Showing posts with label பரிணாமவியல். Show all posts
Showing posts with label பரிணாமவியல். Show all posts

Thursday, November 11, 2010

பரிணாமம் - அடிப்படையே தவறு...

3 கருத்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )...
   
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
  

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில் நாம் "பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life)" குறித்து பார்க்கவிருக்கின்றோம்.   

பதிவிற்கு செல்லும் முன் பரிணாமவியல் குறித்த சில வார்த்தைகளை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன்.  

1. இயல்பு/இயற்கை தேர்வு (Natural Selection (NS))
2. தற்செயலான மாற்றங்கள் (Random Mutations (RM))

பரிணாமம் நடக்க நாம் மேலே பார்த்த இரண்டு உக்திகளும் அதி முக்கியமானது. அதாவது, இயற்கைக்கு ஏற்றவாறு, (பரம்பரை பரம்பரையாக) உயிரினங்களின் உடல்களில் (சிறுக சிறுக) தற்செயலாக ஏற்படும் (மரபணு) மாற்றங்களே புதிய உயிரினங்கள் உருவாக காரணம் (Origin of Species by means of natural selection and random mutations).

உதாரணத்துக்கு, ஒரு வகையான நிலவாழ் உயிரினம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவைகளுக்கு பறக்கும் தேவை ஏற்படுகிறது. (அவைகளில் பகுதியோ அல்லது முழு இனமோ) பறக்க முயற்சிக்கிறது. இப்படியாக பரம்பரை பரம்பரையாக முயற்சிக்கையில், சிறகுகள் (மற்றும் இதர மாற்றங்கள்) சிறிது சிறிதாக ஒவ்வொரு தலைமுறையாக வளர்ந்து, 100 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 1000 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 10000 பரம்பரைகளுக்கு பிறகோ etc etc, அந்த உயிரினம் பறக்கும் சக்தியை பெற்று பறவையாகி விடும். 

3. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.    
Fossils are the remains or evidence of animals and plants which have been preserved naturally - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.   

4. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

5. செல் (Cell) -  உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. ஒரே ஒரு செல் கொண்ட உயிரினங்கள் மற்றும் பலசெல் கொண்ட உயிரினங்கள் என்று அவை பிரிக்கப்பட்டுள்ளன. பலசெல் உயிரினங்களான நம் உடம்பில் மட்டும் சுமார் 60-90 ட்ரில்லியன் செல்கள் (1 trillion = 100,000 crores or 1000 Billion) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Cells are the building blocks of life - "Ask a Biologist" Website

பதிவிற்கு செல்வோம்... 

பரிணாமம் என்றால் என்ன? (Definition of Evolution): 

துரதிஷ்டவசமாக, பரிணாமவியலாளர்களிடையே இது குறித்து ஒருமித்த மற்றும் தெளிவான கருத்து இல்லாதபடியால் என்னால் இங்கு விளக்க முடியாத சூழ்நிலை. 

அதனால் நேரடியாக பரிணாமவியல் என்ன சொல்ல வருகிறது என்று கருத்துக்கு சென்று விடுவோம். 

பரிணாமவியலாளர்களின் எண்ணப்படி உலகம் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு (உலகம் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிடப்பட்டுள்ளது)  ஒரு வாழும் செல் (Living Cell) உருவாகி இருக்க வேண்டும் (Abiogenesis).

பிறகு அவற்றிலிருந்து பலசெல் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். பிறகு இவை முதுகெலும்பு இல்லாத உயிரினங்களாக, அவற்றிலிருந்து முதுகெலும்பு உள்ள உயிரினங்களாக என்று படிப்படியாக சிறுக சிறுக மாறி இப்போது நாம் பார்க்கக்கூடிய பல்வேறு உயிரினங்களாக வந்திருக்க வேண்டும்.

"No one knows how this happened. But Scientists think that energy from sunlight and lighting strikes triggered the formation of chemicals that could copy themselves. This may have taken place in the chemical "soup" that existed in the oceans, in shallow polls, or around volcanoes. The next crucial step was when the self-copying chemicals became trapped in "bubbles" of oil, which hold them together. These tiny blobs of chemicals were the beginnings of the first living cell. ....Over hundreds of millons of years, some simple animals without backbones, which looked like jelly fish or worms, developed into animals with backbones, including the first fish" - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.      

உதாரணத்துக்கு, பூமியின் வரலாற்றை 12 மணி நேர கணக்காக (0-12 ) எடுத்துக்கொண்டால், உலகின் முதல் எளிமையான பாக்டீரியாக்கள் 3 மணிக்கும், ஜெல்லி மீன்கள் போன்றவை 10 மணிக்கும், முதல் டைனாசர்கள் 11.45 க்கும், மனிதன் 11.59 மணிக்கும் தோன்றியதாக விளக்கம் கொள்ளலாம். (The Oxford Science Library, 2002 edition, Vol-2, p-5).



    
சுருக்கமாக சொல்லப்போனால், இன்று நாம் பார்க்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு பொதுவான மூதாதையர் தான்.               

இங்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலான பரிணாமவியலாளர்களின் கருத்துப்படி, பரிணாமவியல் என்பது, முதல் வாழும் செல் எப்படி உருவானது என்பது பற்றிய கோட்பாடு அல்ல. வேறு விதமாக சொல்லுவதென்றால், பரிணாமவியல், முதல் செல் எப்படி உருவானது என்றெல்லாம் விளக்காது. 

மாறாக, முதல் செல் உருவானப் பிறகு, அதிலிருந்து உயிரினங்கள் எப்படித் தோன்றின என்று மட்டும் தான் கூறும்.

டெக்னிகலாக கூறுவதென்றால் Ribosomes+DNA (these are major components of a cell) உருவானப் பிறகு, NS+RM (Natural selection and Random Mutation) போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்களைத்தான் அது பேசும். 

"பரிணாமக் கொள்கை உயிரின் மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, உயிரினங்களின் மூலத்தை விளக்க முற்படும் ஒரு கொள்கை" "It does not explain origin of life, it (tries to) explain(s) origin of species" - சகோதரர் இரஞ்சித், கையேடு வலைப்பூ.   

NS மற்றும் RM போன்றவை, Ribosomes+DNA உருவானப் பிறகுதான் செயல் பட ஆரம்பிக்கும் என்ற கூற்றை "NON-SENSE" என்று வர்ணிக்கிறது Uncommon Descent இணையதளம். இது பற்றி மேலும் படிக்க இங்கே...
   
ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும்? (Abiogenesis) என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இன்றைய தேதிவரை, விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பிறகும் கூட, பரிணாமவியலாளர்களால் ஒரு வாழும் செல்லை உருவாக்க முடியவில்லை. 

ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும் என்று தெரியாததால் தான் அதை பரிணாமவியலில் ஒரு பகுதியாக சேர்க்கவில்லையோ? 

நாளையே ஒரு செல்லை இவர்கள் உருவாக்கிவிட்டால், அதை பரிணாமவியலின் ஒரு பகுதியாக சேர்த்து, "பரிணாமவியல் பூரணமடைந்து விட்டது" என்று கூறினாலும் கூறுவார்கள்.

இது குறித்து பிரபல அறிவியலாளரான Sir Fred Hoyle அவர்கள் கூறியது,

The random emergence of even the simplest cell is equal to "a tornado sweeping through a junk-yard might assemble a Boeing 747 from the materials therein." - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105. (Emphasis added)
ஒரு மிகச் சாதாரண செல் (Simplest Cell) கூட தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது, ஒரு சூறாவளி, வேண்டாத பொருட்கள் சேகரித்து வைக்கப்படும் ஒரு இடத்தை கடந்து சென்றதால் (அந்த பொருட்களை கொண்டு) Boeing 747 விமானம் உருவாகிவிட்டது என்று கூறுவதற்கு நிகரானது - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.   

அவர் இத்தோடு நிறுத்தவில்லை, ஒரு புரதம் (ஒரு செல் என்பது பல்வேறு புரதங்களால் ஆனது) கூட தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்று சொன்னவர்.
   
எது எப்படியோ, பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் Abiogenesisசை பரிணாமவியலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளாதபடியால், அதை தற்போதைக்கு தள்ளி வைப்போம். பரிணாமவியலாளர்கள் எதை ஒப்புக்கொள்கிறார்களோ அதையே நாம் விமர்சிக்க முயல்வோம். இன்ஷா அல்லாஹ்...  

பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயமென்றால் அது பரிணாம மரம். 

பரிணாமத்தின் முக்கிய தூணான இதுவும் பரிணாமவியலாளர்களின் கற்பனைத் திறனால் வடிவமைக்கப்பட்ட ஒன்றே.  இதற்கும் எந்தவொரு ஆதாரமும் வரலாற்றில் இல்லை. 

பரிணாம மரம் என்றால் என்ன?

ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.

"ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது" - சகோதரர் ரஞ்சித், கையேடு வலைப்பூ.  

உதாரணத்துக்கு கீழே உள்ள படங்களை பாருங்கள்.  





ஒரே மூதாதையரில் இருந்து அனைத்து உயிரினங்களும் வந்திருக்க வேண்டும் என்று விளக்கும் பரிணாம மரத்தில் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் இது ஒரு யூகத்தில் அமைந்த ஒன்று என்பது தான். இதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை.

உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலான காலக்கட்டத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கின்றனர். உதாரணத்துக்கு...



Cambrian  - சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Ordovician - சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Pre-cambrian - உலகம் தோன்றியதிலிருந்து cambrian வரையிலான காலக்கட்டம். உலகம் தோன்றியது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராம். ஆக precambrian காலக்கட்டம் என்பது சுமார் 4 பில்லியன் ஆண்டுகள் கொண்டது.

ஏன் பரிணாம மரம் தவறென்றால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் இதற்கு எதிராகத்தான் உள்ளன. அதாவது, ஒரு மரத்தை தலைகீழாக திருப்பிபோட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் விவகாரங்கள் இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

இன்னும் தெளிவாக கூறப்போனால், மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் (Fossils) முதன் முதலாக தென்படும் (complex) உயிரினங்கள், முழுமையான உருவங்களில், திடீரென தோன்றியிருக்கின்றன.

உலகின் மிகப் பழமையான உயிரினப்படிமங்கள் என்றால் அவை cambrian காலக்கட்டத்தை சேர்ந்தவை (சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை). அந்த படிமங்களின் படி, அந்த கால கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் அனைத்தும் திடீரென தோன்றியிருக்கின்றன.

"A half-billion years ago, ...the remarkably complex forms of animals we see today suddenly appeared" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
"அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நாம் இன்று பார்க்கக்கூடிய சிக்கலான வடிவமைப்பை கொண்ட விலங்குகள் திடீரென தோன்றியிருக்கின்றன" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.    

ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்கள் சொல்வதும் இதையேத்தான் பிரதிபலிக்கின்றது,

"we find many of them already in an advanced state of evolution, the very first time they appear. It is as though they were just planted there, without any evolutionary history" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229. 
"அவைகளில் பெரும்பாலானவை முதன் முதலாக காணப்படும் போதே பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன. எந்தவொரு பரிணாம வரலாறும் இல்லாமல் அவைகள் அங்கே நட்டுவைக்கப்பட்டது போன்று உள்ளன" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.  

டாகின்ஸ் சொல்லுவது போல, இப்படி திடீரென்று தோன்றியிருக்கும் உயிரினங்கள் பரிணாமத்தை கடந்து வந்ததாக வரலாறு இல்லை.

  

இது குறித்து எழுதிய "Science" ஆய்விதழ், பின் வரும் தகவலை கூறுகிறது,

"The beginning of the Cambrian period, some 545 million years ago, saw the sudden appearance in the fossil record of almost all the main types of animals (phyla) that still dominate the biota today." - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 
சுமார் 545 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், Cambrian காலக்கட்டதின் துவக்கத்தில், இன்று நாம் பார்க்கக்கூடிய அனைத்து விதமான முக்கிய விலங்குகளும் உயிரின படிமங்களில் திடீரென தோன்றியிருக்கின்றன - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

அதே இதழ் மற்றொரு முக்கியமான செய்தியையும் சொல்கிறது. அதாவது இந்த காலக்கட்டத்திற்கு முன் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான (Gradual Increase) படிம  ஆதாரங்கள் இல்லை என்பது தான் அது.

"This differential evolution and dispersal, too, must have required a previous history of the group for which there is no fossil record" - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

பரிணாமம் உண்மையாக இருந்திருந்தால், cambrian காலக்கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை இல்லை.

இது பற்றி குறிப்பிடும் "Science Daily",

"If Darwin’s theory of natural selection was right, life evolved gradually over millions of years. However, the Cambrian period, which began around 542 million years ago, seemed to herald a sudden rapid increase in species diversity, an event which has come to be known as the ‘Cambrian explosion’"- Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.
"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.    

பரிணாமவியலாளர்கள் சொல்வது போன்று, ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் சிறுகச் சிறுக பெருகின என்பது போன்ற வாதங்கள் கற்பனை அளவில் மட்டுமே உண்மை. நம்மிடமிருக்கும் ஆதாரங்கள் அவர்களுடைய வாதங்களுக்கு நேர் எதிராகத்தான் இருக்கின்றன.      

ஆக, முதன் முதலாக காணப்படும் விலங்கினங்கள், பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவில்லை. பொதுவான மூதாதையர் என்ற கோட்பாடுக்கும் அவைகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.  




ஆக மொத்தத்தில் பரிணாம மரத்தின் அடிப்படையே தவறு. 

இன்ஷா அல்லாஹ், எதிர்க்காலத்தில், இந்த மரத்தின் கிளைகளையும் விமர்சிப்போம். அதாவது, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின; அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று கூறுவார்களே அதைத்தான் குறிப்பிடுகிறேன்.    (மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின, டைனாசரிலிருந்து பறவைகள் வந்தன என்று கூறப்படும் கதைகளெல்லாம் படு சுவாரசியமானவை).

அதெல்லாம் சரி, பரிணாமத்தின் அடிப்படையிலேயே இத்தனை கோளாறுகள் இருப்பது குறித்து பரிணாமவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள்? 

cambrian காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த உயிரினங்கள் மிக மிருதுவான தோல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால் உயிரினப்படிவங்களில் பரிணாமம் தென்படாமல் இருந்திருக்கலாம் என்பது அவர்களது முக்கிய வாதம்.

ஆனால் இதுவும் அவர்களது கற்பனையே தவிர உண்மையில்லை. சுமார் மூவாயிரம் பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினப்படிவங்களில் ஒருசெல் பாக்டிரியாக்கள் காணக்கிடைக்கின்றன (Micro Fossils). இன்றைய தேதிவரை, cambrian காலத்திற்கு முற்பட்ட பல microfossils கிடைத்துள்ளன.

ஆக, இவைகள் மிருதுவாக இருப்பதால் பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற இவர்களின் வாதங்கள் அறிவியலுக்கு ஒத்துவராது.

இவர்கள் கூறும் மற்றொரு காரணமான "Molecular Phylogeny" யும், பரிணாமத்தை நிரூபிப்பதற்கு பதிலாக அதற்கு எதிரான தகவல்களையே தருகின்றது.

So, இவ்வளவு ஆதாரங்கள் பரிணாம மரம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இருந்தும், இன்னும் ஏன் இதை பரிணாமவியலாளர்கள் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றனர்? 

இது, நாம் பரிணாமவியலாளர்களை நோக்கி கேட்க வேண்டிய கேள்வி....

"1999 ஆம் ஆண்டு, சீனாவைச் சேர்ந்த, cambrian கால உயிரினப்படிவங்களில் தனித்துவம் பெற்ற தொல்லுயிரியலாளர் (Paleontologist) ஒருவர், அமெரிக்காவின் பல்வேறு பல்கலைகழகங்களில் உரை நிகழ்த்துவதற்காக வந்திருந்தார். அவருடைய ஒரு உரையை கேட்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.
     அந்த உரையில், cambrian கால உயிரினப்படிவங்கள், டார்வினின் கோட்பாட்டிற்கு எப்படி நேர் எதிராக உள்ளன என்று சுட்டி காட்டினார் அவர். 
      உரை முடிந்ததும், அந்த அரங்கத்தில் இருந்த பல்வேறு விஞ்ஞானிகள் அவரிடம் உயிரினப்படிவங்கள் குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் டார்வினின் கோட்பாடு குறித்து அவர் சொன்ன தகவல்கள் தொடர்பாக எந்தவொரு கேள்வியையும் கேட்காமல் தவிர்த்து விட்டனர். 
   நிகழ்ச்சி முடிந்ததும் அவர் என்னிடம் இது பற்றி கேட்டார். நான் கூறினேன்,"டார்வினின் கோட்பாடை விமர்சிப்பது அமெரிக்காவில் விரும்பத்தக்கதல்ல" என்று.
   இதை கேட்டவுடன் சிரித்து விட்டார் அவர். பிறகு அவர் கூறினார், " சீனாவில் டார்வினை விமர்சிக்கலாம், ஆனால் அரசாங்கத்தை தான் விமர்சிக்க கூடாது. ஆனால் இங்கே அமெரிக்காவில் அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் டார்வினை விமர்சிக்க கூடாது" - Jonathan Wells, Icons of Evolution, 2000, pp-58. 

என்ன?, பரிணாமம் இல்லையென்றால் உயிரியல் இல்லையென்று சிலர் சொல்லுகிறார்களா?.....................ஏனென்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்....

நிச்சயமாக, பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மேம்பட்டது..........  

பரிணாமம் குறித்த எங்களுடைய அனைத்து பதிவுகளையும் காண <<இங்கே>> சுட்டவும்...

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

குறிப்பு: 
           தயவுக்கூர்ந்து, நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் எந்தவொரு தகவலையும் அப்படியே ஏற்காமல், நீங்களும் இவை சரிதானா என்று ஆராய்ந்து பாருங்கள். இஸ்லாமும் நமக்கு அதைத்தான் கற்று கொடுக்கிறது.


My Sincere Thanks to:
1. Br.Ranjith.
2. Talk Origins Website.
3. Dr.Jonathan Wells.

Pictures Taken from: 
1. The young oxford library of science.
2. Academic American Encyclopedia.
3. Berkeley University (tailored).
4. Icons of Evolution.
5. Atlas of Creation.
6. Encyclopedia Brittannica.

References: 
1. Definition of fossils - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.
2. Cells, Building blocks of life - "Ask a Biologist" Website
3. Origin of Life - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.
4. "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.
5. Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
6. Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.
7. Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439.
8. Solution To Darwin's Dilemma Of 1859 - Science Daily Dated January 9, 2009.
9. Tree of life - Jonathan Wells, Icons of Evolution, pp-29-58.
10. Evolution - Encyclopedia Brittannica.
11. Evolution - Academic American Encyclopedia
12. Cells - Wikipedia.
13. The Fossil Record Refutes Evolution - alberteinstein.ro


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

Sunday, September 5, 2010

பரிணாம பித்தலாட்டங்கள்....

4 கருத்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 


கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - I:


பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் (The Piltdown Man Forgery): 

பில்ட்டவுன் மனிதன், 
  • அறிவியல் உலகால் மறக்க முடியா பெயர். 
  • இருபதாம் நூற்றாண்டின்  மிகப் பெரிய அறிவியல் மோசடியாக, பித்தலாட்டமாக (The Biggest Scientific Hoax of 20th century) அறியப்படும் நிகழ்வு.  
  • குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து  மனிதன் வந்திருக்க வேண்டுமென்ற பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரமாக (The Missing link) காட்டப்பட்ட ஒன்று. 
  • நாற்பது ஆண்டு காலங்கள் உலக மக்களை முட்டாளாக்கிய பரிணாம ஆதாரம்.    

இந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம், 

"இது மோசடித்தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்? நாங்கள் தானே..."     

ஆம், அவர்களது கருத்து உண்மைதான். ஆனால், அவர்களுக்கு அதை விட்டால் வேறு வழியும் இல்லை என்பது தான் உண்மை. 

பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் எதைப் பற்றியது, எப்படி பித்தலாட்டம் நடந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....இன்ஷா அல்லாஹ்....      

பில்ட்டவுன் மனிதனைப் பற்றி..... 

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள கிராமம் பில்ட்டவுன். 1911 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இங்கு உள்ள ஒரு கல்சுரங்கத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார் தொல்லுயிரியலாளரான சார்லஸ் டாசன் (Charles Dawson, Amateur palaeontologist). 

அங்கு ஒரு மனித எலும்பு படிமத்தை கண்டெடுத்தார் அவர். பலவித படிமங்கள் அங்கு கிடைக்கலாம் என்று யூகித்த அவர், 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி தன் நண்பரான ஆர்தர் கீத் வுட்வர்ட் (Arthur Keith Woodward) அவர்களுக்கு தன் கண்டுபிடிப்புகளை பற்றி தெரிவித்தார். 

ஆர்தர் கீத் அவர்களும் தொல்லுயிரியலாளர் தான். பிரிட்டிஷ் இயற்கை வரலாறு அருங்காட்சியக (British Natural History Museum) பணியில் இருந்தவர். 

பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த இடத்தில் ஆய்வுகளை அதிகப்படுத்தினர். இவர்களுடன் தே சார்டின் (Teilhard de Chardin, priest and amateur geologist) என்பவரும் சேர்ந்து கொண்டார். 



இந்த குழு அந்த இடத்தில் பல்வேறு படிமங்களை கண்டெடுத்தது. அவை, 

  • மனிதக் குரங்கு போன்ற ஒன்றின் கோரைப்பல் நீங்கலான தாடைப்பகுதி (ape-like lower jaw missing the canine). 
  • மனித மண்டை ஓடு பகுதிகள் (human-like skull). 
  • மற்றும் சில விலங்குகளின் மிச்சங்கள்.          



கண்டெடுத்த இந்த படிமங்களை புவியியல் கழகத்திடம் ஒப்படைத்தனர் கீத்தும் டாசனும்.

(மண்டை ஓடு மற்றும் தாடையின் சில பகுதிகள் தான் கிடைத்தன என்றாலும் அவற்றை உதவியாக வைத்து மண்டை ஓட்டை பின்னர் சில ஆண்டுகள் கழித்து புனரமைப்பு செய்தனர் (Re-construction))  


(காலப்போக்கில் அதற்கு முகமும் உருவானது)


  
மனித மண்டை ஓடும், குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமங்கள் தான் என்பது போன்ற கூற்று உருவானது. அதுமட்டுமல்லாமல், தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனித பற்களைப் போன்று இருந்தன. இந்த படிமங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்ற பரிணாம கருத்துக்கு ஆதரவாக இருந்ததால், மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட உயிரினம் (Missing Link) கிடைத்து விட்டதாக நம்பப்பட்டது. 

இந்த உயிரினத்துக்கு "பில்ட்டவுன் மனிதன்" என்று பெயர் சூட்டினர். இவன் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கூறினர்.     

ஆனால் இதனை சில அறிவியலாளர்கள் நம்ப மறுத்தனர். இந்த இரண்டு படிமங்களும் வெவ்வேறு உயிரினத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என்று கூறினர். ஆனால் அவர்களது கருத்து எடுபடவில்லை. 

21-11-1912 அன்று இது குறித்த செய்தியை கார்டியன் பத்திரிக்கை வெளியிட விஷயம் படுவேகமாக பரவியது. மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக புகழப்பட்டது. 

1913 ஆம் ஆண்டு பில்ட்டவுன் மனிதன் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டான். அதே ஆண்டு, தாடைப் படிமம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் இருந்து ஒரு கோரைப்பல் கண்டெடுக்கப்பட்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கோரைப்பல் குரங்கின் பல்லை விட மனிதனின் பல் போன்று இருப்பதாக கீத் தெரிவித்தார். இது விடுபட்டு போன கோரைப்பல் தான் என நம்பப்பட்டது.  

இது, பில்ட்டவுன் மனிதன், குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் தான் என்ற கூற்றை மேலும் வலுப்படுத்தியது.  

இரண்டு ஆண்டுகள் கழித்து, படிமங்கள் முதலில் எடுக்கப்பட்ட கல்சுரங்கத்திற்கு இரண்டு மைல்களுக்கு அப்பால் இரண்டாவது பில்ட்டவுன் மனிதனின் மிச்சங்களாக சில மூளைப்பகுதி ஓடுகள், ஒரு கடவாய்ப்பல் (molar tooth) போன்றவை கண்டெடுக்கப்பட்டன. 

இப்போது முன்னர் சந்தேகம் தெரிவித்த அறிவியலாளர்களில் பலர் பில்ட்டவுன் மனிதனை நம்ப ஆரம்பித்தனர். 

(இங்கு ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களும் வெவ்வேறாக இருந்தன. உதாரணத்துக்கு, முதல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களில் தாடை இருந்தது. இரண்டாம் இடத்தில் அது இல்லை. முதல் இடத்தில் கோரைப்பல் கிடைத்தது, இரண்டாம் இடத்தில் கடவாய்ப்பல் கிடைத்தது)      

மற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், இந்த இரண்டாம் இடத்தை பற்றி அறிந்தவர் சார்லஸ் டாசன் மட்டுமே, வேறு யாருக்கும் இந்த இரண்டாம் பில்ட்டவுன் மனித மிச்சங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று தெரியாது. அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் இந்த இடம் முதல் இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ளது என்பது மட்டும்தான். இதற்கு காரணம், இரண்டாம் இடத்திலிருந்து மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில காலங்களில் டாசன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார் (1916). அதனால், இன்று வரை அந்த இரண்டாம் இடம் எது என்று அறிவியலாளர்களுக்கு தெரியாது. 

டாசனின் வாழ்வு முடிந்தது, ஆனால் பில்ட்டவுன் மனிதன் குறித்த சர்ச்சைகள் லேசாக வெளியில் வர ஆரம்பித்தன. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, டாசன் மறைவிற்கு பின்னர் அந்த கல்சுரங்கத்தில் இருந்து வேறு எந்த மனித படிமங்களும் கிடைக்கவில்லை. இந்த ஒரு படிமம் மட்டும் தான். இது சந்தேகத்தை அதிகப்படுத்த போதுமானதாக இருந்தது.

எப்போது பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் அம்பலமானது?    
    
1924 ஆம் ஆண்டிலிருந்து காட்சிகள் வேகமாக மாற ஆரம்பித்தன. அதிர்ச்சிகள் பல காத்திருந்தன. 1946 ஆம் ஆண்டு வரையிலான இந்த காலக்கட்டத்தில், உலகின் பல்வேறு இடங்களில் இருந்து "ஆதி" மனிதனின் படிமங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. (உதாரணத்துக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து, ஜாவாவில் இருந்து). இவை அனைத்தும் பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் வேறுபட்டன (பில்ட்டவுன் மனிதனின் குரங்கு தாடை போல எதுவும் இல்லை).   

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒரு கையில் பில்ட்டவுன் மனித படிமங்கள் மற்றொரு கையில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள். இவற்றில் எது மனித பரிணாமத்தை விளக்குகிறது என்று புரியாமல் பரிணாமவியலாளர்கள் குழம்பி போயினர். 

1924 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழங்கால மனித படிமம் (Australopithecus), பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் ஒத்துபோகவில்லை என்று கூறி அந்த படிமத்தை நிராகரித்திருக்கின்றனர் என்றால் பில்ட்டவுன் மனிதன் பரிணாம உலகில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

உலகின் பல்வேறு இடங்களில் மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட, இந்த இரண்டு படிமங்களுக்குமான வேறுபாடு பரிணாமவியலாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த இரண்டில் எது சரி? பில்ட்டவுன் மனித படிமமா? அல்லது உலகின் மற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட படிமங்களா? 

பரிணாமவியலாளர்கள் மற்ற படிமங்களை கைவிட்டு விட்டு பில்ட்டவுன் படிமத்தை விடாப்பிடியாக பிடித்திருக்க முக்கிய காரணம், அது, மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்கலாம் என்ற அவர்களது நம்பிக்கையை மெருகூட்டியதால் தான். உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட மற்ற படிமங்களை வைத்து மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தில் இருந்து தான் வந்திருக்கின்றான் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. ஆனால் பில்ட்டவுன் மனிதனை வைத்து அப்படி கூற முடியும், அது மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கான நேரடி ஆதாரம். அதனால் அவர்கள் பில்ட்டவுன் மனிதனை கைவிட விரும்பவில்லை. 

ஆனால், காலம் செல்ல செல்ல, மற்ற இடங்களில் படிமங்கள் அதிகமாக கிடைக்கப்பட, பில்ட்டவுன் மனிதனுக்கு எதிரான கருத்துக்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பித்தன. அது எப்படி பில்ட்டவுன் மனித படிமம் மட்டும் உலகின் மற்ற படிமங்களோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும்? 

இந்த கேள்வி மிக அதிக அளவில் எழ ஆரம்பித்தது. இப்போது பரிணாமவியலாளர்களுக்கு வேறு வழி இல்லை. பில்ட்டவுன் மனித படிமத்தை தெளிவாக ஆராய வேண்டிய சூழ்நிலை.

1940களில் படிமங்களின் வயதை கண்டிபிடிக்கப் பயன்படுத்தப்படும் ப்லூரின் சோதனை (Fluorine Test) புழுக்கத்திற்கு வந்த நேரம். இந்த புதிய யுக்தியை கொண்டு பில்ட்டவுன் மனிதனை ஆய்வு செய்ய ஆரம்பித்தார் கென்னத் ஓக்லி என்ற தொல்லுயிரியலாளர். 

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொண்டு வந்தன ஆய்வு முடிவுகள். 

முதல் ஷாக் என்னவென்றால், பில்ட்டவுன் மனித படிமம் ஐந்து லட்ச ஆண்டுகளுக்கு முந்தையதெல்லாம் கிடையாது, வெறும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுதான் என்பது.

இது பரிணாமவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனென்றால், இன்றைய மனிதன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தற்போதைய நிலையை அடைந்து விட்டான் என்பது அவர்களது புரிதல்.    

மனிதன் நன்கு பரிணாமித்து விட்ட காலக்கட்டத்தில், பரிணாமித்து கொண்டிருக்கும் பில்ட்டவுன் மனிதன் எப்படி இருக்க முடியும்?..... இது முதல் கேள்வி.    

ஆனால் இதுவெல்லாம் என்ன அதிர்ச்சி என்பது போல இருந்தன அடுத்தடுத்த நிகழ்வுகள். அவை அறிவியல் உலகை ஸ்தம்பிக்க வைத்தன.    

1953 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் ஜோசப் வெய்னர், கென்னத் ஓக்ளியுடன் சேர்ந்து இது குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். 

இரண்டாவது ஷாக்.....நன்கு முன்னேறிய யுக்திகளை வைத்து மறுபடியும் பில்ட்டவுன் மனித படிமங்களை சோதனை செய்து பார்த்ததில், மண்டை ஓடு மனிதனுடையது என்றும், தாடையோ ஓராங்குட்டான் குரங்கினுடையது என்றும் தெரியவந்தது. வேதிப்பொருட்களை கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதானவையாக தெரியவைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆக இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் பகுதிகள் அல்ல, இரண்டும் வெவ்வேறு உயிரினங்களின் பகுதிகள் என்ற உண்மை வெளிவந்தது.

அதுமட்டுமல்லாமல், தாடைப்பகுதில் இருந்த பற்கள் ஒராங்குட்டான் குரங்கின் பற்கள் என்றும், மனித பற்களாக தெரிய வைக்க அவை கருவிகளை கொண்டு தீட்டப்பட்டு, மண்டை ஓடு படிமத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை கறைப்படவும் செய்திருக்கின்றனர். 

நேர்த்தியாக செய்யப்பட்ட இப்படியொரு பித்தலாட்டத்தால் அறிவியல் உலகம் ஸ்தம்பித்து நின்றது. மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கு தெளிவான ஆதாரமாக காட்டப்பட்ட ஒன்று பரிணாமவியலாளர்கள் கண்முன்னே கரைந்து போனது. 

1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி "தி டைம்ஸ்" மற்றும் "தி ஸ்டார்" பத்திரிக்கைகள் இது குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை "பித்தலாட்டம்" என்றும் "நேர்த்தியான மோசடி" என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.  



லண்டன் ஸ்டார் பத்திரிக்கையின் தலையங்கமோ  "இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி" என்று கூறியது.

சுமார் நாற்பது ஆண்டு காலம் மக்களை முட்டாளாக்கி இருக்கின்றான் பில்ட்டவுன் மனிதன்.      

ஆனால் காட்சி இதோடு முடியவில்லை. இதற்கு மேல் தான் க்ளைமேக்ஸ்சே இருந்தது.

1959 ஆம் ஆண்டு கார்பன்-14 யுக்தியை கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், பில்ட்டவுன் மனிதனின் மண்டை ஓடு சுமார் 520-720 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாகவும், தாடையோ சற்று இளையதாகவும் (சுமார் 500 ஆண்டுகள்) தெரியவந்தது. கோரைப்பல்லோ ப்ளீஸ்டோசின் (Pleistocene Age: about 1.8 Million - 10,000 years before current period) கால சிம்பன்சி குரங்கினுடையது என்று தெரிய வந்தது.   

ஆக, மனித மண்டை ஓடு மற்றும் குரங்கின் தாடை என இவ்விரண்டும் மத்திய காலத்தை (Medieval Period) சேர்ந்தவை. இந்த பித்தலாட்டத்தை செய்தவர்/செய்தவர்கள் அவற்றை எடுத்து, அவை பழங்கால உணர்வு கொடுக்க வேண்டுமென்பதற்காக வேதிப்பொருட்களை கொண்டு அவற்றை மாற்றி அந்த கல்சுரங்கத்தில் போட்டிருக்கின்றார்/போட்டிருக்கின்றனர். இந்த அளவுக்கு நேர்த்தியாக மோசடியை செய்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக தொல்லுயிரியல் துறை பற்றி நன்கு அறிந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது இந்த பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்தவர்களின் கருத்து.        

இதனை செய்தவர்கள் யார்? 

இதை செய்தது யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. பலர் மீது சந்தேகப்படுகிறார்கள், அவர்களில் சிலர்,

  • Charles Dawson, 
  • Tielhard de Chardin, 
  • W. J. Sollas, 
  • Grafton Elliot Smith, 
  • Arthur Conan Doyle,
  • Martin A. C. Hinton   

போன்றவர்கள் ஆவர். Talk origins தளம் இன்னும் பலரது பெயரை குறிப்பிடுகிறது.

பலரின் மீது சந்தேம் இருந்தாலும் இந்த மனிதனை கண்டுபிடித்த டாசன் அவர்கள் மீதே அதிக சந்தேகம் இருக்கின்றது. பிபிசி, டாசனை அதிகமாகவே சந்தேகிக்கின்றது. இதற்கு,  

  • 1900 களில், டாசன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஹாஸ்டிங்க்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து இதே போன்ற ஒரு மண்டை ஓடு காணாமல் போனது, 
  • டாசன் இறந்ததிலிருந்து அந்த பகுதியில் வேறு படிமங்கள் கிடைக்கவில்லை என்பது

போன்ற காரணங்களை கூறுகின்றது.

டாசன் மீது பலரும் சந்தேகப்பட்டாலும் இன்று வரை இதனை செய்தவர் யார் என்பது புரியாதப் புதிராகவே உள்ளது...

"நாங்கள் தானே இதை கண்டுபிடித்தோம்...."
    
இப்போது பதிவின் துவக்கத்தில் நாம் பார்த்த கேள்வியை இங்கே கொண்டு வந்து பொருத்தி பார்ப்போம்.                        

இந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம், 

"இது மோசடி தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்? நாங்கள் தானே..."     

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.... ஆம், அவர்கள் தான் மோசடியை கண்டுபிடித்தார்கள். நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள் தான் அவர்கள்........

ஆனால் அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு வேலை, உலகின் மற்ற இடங்களில் மனித படிமங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே.      

ஆக, இந்த பித்தலாட்டம், பரிணாமவியலாளகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்பதை காட்டிலும், மனித பரிணாமம் குறித்த இருவேறு குழப்பங்களிருந்து அவர்களை விடுவித்து நிம்மதியடைய செய்தது என்பதே சரி.     


சில கேள்விகள்... '

இந்த பித்தலாட்டத்தின் மூலம் எனக்குள் எழும் சில கேள்விகள், 

  • இந்த பித்தலாட்டத்தின் நோக்கம் என்ன? 
  • ஒரு பொய்யை உண்மையாக காட்ட இத்தனை சிரத்தை எடுத்தது ஏன்?   
  • பரிணாம கோட்பாட்டை உண்மை என்று மோசடி செய்து நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? 

இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது...

இது மூலமாக நமக்கு கிடைக்கும் படிப்பினை, பரிணாமவியலாளர்களும் மனிதர்கள் தான், அவர்களும் தவறு செய்வார்கள், தங்கள் கொள்கையை உண்மை என்று காட்ட எந்த நிலைக்கும் அவர்கள் இறங்குவார்கள் என்பது.

எது எப்படியோ இந்த பித்தலாட்டம் நமக்கு சொல்லக்கூடிய செய்தி,  வரலாற்றில் பரிணாமம் நடந்ததற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரத்தை பரிணாமவியலாளர்கள் காட்டினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் குறைந்தபட்ஷம் நாற்பது ஆண்டுகளாவது பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென்பது.

நான் ஏற்கனவே பலமுறை கூறியது தான். பரிணாமத்திற்கு ஆதாரம் என்று வரலாற்றில் எதுவும் இல்லை.

நாய் (அல்லது நரி) போன்ற ஒன்றிலிருந்து குதிரை வந்திருக்க வேண்டுமென்று ஆதாரம் காட்டுவார்கள், பார்த்திருக்கின்றீர்களா?.... உயிரினங்களை, உருவத்தின் படி சிறியதிலிருந்து பெரியது வரை வரிசையாக அடுக்கி வைத்து குதிரை பரிணாமத்தை விளக்குவார்கள். இதுவெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஒன்று.  ஆனால் இன்றும் சிலர் இதனை பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்டுவது ஆச்சர்யமளிக்கின்றது. 

அதுபோல, மீனுக்கும் நிலநீர்வாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினம் என்று சீலகந்த் என்ற மீனை ஆதாரம் காட்டினார்கள். அது 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டது என்றும் கூறினார்கள். ஆனால் அந்த மீனோ 1930களின் பிற்பகுதியில் ஆப்ரிக்க கடல் பகுதியில் தென்பட்டு பரிணாமவியலாளர்களை திக்குமுக்காட செய்தது. அதுமட்டுமல்லாமல், ஆழ்கடல் உயிரினமான அந்த மீன் கடலின் தரைப்பகுதில் இருந்து சுமார் 150 மீட்டர்கள் வரை கூட மேலே வராது  என்றும் ஆய்வின் மூலம் தெரிய வந்தது. ஆக, இந்த ஆதாரமும் மறைந்தது. 

இப்படியாக இவர்கள் எதையெல்லாம் ஆதாரமாக காட்டினார்களோ அவை ஒவ்வொன்றாக காணாமல் போயின.

இன்ஷா அல்லாஹ் அவற்றை பற்றி எதிர்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.    

ஆதாரமே இல்லாமல் வெறும் யூகத்தால் அமைந்த ஒரு கோட்பாட்டை அறிவியல் என்று சொல்வது சரியா அல்லது கதை என்று சொல்லுவது சரியா....

பரிணாமம் தொடர்பான மற்ற கட்டுரைகளை பார்வையிட இங்கே சுட்டவும். 

இறைவன் இது போன்ற மோசடிகளிலிருந்து நம்மை வழி தவற செய்யாமல் பாதுகாப்பானாக...ஆமின்.  

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to, 
1.Talk Origins Website.
2. Natural History Museum, London.
3. BBC.

References:
1. Piltdown Man, The Bogus Bones Caper - Richard Harter, Talk Origins Website.
2. Creationist Arguments: Piltdown Man, Talk Origins Website.
3. Piltdown Man - Natural History Museum, London.
4. The Unmasking of Piltdown Man - BBC
5. Fossil fools: Return to Piltdown - Paul Rincon, BBC dated 13th November 2003.
6. Piltdown Man: Timeline of deceit - BBC dated 13th November 2003.
7. Charles Dawson: 'The Piltdown faker' - BBC dated 21st November 2003.
8. Piltdown Man Forgery - Times Archive, Times Online Website.
9. Piltdown Man is revealed as fake - PBS
10. Piltdown Man Forgery (The times article extract) - Clark University.
11. Piltdown Man - wikipedia.
12. Piltdown Man - archaeology - famous hoax: Age of the Sage website.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

Thursday, August 19, 2010

"செயற்கை உயிர் (?)": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?

5 கருத்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....ஆமின்.
    
செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

வினவு இணையதளத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு இது.

செயற்கை செல் (Synthetic Cell) ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருதையன் என்ற சகோதரரால் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான நேரடி பதிலை யார் சொன்னால் நன்றாக இருக்கும்?

இந்த ஆராய்ச்சியை நடத்திய கிரேக் வென்டர் கழகத்தின் தலைவரும் (J.Craig Venter Institute (JCVI)), செயற்கை செல் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான டாக்டர் கிரேக் வென்டர் அவர்கள் சொன்னால் சரியாக இருக்குமா?   

"Kornberg did not create life in a test tube, nor did we create life from scratch. We transformed existing life into new life. We also did not design and build a new chromosome from nothing. Rather, using only digitized information, we synthesized a modified version of the naturally occurring Mycoplasma mycoides genome. The result is not an "artificial" life form" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.

நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை. முடிவோ, செயற்கை உயிர் இல்லை - (Extract from the original quote of) J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010. 

இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தியவரே சொல்கின்றார் 'நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லையென்று". இந்த விஷயம் சகோதரர் மருதையனுக்கு ஏன் தெரியவில்லை?.
   
இதே போன்றதொரு கருத்தை தான் "தி நியூயார்க் டைம்ஸ்" நாளிதழில் வந்த ஒரு கட்டுரையும் பிரதிபலிக்கின்றது.       

"He has not created life, only mimicked it” - Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010. 
அவர் உயிரை உருவாக்கவில்லை, ஒரு உயிரை மிமிக்ரி மட்டுமே செய்துள்ளார் - (Extract from the original quote of) Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.

ஒரு செயற்கை உயிரை வென்டர் உருவாக்கிவிட்டார் என்று மருதையன் போன்ற சகோதரர்கள் நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல. படிப்பவர்களை உண்மையை விட்டு திசைதிருப்பும் முயற்சியே இது மாதிரியான தலைப்புக்கள்.   

மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், 

செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?

ஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை  (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள்.    
  
அதே கட்டுரையில் மருதையன் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்,

"சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா" - வினவு, 8/7/2010. 

இந்த செயற்கை செல் ஆராய்ச்சி உண்மையில் யார் முகத்தில் கரியை பூசியிருக்கின்றது?, இறை நம்பிக்கையாளர்கள் மீதா அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா?, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன?, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். 

செயற்கை செல் என்றால் என்ன?

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.

இப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.

JCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. "ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை? (what is the minimum number of genes required to make a living cell?)" என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் "குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)".

இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.

முதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர்.  பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.

இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.

இந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது. 

"The synthetic Mycoplasma mycoides genome was assembled by adding the overlapping DNA fragments to yeast. Once inside a yeast cell, the yeast machinery recognized that two DNA fragments had the same sequence and assembled them at this overlapping region" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.

இந்த வாழும் செல் இல்லையென்றால் செயற்கை மரபுரேகையை உருவாக்கியிருக்க முடியாது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.   

இப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.

இப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.

பின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.

அந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.

இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன. 
  



இப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் "Mycoplasma mycoides JCVI-syn1.0" என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு. (இதைத்தான் "சிந்தடிகா" என்று எழுதினாரோ மருதையன்)

சற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது.

ஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.

மொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.   

விஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.....

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். அதாவது, கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே?, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல "செயற்கை செல்" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்?

உங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு "செயற்கை செல்" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, "செயற்கை மரபுரேகை" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்?

"First, as many have noted, the technical accomplishment is not quite what the JCVI press release claimed. It’s hard to see this as a synthetic species, or a synthetic organism, or a synthetic cell; it’s a synthetic genome of Mycoplasma mycoides, which is familiar enough" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

"முதலில், பலரும் குறிப்பிட்டது போல, JCV கழகம் வெளியிட்ட அறிக்கை கோருவது போல இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப சாதனையாக தெரியவில்லை. இதனை ஒரு செயற்கை இனமாகவோ, அல்லது செயற்கை உயிரியாகவோ, அல்லது செயற்கை செல்லாகவோ பார்க்க கடினமாக உள்ளது; Mycoplasma mycoidesனுடைய செயற்கை மரபுரேகையான இது நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்" - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.         

ரூடர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது "Artificial life? Synthetic genes 'boot up' cell" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ?    

இது குறித்து வென்டர் என்ன கூறுகின்றார்?...செல்லை கட்டுபடுத்துவது செயற்கையாக உருவான மரபுரேகை என்பதால் இதற்கு "செயற்கை செல்" என்று பெயர் வைத்ததாக கூறுகின்றார். ஆனால் அவருடைய இந்த விளக்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது...

"The explanation from the Venter camp is that the genome took over the cell, and since the genome is synthetic, therefore the cell is synthetic. But this assumes a strictly top-down control structure that some biologists now question. Why not say instead that the genome and the cell managed to work out their differences and collaborate, or even that the cell adopted the genome (and its identity)? Do we know enough to say which metaphor is most accurate?" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் "செயற்கை மரபுரேகை" என்பது தானே தவிர "செயற்கை செல்" அல்ல.

இந்த ஆய்வின் மூலம் JCV கழகம் தங்கள் திட்டத்தை நோக்கி ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர். அதாவது, ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் தேவை என்பது பற்றி அறியும் திட்டம்.

இங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது மிகச் சிறிதுதான். இந்த ஆய்வு பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் நீங்கள் இது பற்றி மேலும் ஆராய்ந்தறிய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.


இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா? (Does the Venter Institute's achievement show that life is just chemicals?)  

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. 

செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அவற்றை மற்ற உயிரின செல்களுக்குள் செலுத்துவதென்பது பல காலங்களாக நடந்து வருவதுதான். இந்த முறை நடந்ததுதான் அளவுக்கோளில் மிகப் பெரியது.

ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அதாவது, Mycoplasma capricolum பாக்டீரியாவின் மரபுரேகை வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும் அது இன்னும் உயிருள்ள ஒரு செல் தான் (மரபுரேகையை வெளியே எடுத்தவுடன் அது செத்துவிடவில்லை). ஆனால், அது தன்னுடைய தன்மையான "தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்வதை" செய்யாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகை உள்ளே செலுத்தபட்டவுடன் அந்த பாக்டீரியா தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது.      

வாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.

"What separates a bag of DNA from a living, replicating cell is still unclear and un-synthesizable. To me, life is still "special" and incredibly powerful" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. 
"வாழும் மற்றும் பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல் செயற்கையாக உருவாக்கப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை உயிர் என்பது தனித்துவம் மிக்கது மற்றும் மிகவும் வலிமையானது" - (Extract from the Original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.  

ஆக, உயிருள்ள ஒரு செல்லுக்குள் தான் செயற்கை மரபுரேகை புகுத்த பட்டுள்ளது. 

ஒரு வாழும் செல்லை செயற்கையாக வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கும் வரை உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால்  ஆனது என்று கூற முடியாது.     


செயற்கை செல் இறைவனை மறுக்கின்றதா? 

இதற்கான பதிலை வென்டர் தெளிவாக கூறிவிட்டார். தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்று. ஏற்கனவே இருந்த ஒரு உயிரை ரி-ப்ரோக்ராம் (Re-Program) தான் செய்துள்ளார்கள்.

மரபுரேகையையும் (Genome) இவர்களாக உருவாக்கவில்லை, இயற்கையாக இருந்த ஒரு உயிரின் மரபுரேகையை பார்த்து அதே போன்ற ஒன்றை செய்துள்ளனர்.

உதாரணத்துக்கு, மரபுரேகையை ஒரு மென்பொருளோடு (Software) ஒப்பிட்டால், அந்த மென்பொருளை இவர்களாக எழுதவில்லை, ஏற்கனவே இருந்த ஒரு மென்பொருளை பார்த்து காப்பி அடித்திருக்கின்றனர், அவ்வளவுதான். (They didn't write a new software, they just copied a existing one).  

"The work reported by Venter and his colleagues is an important advance in our ability to re-engineer organisms; it does not represent the making of new life from scratch." - Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010.
வென்டர் மற்றும் அவருடைய குழுவினருடைய ஆய்வு, உயிரினங்களை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். (ஆனால்) அது ஒரு புது உயிரை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவில்லை - (Extracted from the original quote of) Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010. 

இவர்கள் கடவுளாக முயற்சிக்கவில்லை. கடவுள் உருவாக்கிய ஒரு உயிரின் சிறு பகுதியை பார்த்து அதனை 40 மில்லியன் டாலர்கள் செலவில், அதிநவீன இயந்திரங்களின் துணையோடு, 15 வருட கடின உழைப்பில், 25 விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நகலெடுத்துள்ளனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ  இயற்கையானது.

ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.

ஆக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை செயற்கையாக உருவாக்கப்பட்ட செல்லுக்குள் இவர்கள் செலுத்தவில்லை. இயற்கையாக உள்ள மற்றொரு செல்லுக்குள் தான் செலுத்தியிருக்கிறார்கள்.

வேறுவிதமாக சொல்லப்போனால் இந்த மரபுரேகையை உருவாக்க ஒரு சிறு பகுதியை மிமிக்ரி செய்தும் மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்.

"It might be still more accurate to say that the researchers mimicked one part and borrowed the rest" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்கள் ஒரு பகுதியை மிமிக்ரி செய்தும், மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர் - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010. 

ஒரு கணிப்பொறியில் (Mycoplasma mycoides) உள்ள மென்பொருளை (Genome of Mycoplasma mycoides) காப்பி செய்து அதனை மற்றொரு கணிப்பொறியில் (Mycoplasma capricolum) மாற்றி விட்டு விட்டனர். ஆக, செல் என்னும் கணிப்பொறியை கடன் வாங்கியும், மரபுரேகை என்னும் மென்பொருளை மிமிக்ரி செய்தும் ஆய்வு முடிவுகளை அளித்திருக்கின்றனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?   

அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது ஒரு வாழும் செல் தான் (ஈஸ்ட் செல்). 

ஈஸ்ட் செல்கள் இல்லையென்றால் சின்தியா உருவாகியிருக்காது. ஆக, ஏற்கனவே இருந்த ஒரு உயிரைக்கொண்டு தான் செயற்கை மரபுரேகையை உருவாக்கியுள்ளனர்.

"Without life, Synthia wouldn't be alive" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. 
உயிரில்லை என்றால் சின்தியா வந்திருக்காது -  (Extract from the original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.   

செயற்கையான ஒன்றை உருவாக்குவதற்கு இயற்கையான ஒன்றுதான் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில், இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை "செயற்கை மரபுரேகையை" உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது. 

இப்படி இறைவன் கொடுத்த அனைத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு, விஞ்ஞானிகள் ஒரு உயிரை செயற்கையாக உருவாக்கி கடவுளை பொய்பித்து விட்டனர் என்று கூறுவது அபத்தமானது மட்டுமல்ல, அறிவுக்கு ஒத்து வராததும் கூட.

இதனால் தான் வென்டர் "தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை" என்று மிக தெளிவாக, விரைவாக மறுத்து விட்டாரோ? 


செயற்கை செல் நாத்திக கொள்கையை பொய்பிக்கின்றதா?

என்னை பொறுத்தவரை, ஆம். 

உலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி. 

பல பேருடைய அயராத உழைப்பில், அதி நவீன கருவிகளைக் கொண்டு இந்த செயற்கை மரபுரேகை உருவாகியுள்ளது. (நகலெடுப்பதில் ஏற்பட்ட) ஒரு சிறிய தவறு பல மாதங்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நடக்க விடாமல் தடுத்திருக்கின்றது. ஆக, அதி கவனமாக பதினைந்து வருடங்களாக பாடுபட்டு இந்த ஆய்வை செய்திருக்கின்றனர். 

ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்? 

ஒரு செல்லே தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்னும் போது அதனை அடிப்படையாக கொண்டு மற்றவை வந்திருக்கும் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதா?

ஒவ்வொரு முறையும் இறைவனை மறுப்பதாக கூறிக்கொண்டு நாத்திகர்கள் கொண்டு வரும் அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் பூமராங் போல திரும்ப அவர்களையே வந்து தாக்கும். இந்த முறையும் அது தான் நடந்துள்ளது. என்ன, கடந்த காலங்களை போலல்லாமல் வெகு விரைவாகவே அந்த பூமராங் இந்த முறை வந்து விட்டது.

இதுபோன்ற ஆய்வுகள் சில நாத்திகர்களது உள்ளத்தில் நிச்சயம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். தங்கள் நிலைப்பாட்டை தள்ளி வைத்துவிட்டு உண்மையை அறிய தூண்டியிருக்கும். 

மனித குலத்திற்கு இந்த ஆய்வால் என்ன பலன்?   

பல பயன்கள் உள்ளதாக வென்டர் கூறியுள்ளார். சுத்தமான தண்ணீர் வழங்குவதிலிருந்து சுகாதாரம் வரை இந்த ஆய்வால் பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி கேன்சர் போன்ற நோய்களை பற்றி நன்கு அறிவதற்கும், புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படலாம். 

ஆனால் அதே சமயம் இந்த ஆய்வுகளால் விபரீதங்களும் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர். Bio-Terrorism போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த ஆய்வு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றார். 

"This development raises the prospect of important benefits, such as the ability to accelerate vaccine development. At the same time, it raises genuine concerns, and so we must consider carefully the implications of this research." - President Obama, in a letter to the chair of his new bioethics commission.  

இந்த ஆய்வு சரியான திசையில் சென்றால் இதனை வரவேற்று ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது. 

இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குண்டான நிவாரணம் இல்லாமல் படைப்பதில்லை என்பது நபி மொழி. இது போன்ற ஆய்வுகள் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் நோய்களை பற்றி நன்கு அறிவதற்கு பயன்படுகிறது என்றால் இதனை ஊக்குவிப்பதே ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. 
       
முடிவாக... 

உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

ஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்...கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த முறையும், "செயற்கை செல்" ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார். 

இந்த ஆய்வு இறைவனை மறுக்காது, மாறாக இறைவனின் ஆற்றலை பறைச்சாற்றி இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது

நான் நாத்திக சகோதர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் "செயற்கை செல்" ஆய்வை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அது கடவுளை மறுக்கின்றதா? அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா? என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.....

முடிவாக, விஞ்ஞானிகளால் ஒரு உயிரை உருவாக்கவே முடியாதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை மே மாதம் வெளிவந்த பிரபல Nature இதழில் காணலாம். 

"Frankly, scientists do not know enough about biology to create life," - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010. 
வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.         

விஷயம் முடிந்தது....முற்றுப்புள்ளி......    


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
    

My Sincere thanks to:
1. Dr.Craig Venter.
2. The Wall Street Journal daily.
3. The Scientist magazine.
4. The New York Times daily.
5. Science magazine.
6. Reuters.
7. JCVI.org
8. Vinavu.
9. Nature Journal.

References: 
1. Creation of a Bacterial Cell Controlled by a Chemically Synthesized Genome - Science, Vol. 329. no. 5987, pp. 52 - 56, dated 2nd July 2010.
2. Is Synthia Life From Scratch? No, But A Cell Controlled By A Synthetic Genome May Save Our Energy Future - Science 2.0, dated 20th May 2010.
3. Cell door opens on fantastic future - The Sydney Morning Herald, dated 27th May 2010.
4. How We Created the First Synthetic Cell - J. CRAIG VENTER AND DANIEL GIBSON, The Wall Street Journal, dated 26th May 2010.
5. Artificial life? Synthetic genes 'boot up' cell - Reuters, dated 20th May 2010.
6. First Self-Replicating Synthetic Bacterial Cell - J.Craig Venter Institute.
7. What Synthia means to me - Christina Agapakis, Oscillator, Scienceblogs.com, dated 21st May 2010.
8. Is the Synthetic Cell about Life? - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
9. Scientists create first synthetic cell - Hindustan Times, dated 22nd May 2010.
10. Synthetic Cell - Man playing God or plagiarising God? - Abu Musa, Khilafah.com, dated 27th May 2010.
11. Is Craig Venter's Synthetic cell really life? - Uncommon descent.
12. Researchers Say They Created a ‘Synthetic Cell’ - The New york Times, dated 20th May.
13. Mycoplasma capricolum, Mycoplasma mycoides, Microorganism, Genome, Bacterial cell structure - Wikipedia
14. How many genes are there in an average human? - Answers.com
15. Life after the synthetic cell, Nature, 27th May 2010.      
16. Vinavu's Article on Synthetic cell, 8th July 2010.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ