியவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்

    நீங்கள் இந்த ஏகத்துவ கொள்கையை சொல்வதை விட்டுவிட்டால்

    நீங்கள் என்ன கேட்டாலும் தர தயராக இருக்கிறோம்

    உங்களுக்கு அதிகாரம் வேண்டுமா உங்களை எங்களுக்கு அரசானாக ஏற்றுக் கொள்கிறோம் என்றார்கள்.(உங்களுக்கு இந்த ஹதீஸ் தெரியுமன்று நினைக்கிறேன்)

    ஆனால் நபியவர்கள் எதனை தேர்ந்தெடுத்தார்கள் ஆட்சி அதிகாரம் காலில் வந்து விழுந்த போது அதனை தூக்கி எறிந்து விட்டு ஏகத்துவக் கொள்கையை கையில் எடுத்தார்கள் அல்லாஹ் வெற்றியை கொடுத்தான்.

    ம.ம.க வின் நிலை என்ன தவ்ஹீத் கொள்கை தங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று சொல்லி தவ்ஹீத் தாஃயிக்களை வெளியேற்றினார்கள்.

    அல்லாஹ் இவர்களுக்கு வெற்றியை கொடுக்க மாட்டான் எங்கள் தவ்ஹீத் கொள்கையும் இவர்களின் வளர்ச்சிக்கு கடைசி வரை தடையாகவே இருக்கும்

    இன்ஷா அல்லாஹ் நான் ஊருக்கு சென்று இவர்களை களத்தில் சந்திக்கிறேன்

  • May 25, 2011 at 12:46 PM

    ஒரு முக்கிய கேள்வி: அதாவது ஒரு முஸ்லீம் சட்டமன்ற தேர்தலிலோ அல்லது பாராளுமன்ற தேர்தலிலோ நின்றால் அல்லது நின்று வென்றால் அவரால் மார்க்க சட்டத்திற்கு பாதகம் வராமல் வாழ முடியுமா?

    உதாரணத்திற்கு வேட்பாளர் ஓட்டு கேட்க மக்களிடத்தில் செல்கிறார், அங்கு மாற்று மத மக்கள் அவருக்கு ஆரத்தி எடுக்கின்றனர், என்றால் அவர் அதை எதிர்த்து ஏகத்துவத்தை எத்தி வைப்பாரா இல்லை, ஏற்றுக் கொள்வாரா என்பதை தயவு கூர்ந்து விளக்குங்கள்.

    அடுத்து ஒரு வேட்பாளர் நின்று வென்று விட்டார், அங்கு கோயிலுக்கு நுழையும் விஷயத்தில் தலித்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, அது வேட்பாளரிடத்தில் பஞ்சாயத்திற்கு வருகிறது என்றால் தங்களுடைய தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் நோக்குடன் பிரச்சனையை தீர்த்து தலித்களை கோயில் சென்று வர அனுமதி வாங்கி தருகிறார் என்றால் அது இணைவைப்பாக ஆகாதா?

    ஒரு திருவிழா, கோயில் கும்பாபிஷேகம், சர்ச்சில் ஏதோ விழா என்று முஸ்லீம் MLA /MP அவர்களை அழைத்தால் அதற்கெல்லாம் போகாமல் இருக்க முடியுமா? ஏனென்றால் தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் மட்டுமே முழுக்க முழுக்க இருக்கும் MLA / MP தொகுதிகள் இல்லை, எல்லா மதத்தவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். அப்படிபட்ட தொகுதிகளில் நாம் மார்க்க விஷயத்தில் வளைந்து கொடுத்து தான் போக வேண்டுமா? என்பதை விளக்குங்கள்.

    மேலே சொன்ன விஷயங்கள் உதாரணமே, இன்னும் ஏகப்பட்ட விஷயங்களில் மார்க்கத்தில் வளைந்து கொடுக்க வேண்டி இருக்கும்.

    உங்களுடைய கருத்தையும் பகிருங்கள்.

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!