Monday, October 4, 2010

மரண அறிவிப்பு

0 கருத்துக்கள்
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் கிடந்த நீதி வியாழக்கிழமை அலகாபாத் கட்டைப்பஞ்சாயத்து தாதாக்கள் வழங்கிய தீர்ப்பால் செத்து போனது. இதற்கு பிறகும் செத்து போன நீதியை உயிரூட்ட உச்ச நீதிமன்றம் கொண்டு செல்வோரின் நிலையை நினைத்து பரிதாப்படுவதை தவிர வேறில்லை.

கிடைத்த மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் இந்திய முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். புத்திசாலித்தனமாக அதை கப்ருஸ்தானாக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. (கப்ருஸ்தான் = இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம்).

பாபர் மசூதி நிலத்தை ஏன் கப்ருஸ்தானாக பயன்படுத்த வேண்டும்?
இனி வரும் காலங்களில் மதுரா பள்ளிவாசலின் உட்புறத்தில் தான் கிருஷ்ணர் பிறந்ததாகவும், காசி பள்ளிவாசலில் சிவன் பிறந்ததாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களில் லோக்கல் குலதெய்வங்கள் பிறந்ததாகவும் இந்துத்துவாக்கள் கதையளந்து விட்டு அந்த பள்ளிவாசல்களை தகர்க்க வெடிகுண்டுகள் , கடப்பாரைகளுடன் கரசேவை செய்ய வரும் போது அவற்றை உணர்ச்சி மிக்க இஸ்லாமிய இளைஞர்கள் கண்டிப்பாக தடுப்பார்கள். அரசோ கண்டிப்பாக கரசேவை செய்பவர்களுக்கு தான் பாதுகாப்பாக இருக்கும். எனவே முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுவது நிச்சயம். அப்போது பலியாகின்ற இந்திய முஸ்லிம்களை புதைக்க இடப்பற்றாக்குறை ஏற்படும். எனவே அயோத்தியில் இப்போது வழங்கப்பட்டிருக்கின்ற இடத்தை கப்ருஸ்தானாக பயன்படுத்திக் கொள்வது நல்ல வழிமுறையாகும்.

தீர்ப்பு (கட்டைபஞ்சாயத்து) குறித்த சில சந்தேகங்கள்:
1) மத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. பாபர் மஸ்ஜித் தொடர்பாக நீதிமன்றங்கள் வழங்கும் நீதியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என இதுவரைக்கும் முழங்கிய அத்வானி உட்பட இந்துத்துவா வெறியர்கள் அனைவரும் சொல்லிவைத்தது போன்று இந்த தீப்பை மட்டும் ஏற்றுக் கொள்கிறோம் என்றும், தீர்ப்பு வெளிவரும் முன்னரே நமக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்று சில இந்துத்துவா வெறியர்கள் அறிக்கைகள் கொடுத்ததற்கும், இந்த கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்பு எழுதப்பட்டதர்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?

2) சொத்து சம்பந்தமான வழக்கு நீதிமன்றங்களுக்கு வரும்போது, சொத்துக்கான பத்திரங்களை அல்லது அனுபவ பாத்தியதையை அடிப்படையாக வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குமா அல்லது குருட்டு நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குமா?

3) இராமரை வால்மீகி எழுதிய இராமாயணம் மூலம் தான் நாம் அறிந்து கொள்ள முடியும். இராமாயணத்தின்படி இராமர் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் குறிப்பிட்ட இடத்தில் தான் பிறந்தவர் என்று எவ்வாறு அந்த அறிவுஜீவிகள் முடிவு பண்ணினர்?

4) இராமாயணத்தின்படி இராமர் பிறந்த அயோத்திக்கு 23 கி.மி க்கு அப்பால் சரயூ நதி என்று ஒரு நதி ஓட வேண்டும். அப்படி எந்த ஒரு நதியையும் அங்கே காண முடிவதில்லை. ஆனால் அயோத்தியிலேயே சரயூ என்ற நதி ஓடுகிறது. அயோத்தியில் ஓடுகிற அந்த நதி தான் இராமாயணம் சொல்லுகின்ற நதி என்று யாராவது கூறினால், இராமயணத்தில் சரயூ நதி கங்கையில் சங்கமிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அயோத்தியில் ஓடும் சரயூ நதி ராப்தி என்னும் நதியில் சங்கமிக்கின்றது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சரயூ நதி பாய்வதாக இராமாயணம் சொல்லுகிறது. ஆனால் இன்றையோ அயோத்தி நதியோ மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்கின்றது. எனவே தீர்ப்பு சொன்ன புண்ணியவான்கள் ஒன்று இராமயணத்தை மாற்ற சொல்ல வேண்டும். இல்லையெனில் இராமயணத்தில் சொல்லப்பட்டு காணாமல் போன சரயூ நதி மற்றும் கங்கை நதிகளை எல்லாம் கண்டுபிடித்து தர வேண்டும் என்று யாராவது வழக்கு போட்டால் அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?

5) பள்ளிவாசல் கட்டுவதற்கு முன்னர் இந்திய தொல்பொருள் துறையினரை அழைத்து பள்ளிவாசல் கட்டும் நிலத்தில் ஆய்வை செய்ய சொல்லி விட வேண்டும். ஏனெனில் பூமிக்கடியில் ஏதாவது சிறு துகள் மாட்டினாலும் அவை கோயில் தான் என்று பிற்காலத்தில் நீதிமன்றம் சொல்லி விடும். எனவே முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே. ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டும்போதும் இவ்வாறு ஆய்வு செய்ய முஸ்லிம்கள் அழைத்தால் இந்திய தொல்பொருள் இலாகா வருமா?

6) ஒருவர் ஒரு இடத்தில் பிறந்ததாலேயே அவருக்கு அந்த இடம் சொந்தமாகி விடுமா? அப்படியென்றால் நான் அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அதற்கான பிறப்பு சான்றிதழும் என்னிடம் உண்டு. இதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அந்த அரசு மருத்துவமனையை என்னுடைய சொத்தாக நீதிமன்றம் மாற்றிக் கொடுத்து விடுமா?

பாபர் மஸ்ஜித் நீதிமன்ற தீர்ப்பு இந்திய முஸ்லிம்களுக்கு சொல்லும் சில செய்திகள்:
இந்த நாட்டை பொறுத்தவரை என்ன தான் நாட்டின் சுதந்திரத்திற்காக தம்முடைய சதவிகிதத்திற்கும் அதிகமாக தியாகங்களை முஸ்லிம்கள் செய்திருந்தாலும் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுவார்கள். பள்ளிவாசல் கட்டி வழிபாடு செய்ய உரிமை உண்டு. ஆனால் இந்துத்துவாக்கள் அதை எதிர்க்காதவரை. அவர்கள் எதிர்த்து உங்களுடைய பள்ளிவாசலில் தான் என்னுடைய குலதெய்வம் பிறந்தார் என்று வழக்கை தொடுக்கும் வரை. எனவே முடிந்த வரையில் முஸ்லிம்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாதீர்கள். அங்கே உங்களுக்கான நீதி ஒரு போதும் கிடைக்காது. முஸ்லிம்களே மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இந்திய நாட்டில் நீங்கள் இரண்டாம் தர குடிமக்களே.

0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!