Showing posts with label Evolution Theory. Show all posts
Showing posts with label Evolution Theory. Show all posts

Tuesday, October 5, 2010

குரங்கு -> நியாண்டர்தல் -> மனிதன்?

1 கருத்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 


***பரிணாமம் தொடர்பான எனது அனைத்து ஆக்கங்களையும் காண <<இங்கே>> சுட்டவும்*** 

   
கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - II

நியாண்டர்தல் மனிதர்கள் (Neandertals or Neanderthals) - நமக்கும் குரங்கிற்கும் இடைப்பட்டவர்கள் இல்லை: 

இந்த தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். "நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றல்லவா படித்ததாக நினைவிருக்கின்றது, அவர்கள் நமக்கு முன்னோர்கள் இல்லையா, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.  

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் "நியாண்டர்தல் மனிதர்கள் அறிவில் மனிதர்களை விட குறைந்தவர்கள் என்று கூட கேள்விப்பபட்டிருக்கின்றோமே?" என்றும் கேட்கலாம். 

ஆம், நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் தவறு என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எந்த அளவுக்கு என்றால், நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்னோர்கள் என்ற கூற்று போய் இப்போது இவர்களுக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர் என்று கூறும் அளவிற்கு....



"குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் ஏன் குரங்குகள் இருக்கின்றன?" என்று பரிணாமவியலாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினால், உடனே "உங்களுக்கு பரிணாமம் பற்றி தெரியவில்லை. மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மாறாக நமக்கும் குரங்கிற்கும் பொதுவான மூதாதையர்" என்று பதில் சொல்லுவார்களே, அதுபோலத்தான் இப்போது மனிதனிற்கும் நியாண்டர்தல் மனிதர்களுக்கும் உள்ள உறவை விளக்குகின்றனர் பரிணாமவியலாளர்கள்.  

"Neandertals (Homo neanderthalensis) are currently believed to be our closest evolutionary relatives. Although some researchers once thought they were our immediate ancestors in Europe, most now agree that Neandertals and modern humans most likely shared a common ancestor within the last 500,000 years, possibly in Africa." --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org
நியாண்டர்தல் மனிதர்கள் பரிணாமப்படி நமக்கு நெருங்கிய உறவினர்களாக நம்பப்படுகின்றார்கள். அவர்கள் நம்முடைய immediate மூதாதையர் என்று சில ஆய்வாளர்களால் கருதப்பட்டிருந்தாலும், இப்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் நியாண்டர்தல்களும், தற்காலத்திய மனிதர்களும் பொதுவான மூதாதையர்களை கொண்டிருக்கலாம் என்று ஒப்புக்கொள்கின்றனர் --- (Extract from the original quote of) The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org 

நியாண்டர்தல் மனிதர்களில் இருந்து நாம் வந்ததாக இந்த பதிவை படிக்கும் வரை நீங்கள் நினைத்திருந்தால் (Ape like creatures --> Neandertals --> Modern Humans) இன்றோடு அந்த நம்பிக்கையை புதைத்து விடுங்கள். நமக்கும் அவர்களுக்கும் பொதுவான மூதாதையராம் (Common Ancestor --> Neardertals & Common Ancestor --> Modern Humans). 

அது சரி, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக நியாண்டர்தல்களை காட்டி பரிணாமத்திற்கு இது ஆதாரம் என்று சந்தோஷப்பட்ட பரிணாம உலகத்திற்கு இந்த பலத்த அடி எப்படி ஏற்பட்டது?  

இதற்கு விடைக்காண நீங்கள் நியாண்டர்தல் குறித்த ஆய்வுகளை உற்று நோக்கினால் பரிணாமவியலாளர்களுக்கு அப்படி ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்பதை உணரலாம்.     

முதலில், யார் இவர்கள்?  

1829 ஆம் ஆண்டே நியாண்டர்தல் படிமங்கள் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகள் கற்கால மனிதர்களின் படிமங்களாக  அங்கீகரிக்கப்படவில்லை. பின்னர் 1856 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் தான் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களாக அங்கீகரிக்கப்பட்டன. இந்த படிமங்கள் நியாண்டர்தல்-1 என்று அழைக்கப்பட்டன. 


1886 ஆம் ஆண்டு,  பெல்ஜியத்தில் கிட்டத்தட்ட முழுமையான இரண்டு நியாண்டர்தல் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை பல நியாண்டர்தல் படிமங்கள் கிடைத்திருக்கின்றன. நியாண்டர்தல்கள், சுமார் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததாக கணக்கிட்டுள்ளனர். அதாவது இந்த இனம் சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து விட்டது. எப்படி அழிந்தன?...பதிவின் இறுதியில் பார்ப்போம்.      

சரி, நியாண்டர்தல்களுக்கும் தற்காலத்திய மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? 

உடலளவில் வித்தியாசங்கள் உண்டு. நியாண்டர்தல்களின் உயரம் தற்காலத்திய மனிதனை விட சுமார் 5-6 இஞ்சுகள் குறைவு. இதையே 20,000 ஆண்டுகள் முந்தைய ஐரோப்பிய மனிதர்களோடு ஒப்பிட்டால் நியாண்டர்தல்களும் அந்த மனிதர்களும் ஓரே மாதிரியான உயரம்தான். நியாண்டர்தல்கள் திடமான உடலமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள்.  அவர்களுடைய மண்டை ஓடு பெரியதாகவும், மூளை தற்காலத்திய மனிதர்களோடு ஒப்பிடுகையில் சற்று பெரிதாகவும் இருந்துள்ளது.

மனிதர்களுக்கு முன் வந்தவர்களா நியாண்டர்தல்கள் ? 

இல்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித படிமங்கள் காணக்கிடைக்கின்றன. நியாண்டர்தல்களோ சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மறைந்திருக்கின்றனர். ஆக, ஒரே காலக்கட்டத்தில் இருவரும் வாழ்ந்திருக்கின்றனர்.

"A few years ago, they [Neandertals] were thought to be ancestral to anatomically modern humans, but now we know that modern humans appeared at least 100,000 years ago, much before the disappearance of the Neandertals. Moreover, in caves in the Middle East, fossils of modern humans have been found dated 120,000-100,000 years ago, as well as Neandertals dated at 60,000 and 70,000 years ago, followed again by modern humans dated at 40,000 years ago. It is unclear whether the two forms repeatedly replaced one another by migration from other regions, or whether they coexisted in some areas " --- Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006.
சில வருடங்களுக்கு முன்னால், அவர்கள் (நியாண்டர்தல்) உடல்ரீதியாக தற்காலத்திய மனிதர்களுக்கு முன்னோர்களாக கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது நமக்கு கிடைக்கும் தகவல்படி, தற்காலத்திய மனிதர்கள் குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருக்கின்றார்கள், அதாவது நியாண்டர்தல்கள் மறைவதற்கு பல காலங்களுக்கு முன்னராகவே. 
அதுமட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் உள்ள குகைகளில், 120,000-100,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும், 60,000-70,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தல்களின் படிமங்களும், பிறகு மறுபடியும் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு வகைகளும் மாறி மாறி குடியேறினார்களா அல்லது இருவரும் சேர்ந்தே வாழ்ந்தார்களா என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது --- (Extract of the original quote of) Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006. 

நியாண்டர்தல்கள், மனிதர்களுக்கு முன்வந்தவர்கள் என்றால் அல்லது குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் என்றால், எப்படி ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க முடியும்?....இது முதல் அதிர்ச்சி....

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு ஆச்சர்யத்தை தந்திருந்தால் மிக சமீபத்திய ஆய்வு முடிவுகள் இன்னும் வியப்பை தரும். ஆய்வாளர்களுக்கோ இது ஒரு மிகப்பெரிய ஷாக். என்னவென்றால், மனிதர்களும் நியாண்டர்தல்களும் ஒன்றோடு கலந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கவேண்டும் என்பதுதான் அது.




தற்காலத்திய மனிதர்களின் மரபணுக்களில் (ஆப்ரிக்கர்கள் தவிர) 1-4% நியாண்டர்தல்களிடமிருந்து வந்துள்ளவாம். அதாவது நியாண்டர்தல்கள் அழிந்து விடவில்லை, அவர்கள் இன்னும் நம்மில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்களாம்.

"Researchers sequencing Neandertal DNA have concluded that between 1 and 4 percent of the DNA of people today who live outside Africa came from Neandertals, the result of interbreeding between Neandertals and early modern humans" --- Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.   
நியாண்டர்தல் DNA வை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், ஆப்ரிக்காவிற்கு வெளியே வாழும் மனிதர்களிடம் 1-4% நியாண்டர்தல் DNAக்கள் இருப்பதாக முடிவு செய்திருக்கின்றனர். இது நியாண்டர்தல்களும், தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களும் இணைந்ததால் ஏற்பட்டது --- (Extract from the original quote of) Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.         

அது ஏன் தற்காலத்திய ஆப்ரிக்கர்களிடம் நியாண்டர்தல்களின் மரபணுக்கள் காணப்படவில்லை?...இதற்கு எப்படி விளக்கம் சொல்லுகின்றார்கள் என்றால், தற்காலத்திய மனிதர்கள் ஆப்ரிக்காவில் தோன்றியவர்களாம், நியாண்டர்தல்களோ ஐரோப்பாவில் தோன்றி ஆசியா வரை சுற்றியவர்களாம். மனிதர்கள் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி மத்திய கிழக்கிற்கு குடியேறிய போது அங்கிருந்த நியாண்டர்களுடன் கலந்து விட்டார்களாம். அதனால் தான் ஐரோப்பியர்கள், ஆசியர்களது மரபணுக்களில் நியாண்டர்தல்கள் காணப்படுகின்றார்களாம். அதே சமயம் ஆப்ரிக்கர்களிடம் இவர்கள் காணப்படவில்லையாம்.

ஒரு நிமிஷம்........இந்த இருவரும் சேர்ந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கின்றார்கள் என்றால், பிறகு எப்படி நியாண்டர்தல்களை வேறு ஒரு உயிரினமாக பார்க்க முடியும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை மனித இனங்களில் ஒன்றாகத் தானே பார்க்கவேண்டும்?....

ஆம், அறிவியலாளர்கள் இப்போது இந்த கருத்தையும் ஆதரிக்க துவங்கியிருக்கின்றார்கள்.

மரபணு சோதனைகள் ஆரம்ப காலகட்டங்களில் இருப்பதால் பொறுத்திருந்து தான் இவை இன்னும் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

ஆக, குரங்கு போன்ற உயிரினத்திருக்கும் நமக்கும் இடைப்பட்டவர்கள் நியாண்டர்தல்கள் என்ற கூற்றும் தவறு, அதுபோலவே நியாண்டர்தல்கள் மனிதர்கள் அல்ல என்ற கூற்றும் தவறு....

நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களா? 

இதுவும் ரொம்ப காலமாக நம்பப்பட்டு வந்த ஒன்று. அதாவது மனிதர்கள் அறிவில் சிறந்தவர்களாம், நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாம். அதனால் தான் அவர்கள் அழிந்துவிட்டார்களாம்.

முதலில் அறிவில் குறைந்தவர்கள் (நியாண்டர்தல்), பிறகு அறிவில் சிறந்தவர்கள் (தற்காலத்திய மனிதர்கள்) என்று வந்திருப்பதால் இது பரிணாமத்திற்கு ஆதாரம் என்று காட்டினார்கள் பரிணாமவியலாளர்கள். அந்தோ பரிதாபம், அந்த ஆதாரமும் சுக்கு நூறாக நொறுங்கியிருக்கின்றது.

சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், நியாண்டர்தல்களுக்கு பின்னர் வந்த மனிதர்கள் உருவாக்கிய கருவிகள், நியாண்டர்தல்கள் உருவாக்கிய கருவிகளை விட சிறந்தவை இல்லையாம். இது பரிணாமவியலாளர்களுக்கு மற்றொரு அடி.

"Research by UK and American scientists has struck another blow to the theory that Neanderthals (Homo neanderthalensis) became extinct because they were less intelligent than our ancestors (Homo sapiens). The research team has shown that early stone tool technologies developed by our species, Homo sapiens, were no more efficient than those used by Neanderthals" --- New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008. 
நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாக இருந்ததால் மறைந்து விட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு மற்றொரு அடியாக விழுந்துள்ளது பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு. மனிதர்கள் உபயோகப்படுத்திய ஆரம்ப கால கருவி யுக்திகள், நியாண்டர்தல்கள் உபயோகப்படுத்திய யுக்திகளோடு ஒப்பிடும் போது சிறந்ததாக இல்லை என்று இந்த ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது --- (Extract from the original quote of) New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.   

இது மட்டுமா, இவர்கள் உடல் ஆபரணங்களை செய்திருக்கின்றார்கள், இறந்தவர்களை புதைத்திருக்கின்றார்கள், தாங்கள் வாழும் இடங்களை ஒழுங்குபடுத்திருக்கின்றார்கள் என்று பல...

சுருக்கமாக சொல்லுவதென்றால் இவர்கள் அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

நியாண்டர்தல்கள் பேசினார்களா? 

இது போன்ற கேள்விகளுக்கு படிம ஆதாரங்கள் மூலம் விடை கூறுவது கடினம். ஆனால், அவர்கள் பேசுவதற்குண்டான தகுதிகளை கொண்டிருந்தார்கள் என்கின்றன ஆய்வுகள். எப்படி?, மனிதர்கள் பேசுகின்றார்கள் என்றால் அதற்கு காரணமான மரபணுக்களில் FOXP2 என்ற மரபணு முக்கியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களின் இந்த மரபணுவில் உள்ள வேறுபாடுகள் அப்படியே நியாண்டர்தல் மனிதர்களிடமும் உள்ளனவாம்.

"Neandertals and modern humans share the same variant of the language gene FOXP2" --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org

அதனால் அவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

"Genetic studies hint Neanderthals were equipped for language" --- Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177
மரபணு ஆய்வுகள் நியாண்டர்தல்கள் பேசுவதற்குரிய தகுதியை பெற்றிருந்ததாக தெரிவிக்கின்றன --- (Extract from the original quote of) Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177 

சரி, எப்படி இவர்கள் மறைந்தார்கள்?

இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. பல்வேறு யூகங்கள் உள்ளன. மற்றொரு மனித இனத்தால் இவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், மற்ற மனிதர்களோடு இணைந்ததால் காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்பது போன்ற யூகங்கள்...

ஆக, நியாண்டர்தல் மனிதர்கள்,

  • தற்காலத்திய மனிதர்களோடு ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் நமக்கு முன்வந்தவர்களோ அல்லது குரங்கிற்கும் நமக்கும் இடைபட்டவர்களோ கிடையாது.
  • அவர்கள் மனித இனம் தான். முன்னர் எண்ணப்பட்டது போல அவர்கள் ape-like கிடையாது...
  • அறிவில் சிறந்து விளங்கியிருக்கின்றாகள்.
  • பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள்.


இனியும் உங்களிடம் யாரும் வந்து நியாண்டர்தல்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றோ, நமக்கும் குரங்கு போன்ற உயிரினத்திற்கும் இடைப்பட்டவர்கள் என்றோ, அவர்கள் அறிவுத்திறனில் நம்மை விட குறைந்தவர்கள் என்றோ கூறினால், ஆய்வு முடிவுகளை எடுத்துக் காட்டி விளக்கம் கொடுங்கள். அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக எடுத்து கூறுங்கள்.

நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் இதையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். குரங்கு போன்ற ஒன்றிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நிமிர்ந்து தற்காலத்திய மனிதன் வந்ததாக படம் போட்டு காண்பிப்பார்களே...அதுவெல்லாம் சுத்த non-s****.... 

இன்ஷா அல்லாஹ் இது பற்றி எதிர்கால பதிவுகளில்...

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...


Pictures taken from:
Picture - 1: Designed by Aashiq Ahamed.
Picture - 2: As appeared in "Science Daily" magazine dated 26th August 2008.
Picture - 3: As appeared in Max Planck Institute's website.

My sincere thanks to: 
1. Max Planck Institute, Germany.
2. Science Magazine.
3. Science Daily.
4. Nature Magazine.
5. Scientific American.
6. Wikipedia.
7. New Scientist Magazine.

References: 
1. A Draft Sequence of the Neandertal Genome - Science 7 May 2010: Vol. 328. no. 5979, pp. 710 - 722, DOI: 10.1126/science.1188021.
2. The Neandertal Genome - Sciencemag.com.
3. New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.
4. In praise of… Neanderthal man - The Guardian,  Wednesday 13 January 2010
5. Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.
6. Creationist Arguments: A Neandertal in Armor? - FAQs, talkorigins.org.
7. Neanderthals and Humans Likely Interbred - K. Kris Hirst, dated 6th May 2010, archaeology.about.com.
8. The Neandertal Genome Project - The Max Planck Institute for Evolutionary Anthropology. www.eva.mpg.de.
9. Neanderthal genome reveals interbreeding with humans - Ewen Callaway, New Scientist, 6th May 2010.
10. Neandertals, Humans Share Key Changes To 'Language Gene' - Science Daily, 21st October 2007.
11. Neandertals have the same mutations in FOXP2, the language gene, as modern humans - 18th October 2007, anthropology.net.
12. Neanderthal 'make-up' containers discovered - BBC, 9th January 2010.
13. Welcome to the family, Homo sapiens neanderthalensis - New Scientist, Magazine issue 2760, 13th May 2010.
14. Neanderthals, Francisco Ayala, FOXP2 gene - Wikipedia.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Tuesday, September 21, 2010

பரிணாமத்தை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?

0 கருத்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...  

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..  


பரிணாமவியலை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?  
a) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா? 
b) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா? 

உலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி? என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவர் முன்வைத்த கோட்பாடும் தான் பொறுப்பு. 

அப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா? என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான். 

என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்று கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார். 

ஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினைத்தவர். 

ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கோட்பாடு இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது. 

குரங்கினத்திற்கும் (APE) ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும் (நீக்ரோ), ஆஸ்திரேலியர்களையும் வைத்த அவரது செயல், 
  • ஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர், 
  • பரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள், 
  • அதனால் அவர்களே மேம்பட்டவர்கள் 
என்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of "Evolution Theory") பார்க்கப்போகிறோம்.  


டார்வின் இன வெறியரா ?

என்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய இனம் தான் மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.

உதாரணத்துக்கு, 1830 களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும் விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.

இது குறித்து அவர் எழுதும் போது:
"Those who look tenderly at the slave-owner, and with a cold heart at the slave, never seem to put themselves into the position of the latter;—what a cheerless prospect, with not even a hope of change! picture to yourself the chance, ever hanging over you, of your wife and your little children—those objects which nature urges even the slave to call his own—being torn from you and sold like beasts to the first bidder! And these deeds are done and palliated by men, who profess to love their neighbours as themselves, who believe in God, and pray that his Will be done on earth! It makes one’s blood boil, yet heart tremble, to think that we Englishmen and our American descendants, with their boastful cry of liberty, have been and are so guilty: but it is a consolation to reflect, that we at least have made a greater sacrifice, than ever made by any nation, to expiate our sin" --- Charles Darwin wrote in 1845 journal, "Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy", p. 499-500.

ஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம் கொதிப்பதாக எழுதியிருக்கிறார். இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.


அவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா? 

ஆம். உண்மைதான். 

நிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).

முதலில் மற்ற இனத்தவரை எப்படி அணுகினார் என்று பார்ப்போம். 

தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.
"At some future period not very distant as measured by centuries, the civilised races of man will almost certainly exterminate and replace the savage races throughout the world. At the same time the anthropomorphous apes…will no doubt be exterminated. The break between man and his nearest Allies will then be wider, for it will intervene between man in a more civilised state, as we may hope, even than the Caucasian, and some ape as low as the baboon, instead of as now between the Negro or Australian and the gorilla" --- Charles Darwin in his book "The Descent of Man", p-201 

மேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,
"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற  (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்" 
என்று கூறுகிறார். 

அவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய அறியாமை தான் அழிந்துவிட்டது. இன்று அவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. 



அதே பத்தியின் கடைசியில், அவர், கறுப்பினத்தவரையும் ஆஸ்திரேலியர்களையும், மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இவர்கள் "Less Evolved" மக்கள். நிச்சயமாக அவரது நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர் கடைசியாக ஐரோப்பிய இனமாக மாறினான். 

ஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.

இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை

அப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கூறினார்.
"Their mental characteristics are likewise very distinct; chiefly as it would appear in their emotional, but partly in their intellectual faculties" --- Charles Darwin in his Book, Descent of Man, Chapter Seven: On the Races of Man, p.343

இப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே?, அதுபோல டார்வினுடைய கருத்துப்படி "less Evolved" இனத்தவர் அழிந்து விட வில்லையே. இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே? 

டார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்...      
  
டார்வினுடைய, "தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்" என்ற கருத்தை தான் செயல் படுத்த நினைத்தாரோ ஹிட்லர்? 

எது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் "Struggle for Survival" என்ற கருத்தை தான்.

ஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை "EVOLUTION" (ஜெர்மனியில் "Entwicklung") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நாசி படைகள் தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் "Survival of the Fittest" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.
"Those who want to live, let them fight, and those who do not want to fight in this world of eternal struggle do not deserve to live" --- Adolf Hitler, at his third public speech after taking power.
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power  

இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் அவர். இதையே தான் டார்வினும் சொன்னார். 

உதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து:  
"If Nature does not wish that weaker individuals should mate with the stronger, she wishes even less that a superior race should intermingle with an inferior one; because in such a case all her efforts, throughout hundreds of thousands of years, to establish an evolutionary higher stage of being, may thus be rendered futile" ---Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.
இயற்கை, நிச்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் --- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.     
  
ஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு  இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம் தனக்கு முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக் கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய SUPERIOR இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர்.  

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய "Origin of Species" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, " The Origin of Species by Means of Natural Selection—or The Preservation of Favoured Races in the Struggle for Life"


பின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது. 

ஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.
The leader of Germany is an evolutionist not only in theory, but, as millions know to their cost, in the rigor of its practice. For him, the 'national front' of Europe is also the 'evolutionary front” --- Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230. 
"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி" --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230.    

பரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.

இதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமவியலை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,

  • ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா? 
  • ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?  

இது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்?

அப்படியானால், இனிமேலும் தயவுகூர்ந்து "உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்" என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் செய்கிற துரோகம்...

நமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, "இல்லை மக்கள் அனைவரும் சமம்" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், அவர்களது நம்பிக்கையும் "மனிதர்களெல்லாம் சமமல்ல" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்?,

என்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13

நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


My Sincere Thanks To:
1. British Broadcasting Corporation (BBC)
2. New Scientist Website.

References:
1. The Origin of Species by Means of Natural Selection or The Preservation of Favoured Races in the Struggle for Life  --- Charles Darwin, 1859.
2. The Descent of Man --- Charles Darwin, 1971.
3. Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy ---  Charles Darwin, 1845.
4. Was Charles Darwin a Racist? --- BBC, dated 13th February 2009.
5. Hatred of slavery drove Darwin to emancipate all life --- New Scientist, dated 29th January 2009.
6. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 --- Adolf Hitler
7. Scientific Racism - Wikipedia.
8. Evolution and Ethics --- Sir Arthur Keith, 1947.


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ