Tuesday, August 17, 2010

முஸ்லிம்களின் கல்வி எப்படி இருக்க வேண்டும் ? அவசியம் படிக்க‌

0 கருத்துக்கள்
பயனுள்ள கல்வி.
இந்த விடியோவை யாவரும் அவசியம் காண வேண்டும்.

உரையிலிருந்து சில முக்கிய குறிப்புகள் :

1) சொத்துக்களை விற்று கல்வியை பெற்ற காலம் மலையேறி விட்டது.
இன்று கல்வியை விற்று சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

2) இளைஞர்கள் அரபு நாட்டிற்கு செல்வதுதான் தங்கள் வாழ்வின் இலட்சியம் என்ற நிலையை விட்டு மாறவேண்டும்.

அரசு வேலைகளை முஸ்லிம் இளைஞர்கள் பெறுவதற்கு நம் சமுதாயத்தின் பங்கு என்ன? என்பதை சமூக ஆர்வலர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

3) நம் மூளையை செழிப்புள்ளதாக மாற்ற வேண்டியதில்லை, மாறாக நம் மூளையை தெளிவுள்ள மூளையாக மாற்றவேண்டும்.

ஒரு சமுதாயத்தை அழிக்க வேண்டுமென்றால் கல்வியில் மாற்றம் கொண்டுவந்தால் போதும். மேலை நாட்டின் காலச்சார சீரழிவின் பின்னனி என்ன? என்பதை ஆராய்ந்தால் இவ்விஷயம் தெளிவாக விளங்கும்.

4) மார்க்கக் கல்வியோடு கூடிய உலக்கல்வியே நமக்கு பயனளிக்கும். பயனுள்ள கல்வி என்பது ஒரு செழிப்பான நிலத்தில் பெய்யும் மழை போன்றது.

இறைவனை அஞ்சுபவனே உண்மையான அறிஞன், இறையச்சம் இல்லாதோர் வேதம் சுமக்கும் கழுதைகள்.

5) தீய அறிஞர்களிடமிருந்துதான் ஒரு சமுதாயத்திற்கு சாபக்கேடு உருவாகிறது.

நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை, சிறந்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு பள்ளி ஆசிரியர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அமானிதம் பற்றி மறுமையில் விசாரணை உண்டு.

இந்த விடியோவை யாவரும் அவசியம் காண வேண்டும்.

பயனுள்ள கல்வி

Dr.KVS ஹபீப் முஹம்மது அவர்கள்

ILM Edicational Trust, சென்னை





Loading...



பிளேய் பட்டனை அழுத்திய பின் வீடீயொ தோன்ற சிறிது காத்திருக்க வேண்டும்.
Click here to download this video

THANKS TO SOURCE:http://www.ottrumai.net/

0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!