Thursday, August 25, 2016

அருமையான காணொளி! முன்னால் பிஜேபி ஆதரவாளர்.

0 கருத்துக்கள்
அருமையான காணொளி! முன்னால் பிஜேபி ஆதரவாளர். இந்த நாட்டை துண்டாடுவது, இந்த நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபடுவது, மதக் கலவரத்தை தூண்டுவது என்று அனைத்தும் செய்வது இந்துத்வாவாதியினரே என்று இந்த இளைஞர் விளாசித் தள்ளுகிறார். இவரது கேள்விகளுக்கு மோடி பதில் அளிப்பாரா?

Friday, December 7, 2012

ஆலோசனை சொன்னா 10,000 ரூபாய் பரிசு..

0 கருத்துக்கள்

             பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னேடுத்தும் செல்லும் "இஸ்லாமிய பெண்மணி" தளம் தற்போது மற்றொரு முயற்சியாக ஒரு மாபெரும் பரிசுப்போட்டியை அறிவித்துள்ளது. "கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லீம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?" என்ற தலைப்பில் நீங்க உங்க ஆலோசனைகளை கட்டுரையாக எழுத வேண்டும். வெறும் போட்டியாக இல்லாமல் நீங்க கட்டுரையில் சொல்லும் தீர்வுகளை நோக்கி பயணப்பட போகின்றது இந்த முயற்சி. 


முஸ்லிமல்லாதோரும் பங்கு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த போட்டியின் விதிமுறைகள் என்ன?, கட்டுரையில் இஸ்லாமிய பெண்மணிகள் எதிர்பார்ப்பது என்ன?

  • இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்
  • கல்வியில் நமது சமூகத்தின் இன்றைய நிலை
  • ஆக்கப்பூர்வமான கல்வி என்பது என்ன? 
  • அதை அடைய நம்மிடையே வசதி, வாய்ப்புகள் உள்ளனவா?
  • வசதி, வாய்ப்பு இல்லை எனில் எவ்வாறு அதை உருவாக்குவது?
  • உருவாக்குவதற்கான சாதக, பாதகங்கள் என்ன?

மேலே சொன்னது இல்லாமல் புது ஐடியா இருந்தா அதையும் நீங்க சொல்லலாம். பரிசு என்னவென்று தலைப்பிலேயே இருக்கு. இது மட்டும் இல்லாம, வெல்பவர்கள் முஸ்லிம் பெண்களா இருந்தால் இஸ்லாமிய பெண்மணி தளத்தில் ஆசிரியராகும் பரிசும் உண்டு. 

எந்த முகவரிக்கு கட்டுரைகளை அனுப்பனும்? எந்த தேதிக்குள்ள அனுப்பனும்? 

இதுப்போன்ற விபரங்களுக்கும், மேலும் பல விபரங்களுக்கும் இஸ்லாமிய பெண்மணி தளத்தின் இதுகுறித்த பதிவை காணவும். பதிவை காண <<இங்கே>> சுட்டவும்..

நீங்கள் அறிந்தவர்களுக்கும், சமூக தளங்களிலும் இதனை ஷேர் செய்து மேலும் பலரை சென்றடைய உதவவும்...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ Saturday, August 18, 2012

வலீமா புறக்கணிப்பு சரியா...?

4 கருத்துக்கள்
இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய வலீமா என்ற ஒரு கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்..? கண்ட காரணத்தை சொல்லி வலிமாவை புறக்கணிக்க ஆதாரம் உண்டா..? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசுவோமா...?

நிக்காஹ் புறக்கணிப்பு சரியா..?

1 கருத்துக்கள்
இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய நிக்காஹ் என்ற ஒரு கட்டாயக்கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்..? கண்ட காரணத்தை சொல்லி நிக்காஹ்வை புறக்கணிக்க ஆதாரம் உண்டா..? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசுவோமா...?

Tuesday, July 31, 2012

தவிர்ப்போம் சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்களை..!

4 கருத்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
சகோஸ்....

நள்ளிரவு நேரம்..!

சாதாரண நாட்களில் நம்மில் பலர் தூங்கி விடுவது உண்டு. வெகுசிலரே நள்ளிரவு நேரமான தஹஜ்ஜத் நேரத்தில் எழுந்து அதை தொழுகிறோம். நைட் ஷிப்டில் இருக்கும் போது மட்டும் எனக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். நம்மில் பலர் மற்ற ஐந்து வேலை நேர தொழுகைகளை அதன் அதன் நேரத்தில் சரியாக நிறைவேற்றுபவர்கள் கூட தஹஜ்ஜத் கடமையான தொழுகை இல்லாததால் அதில் அவ்வப்போது கவனக்குறைவாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். 

தஹஜ்ஜத் என்ற நள்ளிரவு தொழக்கூடிய தொழுகை மற்ற ஐந்து வேலை தொழுகைகள் மற்றவைகளுக்கு கடமை ஆவதற்கு முன்னரே அல்லாஹ் தான் தூதருக்கு மட்டும் இஸ்லாமிய பிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே அதனை கடமை ஆக்கி இருந்தான்..! அதுபற்றிய குர்ஆன் வசனங்கள்...

73:1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
73:2. இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
73:3. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
73:4. அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.


தஹஜ்ஜூத் என்ற அத்தியாயத்தில் வரும் சில ஹதீஸ்கள்..!

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.
ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். 
புஃஹாரி-1136

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் ஒரு ஸஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஃபஜ்ருத் தொழுகைக்காக முஅத்தின் அழைக்கும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஃஹாரி-1123. 


சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு (இரவில்) நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது 'நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கேட்பார்கள். (முகீரா(ரலி) அறிவித்தார். புஃஹாரி 1130

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை.
ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.1124


ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை (வக்த் வந்திருக்குமோ என்று அதன் நேரத்தை) பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்" என்று கூறினார்கள். இப்னு உமர்(ரலி) அறிவித்தார் புஃஹாரி 990.

இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: 
"இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'. 
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் புஃஹாரி 998.


ரமலானின் இரவுத்தொழுகை ஜமாஅத்  தொழ-தொழவைக்க ஆக சிறந்த நேரம் எது..? 

வருடம் பூராவும் நள்ளிரவில் சுன்னத்தான நபிவழி தொழுகையாக அதிக நன்மைக்காகவேண்டி... தொழ வேண்டிய  தஹஜ்ஜத் தொழுகையை ரமளானில் இஷா ஜமாஅத் முடித்த உடனேயே தொடந்து தராவீஹ் என்ற பெயரில் இமாம் ஜமாத்தோடு தொழுதுவிட்டு தூங்கிவிடுகிறோம். தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இயக்கங்கள் உட்பட இதே வழிமுறையைத்தான் ஜமாஅத் விஷயத்தில் பின்பற்றுகின்றன. ஆனால், ஹதீஸ்களில் இந்த தொழுகையை நபி ஸல் அவர்கள் இஷா தொழுதுவிட்டு தூங்கிவிட்டு நள்ளிரவில் எழுந்துதான் தொழுது உள்ளார்கள் என்று பல ஹதீஸ்கள் மூலம் அறிகிறோம்.

ரமலானின் இரவுத்தொழுகை ஜமாஅத் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்...!


புஃஹாரி 2010. அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 

நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். 
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார். 

புஃஹாரி 2012. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். 
"நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
புகாரி( 527)அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :  
நான் நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள்.    

எனவே தொழுகைகளை அவற்றுக்குரிய நேரங்களில் தொழுவதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். மற்ற தொழுகைகளுக்கு "அவ்வல் வக்த்" எப்படி சிறப்பானதோ... அதேபோல... இரவுத்தொழுகைக்கு இரவின் இறுதியான ஆக்ஹிர்வக்த்தான் சிறப்பானது.

சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்கள் தேவையா...?

இந்நிலையில்.... ரமளானில் கடமையான நோன்பை நோற்க ரஹ்மத்தான சஹர் உணவை சாப்பிட எப்படியும் துயில் எழுந்து விடுகிறோம். அதற்கு ஒரு மணி நேரம் முன்னர் எழுந்து நம்மில் பலர் தஹஜ்ஜத் தொழலாம். மற்ற நாட்களை விட ரமளானில் இது இலகு. ஆனால் அதை செய்யாமல்... ஸஹர் நேரத்தில் முன்னரே எழுந்து இப்போது டிவிக்கு முன்னர் அமர்ந்து விடுகிறோம். காரணம்...? எல்லா இயக்கங்களும் எக்கச்சக்க சஹர் ப்ரோகிராம்கள் போடுகின்றன. இதனை அவசியம் பார்க்க சொல்லி ஏகப்பட்ட விளம்பரங்கள் வேறு. அதிலும் இசையுடன் கூடிய ஏகப்பட்ட வர்த்தக விளம்பரங்கள். குறைந்த நேரமே இருந்தும், அதில் தட்டை பார்த்து சாப்பிடாமல்... டீவியை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறோம். ஒரே டிவியில் முடிந்த வரை விளம்பர இடைவெளியில் சில நிகழ்ச்சிகளை காண்கிறோம்.

ஏன்..?

கொஞ்சம் பொறுத்தால்... அதே உரை சிடியாக நமக்கு கிடைக்க போகிறது..! அல்லது ஃப்ரீ டவுன்லோடு ஆப்ஷன் அவர்கள் வெப்சைட்டில் வைக்கிறார்கள்..! அல்லது ரமளான் முடிந்தவுடன்  தங்கள் வழமையான மாலை/இரவு நேர ப்ரோகிராம்களில் மறுஒளிபரப்பு செய்ய போகிறார்கள்...! அப்போது ஆற அமர அமர்ந்து பார்ப்பதைவிட்டுவிட்டு... எதுக்கு நாம் நமது நன்மையை... அதுவும்  வணக்கத்திற்கு சிறந்த ஆயிரம் மாதங்களை விட சிறப்பான லைலத்துல் கத்ர் எல்லாம் வரப்போகிற ரமளானில்... அதுவும்... துவா கேட்கும் சிறந்த நேரத்தை.... ஏன் இழக்கனும்..?   சிந்திக்கவும் சகோஸ்..!

பிரார்த்தனையும் வணக்கமே..!

அல்லாஹ் நம்மை பிரார்த்திக்கவும் சொல்கிறான் எனபதை அறிவோம்.
நபி (ஸல்) அவர்களும் கூட, "பிரார்த்தனையே வணக்கமாகும்" எனக் கூறியுள்ளார்கள். 


இறைவனை வணங்கும் வணக்கத்திற்கு நிகராகக் கருதப்படும் "பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட குறிப்பிட்ட சில நேரங்கள் உள்ளன" என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

மக்கள் உறக்கத்திலும் உலக இன்பங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறான் என்று புரியலாம்.

அல்லாஹ் நமக்கு ஒரு பிரத்தியேகமான பதிலளிக்கும் நேரம் ஏற்படுத்தி தூக்கத்தை வென்று அவனிடம் தமது எல்லாவித தேவைகளை கேட்பவர்களுக்கு அருள நாடுகின்றான் என்றும் புரியலாம்.

பிரார்த்தனைக்கு ஆக சிறந்த நேரம் எது...?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." (முஸ்லிம் : 757) 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தமது வணக்கத்தின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ள நேரம் இரவின் இறுதி பகுதி நேரம் ஆகும். ஆகையால் உங்களால் அந்நேரத்தில் இறைவனை நினைவுகூர்ந்து வணங்குபவர்களில் ஒருவராக இருக்க இயன்றால் அதை செய்யுங்கள். (அம்ரு இப்னு அபஷ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:  திர்மிதி, நஸாயீ


அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வோர் இரவின் இறுதியில் மூன்றாம் பகுதியில் நமது இரட்சகனும் ரப்புமாகிய அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான். மேலும், 'என்னை அழைப்பவர் உண்டா?, நான் அவருக்கு பதிலளிப்பேன். என்னிடம் தமது தேவைகளை கேட்பவர் உண்டா? நான் அவருக்கு வழங்கக் கூடும். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் அவர்களை மன்னிக்கக்கூடும்' என்று கூறுகின்றான்" (அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள்:ஸஹீஹ் புகாரி)

அந்த நேரம்..., இரவுத்தொழுகைக்கான நேரம் அல்லவா..? அதைவிட அல்லாஹ்வே வலியுறுத்திய துவா கேட்க சிறப்பான நேரம் அல்லவா..? அந்த நேரத்தை எந்த ஜமாஅத்தும் ஜமாஅத் தொழுகையில் ஹயாத் ஆக்கக்காணோம்...! ஆனால், நம்மை துவா கேட்கவும் விடுவதாக இல்லையே..? இது சரியா..? 

ஆகவே, அந்த நேரம் தஹஜ்ஜத் தொழும் நேரம். தொழுதுகொண்டே சஜ்தாவில்... அல்லது தொழுதுவிட்டு இருகரம் ஏந்தி... மனம் ஒருமித்து.... நமது தேவைகளை நாம் கேட்கும் துவாவுக்கான அல்லாஹ் ஏற்படுத்தி தந்த சிறந்த நேரம். இதை பாழ்படுத்துகின்றன இந்த சஹர் நேர ப்ரோகிராம்கள்..!

எவரும் இதை சஹர் நேரத்தில் மக்களுக்கு சொல்வதில்லை. சொன்னால் அது அவர்களுக்கே நஷ்டம். நாம் தான் நம்மிடையே இதை பரப்பிக்கொள்ள வேண்டும்..! யார் அதிக நேரம் ப்ரோகிராம் போடுவது... எந்த இயக்கத்துக்கு முன்னணி சேனல்கள் கிடைத்தன... எவ்வளவு விளம்பரம் வருகின்றன.... டிஆர்பி ரேட் எப்படி.... என்பதிலேயே போட்டி... இவற்றில் லீடிங் என்றால் அது பெருமை..!

(குறிப்பு: இது ஐந்து - ஆறு வருடங்களுக்கு முன்னர் உள்ள நிலை. இப்போது என்ன நிலை என்று தெரியவில்லை. ஏனெனில், நான் ஸஹர் நேரத்தில் டிவி போட்டு ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன.)


"என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர்ஆன் 4:60) 

ஆகவே.... இஸ்லாமிய தாவா நோக்கத்தில் அமைந்த சொற்பொழிவு என்றாலும்... அந்த  ஸஹர் நேர டிவி ப்ரோக்ராம்களை எல்லாம் ஒதுக்கி விட்டு... நாம் நமக்கான நன்மையை சரியான நேரத்தில் தொழுது சிறப்பான நேரத்தில் பிரார்த்தித்து பெற்றுக்கொள்ள முயல்வோமாக. வல்ல நாயன் அல்லாஹ் அதற்கு நமக்கு கிருபை செய்வானாக. ஆமீன்.

Monday, June 11, 2012

திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?

4 கருத்துக்கள்
பள்ளிப்படிப்பில் குறிப்பாக தமிழ் செய்யுட்பகுதிகளில் துறவறம் குறித்து சற்று உயர்வாகத்தான் கூறப்பட்டிருந்தது..! மேலும், மணம்  செய்து 'இல்லறம்'புரிந்து வாழ்வது குறித்து கூறப்படும்போது 'சிற்றின்பம்' என்றும், எப்போதும் இறைசிந்தையில் திளைத்து விடுவதாக சொல்லிக்கொண்டு,  காவிபூண்டு தம் வாழ்வில் 'துறவறம்' பூண்டு வாழ்தல்  'பேரின்பம்' என்றும் வகைப்படுத்தி வைத்திருப்பர்..! 
.
இதில் நாம் கவனிக்க வேண்டியது... 'துறவி'யாக வாழ்தல் 'அறம்' என்று அறிவுறுத்தப்படுகிறது..! நடைமுறைக்கு ஒவ்வாத... பயிற்றுவிப்பவரே தம் வாழிவில் வெறுக்கக்கூடிய ஒன்று எப்படி நல்லறமாகும்..? 'சிறுமையும்.. பெருமையும் அதெப்படி ஒரே தரநிலையில் 'அறம்' என்றாக முடியும்..?' இது தவறான கல்வி அல்லவா..? ஆகவே... "இல்லறமே நல்லறம்..!" "துறவு என்பது ஓர் அறமே அல்ல..!" இப்படி புரிதலே சரியான புரிதல் அல்லவா..?

Saturday, May 19, 2012

முனாஃபிக் யார்..?

10 கருத்துக்கள்
பொதுவாக நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பலவாக இருக்கலாம். சிலரிடம் நற்பண்புகள் தீயபண்புகள் ஒருங்கே அமைந்தும் இருக்கலாம். நற்பண்புகள் நம்மை சுவனம் அழைத்துச்செல்லும். தீய பண்புகள் நரகம் இட்டுச்செல்லும்..! அவ்வாறு, நரகத்துக்கு இழுத்துச்செல்லும் ஒரு பண்புதான் இந்த நயவஞ்சகம்..! அதாவது, உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத்தெரியாமல் மறைத்து, தம்மைச்சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புதான் நயவஞ்சகம்..! இத்தீய பண்பை  கொண்டவனை 'முனாஃபிக்' (நயவஞ்சகன்) என்று அரபியில் அழைபார்கள்..! சுருக்கமாக சொன்னால், வெளிப்பார்வைக்கு தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களிடம் உள்ளத்தில் இஸ்லாம் இருக்காது..! உள்ளங்களை அறிபவன் அல்லாஹ் மட்டுமே..!

Tuesday, April 17, 2012

ஒரு முக்கிய கேள்வி

2 கருத்துக்கள்

மன்னிக்கவும். மிக மிக பெரிய ஒரு இடைவேளைக்கு பிறகு இந்த புதினத்தை தொடர்கிறேன். இதன் முன் பகுதி இங்கே. நன்றி :)


நடந்து கொண்டே வந்த இஸபெல்லா, கொர்டபாவின் கிழக்கு திசை வாயில் வழியாக நுழைந்து 'கஸ்ருல் ஷுஹதா'வை(வீர மரணமடைந்தவர்களின் அடக்கஸ்தலம்) நோக்கி நடக்கலானாள். அதைத் தாண்டியே அவள் 
வீடிருந்தது. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அன்றைய ஸ்பெயின் எங்கெங்கு நோக்கினும் அழகுற மிளிர்ந்து கொண்டிருந்தது. டாக்டர்.ட்ரேப்பர்(Dr Draper) கூறியது போல ஒரே தெரு விளக்கின் ஒளியில் இருபது மைல் கூட ஒருவரால் நடந்திட இயலும், அந்தளவிற்கு சாலைகள் அனைத்தும் அழகுற திட்டமிடப்பட்டவையாகவும், விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிர்பவையாகவும் இருந்தன.

இஸபெல்லாவின் கால்கள் வேகமாக வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. அதை விட வேகமாக அவளின் சிந்தனைக்குதிரை ஓடிக்கொண்டிருந்தது. மாலை நேர நடைப்பயிற்சிக்கு பிறகு எப்பொழுதும் தன் தோழியருடன் வீடு திரும்பும் இஸபெல்லா இன்று தனியே சிந்தனை வயப்பட்டவளாக வீட்டிற்கு விரைந்து   கொண்டிருந்தாள். மாளிகை போன்ற தன் வீட்டினுள் நுழைந்ததும் வாயிலில் காத்துக்கொண்டிருந்த ஆயாவிடம்  தாமதத்திற்கு ஏதோ ஒரு காரணத்தை கூறிவிட்டு தன்னறையினுள் நுழைந்தாள். ஈஸி சேரில் அமர்ந்து மீண்டும் பைபிளை  ஆழ்ந்து படிக்க ஆரம்பித்ததாள். எத்தனை கவனமாக படித்தபோதிலும் செயின்ட் பாலின் கடிதங்கள், 'மார்க்கக்கட்டளைகள் ஒரு சாபமே' என்னும் கூற்றையே போதித்தன. அவை மேலும் மேலும் இஸபெல்லாவின் சந்தேகத்திற்கு உரமிட்டன. யோசித்து யோசித்து களைத்துப் போனபின் இதைப்பற்றி தந்தையிடமே கேட்போம் என முடிவு செய்தாள்.

பதிலளிக்க முடியாத கேள்வி என்று அதை இஸபெல்லா நினைக்கவில்லை. தன்னால் முடியவில்லை எனில் கண்டிப்பாக, ஸ்பெய்னிலேயே மார்க்க ஞானத்தில் யாராலும் விஞ்ச இயலாத தன் தந்தையால் கண்டிப்பாக முடியும் என்றே நினைத்திருந்தாள். சிறிதே சமாதனமான மனதுடன் இரவு உணவை உண்டவள் மீண்டும் சிறிது  பைபிளில் கழித்து விட்டு உறங்கினாள்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, காலையிலேயே கிளம்பி தேவாலயத்திற்கு சென்றாள். தேவாலயத்திலிருந்து திரும்புகையில் இஸபெல்லாவின் தந்தை அவளை அழைத்தார்.

தந்தை: 'இஸபெல்லா.., இரவு நெடு நேரம் பைபிளை படித்துக் கொண்டிருந்தாய் போலவே. எந்த அதிகாரத்தை படித்தாய்? எதிலாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னைக் கேளம்மா.."

இஸபெல்லா: அப்பா... (பாதிரியாரின் கைகளை முத்தமிட்டுவிட்டு) நேற்றிரவு நான் யோவான் 1, அதிகாரம் 3ஐ படித்தேன். அப்பா. நீங்கள் அனுமதித்தால் அதிலுள்ள என் சந்தேகத்தை கேட்பேன்.

தந்தை: நிச்சயமாக அம்மா... நிச்சயமாக... உன் சந்தேகத்தைக் கேள், கண்டிப்பாக என்னால் அதை நிவர்த்தி செய்ய முடியும்.

இஸபெல்லா: அப்பா, பழைய ஏற்பாட்டில் நம் இறைவன் நமக்காக பன்னிரெண்டு கட்டளைகளை கொடுத்திருக்கிறாரே. அவை மார்க்கக்கட்டளைகளை பற்றியதுதானே?

தந்தை: ஆமாம் இஸபெல்லா. அவை அனைத்தும் மார்க்கக்கட்டளைகளைப் பற்றியவைதான்.

இஸபெல்லா: ஆனால் செயின்ட் பால் மார்க்கக்கட்டளைகளை 'சாபம்' என்று கூறியுள்ளாரே?

தந்தை: ஆமாம் அம்மா, மார்க்கக்கட்டளைகள் ஒரு சாபமே. அதிலிருந்து நம்மைக் காக்கவே இயேசுநாதர் பூமிக்கு வந்ததும், சிலுவையில் அறையப்பட்டதும்.

இஸபெல்லா: அப்படியானால் மார்க்கக்கட்டளைகள் என்பது ஒரு சாபம். எத்தகைய கொடிய சாபம் என்றால், அதிலிருந்து நம்மைக் காப்பாற்றவே இயேசு நாதர் பூமிக்கு வந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும். இல்லையா அப்பா? அப்படியெனில் மார்க்கக்கட்டளைகளை பின்பற்றுவதும் ஒரு சாபம்தானே??

தந்தை: ஆமாம், இஸபெல்லா. அதனால்தான் இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் மார்க்கக்கட்டளைகளை பேணுவதை விட்டும் இயேசுநாதர் மேல் நம்பிக்கை கொள்கிறோம். அவர் சிலுவையில் அறையப்படாத வரையில் மட்டுமே மார்க்கக்கட்டளைகள் பயனில் இருந்தன.

இஸபெல்லா: சரி அப்பா, அப்படியானால் திருடுவது நமக்கு அனுமதி அளிக்கப்பட்டதா?

தந்தை: இதற்கும் மார்க்கக்கட்டளைகளுக்கும் என்ன சம்பந்தம்? இஸபெல்லா... எந்த ஒரு கேள்வியும் கேட்கும் முன் நன்றாக யோசித்துக் கேள். இல்லையெனில் கேள்வி கேட்கப்படுபவர் உன்னை முட்டாள் என நினைத்து விடுவார்.

இஸபெல்லா: மன்னித்துவிடுங்கள் அப்பா. ஆனால் எனக்கு இந்த விஷயம்  இன்னமும் புரியவில்லை. எந்த மார்க்கக்கட்டளைகளை நாம் பேணக் கூடாது என்கிறீர்களோ அதில் வரும் கட்டளையே திருடக்கூடாது என்பது. அண்டை வீட்டாரை துன்புறுத்தக் கூடாது என்பதும் அதில் ஒரு கட்டளையே. தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டாம் என்பதும் அதிலுள்ள கட்டளையே. மார்க்ககட்டளைகளை பேணக் கூடாது என்றால் இதை எல்லாம் செய்வதற்கு அனுமதி உண்டு என்றுதானே அர்த்தமாகிறது? 

தந்தை: இல்லை இஸபெல்லா, உனக்கு இன்னமும் மார்க்கக்கட்டளைகளை புரிந்து கொள்ள தெரியவில்லை. முதலில் இந்த முட்டாள்தனமான கேள்வியை உன்னிடத்தில் யார் கேட்டார்கள் அதை சொல்.


இதனைக் கேட்டதும் தோட்டத்தில் உமர் லஹ்மிக்கும் மு’ஆஸ்ஸுக்கும் இடையில் நடந்த உரையாடலை இஸபெல்லா கூறினாள்.

தந்தை: அம்மா இஸபெல்லா, உனக்கு ஏற்கனவே தெரிந்ததுதான், இந்த முஸ்லிம்கள் எல்லாம் நம்பிக்கையற்றவர்கள், நம் புனித மார்க்கத்தை பகைமை பாராட்டுவதையே குறிக்கோளாய் கொண்டவர்கள் என்று. நம் வேத புத்தகங்களை பரிகசிப்பது சாத்தானின் மூளையை உபயோகிப்பது போலவாகும். முதலில் தேவனிடம் பாவமன்னிப்பு கேளம்மா. மேலும் இந்த முஸ்லிம்களின் பேச்சை கேட்பதையும் தவிர்த்துக்கொள். அவர்களுக்கு மார்க்கம் என்ற ஒன்றே இல்லை, ஆனால் மற்றவர்களின் உண்மையான மார்க்கத்தை குறை கூறியே திரிவார்கள். அவர்களின் மார்க்கம் எதை போதிக்கிறது என்று உனக்கு தெரியுமா இஸபெல்லா? இரத்தம் சிந்த வைப்பது அவர்களின் மார்க்கத்தில் நற்கூலி பெற்றுத் தரும் ஒரு செயலாகும். நீயே பார், எப்படி அவர்கள் நம் ஸ்பெயினை ஆக்கிரமித்ததோடில்லாமல் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களையும் கொன்றார்கள். இப்பொழுது என்னடாவென்றால் வாழ்பவர்களின் மீது அவர்களின் மதத்தை வலுக்கட்டாயம் ஆக்குகிறார்கள். நீ என்னிடம் கேட்ட கேள்வி உன்னிடத்திலிருந்தே வந்திருந்தால் சரி, என்னால் அதை நொடியில் பதிலளிக்க முடியும். ஆனால் அவர்களின் விதண்டாவாதத்திற்கு நாம் என்ன பதில் தருவது? சொல்?
இஸபெல்லாவிற்கு தன் தவறு புரிந்தது. ‘முஸ்லிம்கள்’ என்னும் பெயரை கூறாமல் விட்டிருந்தாலாவது அவளின் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும். சரி இப்போதென்ன ஆயிற்று, பாடங்களில் ஏதேனும் சந்தேகம் என்றால் நம் ஆசிரியர்தானே விடை தருகிறார். அவரிடமே இந்தக் கேள்வியை கேட்டுக்கொள்ளலாம் என முடிவு செய்தாள்.

மறுநாள் அதே கேள்வியை அவளின் ஆசிரியர் முன்னிலும் இஸபெல்லா கேட்டாள். ஆனால் அவரும் இஸபெல்லாவின் மனது தெளிவாகும் வகையில் பதில் தர முடியாமல் போனார். அந்நேரம் வரையிலும் அந்த கேள்வியின் விடை தனக்கு மட்டுமே தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த இஸபெல்லாவிற்கு தான் மிகவும் நம்பிய ஆதாரங்களே தோல்வியுற்றதும் இது சிறிய, சாதாரண விஷயமில்லை என்று புரிந்தது. அதே நேரம் தன் மார்க்கத்தின் மேலான சந்தேகமும் இன்னும் பலமாக வளர்ந்தது.  இனியும் வளரும்... 

.