Sunday, May 8, 2011

வினவே..! யார் பயங்கரவாதி..? மாவோயிஸ்டா..? தலிபானா..? பதில் சொல்..!

0 கருத்துக்கள்
வன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்?

பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி,டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க இருவருக்கும் சண்டை.கூட்டம் கூடிவிட்டது.

சட்டென டிப்டாப் தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலைகீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய் பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபாடாது. ஏனென்றால்,அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை,ஏழைதான் திருடுவான்.

இந்த தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.

இப்போது சொல்லுங்கள்... அவர் மூன்றாவது மனிதர் என்ன செய்ய வேண்டும்?

யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி டிப்டாப திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமையல்லவா?

ஆனால அந்த நபர் வருகிறார் அடிவாங்கி கிழிந்த சட்டையின் ஒட்டை வழியாக அந்த உள்பனியனை பார்க்கிறார். ஆ பச்ச பனியன் உள்ளே அல்லாஹு அக்பர் என்று எழுதியிருக்கிறது. இவருக்கு முகம் சிவக்கிறது செவப்பு பனியன் போட்டு அதில் செவ்வணக்கம் என்று அல்லவா இருக்க வேண்டும்? அவர் எதிர்பார்த்தது இல்லை எண்டா இப்படி திருடுறா சார் இவனா அடியுங்க சார் என்கிறார்

இது புனைவாக இருந்தாலும் சுடும் உண்மை


டிப்டாப் ஆசாமி அமெரிக்க வல்லாதிக்க வெறியர்கள் காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு மண் வீடுகளில் வசிக்கின்ற ஆப்கானியர்களின் வீட்டில் புகுந்து திருடுகிறான் கொல்லுகிறான் ஊடக பலமில்லாத உமையர்களான ஆப்கானியர்களின் வீட்டில் நடக்கும் எழவு வீட்டு ஒப்பாரி வெளியே கேட்பதில்லை.
தொடர்ந்து வாசிக்க......


0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!